Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

FB_IMG_1628535460653.jpg

ஆடி அமாவாசை விரதம்.

உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

Sangaravel Pirabashithitan Piraba

மானிப்பாய் 1 காய் 150 ரூபாய்

Roopa Muraleetharan

வவுனியா ஒரு காய் 200/-

Tharsana Kumar

1kg 4000 ரூபாய் point Pedro

Kandeepan Rajathurai

10,150 Rupees. (London £25 per kg)

Ramalingam Bhaskaran

காத்தோட்டிக்காய் , இதன் சாதாரண விலை 50/=...70/= ஓகே. மேலதிகவிலை மடவேலை? காரணம் ஆடிஅமாவாசை அன்று மட்டுமே நாம் பாவிக்க உள்ளோம். We are not fools like others...in... marketing...

Giritharasharma RN

கிலோ 4600/- மருதனார்மடம்

Sweeththa Suvi Suvi

சாவகச்சேரி ஒரு காய் 500

Devi Sri

எலுமிச்சை போல் உள்ளது இதான் விலை இவ்வளவா

Dhayan Geeve

Kilinochchi poonakary oru kaai 300 ரூபாய்

Rasaiyah Naguleshwaran

கல்மடுவில்400 ரூபாய்

Suventhiny Pulenthirarasa

One Rs 50

Rupan Rupan

திருநெல்வேலி 1kg 10000/=

K.K Shanthirakumar

400 ரூபா

Thulasi Sana

சாவகச்சேரில 1kg 6000Rs

Sarogini Gnanasothiyan

யாழ்ப்பாணத்தில் வியாபாரிகள் பேய்களாக மாறிவருகின்றனர். எல்லாம் அழிவுக்குத்தான்.

1 காய் 500 ரூபாய்

Kulam Kulam

கொழும்பில் ஒரு காய் 15.00 ரூபா.

Chinniah Satheeshkumar

London -எட்டாயிரம் இலங்கை ரூபாய்

Sivabalan Siva

200 வவுனியா

நீங்கா நினைவுகள்

யாழ்ப்பாணம் ஒரு காய் 450/=

Nirojan Niroy

Thellipalai 1kg 6000

Suriya Ruba

400

Panchalingam Thusha

100g 600/=

Sundar Durai

இது என்ன காய்...பார்த்ததில்லை.... தமிழ்நாடு, இந்தியா

Sathees Thevarajah

தவிச்ச முயல் அடிப்பதில் நாங்கள் கெட்டி காரர் தானே???

Sivanuja Kugasooriyar

250

Perampalam Kanagaratnam

தவிச்சமுயல்.

Sangavy Sangavy Sangavy

100

Jeyamani Sivanadarajah

உடுப்பிட்டியில் ஒரு காய் 100/=

நம்ம யாழ்ப்பாணம் 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை என்று மனிதர்கள் உண்ணும் ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்துக்குமே உயிருண்டு. அத்துடன் மாமிசம் மட்டுமல்ல நாங்கள் உண்ணும் தாவரங்கள் அனைத்துக்குமே உயிருண்டு என்பதை இன்றல்ல அன்றே மனிதர்கள் அறிந்துள்ளனர். அதிலும் சைவசமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் ஒரு சிலர் மாமிசம் உண்டாலும். உயிர்கொலை மகா பாவம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவேதான் வருடத்தில் ஒருமுறையாவது, மிகக் கசப்பான. உண்ணவே வயிற்றைக் குமட்டும் காத்தோட்டிக்காயை பொரித்து உண்டு அதன் கசப்பால் துன்பத்தை அனுபவித்து, உயிர்களைக் கொல்லும் பாவத்திலிருந்து சற்று விடுபடுவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது. ஆகவேதான் அந்த நம்பிக்கையை வருடத்தில் ஒருமுறை வரும் ஆடி அமாவாசையன்று கடைப்பிடித்துப் பாவத்தைப் போக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சொல்லக் கேட்டுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி சந்தையில் காத்தோட்டிக்காய் கிலோ 7000-8000 ரூபா. ஒரு காய் 400-500 ரூபா. நிறைய சனங்கள் ஒரு காத்தோட்டிக்காய் வாங்க அந்தரிக்கிறார்கள்.

