Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை பரபரப்பான முறையில் வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை

Published By: Vishnu

20 Oct, 2025 | 11:04 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இந்த மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

கடைசி இரண்டு ஓவர்களில் பங்களாதேஷ் 5 விக்கெட்களை ஒரு ஓட்டத்திற்கு இழந்ததால் அதன் வெற்றிக்கான முயற்சி கைகூடாமல் போனது.

சமரி அத்தபத்துவின் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் வீழ்ந்தன.

இந்தத் தோல்வியை அடுத்து அரை இறுதி வாய்ப்பை பங்களாதேஷ் இழந்தது.

அதேவேளை, இலங்கையின் நிகர ஓட்ட வேகம் எதிர்மறையாக இருப்பதால் அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

விஷ்மி குணரட்ன முதலாவது பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதனை அடுத்து அணித் தலைவி சமரி அத்தபத்துவும் ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

சமரி அத்தபத்து 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கி இருந்தன.

அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை.

அவரைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழந்தன. (100 - 4 விக்.)

எனினும் ஹசினி பெரேராவும் நிலக்ஷிக்கா சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

நிலக்ஷிக்கா சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவதாக ஆட்டம் இழந்த ஹசினி பெரேரா 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷொர்னா அக்தர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபேயா கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்து.

முதல் 3 விக்கெட்களை 44 ஓட்டங்களுக்கு இழந்ததால் பங்களாதேஷ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் ஷர்மின் அக்தர், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஷர்மின் அக்தர் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். அவர் அப்போது 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து நிகார் சுல்தானாவும் ஷொர்னா அக்தரும் அதே விக்கெட்டுக்காக மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அக்தர் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

சற்று நேரத்தில் ரிட்டு மோனியும் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (193 - 5 விக்)

கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வீசிய சமரி அத்தபத்து முதல் பந்தில் விக்கெட் ஒன்றைக் கைப்பற்றியதுடன் அடுத்த பந்தில் மேலும் ஒரு வீராங்கனை ரன் அவுட் ஆனார்.

கடைசி 4 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அதுவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிகார் சுல்தானா 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அத்தபத்துவின் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.

அத்துடன் பங்களாதேஷின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.

நான்காவது பந்திலும் அத்தப்பத்து விக்கெட் ஒன்றை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய ஷர்மின் அக்தர் 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகி: ஹசினி பெரேரா.

https://www.virakesari.lk/article/228241

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் DLS முறைமையின் பிரகாரம் 150 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றி

Published By: Vishnu

21 Oct, 2025 | 11:58 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கும்   பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

2110_marizanne_kapp__sa_vs_pak.png

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்   தலா 9 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.

2110_laura_wolwardt_sa_vs_pak.png

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி லோரா வுல்வார்ட், சுனே லூயி, மாரிஸ்ஆன் கெப், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் அதிரடி ஆட்டங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா கணிசமான ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்தது

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் அபிரிக்கா 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களைக் குவித்தது.

2110_sune_luis__sa_vs_pak.png

இரண்டாவது ஓவரில் தஸ்மின் ப்றிட்ஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து 2 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 3.09 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

மழை ஓய்ந்த பின்னர் பிற்பகல் 5.25 மணிக்கு ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 40  ஓவர்கள்  என போட்டி தீர்ப்பாளரால் நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து லோரா வுல்வார்ட், சுனே லூயி ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 92 பந்துகளில் 118 ஓட்டங்களைப்  பகிர்ந்தனர்.

அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த சுனே லூயி 8 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தெடாந்து ஆன்எரி டேர்க்சன் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் லோரா வுல்வார்ட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 64 ஓட்டங்களை வேகமாக பகிர்ந்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய  லோரா வுல்வார்ட் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைக் குவித்தார். அவரைத் தொடர்ந்து கராபோ மெசோ ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எனினும் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இவரும் 6ஆவது விக்கெட்டில் 6 ஓவர்களில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்தனர்.

க்ளோ ட்ரையொன் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபக்கத்தில் நாடின் டி க்ளார்க் 16 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களை விளாசினார்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாடியா இக்பால் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

40 ஓவர்களில் 306 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட டக்வேர்த் லூயிஸ் முறைமையின் கீழ் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருந்தபோது இரவு 9.23 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

38 நிமிடங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 25 ஓவர்களில் 262 ஓட்டங்கள் என அறிவிக்கப்பட்டது.

மறுபக்கத்தில் குறைந்த பட்சம் 15 ஓவர்களைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வாஞ்சையுடன் விளையாடிய தென் ஆபிரிக்கா ஓவர்களை விரைவாக வீசி முடிப்பதில் குறியாக இருந்தது.

ஆனால், ஆட்டம் மீண்டும் ஆரம்பித்து தொடர்ந்தபோது தென் ஆபிரிக்கா 2 ஓவர்களை வீசிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மூன்றாவது தடவையாக இரவு 10.26 மணிக்கு தடைப்பட்டது.

ஆனால் சற்று நேரத்தில் மழை நின்றதால் இரவு 10.35 மணிக்கு போட்டி மீண்டும் தொடர்ந்ததுடன் மூன்றாவது முறையாக வெற்றி இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது.

20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி  இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்ககளைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சித்ரா நவாஸ் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் நட்டாலியா பெர்வெய்ஸ் 20 ஓட்டங்களையும் சிட் ரா ஆமின் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: மாரிஸ்ஆன் கெப்

https://www.virakesari.lk/article/228333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏஷ்லி, அனாபெல் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் ஆஸியை வெல்ல வைத்தன; இங்கிலாந்துக்கு முதலாவது தோல்வி

Published By: Vishnu

22 Oct, 2025 | 10:49 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவின் இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது.

ஏஷ்லி கார்ட்னர் ஆட்டம் இழக்காமல் குவித்த அபார சதம், அனாபெல் சதர்லண்ட் ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவின்  வெற்றியை இலகுவாக்கின.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் தோல்வி அடையாமல் இருந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9.3 ஓவர்கள் மிதமாக இருக்க 4 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 11 புள்ளிகளுடன்  அவுஸ்திரேலியா  மீண்டும் முதலாம் இடத்தை அடைந்தது.

அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது 16ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியா பலத்த அழுத்தத்தை எதிர்கொண்டது.

2210_annabel_sutherland_aus_vs_eng.png

ஆனால், அனாபெல் சதர்லண்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 148 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

இந்தப் போட்டியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஏஷ்லி கார்ட்னர் 72 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

முதல் 50 ஓட்டங்களுக்கு 47 பந்துகளை எதிர்கொண்ட ஏஷ்லி கார்டனருக்கு அடுத்த 50 ஓட்டங்களைப் பெற வெறும் 22 பந்துகளே தேவைப்பட்டது.

அவர் 73 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகளுடன் 104 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவருக்கு பக்கபலமாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அனாபெல் சதர்லண்ட் துரதிர்ஷ்டவசமாக 2 ஓட்டங்களால் சதத்தைப் பூர்த்திசெய்யத் தவறினார்.

112 பந்துகளை எதிர்கொண்ட அனாபெல் சதர்லண்ட் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர்களைவிட பெத் மூனி 20 ஓட்டங்களையும் எல்சி பெரி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

அமி ஜோன்ஸ், டமி போமொன்ட் ஆகிய இருவரும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அமி ஜோன்ஸ் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த ஹீதர் நைட் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணித் தலைவி நெட் சிவர் - ப்ரன்ட் வெறும் 7 ஓட்டங்களையே பெற்றார். (105 - 3 விக்.)

2210_tammy_beaumont_eng_vs_aus..png

சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டமி போமொன்ட் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 78 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

எம்மா லாம்ப் (7), சொஃபியா டன்க்லி (22) ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து (166 - 6 விக்.) சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், அலிஸ் கெப்சி (38), சார்ளி டீன் (26) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 227 ஓட்டங்களாக உயர்த்தி அதே எண்ணிக்கையில் இருவரும் ஆடுகளம் விட்டகன்றனர்.

சொஃபி எக்லஸ்டோன் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகி: அனாபெல் சதர்லண்ட்

https://www.virakesari.lk/article/228420

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தை வெற்றிகொண்டு மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published By: Vishnu

24 Oct, 2025 | 12:20 AM

image

(நெவில் அன்தனி)

நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்ட இந்தியா, அரை இறுதியில் விளையாட நான்காவது அணியாகத் தகுதிபெற்றது.

மழையினால் தடைப்பட்ட இப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் நியூஸிலாந்தை 53 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களைக் குவித்தது.

2310_india_qualify_for_semis.jpg

2310_smriti_mandana_player_of_the_match.

ஸ்ம்ரித்தி மந்தனா, ப்ரத்திகா ராவல் ஆகியோர் குவித்த அபார சதங்கள், ஜெமிமா ரொட்றிகஸ் பெற்ற அரைச் சதம் என்பன இந்தியாவை வலுவான நிலையில் இட்டன.

இந்தியா 48 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் பிற்பகல் 6.21 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு மேலும் ஒரு ஓவர் வழங்கப்பட்டது.

அந்த ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது.

ப்ரத்திகா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 212 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஸ்ம்ரித்தி மந்தனா 95 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 109 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 288 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரத்திகா ராவல் 122 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவர் 134 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை விளாசினார்.

இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர் என்ற இணை சாதனையை லிண்ட்சே ரீலருடன் ப்ரத்திகா ராவல் பகிரந்துகொண்டார். இந்த சாதனையை லிண்ட்சே ரீலர் 37 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டி இருந்தார்.

அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட ஜெமீமா ரொட்றிகஸ் 55 பந்துகளில் 11 பவுண்டறிகள் அடங்கலாக 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 10 ஓட்டங்ளைப் பெற்றார்.

நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் சிறு மழையினால் தாமதித்ததால் அதன் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 44 ஓவர்களில் 325 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 44 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்ததுடன் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பையும் பறிகொடுத்தது.

முதலாவது விக்கெட்டை ஒரு ஓட்டத்திற்கு இழந்த நியூஸிலாந்து 12ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட்டை இழந்தபோது 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்வரிசையில் அமேலியா கேர் 45 ஓட்டங்களையும் ஜோர்ஜியா ப்லிம்மர் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

2310_brooke_halliday_nz_vs_ind.png

மத்திய வரிசையில் ப்றூக் ஹாலிடே 81 ஓட்டங்களையும் இசபெல்லா கேஸ் ஆட்டம் இழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரேனுகா சிங் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்தி கௌத் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா.

https://www.virakesari.lk/article/228505

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவை 97 ஓட்டங்களுக்கு சுருட்டி ஆஸி.யை வெற்றி அடையச் செய்த அலனாவின்  உலகக் கிண்ண சாதனை பந்துவீச்சு

25 Oct, 2025 | 06:59 PM

image

(நெவில் அன்தனி)

இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அலனா மரியா கிங், பந்துவீச்சில் உலகக் கிண்ண சாதனையை நிலைநாட்டி அவுஸ்திரேலியாவை 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றி அடையச் செய்தார்.

இந்த வெற்றியை அடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியாவும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆபிரிக்காவும் எதிர்த்தாடும்.

அலான கிங்கின் சுழல்பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 24 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), சினாலோ ஜப்டா (29), நாடின் டி க்ளார்க் (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அலனா மரியா கிங் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ணத்தில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

இந்தியாவுக்கு எதிராக 1982 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து வீராங்கனை ஜெக்குலின் லோர்ட் பதிவுசெய்த 10 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே மகளிர் உலகக் கிண்ணத்தில் முந்தைய அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது.

43 வருடங்கள் நீடித்த மகளிர் உலகக் கிண்ண சாதனையை இன்றைய தினம் அலனா மரியா கிங் முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

98 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்ததால் அவுஸ்திரேலியா நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், ஜோர்ஜியா  வொல், பெத் மூனி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை அண்மிக்க உதவினர்.

பெத் மூனி 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஜோர்ஜியா வொல் 38 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்து அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தனர்.

