Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது.

ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குமணன் விசாரணைக்கு அழக்கப்பட்டார் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.

மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.

Journalist Kumanan is being continuously threatened by the TID. Last year, his parents were already threatened. Following that, Kumanan was summoned for questioning, after which there was no further contact.

Now, he has been summoned for questioning again, with false claims related to “ Facebook post related to LTTxxe .” being cited as the reason.

We cannot stand by and watch the TID investigate an independent journalist like Kumanan, who continuously brings important issues like chemmani to the world.

NoAt this time, it is highly condemnable that a journalist, who provides news based on media ethics, is being threatened and subjected to false accusations. We cannot let this go , everyone must oppose this terrible repression by the government in its entirety.

https://x.com/JDSLanka/status/1953344960842833923?t=ri0qqy_2hxV42Dt6eiTExA&s=19

Edited by புலம்பெயர் அகதி

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

Published By: DIGITAL DESK 3

07 AUG, 2025 | 03:35 PM

image

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது.

ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளை தொடர்ச்சியாக களத்தில் நின்று வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அனுப்பப்பட்ட அழைப்பாணையில்,

வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/222054

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது? - ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

07 AUG, 2025 | 03:21 PM

image

முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது என  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டி இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னைய அரசாங்கங்கள் தமிழர்கள் குறித்து இனவெறியுடன் நடந்துகொண்டன நாங்கள் அவற்றை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தொடர்ச்சியாக் இந்த அரசாங்கம் தெரிவித்துவருகின்றது.

அது உண்மையானால் ஏன் இந்த அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஊடகவியலாளர் குமணணை அவரது சமூக  ஊடக பதிவுகளிற்காக விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குமணண் வடக்குகிழக்கிலிருந்து உருவான மிகவும் நம்பகதன்மை மிக்க புலனாய்வு செய்தியாளராக தன்னை தொடர்ச்சியாக நிரூபித்து வந்துள்ளார். மிகவும் உயர்ந்த தர ஆவணப்படுத்தலையும் அவர் முன்னெடுத்து வந்துள்ளார்.

உலகில்  ஊடகவியலாளர்களிற்கு எதிரான மிகவும் விரோதமான ஒரு சூழலில் அவரும் அவரது சகாக்களும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறான தொழில்சார் நிபுணர்களிற்கு உதவி தேவைப்படும் நேரத்தில் ஆதரவாக நிற்பது  சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரினதும் கடமையாகும்.

https://www.virakesari.lk/article/222051

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் - திருமுருகன் காந்தி

Published By: RAJEEBAN

07 AUG, 2025 | 04:26 PM

image

செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என தமிழ்நாட்டின் மே 17 இயக்கத்தின்  திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

kumanan.jpg

செம்மணி புதைகுழி உள்ளிட்ட தமிழர் மீதான மனித உரிமை மீறல்(ஜெனோசைட்) தகவல்களை போராட்டங்களை  புகைப்படங்களாக ஆவணப்படுத்தி ஊடகவியலாளராக செயல்படும் குமணனை  'பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழாக விசாரணைக்கு கொண்டு வந்துள்ளது அனுராவின் அரசு. 

குமணனின் புகைப்படங்கள் கூர்மையானவை, ஆவணப்படுத்தும் வகையிலான தகவல்களை உள்ளடக்கியவை.  உலகளாவிய தரங்களுடனான இப்புகைப்பட பதிவுகள் ஊடகங்களுக்கு மட்டுமல்ல,  சர்வதேச விசாரணைக்கும் பயன்படுபவை. செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார்.

இலங்கையின் அனுரா அரசு இடதுசாரி அரசு எனவும் சிவப்பு அலை இலங்கையில் வீசுகிறதெனவும் பரப்புரை செய்யும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் வரை செம்மணி குறித்தும் குமணன் போன்றோர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும். 

சிங்கள பேரினவாதிகளிடத்தில் கம்யூனிசம் ஒருகாலும் பூக்காது. இந்திய பார்ப்பனியத்தின் நிழலில் பாசிசம் மட்டுமே பூக்கும்.    

