Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 JUL, 2025 | 04:04 PM

image

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது.

வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது.

இதில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன.

இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்துது கொண்டதுடன், வீதிகளில் மக்களும் குழுயிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர். 

IMG_20250718_100418.jpg

IMG_20250718_113918.jpg

IMG_20250718_094839.jpg

IMG_20250718_100719.jpg

IMG_20250718_094913.jpg

IMG_20250718_100430.jpg

IMG_20250718_102004_1.jpg

https://www.virakesari.lk/article/220322

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தின் பின் இருப்பவர்களில் அனேகருக்கு இந்த பாரம்பரியங்களைப் பற்றி தெரிய வாய்ப்பும் இல்லை அவற்றை பின்பற்றுவார்கள் என்றும் இல்லை.இப்போ இறப்பு வீடுகளில் அழுவது கூட மெல்ல, மெல்ல இல்லாமல் போய் விட்டது என்று அண்மையில் ஒருவரது பதில் படித்தேன்.அதுவும் புலம் பெயர்ந்தவர்கள் வருகையின் பின் வந்த மாற்றங்கள் என்ற பொருள் பட எழுதப்பட்டு இருந்தது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, யாயினி said:

யுத்த காலத்தின் பின் இருப்பவர்களில் அனேகருக்கு இந்த பாரம்பரியங்களைப் பற்றி தெரிய வாய்ப்பும் இல்லை அவற்றை பின்பற்றுவார்கள் என்றும் இல்லை.இப்போ இறப்பு வீடுகளில் அழுவது கூட மெல்ல, மெல்ல இல்லாமல் போய் விட்டது என்று அண்மையில் ஒருவரது பதில் படித்தேன்.அதுவும் புலம் பெயர்ந்தவர்கள் வருகையின் பின் வந்த மாற்றங்கள் என்ற பொருள் பட எழுதப்பட்டு இருந்தது.

கிராமங்களில் அழுகை இருக்கிறது, தன்னை மீறி துயரம் கூடுகையில் வருவது தானே.

இன்னொரு துயரம் பிள்ளைகள், சகோதரங்கள் வரும் வரை உடலை பதப்படுத்தி 4 - 5 நாட்கள் வைத்திருக்க வீட்டில் இருப்பவர்களும் அழுது களைத்துவிடுவார்கள்.

முன்னைய காலங்கள் போல் இறந்து 24 மணித்தியாலங்களில் இறுதிச்சடங்கை முடிக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-6-1.jpg?resize=600%2C300&ssl

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி முன்னெடுப்பு!

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் நேற்று (18) ஆரம்பமாகியது.

வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன.

இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டதுடன், வீதிகளில் மக்களும் கூடியிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர்.

New-Project-7-1.jpg?w=600&ssl=1

IMG_20250718_102004_1.jpg?resize=600%2C3

New-Project-8-1.jpg?w=600&ssl=1

https://athavannews.com/2025/1439760

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.