ஆட்டநாயகி: அலனா மரியா கிங்

https://www.virakesari.lk/article/228669

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்துக்கு எதிராக  பெரிய வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியது; சொஃபி டிவைன் ஒய்வு பெற்றார்

Published By: Vishnu

27 Oct, 2025 | 12:01 AM

image

(நெவில் அன்தனி)

விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் பெரிய வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து, அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

லின்சி ஸ்மித், அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்ட், அலிஸ் கெப்சி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், அமி ஜோன்ஸ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன இங்கிலாந்துக்கு பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோர்ஜியா ப்ளிம்மர் 43 ஓட்டங்களையும் அமேலியா கேர் 35 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலிஸ் கெப்சி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2610_tammy_beaumont_and_amy_jones_eng_vs

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 29.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

அமி ஜோன்ஸ் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்களையும் டெமி போமொன்ட் 40 ஓட்டங்களையும் ஹீதர் நைட் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டநாயகி: அமி ஜோன்ஸ்

சொஃபி டிவைன் ஓய்வுபெற்றார்

நியூஸிலாந்து அணித் தலைவி சொஃபி பிரான்செஸ் மொனிக் டிவைன் இந்தப் போட்டியுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 19 வருடங்களுக்கு முன்னர் அவஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான சொஃபி டிவைன், இன்று நடைபெற்ற நியூஸிலாந்தின் இந்த வருடத்திற்கான கடைசி மகளிர் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டி முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2610_sophie_devine_and_nat_siver_brunt.p

2610_sophie_devine_retires_from_wodi.png

159 போட்டிகளில் 144 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய சொஃபி டிவைன் 9 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4279 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார்.

சகலதுறை வீராங்கனையான டிவைன் 111 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/228739

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2025 at 20:04, ஈழப்பிரியன் said:

கடைசி இடத்துக்கு வராமல் இருக்க போராடினாலே காணும்.

ஹா ஹா செம‌ சிரிப்பு............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை மகளிர் அணிக்கு மொத்த பணப்பரிசு 31.5 கோடி ரூபா

Published By: Digital Desk 3

28 Oct, 2025 | 03:45 PM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற இலங்கை மகளிர் அணி 31 கோடியே 51 இலட்சத்து 63,066 ரூபாவை மொத்த பணப்பரிசாக சம்பாதித்துள்ளது.

இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் போட்டிகள் நிறைவில் 7 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா, 4 தடவைகள் சம்பியனான இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, வரவேற்பு நாடான இந்தியா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அணிகள் நிலையில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது.

நியூஸிலாந்தில் கடைசியாக நடைபெற்ற 12ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைக்கூட பெறாமல் இருந்த இலங்கை, மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த வருடம் அதிசிறந்த நிலையை அடைந்தது.

போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றமைக்காக 700,000 டொலர்களை  வென்றெடுத்த இலங்கை, ஒரு வெற்றிக்காக 34,314 டொலர்களையும் 3 முடிவுகிட்டாத போட்டிகளுக்கு தலா 17,157 டொலர்களையும் பெறவுள்ளது. அத்தடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றியமைக்காக 250,000 டொலர்கள் கிடைக்கவுள்ளது.

இதற்கு அமைய இலங்கைக்கு கிடைக்கவுள்ள மொத்த பணப்பரிசு 10 இலட்சத்து 35,785 அமெரிக்க டொலர்களாகும்.

இது இலங்கை நாணயப்படி 31 கோடியே 51 இலட்சத்து 63,066 ரூபாவாகும்.

chamari_atthapatthu.png

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றது.

கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றிபெறுவதற்கு கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதம் இருந்தன.

கடைசி ஓவரை துணிச்சலுடன் சமரி அத்தபத்து வீசினார்.

அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

கடைசி 2 பந்துகளில் இரண்டு ஒற்றைகள் மாத்திரமே பங்களாதேஷ் பெற, இலங்கையின் ஒரே ஒரு வெற்றியை சமரி அத்தபத்து உறுதிப்படுத்தினார்.

அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான இலங்கையின் போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை தோல்விகளைத் தழுவியிருந்தது.

https://www.virakesari.lk/article/228899

  • கருத்துக்கள உறவுகள்

இனி நியுசிலாந் அணிக்கு பின்ன‌டைவு

இவான்ட‌ ஓய்வு அணிக்கு தான் பாதிப்பு இவான்ட‌ இட‌த்தை நிரப்ப‌ இவாவை போல் திற‌மையான‌ ம‌க‌ளிர் இல்லை............ப‌ந்தும் போடுவா ம‌ட்டையாலும் அடிப்பா.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை" - ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு ஜெமிமா கூறியது என்ன?

ஜெமிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார்.

கட்டுரை தகவல்

  • பிரவீன்

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

" மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை கடந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஒரு புதிய சாம்பியன் உருவாகப் போகிறது."

இந்திய இன்னிங்ஸின் 49வது ஓவரில் சோஃபி மோலினோவின் பந்து வீச்சில் அமன்ஜோத் கௌர் ஒரு பவுண்டரி அடித்தவுடன், வர்ணனையாளர் கூறிய சொற்கள் இவை.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை விவரிக்க இதைவிட சிறந்த சொற்கள் இருக்க முடியாது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடித்த அற்புதமான சதமும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீருடன் நிறைந்த 89 ரன்களும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

அமன்ஜோத் வெற்றிகரமான ஷாட்டை அடித்ததும், ஜெமிமா ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்தார். அதே நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, தன்னைச் சுற்றியிருந்த வீராங்கனைகளை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் ஆடத் தொடங்கினார்.

ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீர் மல்கிய கண்கள், அவர்கள் இணைந்து வரலாறு படைத்ததைப் வெளிப்படுத்தின.

அவர்களின் கூட்டணி, பல சாதனைகளை முறியடித்து, இந்தியாவை மூன்றாவது முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.

அதுவும், முந்தைய 15 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அவர்கள் சாதனை படைத்தனர்.

இந்தப் போட்டியிலும், ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் இணைந்து விளையாடத் தொடங்கும் வரை ஆஸ்திரேலியா தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்தது.

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் அகாடமியில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 339 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இது மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி வரலாற்றில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த ஸ்கோராகக் கருதப்படுகிறது.

பின்னர் ஆஸ்திரேலியா இந்திய தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவை 9.2 ஓவர்களில் 59 ரன்களுக்கு வெளியேற்றியது. அதனால், ஒரு கட்டத்தில் இந்தியா போட்டியிலிருந்து முற்றிலும் வெளியேறியதாகவே தோன்றியது.

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யப்போவது குறித்து தெரியாது- ஜெமிமா

"நான் சாதாரணமாக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மூன்றாவது இடத்துக்கும் அனுப்பப்படுவேன். இந்த முறை இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்"என போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து ஜெமிமா நீக்கப்பட்டார்.

அப்போது தான் போட்டியின் சூழலே மாறத் தொடங்கியது.

ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் தொடர்ந்து வேகமாக ரன்கள் குவித்து, ரன் விகிதத்தின் அழுத்தத்தை சமாளித்தனர்.

கடினமான சூழ்நிலையிலும், ஜெமிமா 56 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 65 பந்துகளில் அரைசதத்தை எட்டியதும், இன்னும் வேகமாக விளையாடத் தொடங்கினார்.

சதம் அடிக்க முடியாவிட்டாலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தனர். இது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் சிறந்த மூன்றாவது விக்கெட் கூட்டணியாக அமைந்தது.

ஜெமிமா மிகுந்த மன உறுதியுடன் களத்தில் நின்றதால், போட்டிக்குப் பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவரைப் பற்றி பெருமையாகப் பேசியார்.

"ஜெமிமா முழுப் பொறுப்பையும் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டது போல இருந்தது. நாங்கள் இருவரும் பேட்டிங் செய்தபோது, ஒருவரையொருவர் ஊக்குவித்தோம். ஜெமிமா அழுத்தத்தை அதிகரிக்க விடாமல், என்னை எளிமையாக விளையாடச் செய்தார். அவருடன் பேட்டிங் செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர், தான் ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், என்னையும் தொடர்ந்து ரன்கள் எடுக்கத் தூண்டினார். எல்லா பாராட்டுக்களும் அவருக்கே சொந்தம்"என போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.

இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் களமிறங்கிய ஜெமிமாவுக்கு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டியது குறித்த தகவல் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் கிடைத்தது.

"நான் சாதாரணமாக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மூன்றாவது இடத்துக்கும் அனுப்பப்படுவேன். இந்த முறை இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்"என போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.

ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீர் மல்கிய கண்கள், அவர்கள் இணைந்து வரலாறு படைத்ததைப் வெளிப்படுத்தின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதியில் ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி சாதனை படைத்தனர்.

"நான் அணி வெற்றி பெற உதவ விரும்பினேன்"

ஆனால் ஜெமிமா களமிறங்கிய தருணத்திலிருந்தே, இந்தியாவை இறுதிப் போட்டிக்குத் கொண்டு செல்லாமல் பெவிலியனுக்குத் திரும்பமாட்டேன் என்ற உறுதியுடன் விளையாடியதை போல தோன்றியது.

அதனால்தான் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி போன்ற பெரிய மேடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதம் அடித்த பிறகும் அவர் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. இந்தியா வெற்றியடையும் வரை காத்திருந்தார்.

போட்டி முடிந்ததும் அவர் ஆட்ட நாயகர் பட்டத்தைப் பெற்றபோது, 127 ரன்கள் கொண்ட அவரது அற்புத இன்னிங்ஸின் கதையைச் சொல்ல எந்த வார்த்தைகளும் தேவைப்படவில்லை. அவர் சிந்திய கண்ணீரே அந்தக் கதையைச் சொன்னது.

"நான் ஒரே ஒரு விஷயத்தை தான் நினைத்தேன். அணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். இன்று அது எனது 50 அல்லது 100 ரன்களைப் பற்றியது அல்ல. இந்தியா வெற்றி பெறுவதே முக்கியம்"என்று ஜெமிமா கூறினார்.

இந்த வெற்றியின் அடித்தளம் என, ஹர்மன்ப்ரீத் கவுருடன் இருந்த தனது கூட்டணியை அவர் விவரித்தார்.

"கடைசி வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் கிரீஸுக்கு வந்ததும், நாங்கள் நல்ல கூட்டணியை உருவாக்குவது பற்றிப் பேசினோம். தொடர்ந்து ரன்கள் எடுக்க முடிவு செய்தோம்," என்று ஜெமிமா கூறினார்.

ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் கூட்டணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு அணி நாக்அவுட் ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டுவதில் வெற்றி பெற்றது.

ஜெமிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெமிமா தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை அடித்தார்.

ஜெமிமாவின் கடினமான பயணம்

உலகக் கோப்பையின் அரையிறுதிக்குச் செல்வது எவ்வளவு கடினமான பயணமாக இருந்தது என்பதை ஜெமிமா போட்டிக்குப் பிறகு பகிர்ந்தார்.

"கடந்த நான்கு மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன. ஆனால் நான் என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாங்கள் முக்கியமான தருணங்களில் வெற்றியை இழந்துவிட்டதால், இந்த முறை அணியை வெற்றியடையச் செய்வதே என் ஒரே இலக்கு"என அவர் கூறினார்.

58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெமிமா, அவற்றில் மூன்று சதங்களை அடித்துள்ளார், மேலும் அந்த மூன்று சதங்களும் இந்த ஆண்டில் அவர் பெற்ற வெற்றிகள்.

அதே நேரத்தில், 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதில் ஏற்பட்ட தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

"கடந்த முறை நான் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த முறை நான் மிகவும் நல்ல ஃபார்மில் இருந்தேன்," என்று ஜெமிமா கூறினார்.

"ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதேன். மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும் இருந்தேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு சவால் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது"என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

சிரமங்களை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர்

ஹர்மன்ப்ரீத் கவுர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கண்ணீருடன் காணப்பட்டார்.

ஜெமிமாவைப் போலவே, ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இந்த உலகக் கோப்பை ஒரு கடினமான பயணமாக இருந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது.

ஒரு கட்டத்தில், இந்தியா அரையிறுதிக்கு செல்ல முடியாது என தோன்றியது. ஆனால் ஆறாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், ஹர்மன்ப்ரீத் கவுரின் அணி வலுவாக மீண்டு வந்தது. அத்துடன், இந்த முறை வரலாற்றை உருவாக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடமாட்டோம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தியது.

அரையிறுதிக்கு முன் சிறந்த ஃபார்மில் விளையாடி வந்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ஏற்பட்ட காயம், இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பையின் போது ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி, அணியின் பீல்டிங் குறைபாடுகள், எதிர்பார்த்த ரன்கள் கிடைக்காதது போன்றவை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஆனால் இந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தனது ஒரு இன்னிங்ஸிலேயே அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பதிலளித்ததாகத் தோன்றியது.

இப்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையிலான இந்திய அணி, நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அகாடமி மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn09xvkxzk0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, புதிய அணி உலக சம்பியனாவதை உறுதிசெய்தது

30 Oct, 2025 | 11:30 PM

image

(நெவில் அன்தனி)

நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா மூன்றாவது தடவையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதமும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் பெற்ற அரைச் சதமும் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன.

இந்தப் போட்டி முடிவை அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்  வராற்றில்  புதிய அணி ஒன்று சம்பியனாகப் போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை புதன்கிழமை வீழ்த்தி முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற தென் ஆபிரிக்கா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 339 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. உபாதைக்குள்ளான ப்ரத்திக்கா ராவலுக்குப் பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷபால் வர்மா 10 ஓட்டங்களுடனும் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 2 விக்.)

