Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

700190474.jpeg

எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீற்றர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

காவல்துறையினர், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.

அத்துடன் விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/நாட்டை_உலுக்கிய_எல்ல_விபத்து_-_ஒருவர்_கைது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லயில் பஸ் 1000 அடி பள்ளத்தில் விழுந்த இடம்

Editorial   / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 07:17

எல்லையில் பஸ்ஸூடன் ஜீப்பும் 1000 அடி பள்ளத்தில் புரண்டுள்ளது...

image_5f75a8a948.jpeghttp://editorial.tamilmirror.lk/articles/loadEditArticle/error#%23%23%23Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_5a2ac5aa5d.jpeg

https://www.tamilmirror.lk/செய்திகள்/எல்லயில்-பஸ்-1000-அடி-பள்ளத்தில்-விழுந்த-இடம்/175-364056

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-79.jpg?resize=750%2C375&ssl=

எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறு ஆண்களும், ஒன்பது பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை நகராட்சி சபையைச் சேர்ந்த ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் நடந்தபோது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Image

Image

Image

https://athavannews.com/2025/1446138

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-87.jpg?resize=750%2C375&ssl=

எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்!

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.

சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய சில பயணிகளும் சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

எனினும், இரண்டாவது வளைவு ஒன்றில் பேருந்து பயணித்த போது பிரேக் செயலிழந்துள்ளதை உண்மையில் நாங்கள் உணர்ந்தோம்.

பின்னர் பேருந்து எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியது, அதன் பின்னர் அது பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்திருந்த நான், ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விழித்தேன்.

என்னால் நகர முடியவில்லை. பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வந்து எங்களை மீட்டனர் என்று குறித்த பயணி கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று வரும் பதுளை வைத்தியசாலையில் இருந்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது இந்த தகவலை தெரிவித்தார்.

நேற்று இரவு வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஜீப் மீது மோதி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பேர் இருந்தனர்.

06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர்.

தங்காலையிலிருந்து எல்லவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முப்படையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1446202

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: 1000 அடி பள்ளத்தில் உருண்ட பேருந்து - கடைசி நொடிகளில் நடந்தது என்ன?

இலங்கை பேருந்து விபத்து

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிபிசி சிங்கள சேவை

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் பதுளை - எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றைய தினம் (04) இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உள்ளடங்களாக முப்பதிற்கும் அதிகமானோர் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், காயமடைந்தவர்களின் 6 ஆண்களும், 5 பெண்களும், 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர்.

விபத்து எவ்வாறு நேர்ந்தது?

எல்ல - வெல்லவாய பிரதான சாலையின் 23வது மற்றும் 24வது மைல் கல் பிரதேசத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

"வெல்லவாய திசையை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, எதிர் திசையில் வருகைத் தந்த ஜீப் ரக வாகனமொன்றில் மோதுண்டதை அடுத்து, சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைவு இருந்த பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், பஸ் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தங்காலை நகர சபையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களும் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் ஜீப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை, பேருந்து விபத்து, மீட்புப் பணி, விபத்து, பயணம்

பட மூலாதாரம், G.KRISHANTHAN

படக்குறிப்பு, இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவோடு இரவாக தொடர்ந்த மீட்பு பணி

விபத்து இடம்பெற்ற தருணம் முதல் பிரதேச மக்கள் மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வருகைத் தந்த போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், ராணுவத்தினரும் மீட்பு பணிகளுக்காக வரழைக்கப்பட்டிருந்தனர்.

பிரதேச மக்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

இரவோடு இரவாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இயங்கி வரும் மலை ஏறும் குழுவினரும் மீட்பு பணிகளுக்காக வருகைத் தந்திருந்தார்கள் என பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கோரப்பட்ட மீட்பு உதவிகள்

இலங்கை, பேருந்து விபத்து, மீட்புப் பணி, விபத்து, பயணம்

பட மூலாதாரம், G.KRISHANTHAN

படக்குறிப்பு, விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

பஸ் விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேஸ்புக் ஊடாக பல்வேறு தரப்பினர் மீட்பு பணிகளுக்கான உதவிகளை கோரியுள்ளனர்.

''எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்காக பாரிய பிரயத்தனம் முன்னெடுக்கப்படுகின்றது. அருகிலுள்ளவர்கள் உதவி செய்யுங்கள்.'' என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் பகிரப்பட்டன.

இவ்வாறு வெளியிடப்பட்ட சமூக வலைத்தள பதிவுகளை அடுத்து, அதற்கான உதவியை பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர்.

இதன்படி, கயிறுகள், மின்விளக்குகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு விபத்து நேர்ந்த இடத்திற்கு பிரதேச மக்கள் வருகைத் தந்துள்ளனர்.

