Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்.

கட்டுரை தகவல்

  • பால் ஆடம்ஸ்

  • பிபிசி

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.

இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட 'தென்னாப்ரிக்கா' காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன.

அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்படுத்தாமல், இந்த ராஜீய சிக்கலை சமாளித்து, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தனது இலக்குகளைத் தொடர முடியுமா?

முன்னாள் பிரதமர்களான எகுட் பராக் மற்றும் எகுட் ஓல்மெர்ட் ஆகியோர், நெதன்யாகு இஸ்ரேலை உலகளவில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாற்றி வருவதாக ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த கைது வாரண்ட் காரணமாக, கைது பயமின்றி நெதன்யாகு பயணம் செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா உள்ளிட்ட பல நாடுகள் அடுத்த வாரம் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபமடைந்த வளைகுடா நாடுகள், தோஹாவில் கூடி ஆலோசித்தன.

மேலும், கடந்த கோடைகாலத்தில், காஸாவில் இருந்து பஞ்சம் குறித்த படங்கள் உலகுக்கு வெளிப்பட்டதும், இஸ்ரேல் காஸா நகரத்தில் தாக்குதல் நடத்தத் தயாரானதும், ஐரோப்பிய அரசுகள் பலவும் வெறும் அறிக்கைகள் வெளியிடுவதைக் கடந்து, வெளிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பெல்ஜியம்

பெல்ஜியத்தின் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, ஸ்பெயின் தனது சொந்த நடவடிக்கைகளை அறிவித்து, நடைமுறையில் இருந்த ஆயுதத் தடையை சட்டமாக்கியது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல்களைத் தொடர்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத யூதக் குடியிருப்புகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தடை, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான ஒப்பந்த கொள்கைகளை மறுஆய்வு செய்தல், மேலும் அந்த குடியிருப்புகளில் வசிக்கும் பெல்ஜிய குடிமக்களுக்கான தூதரக சேவைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பெல்ஜியம் அறிவித்தது.

மேலும், கடும்போக்கு இஸ்ரேலிய அமைச்சர்களான இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட யூதர்களும் பெல்ஜியமுக்குள் நுழைவதற்கு வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்திருந்தன.

ஆனால், மேற்குக் கரையில் குடியேறும் யூதர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பைடன் நிர்வாகம் விதித்த தடைகளை, அதிபராக மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே டொனால்ட் டிரம்ப் நீக்கியிருந்தார்.

பெல்ஜியத்தின் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, ஸ்பெயின் தனது நடவடிக்கைகளை அறிவித்து, நடைமுறையில் இருந்த ஆயுதத் தடையை சட்டமாக்கியது.

இந்த நடவடிக்கைகளில், காஸாவில் இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஸ்பெயினுக்குள் நுழைவதற்குத் தடையும் அடங்கும்.

மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஸ்பெயின் துறைமுகங்கள் மற்றும் வான்வெளியில் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ஸ்பெயின் யூத எதிர்ப்புக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஆயுத வர்த்தகத் தடை, இஸ்ரேலை விட ஸ்பெயினுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு கவலையளிக்கும் மாற்றங்கள்

ஆகஸ்ட் மாதத்தில், நோர்வேயின் மிகப்பெரிய 2 டிரில்லியன் டாலர் இறையாண்மை செல்வ நிதியம், இஸ்ரேலில் பட்டியலிடப்பட்ட சில நிறுவனங்களிலிருந்து விலகத் தொடங்குவதாக அறிவித்தது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இஸ்ரேலிய எம்.பி.க்கள் இடாமர் பென்-க்விர் (எல்) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச்

ஆனால், இஸ்ரேலுக்கு மேலும் கவலைக்குரிய அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

ஆகஸ்ட் மாதத்தில், நோர்வேயின் மிகப்பெரிய 2 டிரில்லியன் டாலர் நிதிகொண்ட Norwegian Sovereign Wealth Fund என்ற நிதியம், இஸ்ரேல் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை விற்க போவதாக அறிவித்தது.