ஆனால், சிரேஷ்ட வீராங்கனைகளான ஜெமிமா ரொட்றிகஸ், ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறப்பான நிலையில் இட்டனர்.

அஹாமன்ப்ரீத் கோர் தசை இழுப்புக்குள்ளான  சொற்ப நேரத்தில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார். அவர் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது தீப்தி ஷர்மா அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து அநாவசியமாக விக்கெட்டை தாரைவார்த்தார். அவர் 24  ஓட்டங்களைப்   பெற்றார்.

அடுத்து களம் புகுந்த ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று கவனக்குறைவான அடி தெரிவால் ஆட்டம் இழந்தார்.

அவர் 4ஆவது விக்கெட்டில் ரொட்றிகஸுடன் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா ரொட்றிகஸ் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஆமன்ஜோத் கோர் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களைக் குவித்தது.

ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த அபார சதம், எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியன அவுஸ்திரேலியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. 

அவர்களின் முயற்சிகள் ஜெமிமா ரொட்றிகஸின் அபார சதத்தினால் வீணடிக்கப்பட்டுவிட்டது.

உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அணித் தலைவி அலிசா ஹீலி வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆனால், ஃபோப் லிச்ஃபீல்ட், எலிஸ் பெரி ஆகிய ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ஃபோப் லிச்ஃபீல்ட் 93 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார்.

பெத் மூனி 24 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 3 ஓட்டங்களுடனும் எலிஸ் பெரி 77 ஓட்டங்களுடனும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசையில் ஏஷ்லி கார்ட்னர் 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் பெற்றார்.

பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிகஸ்

3010_india_into_the_wwc_final.jpg

3010_jemimah_rodrigues_player_of_the_mat

3010_jemimah_rodrigues_emmotional_moment

3010_india_joyous_moment.png

https://www.virakesari.lk/article/229089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உலகக் கோப்பை: 'இந்த 5 விஷயங்கள் நடந்தால் இந்தியாவுக்கு வெற்றி பிரகாசம்'

பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மு.பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 1 நவம்பர் 2025

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி.

இந்த 5 முக்கிய விஷயங்கள் நடந்தால் இந்திய அணி சாம்பியன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். அவை என்ன?

1) இந்தியா சேஸ் செய்வது சாதகமாக அமையலாம்

இந்திய அணி டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வது சாதகமாக அமையலாம் என்று சொல்கிறார் ஆர்த்தி சங்கரன்.

"வழக்கமாக இதுபோன்ற பெரிய போட்டிகளில் எந்த அணியுமே முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்வார்கள். பெரிய ரன்கள் அடித்தால், அதுவே எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடும். அது வழக்கம் தான். ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று தோன்றுகிறது" என்றார் அவர்.

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேஸ் செய்தது இந்தியா

தான் அப்படிச் சொன்னதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறினார் அவர். "பனி (Dew) இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பௌலர்களுக்குப் பந்தைப் பிடிப்பது எளிதாக இருக்காது. அரையிறுதியின் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பௌலர்கள் நிறைய வைட்கள் வீசியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் பந்தும் பேட்டிற்கு நன்றாக வரும். அதனால் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் நல்லது.

அதுமட்டுமல்லாமல் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆடுகளம் மூடி வைக்கப்படலாம். அப்படி மூடிவைக்கப்பட்ட ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வரும். அப்படியிருக்கும்போது முதலில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்துதான் வரலாற்று வெற்றி பெற்றது. 339 ரன்களை சேஸ் செய்து, பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய சேஸையும் பதிவு செய்தது இந்தியா.

2) ரேணுகா தாக்கூருக்குப் பதில் ஸ்னே ராணா

அரையிறுதியில் ஆடிய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன்.

"ஸ்னே ராணாவால் இறுதிப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். அரையிறுதியின் முக்கிய கட்டத்தில் அவர் இல்லாததை உணர முடிந்தது. அதேசமயம் ரேணுகா இந்தியாவின் சிக்கனமான பௌலராக இருக்கிறார். இருந்தாலும், அவரை முதல் ஸ்பெல்லுக்குப் பின் பெரிதாகப் பயன்படுத்த முடிவதில்லை. கடைசி கட்டங்களில் ஒரு பௌலர் குறைவாக இருப்பது போலத்தான். அதனால் எந்த கட்டத்திலும் பந்துவீசக்கூடிய ஸ்னே ராணாவை ஆடவைப்பது மிடில் ஓவர்களுக்கும், டெத் ஓவர்களுக்கும் உதவும்" என்று கூறுகிறார் ஆர்த்தி.

இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆடியிருக்கும் ரேணுகா 4.13 என்ற எகானமியில் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 6 போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்னே ராணா, 5.67 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஸ்னே ராணா ஆடவில்லை

3) மரிசான் காப் வீசும் 10 ஓவர்களை சரியாகக் கையாளவேண்டும்

தென்னாப்பிரிக்காவின் முன்னணி பௌலரான மரிசான் காப்பை இந்திய பேட்டர்கள் நன்றாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி.

"காப் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய 10 ஓவர்களை இந்தியா சிறப்பாகக் கையாளவேண்டும். ஒரு நல்ல விஷயம், இங்கிலாந்து பேட்டர்களுக்கு இருந்ததுபோல் இந்திய பேட்டர்களுக்கு இன்ஸ்விங்கை சமாளிக்கும் பிரச்னை இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் காப். பவர்பிளேவில் பேட்டர்களுக்கு சவால் விடக்கூடிய அவர், இதுவரை 3.83 என்ற எகானமியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

இந்தியாவுக்கு பவர்பிளேவில் அவர் கொஞ்சம் பிரச்னை தரலாம் என்று சொல்லும் ஆர்த்தி, காப்போடு டெல்லி அணியில் ஷஃபாலி ஆடியது அவருக்குக் கொஞ்சம் சாதகமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக ஷஃபாலி வர்மா, மரிசான் காப் இருவரும் வுமன்ஸ் பிரிமீயர் லீக் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர்.

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மரிசான் காப்

அதேசமயம் ஷஃபாலி வர்மா அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடவும் அணி நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி.

காப் தவிர்த்து, இடது கை ஸ்பின்னரான மலாபா இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆர்த்தி. ஆனால், அவர் பந்துவீச்சில் அதிரடியாக அடித்து ஆடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும்

தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

"தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்." என்று கூறினார்.

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாரா வோல்ஃபார்ட் & டாஸ்மின் பிரிட்ஸ்

இந்தத் தொடரில் 470 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் வோல்ஃபார்ட்.

''இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் நடீன் டி கிளார்க் தான் 54 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அப்போது பெரும்பகுதி அவரோடு வோல்ஃபார்ட் விளையாடியிருந்தார். அந்த 3 பேரை (வோல்ஃபார்ட், பிரிட்ஸ், காப்) அப்படி நீண்ட நேரம் ஆடவிடாமல் செய்தால், பின்னால் வருபவர்கள் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் செய்ய முடியும்'' என்கிறார் ஆர்த்தி.

5) ஹர்மன், ஸ்மிரிதி இருவரின் நிதானமும் முக்கியம்

இந்தியாவின் இரு தூண்களான ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா இருவரும் இறுதிப் போட்டியில் நிதானமாக இருக்கவேண்டும் என்கிறார் ஆர்த்தி.

"இந்தியாவின் இந்த இரண்டு ஸ்டார்களும் நெருக்கடிகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, மற்றவர்கள் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வழி வகுக்க வேண்டும்" என்று கூறினார்.

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனும் நெருக்கடியான போட்டியை நிதானமாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன்

மேலும், "அவர்கள் இருவரும் இப்போது பல ஃபைனல்கள் விளையாடி விட்டார்கள். நிறைய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறார்கள். அதனால் அந்த நெருக்கடிகளையெல்லாம் அவர்கள் தோள்களில் தாங்கி அதை சமாளிக்கவேண்டும். மற்றவர்களுமே சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த இரு சீனியர்களின் நிதானம் முக்கியம்" என்றார் ஆர்த்தி.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்குத் தொடங்கும்.

இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பை எதுவும் வென்றதில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm277k624lvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்காவை ஏன் இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது?

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சதமடித்த ஜெமிமா

கட்டுரை தகவல்

  • சஞ்சய் கிஷோர்

  • பிபிசி ஹிந்திக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

1983-ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலக கோப்பையைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியமான தருணம் இது.

இன்று நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலககோப்பை இறுதிப் போட்டி வரலாற்று புத்தகங்களில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட உள்ளது.

2006-ஆம் ஆண்டு பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை தங்களின் குடைக்குள் எடுத்துக் கொண்டது. அப்போது மகளிர் கிரிக்கெட் இன்று அடைந்துள்ள உயரத்தை அடையும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மகளிர் கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் மைதானங்கள் காலியாக இருந்தன, தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய போராட வேண்டியிருந்தது.

அந்தச் சூழல் தற்போது மாறிவிட்டது, வீராங்கனைகள் நட்சத்திரங்களாக மாறி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றனர்.

பெண்கள் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது. ஆனால் மைதானங்களுக்கு ரசிகர்களைக் கொண்டு வருவதில் வெற்றியடையவில்லை.

இந்திய அணிக்குப் பின்னால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ உள்ளது. அவர்களிடம் வளமும் கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கிரிக்கெட் என்பது பணத்தால் மட்டுமல்ல, தைரியத்தால் வெல்லப்படுகிறது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ரசிகர்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்றால் எந்த அணியும் கோப்பைகளை வெல்ல வேண்டும்.

இந்திய கிரிக்கெட்டின் பிம்பத்தையும் தலைவிதியையும் மாற்ற கபில் தேவின் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டியிருந்தது.

தற்போது அதே போன்றதொரு சூழல் மகளிர் அணிக்கும் உருவாகியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடவில்லை, ஒரு கனவை நிறைவேற்றவும் விளையாடுகிறது.

ஆனால் தென் ஆப்ரிக்க அணிக்கு இறுதிப் போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தென் ஆப்ரிக்கா. இறுதி போட்டி வெற்றியைக் கொண்டாடுவாதற்காக டேன்சிங் ஷூக்களை எடுத்து வந்துள்ளனர். தென் ஆப்ரிக்க அணியின் இயக்குநர் ஈனோச் நிக்வே தனது அணியை "ஆர்டிஸ்டிக் ஹன்டர்கள்" என அழைக்கிறார்.

இரு 'உதய சூரியன்' அணிகளின் கதை

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்க அணி

வரலாற்றை மாற்றும் இறுதி போட்டியாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து அல்லாமல் ஒரு புதிய அணி உலக சாம்பியனாக உள்ளது.

இது, இந்தத் தொடரில் விட்டுக் கொடுக்காத உணர்வை வெளிப்படுத்திய இரு 'உதய சூரியன்' அணிகளின் கதைகளாகும்.

இந்திய அணி முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளை தோற்கடிக்காமல் நாக்-அவுட் சுற்றுக்கு வந்தது. அதன் பிறகு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் வரலாற்று வெற்றி பெற்று இறுதி போட்டியை அடைந்தது. இந்த வெற்றி, இந்திய அணி அழுத்தமான சூழல்களுக்காக தயாராக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

ஜெமிமா ரோட்ரிகசின் சதம் (ஆட்டமிழக்காமல் 127 ரன்கள்) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் 89 ரன்களும் இந்திய அணி எந்த இலக்கையையும் அடைய முடியம் என்பதை நிரூபித்தது.

மறுபுறம் தென் ஆப்ரிக்க அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 69 மற்றும் 97 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததிலிருந்து மீண்டு வந்துள்ளது.

அரை இறுதிப் போட்டியில் தங்களின் பரம எதிரியான இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது அவர்களின் அசாத்தியமான மன உறுதிக்குச் சான்றாக உள்ளது.

இந்தப் போட்டி, தங்களின் கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து போராடி இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் வீராங்கனைகளின் கனவுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

இன்று வெற்றி என்பது வெறும் கோப்பையாக மட்டும் இருக்காது. மாறாக பொருளாதார சுதந்திரம், சமூக மாற்றம் மற்றும் அசாத்தியமானதை சாத்தியமாக்குவதாக இருக்கும்.

அணிகளின் நிலை மற்றும் முக்கியமான சவால்கள்

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிரிதி மந்தனாவின் அனுபவம் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்த காம்பினேஷன் (ஆறு பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 வது வீரர் வரை பேட்டிங் ஆடுவது) தான் இறுதி போட்டிக்கும் உகந்ததாக இருக்கும்

ஒபனிங் மற்றும் மிடில் ஆர்டர்: இந்திய அணிக்கு ஓபனிங்கில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா நல்ல தொடக்கம் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருப்பார்கள்.

