Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5da9e91a-ac46-4aad-87bd-f036704757b5-1.j

மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை!

மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

0df04115-5049-4f11-9189-9cecbec75c35.jpg?resize=600%2C427&ssl=1

‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது.

70dcd3eb-85c7-4195-bee4-b3757b9b05b0.jpg?resize=600%2C389&ssl=1

ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் திணைக்களத்துக்கு இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ரூ.632 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பிள்ளைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு  பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தார்.

அத்துடன் பிள்ளைகளுடன் நேரில் உரையாடியும், குழு புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.

இதன்போது , மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியமும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

d5f665a2-bb09-4aaf-a0c3-3db7a75465eb.jpg?resize=518%2C600&ssl=1

நிகழ்வில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

1f0c0dba-3e52-4466-953d-b849f19f5b59.jpg

5da9e91a-ac46-4aad-87bd-f036704757b5.jpg

08a6b20c-23dc-449d-ba04-dc766c9c9e8e.jpg

90a08a87-786f-44ce-9455-6789757b83dd.jpg

584a9c67-39d0-4ece-9156-7646771eb161.jpg

0615a639-d0be-4ab4-8439-855fa1428ce6.jpg

6005eb63-8788-4e57-97c8-3907c48e4a18.jpg

54446d6d-9ddf-487a-a69f-2f6e97142812.jpg

a4bde9ef-b2dd-4d03-915f-d2e7f879649f.jpg

c9c8ed41-9043-48cc-a32d-faa84e845e5c.jpg

c73d2ddc-87e6-46cc-9454-ea1b149808b3.jpg

https://athavannews.com/2025/1442018

  • கருத்துக்கள உறவுகள்

கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்!

கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் குழு நடனத்தில் கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி நேற்று(05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாகாணங்களிலிருந்து வெற்றி பெற்ற கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டம்

வடக்கு மாகாண போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம் இவ்வாறு பங்கு பற்றி மூன்றாமிடத்தை பெற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்! | Kilinochchi 3Rd Plase Cultural Sidh Ru 2025 Event

இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "ஒன்றாக - கைவிடாத" என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள் திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக "சித் ரூ" கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.

குறித்த நிகழ்வு 06 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்காக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 632 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விருது

"சித் ரூ-2025" மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார்.

பிள்ளைகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்! | Kilinochchi 3Rd Plase Cultural Sidh Ru 2025 Event

மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் புகைப்படம் ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனீ கருணாரத்ன மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/kilinochchi-3rd-plase-cultural-sidh-ru-2025-event-1754483929

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.