சிங்கள பேரினவாதியான அனுராவின் ஜெ.வி.பி - என்.பி.பி அரசிற்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.

https://www.virakesari.lk/article/222064

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கட தேசத்திற்காக சமரசம் இன்றி நிற்கும் இளந்தாரி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச - நல்லாட்சி காலத்தை போல தொடர்ந்தும் செயற்படும் பாதுகாப்பு எந்திரம்; ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் - அம்பிகா சற்குணநாதன்

Published By: RAJEEBAN

07 AUG, 2025 | 05:03 PM

image

மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. இதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பலரை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைக்கின்றனர், கண்காணிக்கின்றனர், அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அரசாங்கம் விசேட உத்தரவொன்றை பிறப்பிக்காவிட்டால் இது தொடரும் என எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களின் சமீபத்தைய சம்பவமாகும்.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்க கோரி அவரை பலமுறை விசாரணைக்காக அழைத்துள்ளனர், அவரை அச்சுறுத்தியுள்ளனர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்  அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறான அழைப்பாணைகள் தொலைபேசி அழைப்புகள், வீடுகளிற்கு செல்லுதல் போன்றவற்றை எதிர்கொண்டவர் குமணன் மாத்திரமில்லை. பல சிவில் சமூக பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் போன்றவர்களும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இன்றும் இது தொடர்வது ஆச்சரியமளிக்கும் விடயம் மாத்திரமில்லை.

ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. தற்போது அது முன்னர் போலவே செயற்படுகின்றது.

இந்த அரசாங்கம் இவற்றை நிறுத்துமாறு  அவர்களிற்கு விசேட உத்தரவை பிறப்பித்தால் ஒழிய அது தொடரப்போகின்றது.

விசாரணை, துன்புறுத்தலுக்குக் கொடுக்கப்படும் காரணங்கள் மற்றும் கேள்விகளில் மனித உரிமைகள் பிரச்சினைகள், வெளிநாட்டு நிதியைப் பெறுதல், இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துதல், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துதல் மற்றும் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஈடுபாடு ஆகியவை அடங்கும்

பாதுகாப்பு நிறுவனங்கள் சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளை உண்மையில் குற்றமாக்குகின்றன. மேலும் ஒரு சமூகத்தை இன ரீதியாக அடையாளம் காணவும் துன்புறுத்தவும் அரிதான அரசு வளங்களை வீணாக்குகின்றன - தமிழர்கள் இயல்பாகவே சந்தேகத்திற்குரியவர்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

https://www.virakesari.lk/article/222069

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் குமணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு - அரசின் இந்த அடக்குமுறையை அனைவரும் எதிர்க்கவேண்டும் - ரஜீவ்காந்

Published By: RAJEEBAN

07 AUG, 2025 | 08:48 PM

image

ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது.

ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர்  அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.

மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது, அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/222082

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

.மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

இவரும் வெகு விரைவில் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்படலாம். உண்மையை எதிர்கொள்ள பயம், அதனால் உண்மையை வெளிக்கொணர்பவர்களை அச்சுறுத்துவது. அடக்கி ஒடுக்கினாலும் உண்மை வீறு கொண்டு எழும் என்பதற்கு இந்த மனித புதைகுழிகள் சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு

Published By: RAJEEBAN

12 AUG, 2025 | 05:33 PM

image

இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை, இலங்கை பொலிஸார் உடனடியாக கைவிடவேண்டும், தங்கள் துன்புறுத்தல்களை நிறுத்தவேண்டும், பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படுதல் குறித்த அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் என சிபிஜேயின் பிராந்திய இயக்குநர் பெஹ் லிஹ் யி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியாயபூர்வமான செய்தியறிக்கையிடலிற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்துவது பொலிஸ் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும், அச்சு ஊடக சுதந்திரத்தை மீறுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222431

  • கருத்துக்கள உறவுகள்

குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் - மனித உரிமை பேரவை இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிக்கவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு

15 AUG, 2025 | 04:14 PM

image

தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் புதுப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது.

அறிக்கையொன்றில் அந்த அமைப்பு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது,

தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு ஏனைய சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/222622

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நான்கரை மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதுவரை விசாரணைகள் முடிவடையவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய அரசுகள் நடந்து கொண்டது போல இந்த அரசும் ஆயுதப்படைகளை வைத்து அதுவும் ஊடகவியலாளர்களையே மிரட்டுவது

காட்டுமிராண்டித் தனமான செயல்.இதை கட்சி சார்பில்லாமல் எல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

Published By: DIGITAL DESK 3

22 AUG, 2025 | 12:45 PM

image

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டார்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.

534210968_3193019260857270_6554502538346

https://www.virakesari.lk/article/223092

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.