செஃபாலி கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் அதிரடியான தொடக்கம் தருவதற்கான திறன் அவரிடம் உள்ளது.

மிடில் ஆர்டர்: ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளனர்.

ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவின் அனுபவமும் அமைதியான அணுகுமுறையும் இந்த அணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிச்சா கோஷின் அதிரடி ஃபினிஷிங் மற்றும் அமன்ஜோத் கவுரின் திறன்கள் நவீன கால கிரிக்கெட்டின் தேவைகளாக உள்ளன.

சுழற்பந்து வீச்சு: தென் ஆப்ரிக்க அணியில் வலது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். இந்த நகர்வு மிடில் ஓவர்களில் இந்தியா ரன்களைக் கட்டுப்படுத்த உதவும்.

வேகப்பந்து வீச்சு: கிராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் காம்பினேஷன் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

கவனமுடன் இருக்க வேண்டும்

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போதைய தென் ஆப்ரிக்க அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

தென் ஆப்ரிக்க அணி சாம்பலில் இருந்து எழுந்து வந்துள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மிக குறைவான ரன்களை எடுத்திருந்தாலும் 5 போட்டிகளில் தொடர்ந்து வென்று இறுதி போட்டிக்கு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு நான்கு உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

உத்தி சார்ந்த செயல்திட்டம்: கடுமையான போட்டிகள்

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸ் வேகப்பந்து வீச்சை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொருத்து அமையும்.

இன்றைய போட்டியின் முடிவு சில முக்கியமான அம்சங்களால் தீர்மானிக்கப்படும்.

மந்தனா vs கப் - உலகின் நம்பர் 1 பேட்டரான ஸ்மிரிதி மந்தனா, கப்-இன் துல்லியமான ஸ்விங் பந்து வீச்சை இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

டி கிளார்க் vs இந்தியாவின் டெத் ஓவர் பவுலிங்: லீக் சுற்று தோல்வியை மறந்து இந்திய அணி டி கிளார்க்கை கட்டுப்படுத்த ஏதேனும் திட்டத்துடன் வருமா என்பதை கவனிக்க வேண்டும்.

தீப்தி சர்மா vs வோல்வார்ட்: தொடர்ச்சியாகவே வோல்வார்ட்டிற்கு எதிராக குறைவான ரன் ரேட்டை தீப்தி சர்மா கடைபிடித்து வருகிறார். இது மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும்.

செஃபாலி வர்மா: அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ள செஃபாலி வர்மாவுக்கு ஜொலிப்பதற்கான வாய்ப்பு இது. இத்தகைய பிட்ச் மற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பெரிதாக சாதிக்க முடியும்.

நவி மும்பை எனும் கடுமையான போட்டிக்களம்

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவி மும்பை மைதானம்

நவி மும்பை மைதானம் 30,000 ரசிகர்கள், உப்பு கலந்த கடல் காற்று மற்றும் கணிக்க முடியாத வானிலையைக் கொண்டிருக்கும்.

டி.ஒய் பாட்டீல் மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது.

இங்கு நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது. இது இந்தியா அணிக்குச் சாதகமான அமையும்.

ஆனால் கணிக்க முடியாத வானிலை மற்றும் பனி டாஸ் ஜெயிப்பதை முக்கியமாக்குகிறது.

மூன்றாவது முறை இந்திய அணிக்கு சாதகமாகுமா?

மகளிர் ஒருநாள் உலக கோப்பை, இந்தியா, தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், @ICC

படக்குறிப்பு, மகளிர் உலக கோப்பை

இந்திய மகளிர் அணிக்கு இந்த இறுதி போட்டி மூன்றாவது முயற்சியாக இருக்கும். 2005 (இங்கிலாந்திடம் தோற்றது) மற்றும் 2017-இல் (இங்கிலாந்திடம் தோற்றது) இந்திய அணி இறுதி போட்டியை அடைந்தது.

மாறாக, தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மூன்று முறை அரை இறுதி போட்டி வரை சென்றுள்ளது தென் ஆப்ரிக்கா. இப்போது மிகவும் தொழில்முறை அணியாக மாறியுள்ள தென் ஆப்ரிக்கா கடந்த 12 ஆண்டுகளில் நான்கு முறை ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgkzzkzl6ezo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, தென்னாபிரிக்காவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

Nov 2, 2025 - 08:31 PM

இந்தியா, தென்னாபிரிக்காவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் தற்போது மும்பையில் இடம்பெற்று வருகிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmhhu9lq401czqplpkjmd7grg

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இந்திய‌ உட‌க‌ங்க‌ளில் இந்த‌ வெற்றிய‌ பெரிசா கொண்டாடுவின‌ம்.....................

முத‌ல் உல‌க‌ கோப்பை வெற்றி எல்லோ............................

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ர்ந்து மூன்று தோல்வி

நியுசிலாந்திட‌ம் இந்தியா தோத்து இருந்தா

இந்த‌ உல‌க‌ கோப்பை தொட‌ரில் இருந்து வெளியில் போய் இருக்க‌ கூடும்..............நியுசிலாந் விளையாட்டு இர‌ண்டு ம‌ழையால் கைவிட‌ப் ப‌ட்ட‌து.............

எப்ப‌டியோ இந்தியா வென்ற‌து ம‌கிழ்ச்சி....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணுகுமுறை மாறியதால் வசமான உலகக்கோப்பை - இந்திய வீராங்கனைகள் சாதித்தது எப்படி?

மகளிர் உலகக்கோப்பை, இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty

படக்குறிப்பு, உலகக்கோப்பையுடன் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

கட்டுரை தகவல்

  • மு.பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 2 நவம்பர் 2025, 19:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.

லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இப்போது சாம்பியனும் ஆகியிருக்கிறது.

மிகமுக்கியமான இந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்தது இந்திய அணி. இந்த வெற்றியைப் பெற முக்கியமான கட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றவேண்டியிருந்தது, பெரும் எழுச்சியைக் காணவேண்டியிருந்தது, உறுதியாகப் போராடவேண்டியிருந்தது. இந்த அணி அவை அனைத்தையுமே செய்திருக்கிறது.

இறுதிப் போட்டியில் நல்ல தொடக்கம்

நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஓப்பனர்கள் ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவருமே இந்த இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்கினார்கள். 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது இந்த ஜோடி.

மரிசான் காப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி மந்தனா எதிர்கொண்டார். வழக்கமாக அவருடன் ஓப்பனராகக் களமிறங்கிய பிரதிகா ராவல் தான் முதல் பந்தை எதிர்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கூட ஷஃபாலி தான் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், இந்தப் போட்டியில் அது மாறியிருந்தது.

இறுதிப் போட்டிக்கு முன் பிபிசி தமிழிடம் பேசிய சென்டர் ஆஃப் எக்சலன்ஸைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், "மரிசான் காப் வீசும் இன்ஸ்விங்கர்கள் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். உள்ளே வரும் பந்துகள் வழக்கமாக வலது கை பேட்டர்களுக்கு சிக்கல் விளைவிக்கும். அதிலிருந்து ஷஃபாலியைக் காப்பதற்காக ஸ்மிரிதி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல் ஓவரில் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் அதை மெய்டனும் ஆக்கினார்.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிரிதி - ஷஃபாலி இணை முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது

ஸ்மிரிதி அவ்வளவு பாதுகாப்பாக இன்னிங்ஸைத் தொடங்க, தன் வழக்கமான பாணியில் இன்னிங்ஸை ஆரம்பித்தார் ஷஃபாலி. அயபோங்கா ககா வீசிய முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டி தன் ரன் கணக்கைத் தொடங்கினார்.

நான்காவது ஓவருக்குப் பிறகு இவர்கள் இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் ரன்ரேட் ஆறுக்கும் அதிகமாகவே இருந்துவந்தது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தடுமாற, 18வது ஓவரிலேயே ஆறாவது பௌலரைப் பயன்படுத்தினார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட்.

அப்படி ஆறாவது பௌலராக பந்துவீசிய டிரையான் தான் அந்த அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருந்தாலும், மிகப் பெரிய இறுதிப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது இந்த தொடக்க ஜோடி.

இரண்டாவது போட்டியிலேயே தாக்கம் ஏற்படுத்திய ஷஃபாலி

வழக்கமாக அதிக பந்துகளை தூக்கி அடிக்கும் ஷஃபாலி வெர்மா, இந்த அதிமுக்கிய இறுதிப் போட்டியில் சற்றே கூடுதல் கவனத்துடன் விளையாடினார். நிறைய பந்துகளை தரையோடு அடிக்கவே பார்த்தார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சாளர் யார் என்று பார்த்துத்தான் தன் அணுகுமுறையையும் தேர்வு செய்தார்.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிக இளம் வயதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியது ஷஃபாலி தான்

போட்டிக்கு முன்பு பேசியிருந்த ஆர்த்தி சங்கரன், மரிசான் காப் தவிர்த்து இடது கை ஸ்பின்னர் மலாபாவை கவனமாக எதிர்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார். ஷஃபாலி அப்படி கவனமாக ஆடியது போலத்தான் இருந்தது. மலாபா தனக்கு வீசிய 17 பந்துகளில் ஒன்றை மட்டுமே பௌண்டரி ஆக்கினார் ஷஃபாலி. அதுவும் முதல் பவர்பிளேயில் வீசப்பட்ட பந்தில். அதன்பிறகு அவர் பௌண்டரி அடிக்க நினைக்கக்கூட இல்லை. மலாபாவை கவனமாகத்தான் அவர் எதிர்கொண்டிருந்தார்.

அதேசமயம் அவருக்கு நல்ல 'விட்த்' (width) கிடைக்கும் பந்துகளைத் தண்டிக்கவும் அவர் தவறவில்லை. நன்கு கணித்து திட்டமிட்டு அவர் இந்த இன்னிங்ஸை கட்டமைத்தார்.

49 பந்துகளில் அரைசதம் அடித்த ஷஃபாலி, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்கள் (78 பந்துகள்) அடித்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

தீப்தியின் மற்றுமொரு அரைசதம்

ஷஃபாலி அவுட்டாகி சரியாக 11 பந்துகள் கழித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24 ரன்கள்) வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சற்று பொறுமையாக ஆடத் தொடங்கினார். அதனால் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 28வது ஓவர் முடிவில் 5.92 ஆக இருந்த ரன்ரேட், 32வது ஓவர் முடிவில் 5.46 என்றானது. ஆனால் இது மோசமடையாமல் பார்த்துக்கொண்டார் தீப்தி ஷர்மா.

மரிசான் காப் வீசிய 33வது ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தன்னுடைய ரன் வேகத்தைக் கூட்டினார் அவர். அதனால் இந்திய அணியின் ரன்ரேட் மறுபடியும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டான பிறகும் கூட தீப்தி சீரான வேகத்தில் ரன் சேர்த்தார்.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் ரன்ரேட் பாதிக்காத வகையில் ஆடினார் தீப்தி ஷர்மா

53 பந்துகளில் அரைசதம் அடித்த தீப்தி ஷர்மா, 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

இடையே ரிச்சா கோஷ் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா ககா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ரன் அவுட் மூலம் கிடைத்த முதல் விக்கெட்

299 என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் இருவரும் நிதானமாகவே இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 18 ரன்களே எடுத்திருந்தது. அதன்பிறகு இருவருமே வேகமெடுக்கத் தொடங்கினார்கள்.

8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 50 ரன்களைக் கடந்தது. இது பெரிய பார்ட்னர்ஷிப்பாக உருவெடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், பிரிட்ஸ் ரன் அவுட் ஆனார். மிட் ஆன் திசைக்கு அவர் அடித்துவிட்டு ஓட, அங்கு நின்றிருந்த அமஞ்சோத் கவுர் டைரக்ட் ஹிட் அடித்து அவரை அவுட்டாக்கினார். அதுமட்டுமல்லாமல், நேராக எதிர் முனைக்கு ஓடாமல், கோணலாக பிரிட்ஸ் ஓடியதும் ரன் அவுட்டுக்குக் காரணமாக அமைந்தது. 17.7 மீட்டர் தூரத்தில் கிரீஸை அவர் அடைந்திருக்கலாம். ஆனால் கோணலாக ஓடியதால் 19 மீட்டர் ஓடியும் அவரால் கிரீஸுக்குள் வர முடியவில்லை.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமஞ்சோத் செய்த ரன் அவுட் இந்தியாவின் விக்கெட் தேடலுக்கான முதல் பதிலாக அமைந்தது

பிரிட்ஸின் மோசமான ரன் அவுட், அமஞ்சோத்தின் சிறந்த ஃபீல்டிங் இரண்டும் சேர்ந்து இந்தியாவின் முதல் விக்கெட்டுக்கான தேடலுக்குப் பதில் கொடுத்தன.

