Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 AUG, 2025 | 04:02 PM

image

(எம்.மனோசித்ரா)

தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

இதனால்  திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரமும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் இணக்கப்பாடுகளை மீறியே தற்போது வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனவே வேலை நிறுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை நிறைவுக்கு கொண்டு வர தொழிற்சங்கங்கள் விரும்பினால் அதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.

தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதிகமாகவுள்ளன.

தற்போது  4 பில்லியனாகக் காணப்படும் நஷ்டம், சம்பள அதிகரிப்புடன் 10 – 12 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. வேலை நிறுத்தங்களால் ஒரு நாள் மாத்திரம் இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும். எனவே அவற்றை சரி செய்வது கடினமாகும்.

தபால் சேவை என்பது போட்டித்தன்மை மிக்கதாகும். தனியார் துறையினரும் இந்த சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டால், எமக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே தனியார் துறையை நோக்கி நகரக் கூடும்.

இயலாத பட்சத்திலேயே வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எம்மால் சவால் விடுக்க முடியாது என்றார்.

அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் முடக்கம்

தபால் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள்  மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் ஆதரவளித்தமையினால்  தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.

அதன்படி அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை   பிரதான தபாற்கந்தோர் தவிர  12 தபால் நிலையங்கள்  குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன்  இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள்  சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் ஜே.பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டம் காலவரையறையின்றி தொடரும் என்றார்.

Dilan__6_.jpeg

Dilan__8_.jpeg

Dilan__7_.jpeg

Dilan__5_.jpeg

Dilan__3_.jpeg

Dilan__1_.jpeg

 மட்டக்களப்பு மாவட்டம் 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து தபாலகங்களும் உப தபாலகங்களும் ஊழியர்களின் பணி நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஊழியர்களின் பணி நிறுத்தத்தை அறியாத பொதுமக்கள் பலர் தபாலகங்களுக்கு வந்து திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

20250818_090738.jpg

20250818_090605.jpg

நீர்கொழும்பு  

நீர்கொழும்பு  பிரதான தபாலகமும் இன்று மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை  காணக்கூடியதாக இருந்தது.

download__3_.jpg

https://www.virakesari.lk/article/222801

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன.

ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, தபால் தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (18) பிற்பகல் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், இ.ஜி.சி. நிரோஷன் தெரிவிக்கையில்,

"உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம். அதுவரை தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பை தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmeicxsk302qlqp4kf6890pkz

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்; அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை

19 AUG, 2025 | 02:16 PM

image

(எம்.மனோசித்ரா)

தபால் சேவை உத்தியோகத்தர்களுக்கு இதற்கு மேல் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது. அதேபோன்று கைவிரல் ரேகைப் பதிவிட முடியாது எனக் கூறுவதையும் ஏற்க முடியாது. இந்த பிரச்சினைக்கு இம்முறையாவது தீர்வு காண வேண்டும். எனவே இதனால் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை சற்றுப் பொறுத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில்  செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களால் 19 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தபால்மா அதிபருடனும், அமைச்சின் செயலாளருடனும் குறித்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றன.

எனினும் அந்த பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அவர்களிடம் அவதானிக்க முடியவில்லை.

ஆனாலும் அவர்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளில் 17 விடயங்கள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளன. ஏனையவை தற்போது தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நியமனங்கள், இடமாற்றங்கள், ஆட்சேர்ப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்களும் அறிவர்.

தபால் திணைக்களத்துக்கான வாகன தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு 250 பில்லியன் ரூபா இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் தபால் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய தபாலகங்களுக்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தபால் துறைக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டிராத முன்னுரிமை எமது ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது எஞ்சியுள்ள இரு பிரதான பிரச்சினைகள் வருகையைப் பதிவு செய்வதற்கான கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரம்மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவாகும்.

சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை சம்பள அதிகரிப்பின் முதற்கட்டம் கடந்த ஏப்ரலிலிருந்தும், இரண்டாம் கட்டம் 2026 ஜனவரியிலிருந்தும், அடுத்த கட்டம் 2027 ஜனவரியிலிருந்தும் வழங்கப்படும்.

அதற்கமைய அடிப்படை சம்பளம் பாரியளவில் அதிகரிக்கப்படுகிறது. எனவே தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எவருக்கும் கூற முடியாது. யாரும் கேட்காதளவுக்கு சிறந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை சம்பள அதிகரிப்பிற்கமையவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது. 2027 ஜனவரியில் கிடைக்கவுள்ள அடிப்படை சம்பளத்துக்கமையவே இவ்வாண்டு மேலதிக வேலை நேர கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது.

எனினும் சில துறைகளில் அந்தளவு மேலதிக வேலை நேர கொடுப்பனவை வழங்கினால் அது திறைசேரிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

எனவே அவ்வாறான சேவையிலுள்ளோருக்கு நான்கில் மூன்று, ஆறில் ஐந்து என்ற அடிப்படையில் மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

தபால் சேவையில் சுமார் 23 000 உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு 2027 ஜனவரியில் கிடைக்கவுள்ள அடிப்படை சம்பளத்துக்கமைய மேலதிக வேலை நேர கொடுப்பனவு கணக்கிடப்பட்டு அதில் ஆறில் ஐந்து என்ற ரீதியில் வழங்கப்படுகிறது.

இது போதாது எனக் கூறினால் அது நியாயமற்றது. அரச சேவை தொடர்பில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான தீர்மானம் இதுவாகும். எனவே இதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மேலதிக வேலை நேர கொடுப்பனவு தொடர்பில் இனி பேசுவது பிரயோசனமற்றது.

இவ்வாறு அடிப்படை சம்பளமும், மேலதிக வேலை நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் சேவை ஊழியர் ஒருவர் தனது வருகைiயும் வேலை முடிவடைந்து செல்வதையும் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரம்செய்ய முடியாது எனக் கூறினால் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏற்கனவே தபால் திணைக்களத்தின் நிர்வாக அலுவலகங்களில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரம்இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மத்திய தபால் பரிமாற்றத்திலுள்ள மிகக் குறுகிய தரப்பினரே இதனை ஏற்க மறுக்கின்றனர்.

மக்களின் வரிப் பணத்தில் சம்பள அதிகரிப்பினையும் வழங்கி மேலதிக வேலை நேர கொடுப்பனவையும் வழங்கியுள்ள நிலையில் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்க முடியாது எனக் கூறினால் அதற்கு இடமளிக்க முடியாது.

19 கோரிக்கைகளில் எஞ்சியுள்ள இந்த இரு கோரிக்கைகளையும் எக்காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இதற்கு தெரிவிப்பவர்கள் தமக்கு பொறுத்தமான வேறு தொழிலை தேடிக் கொள்ளலாம்.

இம்முறையாவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எனவே இதனால் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை சற்றுப் பொறுத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222866

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் இருந்து அண்ணன் அனுப்பிய கடிதம்(இலங்கை விலாசம்) 3 கிழமையாகுது இன்னமும் வந்து சேரவில்லை.

முக்கியமில்லாததால் பரவாயில்லை.

அரசுகள் மாறியும் இப்படியான பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தை அரசாங்கம் தவறாக சித்தரிக்கின்றது - அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்

Published By: DIGITAL DESK 3

20 AUG, 2025 | 01:18 PM

image

அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு  பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம். 

அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.

சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரும், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தால் 100 மில்லியன் நஷ்டம்; பணிக்கு திரும்பாவிட்டால் சட்ட நடவடிக்கை - தபால் திணைக்களம் 

21 AUG, 2025 | 04:53 PM

image

(எம்.மனோசித்ரா)

தபால் தொழிற்சங்கங்களினால் 6 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தபால் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இவ்வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

ஐக்கிய தேசிய தபால் சேவை சங்கம், இலங்கை சுதந்திர தபால் மற்றும் தொலை தொடர்பாடல் சேவை சங்கம், ஐக்கிய தபால் மற்றும் மின் தபால் பரிமாற்ற சேவை சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தபால் சேவை சங்கம், ஸ்ரீலங்கா தபால் சேவை முன்னணி உள்ளிட்ட 23 தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் நேற்றைய தினமும் மத்திய தபால் பரிமாற்ற சேவை மூடப்பட்டிருந்தது. பதுளை, காலி, அநுராதபுரம், குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதான தபாலகங்களின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால் மா அதிபர் சமிஷா டி சில்வா, இந்த வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பொது மக்கள் மாத்திரமின்றி முழு தபால் சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

எனவே இதுவரை பணிக்கு சமூகமளிக்காதோர் இன்றாவது பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வாறில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் சுமார் 100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள், பொதிகளும் தேங்கியுள்ளன. அவை தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலுள்ளது எனவே கூடிய விரைவில் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

எவ்வாறிருப்பினும் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை மறைத்து கைவிரல் ரேகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுக்காகவும் மாத்திரமே நாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் தவறான கருத்தினைப் பரப்புவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. எவ்வாறிருப்பினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடப் போவதில்லை தொழிற்சங்கங்களும் ஸ்திரமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223034

  • கருத்துக்கள உறவுகள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்தார். 

இருப்பினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், தபால் மா அதிபர் ருவான் சத்குமார கருத்து தெரிவிக்கையில்,

“சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார்.

https://www.samakalam.com/வேலைநிறுத்தத்தில்-ஈடுபட/

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியாகிரகத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். 

இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. 

இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார். 

19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. 

பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmemetnq3001jo2g9mif2ju0x

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலை நிறுத்தம் நிறைவடைந்து ஒரு வாரம் கடந்தும் தேங்கியுள்ள ஒன்றரை கோடி தபால் பொதிகள்

30 Aug, 2025 | 03:37 PM

image

தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இவ்வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டு ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் நாடளாவிய ரீதியில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்தியம் பொறுத்தப்பட்டமை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறித்த சுற்று நிரூபம் என்பனவே இதற்கு பிரதான காரணியாகும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 

கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

24ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய போது தபால் மா அதிபர் மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு மேலதிக வேலை நேர கொடுப்பனவை செலுத்துவதற்காக பணிக்கு திரும்புமாறு சுற்று நிரூபமொன்றையும் வெளியிட்டிருந்தார்.

அதற்கமைய ஒட்டுமொத்த தபால் பணியாளர்களும் அவ்வாறே செயற்பட்டோம். மத்திய தபால் பரிமாற்ற சேவையில் 30 சதவீதமானவை மேலதிக வேலை நேர கொடுப்பனவு முறைமையை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த சேவைகளுக்கு பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. பணியாளர்களை ஒதுக்குவதற்கு பதிலாகவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையிலேயே இந்த சேவைகள் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பிரதி பலனாக 10 மில்லியனுக்கும் அதிகமான தபால் பொதிகள் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் தேங்கியுள்ளன.

தபால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சகல தபாலகங்களிலும் சுமார் 5 நாட்களுக்கான தபால் பொதிகள் குவிந்துள்ளன. இவ்வாறு நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக நம்புகின்றோம்.

இந்த பொதிகளுக்குள் தரம் ஒன்றுக்குள் மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள், உயர்தர பரீட்சைகளுக்கான கடிதங்கள், நேர் காணல்களுக்கான கடிதங்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் என பல முக்கிய ஆவணங்கள் உள்ளன.

பொது மக்களுக்கான முக்கிய கடிதங்களை இவ்வாறு தேக்கி வைத்திருப்பதற்கு தபால்மா அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நெருக்கடிக்கு அவரே முற்றுமுழுதாக பொறுப்பு கூற வேண்டும்.

இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தபால் துறை முற்றாக வீழ்ச்சியடையும் என்று எச்சரிப்பதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/223782

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.