அதிலே ஒரு யாவாரி மற்ற யாவாரிக்கு காயை வெட்டி பாதியாய் வில் என்று அறிவுறுத்திக்கொட்டிருந்தார்.

உண்மையிலே காத்தோட்டிக்காய் வீடுக்களில் வளர்ப்பதில்லை. எங்காவது பற்றைகள் ஆட்களில்லா வளவுகளில் கொல்லைகளில் வளரும். கிராமங்களில் யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை.

ஒரு காலத்தில் இலவசமாக கிடைத்த சந்தைகளில் அஞ்சு பத்து ரூபாக்கு விற்ற காத்தோட்டிக்காய் பெரும்பாலான மரக்கறிகளின் ஒரு கிலோ விலையை விட ஒரு காயின் விலை கூடவாக இருப்பது ஆச்சரியம் தான். இந்த காயை மரத்தில் பிடுங்கி சந்தை யாவாரிகளிடம் கொடுக்கும் தொழிலாளிக்கு யாவாரிகள் எவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.

இந்த காய்களில் ஒரு கிலோவுக்கு எத்தனை மடங்கு லாபத்துக்கு விற்கிறார்கள். இது தவிச்ச முயல் அடிக்கிர வேலையா இல்லையா? ஆடி அமாவாசைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் பொரிச்சு சாப்பிடுற காத்தோட்டிக்காயை நடுத்தர சனங்கள் வாங்கேலாத விலைக்கு விக்கிற சந்தை யாவாரிட மண்டைக்குள்ள காசு மாத்திரம் தான் தெரியும்.

-copy

(ஆடி அமாவாசை விரத்துக்கு பொரியலுக்கு பயன்படும் கைச்சல் மிகுந்த காயே காத்தோட்டிக்காய்)

நம்ம யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

அந்நாட்களில் ஆடிஅமாவாசை விரதம் பிடிப்பவர்கள் கீரிமலைக்குப் போகும் வழியில் பற்றைகளில் அந்தப் பருவத்தில் மட்டும் இந்தக் காய்கள் நிறையக் காய்த்திருக்கும் ........ வரும்போதுஅவற்றைப் பிடுங்கிக் கொண்டு வருவார்கள் . ......... இதனைப் பொரித்து விரதத்துக்கு சாப்பிடுமுன் முதலாவதாக இந்தக் காயின் பொரியலை சப்புவார்கள் . ......அவ்வளவு கசப்பு . ........ அது ஏன் என்றால் ஐயாவின் நினைவையும் கவலையையும் மறப்பதற்கு ( ஆச்சி சொன்னவ ) ........ சரி .....இது கிடைக்காத இடங்களில் என்ன செய்யலாம் . ........ பாவக்காயை பொரித்து (அதுவும் பேய் பாவக்காய் என்று ஒரு சிறிய குண்டுப் பாவக்காய் உண்டு, சாதாரண பாவைக்காயும் பரவாயில்லை ) அதை முதலில் சப்பிவிட்டு ஏனையவற்றைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம் . ........!

bg2.jpg

நான் பிறந்த நாளில் இருந்து இந்த விரதம் பிடித்து வருகிறேன் . ....... மாவிட்டபுரத்தில் இருந்து கொல்லங்கலட்டியூடாக வெறுங்கால் நடையாக சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் . ......... பின் அவரோடு சைக்கிளில் ........ பின், நான் தனியாக சைக்கிளில் கீரிமலை சென்று கடலில் நீராடிவிட்டு வந்தது இன்றும் மனதில் பசுமையாக . .......!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2025 at 10:37, suvy said:

நான் பிறந்த நாளில் இருந்து இந்த விரதம் பிடித்து வருகிறேன் . .......

அட பாவமே! பால்குடி பருவத்திலிருந்தே உங்களைப் பட்டினி போட்டுள்ளார்களே!!😭

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Paanch said:

அட பாவமே! பால்குடி பருவத்திலிருந்தே உங்களைப் பட்டினி போட்டுள்ளார்களே!!😭

ஐயா , இது ஒரு நல்ல சந்தேகம் . ....... நீங்கள் கொஞ்சம் கவனித்து வாசித்திருந்தால் அதில் "சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் " என்று இருக்கும் . ....... அதாவது எனது தந்தையார் நான் பிறப்பதற்கு முன் தவறியிருந்தார் . ....... !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.