ஆனால், அமஞ்சோத்தின் நல்ல ஃபீல்டிங் மட்டுமல்லாமல், அதே ஓவரில் ஜெமிமா செய்த நல்ல ஃபீல்டிங்குமே இந்த விக்கெட்டுக்கு வழிவகுத்தது. அதற்கு முந்தைய பந்தை கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தார் பிரிட்ஸ். ஆனால், அதை ஜெமிமா சிறப்பாகத் தடுத்துவிட அவரால் ரன் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அடுத்த பந்திலேயே அவர் அந்த ஒற்றை ரன்னைத் தேட அந்த விக்கெட் கிடைத்தது. "ஜெமிமா அந்த சிங்கிளைத் தடுத்தது இந்த விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது" என வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கூறினார்.

அந்த விக்கெட்டுக்குப் பிறகு மிக விரைவாக இரண்டாவது விக்கெட்டும் கிடைத்தது. ஃபீல்டிங்கில் 2 கேட்ச்களைத் தவறவிட்டிருந்த பாஷ், பேட்டிங்கிலும் தடுமாறினார். 6 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஶ்ரீ சரணியின் பந்துவீச்சில் வெளியேறினார்.

பந்துவீச்சிலும் கைகொடுத்த ஷஃபாலி

இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் இடம்பிடிக்காத ஷஃபாலி வெர்மாவுக்கு, கடந்த சில நாள்கள் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பிரதிகா ராவல் காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தவர், ஆடிய இரண்டாவது போட்டியிலேயே 87 ரன்கள் எடுத்தார். ஆனால், பேட்டிங் மட்டுமல்லாமல் இந்த இறுதிப் போட்டியில் பந்துவீச்சிலும் இந்திய அணிக்குக் கைகொடுத்தார் ஷஃபாலி வெர்மா.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சிலும் அசத்தினார் ஷஃபாலி

அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான ஷஃபாலி வெர்மாவை பந்துவீச அழைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பந்திலேயே சுனே லீஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால், ஷெஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனையான மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

பந்தின் வேகத்தை நன்கு கூட்டி குறைத்து தன் பந்துவீச்சில் வித்தியாசம் காட்டினார் ஷஃபாலி வெர்மா. இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு நின்று வந்ததால், அவர் வேகத்தைக் குறைத்தபோது தென்னாப்பிரிக்க பேட்டர்களால் அதை கணிப்பது கடினமாக இருந்தது.

போராடிய வோல்ஃபார்ட், ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தீப்தி

ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் உறுதியாகப் போராடினார். சீரான இடைவெளிகளில் அவர் பௌண்டரிகள் அடித்துக்கொண்டே இருக்க தேவைப்படும் ரன் ரேட் ஓரளவு கட்டுக்குள்ளேயே இருந்தது.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரையிறுதி, இறுதி என தொடர்ந்து இரு பெரிய போட்டிகளிலும் சதமடித்திருக்கிறார் வோல்ஃபார்ட்

45 பந்துகளில் அரைசதம் அடித்த வோல்ஃபார்ட், 96 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் அவர். என்னதான் சதம் அடித்தாலும், வெற்றியை இலக்காகக் கொண்டிருந்ததால் அவர் கொண்டாடவில்லை.

இந்தியா பேட்டிங்கில் சற்று பின்தங்கியபோது எப்படி தீப்தி முன்னாள் வந்து இந்திய ரன்ரேட்டை மறுபடியும் உயர்த்தினாரோ, அதேபோல் பந்துவீச்சிலும் அதைச் செய்தார் தீப்தி. 42வது ஓவர் வீசவந்த அவர், இந்தியாவின் கை மீண்டும் ஓங்குவதற்குக் காரணமாக அமைந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை வோல்ஃபார்ட் தூக்கி அடிக்க, தட்டுத் தடுமாறி அந்தப் பந்தைப் பிடித்தார் அமஞ்சோத் கவுர்.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார் தீப்தி ஷர்மா

மூன்று பந்துகள் கழித்து இன்னொரு முன்னணி வீராங்கனையான டிரையானையும் அவுட்டாக்கினார் அவர். அது தென்னாப்பிரிக்காவுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

லீக் சுற்றில் இந்தியாவுக்கு சவாலாக விளங்கிய நெடீன் டி கிளார்க் இந்தப் போட்டியிலும் போராடிப் பார்த்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜெமிமா தவறவிட்டது ஆட்டத்தை இன்னும் பரபரப்பாக்கியது. ஆனால், மறுபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்த நிலையில், ஒரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து அவரும் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனது.

87 ரன்கள் அடித்ததோடு இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷஃபாலி வெர்மா இந்தப் போட்டியின் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருது வென்றார். போட்டிக்குப் பின் பேசிய அவர், "என்னை கடவுள் ஏதோவொரு காரணத்துக்காகத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன். அது இன்று பிரதிபலித்துவிட்டது. இது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். என்னால் நிதானமாக இருக்க முடிந்தால், எல்லாமே செய்ய முடியும் என்று நம்பினேன்" எனக் கூறினார்.

இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் - தீப்தி ஷர்மா

இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா 'பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்' விருது வென்றார். இந்த உலகக் கோப்பையில் 3 அரைசதங்கள் உள்பட தீப்தி 215 ரன்கள் எடுத்தார். மேலும், 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை தீப்தி தான்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3ep0v9kpleo

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் ப‌ல‌ வாட்டி ஆசியா கோப்பை வென்று விட்டின‌ம்

50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் வென்று விட்டின‌ம் அடுத்த‌து 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் வென்றால் எல்லா கோப்பையும் வென்ற‌ பெருமைய‌ இந்தியாவும் த‌க்க‌ வைக்கும்..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதவர் கோச்சாக வரலாறு படைத்த கதை - யார் அவர்?

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அமோல் மஜும்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அமோல் மஜும்தார்

கட்டுரை தகவல்

  • சாரதா மியாபுரம்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் மும்பையின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி அணிக்காக விளையாடி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தபோது, ஒரு பேட்ஸ்மேன் நாள் முழுவதும் கால்களில் பேட்களைக் கட்டிக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருந்தார்.

பள்ளியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் படித்த அந்த மாணவரின் பெயர் அமோல் மஜும்தார்.

அந்தப் போட்டியில் அவருக்கு ஒரு பந்து கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தச் சம்பவம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு புதிய வழியில் வரையறுத்தது, அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படத் தொடங்கினார்.

அமோல் மஜும்தார் முதல் தர கிரிக்கெட்டில் 30 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். ஒரு காலத்தில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ஒருபோதும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

சச்சின் மற்றும் காம்ப்ளி (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சச்சின் மற்றும் காம்ப்ளி போல, அமோல் மஜும்தாரும் சாரதாஷ்ரம் பள்ளியின் மாணவர்தான் (கோப்புப் படம்)

தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், அமோல் மஜும்தார் ஒருபோதும் இந்தியாவின் தேசிய அணிக்காக விளையாடவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இப்போது ஒரு பயிற்சியாளராக அவர் மகளிர் அணியை உலக சாம்பியனாக்கி உள்ளார்.

இந்திய அணி பெண்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரை நோக்கி ஓடி, அவருடைய கால்களில் விழுந்தார், பின்னர் கட்டிப்பிடித்து விம்மி அழுதுவிட்டார்.

அவரும் இந்த வெற்றியைக் கண்டு மனம் திறந்து சிரித்தார், ஹர்மன்பிரீத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு, அவர் உற்சாகமான வார்த்தைகளில் மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றதில் மிகுந்த பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்திய அணி கோப்பையை வென்றது அவருக்கு ஒருவேளை 'சக் தே இந்தியா' திரைப்படத்தின் 'கபீர் கான்' தருணம் போல இருந்திருக்கலாம்.

மும்பையில் ஒரு அற்புதமான ஆரம்பம்

அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர்.

அமோல் மஜும்தார் மும்பைக்காக விளையாடி தனது முதல் தர கிரிக்கெட்டைத் தொடங்கினார். ஃபரிதாபாத்தில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி அவருடைய முதல் ரஞ்சி போட்டியாகும்.

இந்தப் போட்டியில், அவர் ஒரு இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்து, தனது அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்தார்.

இந்தச் செயல்திறன் காரணமாக, அவர் 'பம்பாய் பேட்டிங் பள்ளியில்' இருந்து வெளிவந்த மற்றொரு 'பெரிய சாதனை' என்று பாராட்டப்பட்டார்.

எனினும், 'ஸ்போர்ட்ஸ்ஸ்டார்' விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சலில் அன்கோலா மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட நியூசிலாந்து சென்றபோதுதான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அமோல் மஜும்தார் கூறியிருந்தார்.

ரஞ்சி கோப்பையில் விளையாட இந்த வாய்ப்பை மும்பை கேப்டன் ரவி சாஸ்திரி தனக்கு வழங்கினார் என்று மஜும்தார் கூறினார்.

மஜும்தார் 1994 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். அவர் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் உடன் இந்தியா-ஏ அணிக்காகவும் விளையாடினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் எடுத்த போதிலும், அவருக்குத் தேசிய அணியில் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான பயணம்

2007 ஆம் ஆண்டில், மும்பையின் ரஞ்சி அணியின் தலைவராக அமோல் மஜும்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டில், மும்பையின் ரஞ்சி அணியின் தலைவராக அமோல் மஜும்தார்.

அமோல் மஜும்தார் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்துள்ளார். உண்மையில், அவர் இத்தகைய கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

மஜும்தார் தனது வாழ்க்கையில் 171 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் 48.13 என்ற சராசரியுடன் 11,167 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் அடங்கும்.

அவர் இருந்த காலத்தில் மும்பை எட்டு முறை ரஞ்சி டிராபியை வென்றது.

2006-07 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணி தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடிய போது அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அந்த விளையாட்டைப் பார்த்து அணி வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் கேப்டனாக அவர் அணியை முன்னின்று வழிநடத்தினார், மேலும் ரஞ்சி டிராபி பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார்.

மும்பை அணியுடன் 17 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 2009-இல் அசாம் அணிக்காக விளையாடினார். பின்னர் ஆந்திரப் பிரதேச அணியுடன் இணைந்தார். அவர் 2014 இல் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

பயிற்சியாளராக ஒரு புதிய அவதாரம்

உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயிற்சியாளராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணிகளுக்குப் பயிற்சி அளித்தார், மேலும் மும்பை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி குழுவிலும் இருந்துள்ளார்.

அக்டோபர் 2023 இல், அமோல் மஜும்தார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார்.

அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர்.

இந்த உலகக் கோப்பையில் நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டியில் தோல்வியடைந்தது, இதனால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவாக இருந்தது.

இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் தோல்விக்குப் பிறகு, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சம்பவம் நடந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்தபோது, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் இந்தத் தகவல் கிடைத்தது.

அதில், இந்திய அணி தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு எப்படி மீண்டு வர முடிந்தது என்று கேப்டன் ஹர்மன்பிரீத்திடம் கேட்கப்பட்டது?

ஹர்மன்பிரீத் தனது அருகில் நின்று கொண்டிருந்த பயிற்சியாளர் அமோலைக் கை காட்டி, "இங்கிலாந்திடம் தோற்ற பிறகு நான் டிரஸ்ஸிங் ரூமில் எதுவும் சொல்லவில்லை. அவர்தான் எல்லாவற்றையும் பேசினார். 'நீங்கள் இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும்' என்று அவர் கத்தினார்" என்று கூறினார்.

அவர் அருகில் நின்று கொண்டிருந்த அமோல், "ஆமாம், நான் டிரஸ்ஸிங் ரூமில் சில விஷயங்களைப் பேசினேன். ஆனால் நான் இவை அனைத்தையும் அணியின் நலனுக்காக மட்டுமே கூறினேன்" என்று உடனடியாகக் கூறினார்.

பின்னர் ஹர்மன்பிரீத் புன்னகையுடன், "அன்று சார் (அமோல் மஜும்தார்) கொஞ்சம் கோபமாகப் பேசினார். ஆனால் அனைவரும் அந்த வார்த்தைகளை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் அணியின் நலனைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையாகப் பேசுவார்" என்று கூறினார்.

"எங்களிடம் இருந்து சார் என்ன எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நாட்டிற்கு எங்கள் செயல்திறன் இப்படி இருக்கக் கூடாது. எல்லா வீரர்களும் அந்தக் கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். எங்கள் செயல்திறனிலிருந்து நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம்."

