Jump to content

போத்தல் பித்தளை அலுமினியம்.


Recommended Posts

Posted

அந்த நாள் ஞாபகம் .............ஆனால் நாங்கள் கொடுத்து வாங்கியது அடுத்தவன் பானைகள் வேலி கம்பில் கவிழ்த்து விடப்பட்டிருக்கும் அப்போது சுட்டு கொள்வதுதான் சாத்திரி :):)

நல்ல நகைச்சுவையான கதை

கதையை தூசி தட்டிய முனிவருக்கு நன்றிகள் ஏனென்றால் தற்சமயம் அம்மா ஊரில் இருந்து வந்து என்னுடன் நிற்கிறார்.போன கிழைமையும் இந்தக் கதையை சொல்லி நாங்கள் சிரித்து பழையவற்றை மீட்டிமகிழ்ந்தோம். :lol: :lol: :lol:

சாத்திரி! உங்களுக்குத் தெரியுமா, ஒரு சதுர வண்டிலில் ஐஸ்பழத்துக்குரிய பொருள் எல்லாம் வைத்து தள்ளிக் கொண்டு வருவினம். நாங்கள் ஐஸ்பழம் கேட்டதும் உடனே ஒன்டரை சான் நீளமான பனை ஈக்கை எடுத்து ஒரு குழாயினுள் வைத்து பக்கத்தில் இருக்கும் எல் வடிவமான கம்பியால் வேகமாய்ச் சுற்றுவார். அப்போது ஐஸ்பழம் அந்த ஈக்கிலில் அழகாய் ஒட்டிக் கொண்டு வரும். பால் ஐஸ்கிறீமாக நல்ல சுவையாய் இருக்கும்.

மற்றும்படி வீட்டில் சிறு களவுகள் செய்வதும், விழுப் புண்கள் பெறுவதும் நமது பிறப்புரிமையல்லவா. தழும்புகளைத் தடவிக் கொண்டு சுவி!!!

சுவியண்ணா நீங்கள் சொல்வது ஜஸ்பழமா அல்லது பம்பாய் மிட்டாயா??ஏனென்றால் அப்படியொன்று சாப்பிட்ட ஞாபகம் அதனை நாங்கள் பம்பாய் மிட்டாயென்று சொன்னதாக நிஞாபகம். :D

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசரி சாத்திரி , குளிர்களி விற்பவரிடமிருந்து கேத்திலும், புட்டுப்பாணையும் கிடைச்சதா சாத்திரி?

Posted

எல்லாம் 90 களில நடந்து முடிஞ்சுது. இப்ப எனக்கு வயசாகிட்டுது.. இப்ப வயது 95+ தானே...!

கதை விடுறதுக்கும் ஒரு அளவு வேண்டும்..... :mellow:

நீங்களும் நம்மடி விளையட்டு தான் விட்டிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் தேசி மற்றும் தென்னை நிறைய உண்டு. அதனால் வீட்டில பெரிசா கணக்கு தெரியாது. But நாமள் சீப்பா எல்லாம் குடுக்க மாட்டோம். 10 தேசிக்காய சந்தியில மரக்கறி விக்கிற லட்சுமி அக்காட்டையோ, ராசம்மா அக்காட்டையோ போய் அம்மா ஒரு ரூபா படி குடுக்க சொன்னவா எண்டு சொல்ல அவை 10 ரூபா தருவினம். அதே போல சோடாப் போத்தில ஜஸ்பழ காறனுக்கு குடுத்தால் 1 ரூபா குச்சி ஜஸ்தான் தருவான். நான் சங்க கடை மனேச்சரிட்டை போய் "அண்டைக்கு கழிச்ச 5ரூபாவ தாங்கோ" எண்டு போத்தல குடுக்க அவரும் 5 ரூபா தருவார். பிறகு அப்பர் போத்தலுகளை காணஇல்லை எண்டு தேடுறது வேற கதை. ஆனாலும் செய்த பாவம் எண்டால் தம்பிமார் சல்லிமுட்டியில போடுற காசை காம்புசத்தகத்தால தட்டி எடுக்கிறது. இல்லையெண்டால் "நான் 3 காசு தாறேன் நீ ஒரு காசு தா" எண்டு 3 - 50 சத குத்திய குடுத்து 5 ரூபா குத்திய வாங்கிறது. (இப்ப நினைச்சால் சிரிப்பு தான் வரும்.) அதே போல மில்லில ஏதாவது திரிச்சு வர தருவினம். எல்லாம் சொந்த தோட்டத்தில விளையுறதால நிறுக்காம தான் உர பாக்கில போட்டு தர இருந்ததை விட 2கிலோ கூட கிடந்தது எண்டு சொல்லி 2 கி லோ திரிக்கிற கூலிய வசூல் பண்ணுவோம்..

என்னப்பா எல்லாரும் நான் செஞ்சதைத்தானே செஞ்சிருக்குறீங்கள் அதைவிட எனக்கடித்த லக்கு என்னவெண்டா எங்கட வீட்டிலதான் நல்லதண்ணி அந்த ஊரில, அப்ப அந்த பாதையால போற வான் காறனுக்கு தெரியும் எங்கட வீட்டில நல்லதண்ணி இருக்குதெண்டு அடிக்கடி கொண்டுவந்து பெட்டி எல்லாம் கழுவுவினம் அப்ப கொட்டுற ஐஸ்கட்டியில தான் நாங்கள் சினோ விளையாடுறது, அதுக்கு வாய் பார்த்துக்கொண்டு நிக்கேக்க ஒண்டு இரண்டு தருவார் அந்த வயசான தாத்தா.. தந்தாப் பேந்தென்ன நாங்கள் தான் வாளியில தண்ணி அள்ளி இறைக்கவேணும் அவரிண்ட பெட்டி எல்லாம் கழுவுறதுக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.