மீட்பு பணியாளர்கள் அனுபவம்

இலங்கை, பேருந்து விபத்து, மீட்புப் பணி, விபத்து, பயணம்

பட மூலாதாரம், G.KRISHANTHAN

மலை தொடர்களில் ஏறும் குழுவினரின் ஒத்துழைப்பு இதன்போது கிடைக்கப் பெற்றதாக பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

பஸ் விபத்துக்குள்ளான பள்ளத்தில் காணப்படும் பாரிய கற் பாறைகளின் ஊடாக கயிறுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் செயற்பாட்டை அவதானிக்க முடிந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டோர் பிபிசி சிங்கள சேவைக்கு தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

''அது தொடர்பில் கூற வேண்டும் என்றால், எமக்கு தகவலொன்று கிடைத்தது. நாங்கள் முதலாவது செயற்பாட்டாளர்களாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றோம். நாங்கள் பிளை ராவணா குழு என பிரதிநிதித்துப்படுத்துகின்றோம்''

''இந்த தகவலை அறிந்து பலர் வருகைத் தந்திருந்தார்கள். நாங்கள் கீழே சென்று பார்த்த போது காயமடைந்தவர்களை போன்று உயிரிழந்தவர்களையும் காணக்கூடியதாக இருந்தது.''

''பள்ளத்தில் சிக்குண்ட நிலையில், நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஏனைய மூவரும் காயமடைந்திருந்தனர். அவர்கள் மூவரையும் பிரதேச மக்கள் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் நான் கீழே கொண்டு வந்தேன்''

''இந்த பள்ளத்தில் 80 - 100 அடி வரையான கற்களிலான பள்ளமொன்று உள்ளது. பஸ் அதிலிருந்தும் கீழே வீழ்ந்திருந்தது.''

''முதலில் மீட்பு பணிகளை ஆரம்பிக்கும் தருணத்தில் எந்தவொரு உபகரணங்களும் இருக்கவில்லை. அதன்பின்னர் கயிறு போன்றவற்றை எடுத்துக்கொண்டு குழுவொன்று வருகைத் தந்தது''

''விரைவாக உபகரணங்களை தயார் செய்து, கீழே இறங்கினோம். மிகவும் கவலையாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. மன வருத்தமாக இருக்கின்றது. எங்களால் முடியுமான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்தோம்''

''நாங்கள் எமது வாழ்க்கையை கூட நினைத்து பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு உதவி செய்தோம். நான் நினைக்கின்றேன். இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று நினைக்கின்றேன்.'' மீட்பு பணிகளின் ஈடுபட்ட குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் தனது அனுபத்தை இவ்வாறு பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

பிரேக் பிடிக்காததால் விபத்து?

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பிரேக் இருக்கவில்லை என பஸ்ஸின் சாரதி கூறியதாக பஸ் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் ஒருவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''எல்ல பகுதிக்கு அருகில் வைத்து பஸ்ஸில் பிரேக் இல்லை என சாரதி சொன்னார். நான் அவர்களுடன் பஸ்ஸின் முன்புறத்தில் அமர்ந்து அவர்களுடன் கதைத்துக்கொண்டு வந்தேன். சாரதி சொன்னார். பஸ்ஸின் நடந்துநர் சிரித்தார். பஸ்ஸில் ஏனையோரும் இருந்தார்கள். பொய் சொல்ல வேண்டாம் என சொல்லி சிரித்தார்கள்.

இரண்டாவது வளைவில் வைத்து மீண்டும் சொன்னார் பிரேக் இல்லை என் சொன்னார். திடீரென பஸ்ஸை திருப்பி செலுத்தினார். அதன்பின்னரே பஸ்ஸில் பிரேக் உண்மையிலேயே இல்லை என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டோம்.

முன்புறமாக வாகனமொன்று வந்தது. அதில் மோதுண்டே பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. நான் இறந்து விட்டேன் என்றே நினைத்தேன். சில மணிநேரம் நினைவு வரவில்லை. சிறியவர் ஒருவர் கூச்சலிடும் சத்தத்திலேயே நான் எழுந்தேன். சிறுவனை அங்கிருந்து எடுக்க முயற்சித்தேன். என்னால் எழ முடியவில்லை. கூச்சலிட்டேன். அப்போது விசேட அதிரடி படையினர் வருகைத் தந்தார்கள்.' என அந்த பயணி பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

இலங்கை, பேருந்து விபத்து, மீட்புப் பணி, விபத்து, பயணம்

பட மூலாதாரம், G.KRISHANTHAN

ராணுவ மீட்பு குழு

பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சுமார் 100 பேரை கொண்ட ராணுவ குழுவொன்று கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்தார்.

''விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, எமது குழுவொன்று பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது''

''விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை மீட்டு, அவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த குழு சென்றுள்ளது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிலுள்ள எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், வீரவில விமானப் படை முகாமிலுள்ள பெல் 412 ஹெலிகொப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது.

அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் நோயாளர்களை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு அல்லது ஏனைய மீட்பு பணிகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிடுகின்றது.

மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலைமை

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன், காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும் காயமடைந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காயமடைந்தவர்களில் சிலரது கைகள் மற்றும் கால்கள் உடைந்துள்ளதாக பதுளை மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், விபத்துக்குள்ளான பஸ்ஸிற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற பின்னணியில் தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவம் தொடர்பில் எல்ல போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c708zeqz4y5o

  • கருத்துக்கள உறவுகள்

எல்ல - வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்.!

Published By: Digital Desk 1

05 Sep, 2025 | 04:52 PM

image

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/224311

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-79.jpg?resize=750%2C375&ssl=

எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து- வெளிவந்த உண்மைகள்!

எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி மேம்பாட்டு ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு குழுவினர் இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது.

மேலும் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446248

  • கருத்துக்கள உறவுகள்

543034280_1356545642703900_5105956973980

544519513_1356545682703896_4487728760791

544628571_1356545716037226_4161672386108

தன்னை நம்பி வந்த பயணிகளை தனது உயிரை கொடுத்து காப்பாற்றிய ஓட்டுனர் கீர்த்தி பண்டார. இன்றும் அவரது பெயர் நிலைத்துள்ளது.
பேருந்தின் பிரேக் செயல்படவில்லை.
25 உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஓட்டுநரின் கைகளில் இருந்தது. மேலும் சில மீட்டர் முன்னால்சென்றால், ஆயிரம் அடிக்கும் மேலான செங்குத்தான பள்ளத்தாக்கில் பேருந்து புரண்டுவிடும்.

"பிரேக் செயல்படவில்லை.
அமைதியாக, அனைவரும்
பின்னால் செல்லுங்கள் என்றார்."
ஓட்டுநரின் குரல் கேட்டவுடன், பேருந்தில் இருந்த அனைவரும் பின்னால் சாய்ந்தனர்.


கீர்த்தி பண்டாராவுக்கு செய்ய ஒரே ஒரு விஷயம் தான் இருந்தது. பள்ளத்தை அடையும் முன், தனது ஓட்டுநர் பக்கத்தை மலை பக்கம் சென்று மோத வேண்டடும் அதனையே அவர் செய்தார்.

வேகமாக வந்த பேருந்து மலையில் மோதி ஒரே மூச்சில் நின்றது. மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டனர். ஆனால் ஓட்டுநர் கீர்த்தி பண்டாராவின் மூச்சு நின்றது .😥
அவரின் இந்த செயலினால் ஒரு வீரனாக இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார்.

இவ்வாறான சாரதிகள் என்றும் போற்றப்படுவர் .
மக்களை காப்பாற்றும் திறன் மட்டும் போதாது, அனுபவம் வேண்டும்..
கீர்த்தி போன்ற மனிதர்கள் இன்னும் பிறக்கட்டும்..!!!

நம்ம யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து 23 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் நடந்த மற்றுமொரு மோசமான விபத்தை நினைவூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், பேருந்து முதலில் ஒரு ஜீப்புடன் மோதி, பின்னர் பள்ளத்தில் விழுந்தது.

இதே நாளில் 

இந்த நிலையில், நேற்றைய பேருந்து விபத்து, 2002 செப்டம்பரில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தை ஒத்துப்போவதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை | Ella Bus Accident Similar To 2002 Bus Accident

2002 விபத்தின் போது, பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்திருந்துடன், அந்த விபத்தும் இதே நாளிலும், கிட்டத்தட்ட அதே நேரத்திலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

தொடர் பேருந்து விபத்துகள்

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் பேருந்து விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை | Ella Bus Accident Similar To 2002 Bus Accident

இவ்வருடம் மே மாதத்தில், கதிர்காமத்தில் இருந்து குருணாகலை நோக்கி சென்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியானார்கள்.

அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு பஸ்ஸரவில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர். இவ்விரு விபத்துகளும் சமீபத்திய எல்ல – வெல்லவாய விபத்து நிகழ்ந்த அதே மாவட்டத்தில் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/ella-bus-accident-similar-to-2002-bus-accident-1757080927#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் அறிவதற்காகவே, சாரதியின் இரத்த மாதிரிகளை இன்று (7) அந்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது அவர் ஏதேனும் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmf9gmnv000a5o29n9id9zhxf

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பராமரிப்பின்மை.. காலாவதியான உதிரிப்பாகங்களுடன் இயங்குதல்.. தரமற்ற பிரதேசத்துக்கு உகந்ததற்ற வாகனங்களின் பயன்பாடு.. சாரதிகளின் பொறுபற்ற செயற்பாடுகள்..இவை தான் முக்கிய காரணங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

September 10, 2025 11:16 am

எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

எல்ல – வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், விபத்து தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களித்தின் ஆணையரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயரமான பகுதியில் இருந்து கீழ் நோக்கி பயணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய கியருக்கு பதிலாக, நான்காவது கியரில் பேருந்து பயணித்துள்ளமை விசாரணைகள் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தின் பின்புற வலது சக்கர அமைப்பில் பிரேக்குகள் முழுமையாக செயற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

https://oruvan.com/ella-bus-accident-cause-revealed/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.