கேப்டன் ஹர்மன்பிரீத் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம், "சார் பயிற்சியாளரான பிறகு விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் வந்து சென்றார்கள். ஒரு நிலையான பயிற்சியாளர் வந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று கூறினார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய அணியின் ஜெர்சியை அணியாத அமோல் மஜும்தார், இப்போது ஒரு பயிற்சியாளராகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

அவருடைய அணி உலக சாம்பியன் ஆகிவிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c04gv21d304o

  • கருத்துக்கள உறவுகள்

சோச‌ல் மீடியாக்க‌ளில் இவ‌ர்க‌ளின் வெற்றிக் கொண்டாட்ட‌ம் அதிக‌ம்👍...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைகள், அழுத்தத்தை தாண்டி இந்தியாவின் வெற்றியில் ஜெமிமா முக்கிய பங்காற்றியது எப்படி?

ஜெமிமா ரோட்ரிக்ஸ், உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • ஜான்வி மூலே

  • பிபிசி செய்தியாளர்

  • 31 அக்டோபர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025

"கிரிக்கெட்டா அல்லது ஹாக்கியா?" 11 வயது சிறுமி ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் அவரது தந்தை இந்தக் கேள்வியைக் கேட்டபோது, இரண்டையும் நேசித்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

இறுதியில் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த ஜெமிமா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஜெமிமாவின் சதம் இந்தியாவை ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. நிச்சயமாக, இந்தப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை.

மும்பையின் நெரிசலான உள்ளூர் ரயில்களில் முட்டி மோதி பயணித்தது முதல், அணியில் இருந்து நீக்கப்பட்ட மன வேதனையைச் சமாளித்தது வரை ஜெமிமாவின் வெற்றிப் பாதையில் எண்ணற்ற முட்கள் தடைகளாக இருந்தன.

2022-இல் இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத அதே ஜெமிமா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த கடுமையான மனப் போராட்டத்தை அவர் போட்டிக்குப் பிறகு வெளிப்படுத்தினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"நான் தினமும் அழுதேன், பதற்றமடைந்தேன், போராடினேன், அது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று அவர் மனம் திறந்து பேசினார்.

ஜெமிமாவுக்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல. தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் மற்றும் திறமையால் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பட மூலாதாரம், ANI

பார்பி பொம்மையா கிரிக்கெட் மட்டையா?

'ஜெமி' என்று அன்பாக அழைக்கப்படும் ஜெமிமாவுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவருடைய தாத்தா பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசளித்தார்.

"எனக்கு பார்பி பொம்மைகள் பிடிக்காது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். எனவே அவர் பொம்மைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் வாங்கிக் கொடுத்தார். நாங்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினோம். மட்டையைப் பிடிக்கும்போது உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன்" என்று நேர்காணலில் அவர் நினைவு கூர்ந்திருந்தார்.

தனது சகோதரர்களான ஏனோக் மற்றும் எலியுடன் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடினார்.

ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ்தான் அவருடைய முதல் பயிற்சியாளராக இருந்தார்.

பின்னர், பாந்த்ராவில் உள்ள MIG அகாடமியில் பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியிடம் ஜெமிமாவின் சகோதரர் எலி கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தார்.

ஜெமிமாவின் தந்தை இவான் மற்றும் ஜெமிமாவின் தாய் லவிதா, தங்கள் மகள் விளையாடுவதைப் பார்க்குமாறு பிரசாந்த் ஷெட்டியிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது ஜெமிமாவுக்கு வெறும் 9 வயதுதான், கிரிக்கெட் விளையாட ஆசை இருந்தாலும், அந்த நேரத்தில் அது மிகவும் அசாதாரணமான காட்சியாகவே இருந்தது.

"2007-08 ஆம் ஆண்டில், மிகக் குறைவான பெண்களே கிரிக்கெட் விளையாடினார்கள். MIG கிளப்பில் எந்தவொரு பெண்ணும் கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை," என்று அந்த நாளை ஷெட்டி நினைவு கூர்ந்தார்.

ஆனாலும், பிரசாந்த் ஷெட்டி ஒப்புக்கொண்டார். அடுத்த நாளில், ஜெமிமா பயிற்சிக்காக மைதானத்துக்கு சென்றார். ஜெமிமாவின் முதல் ஷாட், ஒரு கவர் டிரைவ். இந்தப் பெண்ணிடம் ஏதோ இருப்பதை பிரசாந்த் ஷெட்டி உணர்ந்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

MIG இல் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்ட முதல் பெண் என்பதால், அவர் சிறுவர்களுடன் விளையாட வேண்டியிருந்தது.

பெண்ணை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று சில உறவினர்கள் கூறினாலும், இவானும் லவிதாவும் ஜெமிமா கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக நின்றனர்.

ரோட்ரிக்ஸ் குடும்பம் அப்போது மும்பை நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டப்பில் வசித்து வந்தது. பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ளது. பயிற்சிக்காக பாந்த்ராவுக்கு உள்ளூர் ரயிலில் செல்லும் மூன்று குழந்தைகளுக்கும் உணவு தயார் செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார் ஜெமிமாவின் தாய் லவிதா.

மும்பையின் நெரிசல் மிகுந்த ரயில்களில் கனமான கிரிக்கெட் கிட்-ஐ எடுத்துச் செல்வது எவ்வளவு சிரமமானது என்பதை அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியும்.

ஆனால் அதுவே மும்பை கிரிக்கெட் வீரர்களிடையே மன உறுதியை உருவாக்கியது. ஜெமிமாவும் விதிவிலக்கல்ல. இறுதியில், குடும்பம் பாந்த்ராவுக்கு அருகில் செல்ல முடிவு செய்தது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து - அல்லது கிரிக்கெட்?

பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல ஜெமிமா கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்திலும் தனது பள்ளியின் சார்பில் கலந்துக் கொள்வார்.

12 வயதில், மகாராஷ்டிராவுக்காக தேசிய அளவில் ஹாக்கி மற்றும் மண்டல அளவிலான போட்டியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அவரது விளையாட்டுத் திறமையைக் கண்ட இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஜோவாகிம் கார்வால்ஹோ, "உங்கள் மகள் ஒலிம்பிக்கிலும் கூட இந்தியாவுக்காக விளையாடலாம்" என்று ஜெமிமாவின் தந்தையிடம் கூறியிருந்தார்.

ஹாக்கி விளையாடி ஒலிம்பிக்கிற்கு செல்வதா அல்லது கிரிக்கெட்டில் தொடர்வதா என்ற முடிவு எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பதினொரு வயது ஜெமிமா கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார்.

2012-13 சீசனில், தனது 13 வயதில் மும்பையின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

'குழந்தை' வளர்ந்தபோது...

சிறுமியாக இருந்தபோதே ஜெமிமா மும்பை கிரிக்கெட் உலகில் பிரபலமானார். விரைவில், நாடு முழுவதும் ஜெமிமாவை கவனித்தது.

2017-ஆம் ஆண்டு, செளராஷ்டிராவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில் ஜெமிம்மா ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு இதுபோன்ற சாதனையைப் படைத்த இரண்டாவது வீராங்கனை இவர்தான். அந்த இன்னிங்ஸ் ஜெமிமாவை பிரபலமாக்கியது.

பின்னர், சேலஞ்சர் டிராபியில் அவர் பெற்ற வெற்றி மற்றும் இந்தியா ஏ அணிக்காக அவர் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் பலனாக, 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு ஜெமிமாவுக்குக் கிடைத்தது.

அதே ஆண்டு, டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அவர், தனது அறிமுகத்தை அரை சதத்துடன் தொடங்கினார். மற்றவர்களைவிட வயதில் இளையவர் என்பதால் ஆரம்ப நாட்களில் அவரது அணி வீரர்கள் ஜெமிமாவை குழந்தையைப் போலவே நடத்தினார்கள்.

சில சமயங்களில், வயது வித்தியாசம் அவரை தனிமைப்படுத்தியது. சில நேரங்களில் ஜெமிமா தனிமையாக உணர்ந்தார்.

அப்போதுதான் ஸ்மிருதி மந்தனாவுடன் நட்பு கொண்டார். ஆரம்ப நாட்களில், இருவரும் அறை தோழிகளாக இருந்தனர், இப்போது அவர்கள் சகோதரிகளைப் போல இருக்கிறார்கள்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பட மூலாதாரம், ANI

இன்று, ஜெமிமா ஒரு நட்சத்திர வீராங்கனை மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர், கிட்டார் திறமை மற்றும் துடிப்பான ஆளுமைக்காகவும் அறியப்படுகிறார்.

உலக டி-20 போட்டிகளில் பெற்ற வெற்றி அவரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் பிரபலமானவராக்கியது. இன்று, ஜெமிமா இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னணி பிராண்ட் தூதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இருப்பினும், இந்திய அணியில் ஜெமிமாவின் வாழ்க்கை தொடர்ந்து ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்தது.

2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜெமிமா இடம் பெறவில்லை. ஆனால் விரைவில், அவர் ஒரு வலுவான மறுபிரவேசத்தை ஏற்படுத்தினார்.

2022 ஆகஸ்ட் மாதத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், 2023-இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியிலும் ஜெமிமா இருந்தார்.

2023-ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 2023 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார்.

ஜெமிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார்.

அணியில் மறுபிரவேசம்

இந்த 2025 உலக கோப்பையின் தொடக்கம் அவருக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலும், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

ஆனால் 'மீண்டும் ராணி' போல, அவர் ஒரு பிரமாண்டமான மறுபிரவேசத்தை மேற்கொண்டார். முதலில், நியூசிலாந்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர், 2025 அக்டோபர் 30 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து, வரலாற்று வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் இடம் பிடித்தார்.

"இந்த இன்னிங்ஸ் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று உள்ளது. உண்மையில் துன்பங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் அவர் ஒரு உண்மையான உத்வேகம்" என்று பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டி பாராட்டுகிறார்.

ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீர் மல்கிய கண்கள், அவர்கள் இணைந்து வரலாறு படைத்ததைப் வெளிப்படுத்தின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதியில் ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி சாதனை படைத்தனர்.

உலகக் கோப்பை சாதனை இன்னிங்ஸ்

தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் விளையாடிய ஜெமிமா, 134 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார், 14 பவுண்டரிகள் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது மூன்றாவது சதம் ஆகும்.

அவரது இன்னிங்ஸ், 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை அடைய இந்தியாவுக்கு உதவியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேஸிங்கில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஜெமிமா பொதுவாக மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார், இந்த போட்டியில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார்.

விளையாடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என்கிறார் அவர்.

திடீர் மாற்றம் இருந்தபோதிலும், அவரும் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் 167 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

பெரும்பாலான வீரர்கள் சதம் அடிக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பேட்டை வானை நோக்கி உயர்த்தி கொண்டாடுவார்கள். உலகக் கோப்பையில் சதம் அடிப்பது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த போதிலும், ஜெமிமா அந்த தருணத்தைக் கொண்டாடவில்லை.

வெற்றிக்காகக் காத்திருந்த அவர், வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபோதுதான் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்தார்.

மன அழுத்தத்தை சமாளித்தல்

2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மும்பையின் கார் ஜிம்கானாவில் அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று விவாதத்தைத் தூண்டிய பிறகு, அவர் சர்ச்சைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இருந்தபோதிலும் ஜெமிமா தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உலகக் கோப்பையின் சில போட்டிகளில் ரன்கள் எடுக்காதபோதும், தனது பீல்டிங் மூலம் கவனத்தை ஈர்த்தார்.

"இந்த தொடரின்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அழுதேன். மனதளவில் அழுத்தமாக இருந்தது, பதற்றமாக இருந்தது. என்ன நடந்தாலும் சரி, என் வேலையை தொடர்ந்து செய்வேன், மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என நினைத்தேன்" என்று ஜெமிமா கூறினார்.

உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், ஜெமிமா அமைதியாக இருக்க முயன்றார், ஏனென்றால் தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரால் இன்னும் நிறைய செய்ய முடியும் என ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் நிபுணர்களும் நம்புகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3vnzqk7z40o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?

மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty

படக்குறிப்பு, ஷெஃபாலி

3 நவம்பர் 2025

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் நேரில் கண்டுகளித்தனர்.

இறுதிப் போட்டியில் 'ஆட்ட நாயகி' ஆன ஷெஃபாலி, சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் ஆவார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, "சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினீர்கள். இன்று அவர் பால்கனியில் நின்று உங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்று ஷெஃபாலியிடம் கேட்கப்பட்டது.

"இது எனக்கு மிகவும் மறக்க முடியாத தருணம். சச்சின் சாரை நான் பார்த்தபோது, எனக்குள் ஒரு வித்தியாசமான உற்சாகத்தை உணர்ந்தேன். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். அவர் எப்போதும் எனக்கு நம்பிக்கையை நிரப்புகிறார். அவர் ஒரு ஜாம்பவான், கிரிக்கெட்டின் மாஸ்டர். அவருடன் பேசுவது எனக்கு நிறைய உத்வேகத்தைத் தருகிறது. அவரைப் பார்ப்பது எனக்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது." என்று ஷெஃபாலி கூறினார்.

இறுதிப் போட்டியில் ஷெஃபாலி 87 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்ற உதவினார்.

இந்த உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் ஷெஃபாலி வர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக, தொடருக்கு நடுவேதான் அவர் இந்திய அணியில் இணைந்தார்.

"கடவுள் என்னை இங்கு நல்லதைச் செய்ய அனுப்பினார் என்று நான் ஆரம்பத்தில் சொன்னேன், இன்று அது உண்மையாகிவிட்டது. இறுதியாக உலகக் கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது."என்றார் ஷெஃபாலி.

உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து நேரடியாக உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளுக்கு மாறுவதில் என்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவரிடம் கேட்கப்பட்டது.

"அது கடினமாக இருந்தது, ஆனால் நான் அமைதியாக இருந்தால், என்னால் எதையும் செய்ய முடியும் என்று எனக்குள் நம்பிக்கை இருந்தது. என் பெற்றோர், நண்பர்கள், சகோதரர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இன்று என் சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது, என் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்தேன். அந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அவர்.

சச்சின், கோலி பாராட்டு

மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், ANI

மகளிர் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய அணியை புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பாராட்டியுள்ளனர்.

1983 உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி பெற்ற வெற்றி ஒரு முழு தலைமுறையையும் பெரிய கனவுகளைக் காணவும் அந்தக் கனவுகளைத் துரத்தவும் தூண்டியது என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

"இன்று நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச் சாதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண்கள் மட்டை மற்றும் பந்தை கையில் எடுக்கவும், களத்தில் இறங்கவும், அவர்களும் ஒரு நாள் கோப்பையை உயர்த்த முடியும் என்று நம்பவும் நமது மகளிர் கிரிக்கெட் அணியினர் ஊக்கமளித்துள்ளனர்."

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு தீர்க்கமான தருணம். சபாஷ், டீம் இந்தியா. நீங்கள் முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று சச்சின் கூறினார்.

இந்த வெற்றி வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் தரும் என்று விராட் கோலி கூறினார்.

"உங்கள் அச்சமற்ற கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையால் நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள். இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் மற்றும் அணிக்கு வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்." என்று கோலி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், ANI

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்களும் பிரபலங்களும் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்று அவர்கள் வரலாறு படைத்துள்ளனர்" என்று முர்மு கூறியுள்ளார்.

"அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது, இன்று அவர்களின் திறமை மற்றும் செயல்திறனுக்கு ஏற்றவாறு இந்த முடிவு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் பெண்கள் கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லும். பெண்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியதற்கு நான் பாராட்டுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அற்புதமான வெற்றி கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வீராங்கனைகளின் செயல்திறன் சிறந்த திறமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருந்தது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோதி கூறினார்.

இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல்வாதிகள் தவிர, சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ.51 கோடி பரிசு

மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty

உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 51 கோடி பரிசளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்தார்.

உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.

தேவஜித் சைகியா பேசுகையில், "உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, பரிசுத் தொகையை 3.88 மில்லியன் டாலரிலிருந்து 14 மில்லியன் டாலராக (சுமார் ரூ.124 கோடி) உயர்த்தியதற்காக ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி சொல்ல வேண்டும், இது அசல் பரிசுத் தொகையில் இருந்து 300 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்" என்றார்.

"வீராங்கனைகளின் சிறந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ ரூ.51 கோடியை வெகுமதியாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74j119n499o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் சிட்ரா நவாஸ் 

04 Nov, 2025 | 08:54 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கெட் காப்பு ஆகியவற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 11 வீராங்கனைகள் உலகக் கிண்ண தெரிவு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டை தலைவியாகக் கொண்ட உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் வீராங்கனை சிட்ரா நவாஸ் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விக்கெட் காப்பாளர் நிலையில் சிட்ரா நவாஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவர் 4 பிடிகளை எடுத்ததுடன் 4 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.

sidra_nawaz_brilliant_catch.png

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் மிகவும் கடினமான பிடியை சிட்ரா இடப்புறமாக தாவி எடுத்த விதமும் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் கிம் கார்த்தை மின்னல் வெகத்தில் ஸ்டம்ப் செய்த விதமும் அனைவரையும் பிரமிக்கவைத்தது.

அவரை விட உலகக் கிண்ண தெரிவு அணியில் உலக சம்பியனான இந்திய அணியிலிருந்து மூவரும் இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்க அணியிலிருந்து மூவரும் இங்கிலாந்து அணியிலிருந்து ஒருவரும் பதில் விராங்கனை ஒருவரும் இடம்பெறுகின்றனர்.

Icc_wwc_team_laura_wolwardt__c_.png

உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் லோரா வுல்வார்ட் ஆவார். அவர் 2 சதங்கள் உட்பட 571 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 22 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார்.

deepthi_sharma.png

deepthi_sharma_action.png

அவர் துடுப்பாட்டத்திலும் 3 அரைச் சதங்களுடன் 215 ஓட்டங்களைப் பெற்றதால் மகளிர் உலகக் கிண்ண தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

துடுப்பாட்ட வரிசையில் அந்தந்த இலக்கங்களில் பிரகாசித்தவர்களில் அதிசிறந்தவர்களே உலகக் கிண்ண தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சகலதுறை வீராங்கனைகளாவர்.

உலகக் கிண்ண தெரிவு அணி

(துடுப்பாட்ட வரிசை பிரகாரம்)

ஸ்ம்ரித்தி மந்தனா (434 ஓட்டங்கள்), லோரா வுல்வார்ட் (571 ஓட்டங்கள்), ஜெமிமா ரொட்றிக்ஸ் (292 ஓட்டங்கள்), மாரிஸ்ஆன் கெப் (208 ஓட்டங்கள், 12 விக்கெட்கள்), ஏஷ்லி கார்ட்னர் (328 ஓட்டங்கள், 7 விக்கெட்கள்), தீப்தி ஷர்மா (215 ஓட்டங்கள், 22 விக்கெட்கள்), அனாபெல் சதர்லண்ட் (117 ஓட்டங்கள், 17 விக்கெட்கள்), நாடின் டி க்ளார்க் (208 ஓட்டங்கள்), சிட்ரா நவாஸ் (4 பிடிகள், 4 ஸ்டம்ப்கள்), அலானா கிங் (13 விக்கெட்கள், 59 ஓட்டங்கள்), சொஃபி எக்லஸ்டோன்  (13 விக்கெட்கள்)

12ஆம் இலக்க வீராங்கனை: நெட் சிவர் - ப்றன்ட் (262 ஓட்டங்கள், 9 விக்கெட்கள்)

https://www.virakesari.lk/article/229515

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ம‌க‌ளிர் விக்வாஸ் தொட‌ர் அவுஸ்ரேலியாவில் ந‌ட‌க்குது

உல‌க‌ கோப்பையில் விளையாடின‌ முன்ன‌னி ம‌க‌ளிர்க‌ளும் விளையாடுகின‌ம்

ம‌க‌ளிர்க‌ளும் இடை விடாது தொட‌ர்ந்து கிரிக்கேட் விளையாடிட்டு இருக்கின‌ம்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இந்திய அணி கொடுத்த பிறந்த நாள் பரிசு' - மகளிர் கிரிக்கெட் அணியில் பணியாற்றிய தமிழக மருத்துவர்

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Harini Muralidharan

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி.

இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள், இந்திய அணி தோல்விகளிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், இந்த அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்த விஷயங்கள் என இந்தப் பேட்டியில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மருத்துவர் ஹரிணி.

கேப்டன், துணைக் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் ஆகியோர் முக்கியமான தருணங்களில் என்ன செய்தார்கள் என்பது பற்றி நம்மிடம் அவர் கூறினார்.

உலக சாம்பியன் அணியின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அந்த உணர்வு எப்படி இருக்கிறது?

உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பே பெரிய விஷயம். அதற்கே முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அதன்பிறகு அந்தப் பயணத்தில் ஒன்றாக இருந்து, அணியோடு வெற்றி, தோல்விகள் அனைத்தையும் சந்தித்து, அந்த உலகக் கோப்பையையும் வென்ற அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தையே இல்லை. அந்த நிமிடங்கள் எங்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தான் வந்தது.

சொல்லப்போனால் அப்போது எதுவுமே தோன்றவில்லை, ஆனால் எங்களைச் சுற்றிப் பேசிய ஒரு விஷயம் பின்பு புரிந்தது. அது என்னவெனில், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எப்படி 1983 உலகக் கோப்பையோ அதுபோல் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வருட வெற்றி என்றார்கள். அதைக் கேட்கும்போது புல்லரித்தது. இது மிகவும் விசேஷமான ஒரு தருணம்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Harini Muralidharan

படக்குறிப்பு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மருத்துவர் ஹரிணி முரளிதரன்

ஒரு கிரிக்கெட் அணியில் உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது? இந்த அணியில் மருத்துவராக உங்களுடைய பங்கு என்ன?

மருத்துவம் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது சிலர் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தை பரிந்துரைத்தனர். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, பாசு சங்கரிடம் (இந்திய அணிக்கு ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தவர்) இன்டர்ன்ஷிப் (internship) செய்தேன்.

அப்போது ஒரு மாதத்திலேயே எனக்கு இதுதான் எதிர்காலம் என்று தோன்றிவிட்டது. அதன்பிறகு பிரிட்டனில் முதுகலை பட்டம் பெற்றேன். இப்போது ஆர்சிபி (RCB), இந்திய அணி என்று பயணிக்கிறேன்.

ஸ்போர்ட்ஸ் மருத்துவம் என்பது 'காயம் மேலான்மை' (injury management) பற்றியது. முக்கியமாக ஒரு காயம் ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம், ஒருவேளை காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தை எப்படிக் குறைக்கலாம் என்பன முக்கியமான விஷயங்கள்.

அதிலிருந்து தொடங்கி, ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுப்பது எப்படி என்பதிலும் நாங்கள் பங்களிக்கவேண்டும். மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் ஊட்டச்சத்து, கொஞ்சம் உளவியல் ஆகியவையும் சேர்ந்ததுதான் ஸ்போர்ட்ஸ் மருத்துவம்.

இதுவே ஒரு அணிக்குள் ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் (strength & conditioning) பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், உளவியல் ஆலோசகர் என தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் இருப்பார்கள். அதேசமயம் வீரர்களும் தனியாக தங்களுக்கு இந்த விஷயங்களில் பயிற்சியாளர்கள் வைத்திருப்பார்கள்.

அப்படியிருக்கும்போது நான் முக்கியமாக கவனத்தில் கொள்வது, ஒரு தொடருக்கு நடுவே எந்த மாற்றமும் கொண்டுவரக்கூடாது என்பது. அந்தந்த தருணங்களில் அந்த வீரருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும்.

காயம் மேலாண்மை என்று பேசும்போது, இந்த இந்திய அணியில் உங்களுக்கு பல சவால்கள் இருந்திருக்கும். ஐந்து வாரங்கள் நடக்கும் ஒரு மிகப் பெரிய தொடரில் அனைவரையும் ஃபிட்டாக வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய சவால்தானே?

பொதுவாகவே இப்போது ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி பெண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஆஃப் சீசன் (Off Season - போட்டிகள் இல்லாத காலகட்டம்) என்பதே இல்லாமல் போய்விட்டது.

ஒரு வீரரின் ஃபிட்னஸ் முன்னேற்றம் பற்றிய எங்களுடைய திட்டங்கள் ஓய்வு நேரத்தை பொறுத்துத்தான் அமையும். ஆனால், இப்போது வீரர்களுக்கு அவ்வளவாக நேரமே கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ரெகவரி நேரம் (recovery time) மிகவும் குறைவு.

இந்த உலகக் கோப்பைக்கு முன்புகூட அவர்கள் ஒரு தொடரை முடித்துவிட்டு (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) நேராக இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்தார்கள். அப்படியிக்கும்போது அதன் தாக்கம் நிச்சயம் இதில் இருக்கும். ஆனால், நான் அதை சவால் என்று சொல்லமாட்டேன்.

ஒவ்வொரு வீரருக்குமான தேவை என்ன, அவர்கள் எந்த அளவுக்கு ஓய்வு எடுக்கிறார்கள், அவர்களின் ரெகவரி நேரம் என்ன என்பதை கணக்கிட்டோம். ஒரு சிறு வலியாக இருந்தாலும் அதற்கு என்ன செய்யவேண்டும், ஃபிசியோ தேவையா, மருந்துகள் தேவையா, மருந்துகள் என்றால் என்ன கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டோம். உதாரணமாக ஆன்டிபயாடிக்ஸ் (antibiotics) கொடுக்கும்போது உடல் பலவீனமாகும். அதனால் அனைத்து விஷயங்களையும் சரியாக அலசி ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

சரி, இந்த உலகக் கோப்பையின் முக்கிய தருணங்களைப் பற்றிப் பேசுவோம்... லீக் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக 3 போட்டிகளைத் தோற்றது. அந்த 3 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டு வந்தது எப்படி? அதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்னென்ன?

இந்த அணியில் நான் பார்த்த நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது. அந்தத் தோல்விகள் அவர்களுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தன. ஆனால், அதை யாருமே நெகடிவாக வெளிக்காட்டவே இல்லை. 'இன்று நாம் தோற்றுவிட்டோம், அடுத்த போட்டியில் ஜெயித்துவிடலாம்' என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். நானாக இருக்கட்டும், அணியில் இருந்த பயிற்சியாளர் குழுவாகட்டும், அனைவருமே உரையாடல்களை பாசிடிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம்.

யாரிடமும் தோல்வியைப் பற்றிப் பேசாமல், அடுத்த போட்டிக்கு, அடுத்த பயிற்சிக்கு என்ன செய்யப்போகிறோம், வீரர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை நாம் செய்யப்போகிறோம், அவர்களை எப்படி அடுத்த வெற்றிக்குத் தயார் செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் உரையாடல்களாக இருந்தது.

அனைவருமே அடுத்த நாள் பற்றித்தான் யோசித்தார்களே தவிர, முந்தைய நாள் பற்றி யாரும் பேசவில்லை.

அதுவே வீராங்கனைகளுக்கு ஒரு நல்ல உத்வேகமாக அமைந்தது என்று நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளர் குழுவில் யாரும் அந்தத் தோல்விகளைப் பற்றிப் பேசவில்லை எனும்போது, 'அவர்கள் நம்மை நம்புகிறார்கள். நமக்காக உழைக்கிறார்கள்' என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். அதுவே அவர்களுக்கான உத்வேகத்தைக் கொடுத்திருக்ககூடும்.

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே! ஏனெனில், தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு அரையிறுதி இடம் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விக்குப் பின் என்ன மாற்றம் நடந்தது?

நிச்சயமாக அந்த மூன்றாவது தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அந்தத் தொடரின்போது வீராங்கனைகளின் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். 'இந்தப் போட்டியை விட்டுவிட்டோமே' என்ற கவலை அவர்களிடத்தில் இருந்தது. அங்கு நடந்த அழகான விஷயம் என்னவெனில், அணியின் கேப்டனும் (ஹர்மன்ப்ரீத் கவுர்) துணைக் கேப்டனும் (ஸ்மிரிதி மந்தனா) பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டார்கள்.

'இது எங்கள் அணி, அந்த பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோம், நாங்கள் இந்த அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்' என்றார்கள்.

கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் இன்னொரு அழகான விஷயம் சொன்னார்கள். அங்கிருந்த சப்போர்ட் ஸ்டாஃப் (support staff) அனைவரையும் பார்த்து உங்களுக்காக இதை வென்றுகொடுக்கிறோம் என்றார்கள். வீராங்கனைகள் எங்களுக்காக பேசியது மிகவும் சிறப்பான ஓர் உணர்வைக் கொடுத்தது. இந்த வீராங்கனைகள் அவர்களுக்காக என்று நினைக்காமல், ஒருவருக்கொருவர் ஆடவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அதுதான் இந்த அணியின் சிறப்பம்சம்.

நீங்கள் சொன்னதுபோல், ஸ்மிரிதி தானே அந்தத் தோல்விக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார். தன்னுடைய விக்கெட் தான் தோல்விக்கு வித்திட்டது என்று வெளிப்படையாக சொன்னார். சொன்னதுபோல் பொறுப்பை ஏற்று அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். அவரை ஆர்சிபி அணியில் இன்னும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இங்கிலாந்து டிஸ்மிசல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அடுத்த சில தினங்களில் ஸ்மிரிதியிடம் என்ன மாறியது?

அவரிடம் எதுவும் அதிகமாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. அவர் தலைமைப்பண்பை நன்கு வெளிப்படுத்தினார் என்றுதான் நான் சொல்வேன். ஸ்மிரிதி அன்று களமிறங்கும்போது 'நான் என்னுடைய 100% கொடுப்பேன் என்றுதான் இறங்கினார். ஆனால், அவர் எப்போதுமே அந்த மனநிலையில் தான் களமிறங்குவார். அவர் அதே மனநிலையில் தான் இருந்தார்.

அதேசமயம், என்னதான் பொறுப்பை அவர் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டாலும், இந்த இந்திய யூனிட் எப்போதும் ஓர் அணியாகவே செயல்பட்டார்கள். அவர்கள் அனைவருமே அந்தப் போட்டிக்கு நன்கு தயாரானார்கள். அந்தப் போட்டிக்கு முன்பு நடந்த 2 பயிற்சி செஷன்களிலுமே மிகவும் தீவிரமாக பயிற்சியெடுத்தார்கள். அதன்பிறகு அந்த அணியின் நம்பிக்கை அவர்கள் உடல்மொழியிலேயே வெளிப்பட்டது.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இருவரும் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டனர் என்கிறார் மருத்துவர் ஹரிணி.

அந்த இங்கிலாந்து தோல்வி உங்களுக்கு பெர்சனலாகவும் வருத்தமளித்திருக்குமே! ஏனெனில், அன்று (அக்டோபர் 19) உங்களுடைய பிறந்த நாள் வேறு...

நான் இந்த பணிக்கு விண்ணப்பித்த பிறகு, 'என் பிறந்தநாளன்று இந்திய அணியுடன் இருக்கவேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 2 தோல்விகளுக்குப் பிறகு அன்று வீராங்கனைகள் சற்று பாசிடிவாகத்தான் இருந்தார்கள். 'இன்னைக்கு எனக்காக ஜெயித்துக் கொடுத்திடுங்க' என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், போட்டி முடிந்த பிறகு அனைவருக்கும் மிகவும் கனமாக இருந்தது.

அந்த நிலையிலும் கூட வீராங்கனைகள் கேக் வெட்டுவதற்காக எடுத்துவந்தார்கள். நான் வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்காமல் கேக் வெட்ட வைத்தார்கள். எல்லாம் முடித்து கிளம்பும்போது பேருந்தில் ஜெமி (ஜெமிமா ரோட்ரிக்ஸ்) அருகில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவர்தான், 'சாரி மேம் உங்களுக்காக ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்க முடியவில்லை' என்று வருந்தி கூறினார். 'பரவாயில்லை ஜெமி, 2ம் தேதி (நவம்பர் 2 - இறுதிப் போட்டி நடந்த நாள்) பரிசு கொடுங்கள் என்று சொன்னேன்.

அன்று இறுதிப் போட்டியை வென்றதும், பரிசுக்கு நன்றி என்று ஜெமியிடம் சொன்னேன். கட்டிப்பிடித்து 'ஹேப்பி பர்த்டே மேம்' என்று அவர் சொல்லிச் சென்றார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஒரு மிக முக்கியமான செயல்பாட்டை இந்த உலகக் கோப்பையில் கொடுத்தார். ஆனால், அவருக்கு இந்த உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடரின் தொடக்கத்தில் இரண்டு டக் அவுட்கள், பின்னர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார், அதன்பிறகு பேட்டிங் பொசிஷன் மாற்றம் வேறு. அனைத்தையும் கடந்து அசத்தினார். ஆனால், அவரும் கூட உளவியல் ரீதியாக கஷ்டப்பட்டதாகக் கூறினார். நீங்களும் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் உளவியலும் ஒரு அங்கம் என்று சொன்னீர்கள். உங்கள் பார்வையில் ஜெமியின் இந்தப் பயணம் எப்படி இருந்தது?

ஜெமி போன்று ஒரு பாசிடிவான குதூகலமான ஒரு ஆளைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர் அவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார் என்பதே அந்த பேட்டியைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் தன்னுடைய அறையில் அந்த உணர்வுகளோடு போராடியிருக்கிறார். அதை நினைக்கும்போதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.

அவர் வெளியில் ஒரு இடத்தில் கூட அந்த உணர்வுகளை காட்டிக்கொள்ளவில்லை. அவர் எல்லோர் மீதும் அக்கறை செலுத்துவார், அனைத்து விஷயங்களிலும் அக்கறை செலுத்துவார். மும்பையில் அவர் வீட்டில் இருந்து அவருக்காக ஏதாவது உணவுப்பொருள் வருகிறதென்றால், அது மொத்த அணிக்கும் வருமாறு பார்த்துக்கொள்வார்.

மிகவும் பாசிடிவான நபர் அவர். அந்த தருணத்தில் அணிக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கும் ஒருவர் அவர். அவுட் ஆனாலும் கூட, அடுத்து ஃபீல்டிங்கில் எப்படி பங்களிக்கலாம் என்று யோசிப்பவர். அவரைப் பொறுத்தவரை எல்லாமே அணிக்காகத்தான். அதுதான் முதலில்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகக் கோப்பையின்போது உளவியல் ரீதியாக தான் அவதிப்பட்டதாகக் கூறியிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. 338 என்ற இலக்கை அதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் சேஸ் செய்ததில்லை. அதை இந்தியா மிகப் பெரிய அரங்கில் நிகழ்த்திக் காட்டியது. ஆனால், அசாத்தியம் என்று கருதப்பட்ட விஷயம் எப்படி சாத்தியமானது. இன்னிங்ஸ் இடைவெளியில் என்ன நடந்தது?

அப்போது யாரும் அதிகமாகப் பேசிய நினைவு இல்லை. அனைவரும் தயாராகிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் ஒரேயொரு விஷயத்தை அங்கிருந்த போர்டில் ஒரு விஷயத்தை எழுதினார். 'நாம் அவர்களை விட 1 ரன் அதிகமாக எடுப்போம்' என்பதை எழுதிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். எல்லோரும் தயாரானார்கள். சென்று கூடுதலாக அந்த ரன்களையும் எடுத்துவிட்டார்கள்.

தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று ஓர் உலகக் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார். அவர் இந்த அணியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன?

நான் பார்த்தவரைக்கும் அவர் மிகவும் நிதானமான நம்பிக்கையான பயிற்சியாளர். அவருக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். அதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன தேவையோ அதை சரியாகத் திட்டமிட்டு, சரியாக அதை தொடர்புகொள்கிறார். இது முதல் விஷயம்.

இரண்டாவதாக, ஒரு வீரரின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வீரரை 100% நம்புகிறார். அந்த வீராங்கனை கொடுக்கும் கருத்துகளை (feedback) ஏற்றுக்கொண்டு திட்டமிடுகிறார். வீரர்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் அதுதான். 'நீங்கள் இந்த விஷயத்தில் வல்லுநர், இதுதான் சிறந்தது என்று நீங்கள் பரிந்துரைத்தால் நாம் அதைச் செய்வோம்' என்கிறார்.

அவர் எதையும் முயற்சி செய்யாமல் விடுவதில்லை. ஒரு விஷயத்தைச் செய்தால் நல்ல முடிவு கிடைக்குமா, அதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா, அப்படியிருந்தால் அதை நாம் செய்துவிடுவோம் என்று சொல்பவர். இதுவொரு மிகச் சிறந்த பண்பு. ஒவ்வொருவரின் மீதும் மரியாதை செலுத்தி, அவர்கள் மீது நம்பிக்கையும் வைக்கும்போது இந்த அணி ஒரு குடும்பம் போல் ஆகிவிடுகிறது.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான அமோல் மஜும்தார் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடர் இந்த வெற்றியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

டபிள்யூ.பி.எல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மிகப் பெரியது. அதை மறுக்கவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன் தொடர் அட்டவணைகள் என்பது அவ்வளவாக இருந்திருக்கவில்லை. நம்முடைய இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று தேசிய அணிக்கு வீரர்களை அடையாளம் காண்பது என்பது நடைமுறையில் கடினமான ஒன்று. இந்த இடத்தில் டபிள்யூ.பி.எல் மேடை நன்கு இந்திய கிரிக்கெட்டுக்கு உதவியிருக்கிறது.

இந்த 3 ஆண்டுகளில் வீரர்களின் தரத்தில், ஃபிட்னஸில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சீசனில் இருந்ததை ஒப்பிடும்போது இப்போது நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. இங்கு வாய்ப்பு பெற்ற வீராங்கனைகள் பிரகாசமாக ஜொலிப்பதற்கும், புதிதாக வீராங்கனைகள் விளையாட ஆசைப்படுவதற்கும் இது ஊக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

இவ்வளவு ஏன் எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்கள் கூட நிறையப் பேர் அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0rpyd1pkd4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.