இந்த மாத நடுப்பகுதிக்குள் 23 நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் விற்கப்பட்டன. மேலும், நிதியமைச்சர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இன்னும் பல நிறுவனங்களில் இருந்து முதலீடுகள் நீக்கப்படலாம் என்று கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேலின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியம், வலதுசாரி அமைச்சர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கவும், இஸ்ரேலுடனான கூட்டுறவு ஒப்பந்தத்தின் சில வர்த்தக அம்சங்களை ஓரளவு நிறுத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற தனது "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லீன், காஸாவில் நடந்த நிகழ்வுகள் "உலகின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன" என்று குறிப்பிட்டார்.

அடுத்த நாளே, 314 ஐரோப்பிய முன்னாள் தூதர்கள் மற்றும் அதிகாரிகள், உர்சுலா வான் டெர் லீனுக்கும், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கயா கிளாஸுக்கும் கடிதம் எழுதி, கூட்டுறவு ஒப்பந்தத்தை முற்றிலும் நிறுத்துவது உட்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

1960களிலிருந்து 1990ல் நிறவெறி முடிவுக்கு வரும் வரை தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட தடைகளில், கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளைப் புறக்கணிப்பது முக்கிய அம்சமாக இருந்தது.

இப்போது, அதே மாதிரியான அறிகுறிகள் இஸ்ரேல் தொடர்பாகவும் வெளிப்படுகின்றன.

இந்தச் சூழலில், யூரோவிஷன் பாடல் போட்டி பெரிதாகத் தெரியாமல் இருந்தாலும், இஸ்ரேலுக்கு அதனுடன் ஆழமான பிணைப்பு உள்ளது. 1973 முதல் நான்கு முறை அந்தப் போட்டியில் வென்றுள்ளது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, இதில் பங்கேற்பது யூத தேசம் சர்வதேச குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

ஆனால், அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா, 2026 போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டால் தாங்கள் விலகிவிடுவதாகக் கூறியுள்ளன அல்லது சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பான இறுதி முடிவு டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறக்கணிப்புகளைச் சந்திக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஸ்விகா கோட்லீப், இந்த மனுவை “முழுமையாக தவறானது” எனக் குறிப்பிட்டார். “பல்வேறு கதைகளுக்கு குரல் கொடுக்கும் எங்களை குறிவைப்பதன் மூலம், இவர்கள் தங்களின் சொந்தக் குரல்களையே பாதித்துள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 1970களில் இருந்து இஸ்ரேல் யூரோவிஷனில் வழக்கமாகப் பங்கேற்று வருகிறது, ஆனால் சில நாடுகள் அடுத்த ஆண்டு போட்டியைப் புறக்கணிப்பதாக அச்சுறுத்தியுள்ளன.

ஹாலிவுட்டில் பரவிய ஒரு கடிதம், இஸ்ரேலிய தயாரிப்பு நிறுவனங்கள், விழாக்கள், ஒளிபரப்பாளர்களை புறக்கணிக்க அழைத்துள்ளது.

ஒரே ஒரு வாரத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் அதில் கையொப்பமிட்டுள்ளனர். இதில் எம்மா ஸ்டோன், ஜேவியர் பார்டெம் போன்ற பிரபலங்களும் அடங்குவர்.

இஸ்ரேல் திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஸ்விகா கோட்லீப், இந்த மனுவை "முழுமையாக தவறானது" எனக் குறிப்பிட்டார். "பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் எங்களை குறிவைப்பதன் மூலம், இவர்கள் தங்களின் சொந்தக் குரல்களையே பாதித்துள்ளனர்," என்றும் அவர் கூறினார்.

விளையாட்டு உலகிலும் எதிர்ப்புகள் பரவின. இஸ்ரேலின் பிரீமியர் டெக் அணிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் காரணமாக வுல்டா டி எஸ்பானா சைக்கிள் பந்தயம் பலமுறை தடைபட்டது. இதனால் போட்டி சனிக்கிழமை முன்கூட்டியே முடிவடைந்து, விழா ரத்து செய்யப்பட்டது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தப் போராட்டங்களை "பெருமை" எனக் குறிப்பிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள், அரசின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டின.

ஸ்பெயினில், ஏழு இஸ்ரேலிய சதுரங்க வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியின் கீழ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் போட்டியில் இருந்து விலகினர்.

இந்த நிலையை ஊடகங்கள் "டிப்ளமடிக் சுனாமி" (இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் எடுக்கும் அதிகமான ராஜீய ரீதியிலான முடிவுகள்) என்று அழைத்துள்ளன. இஸ்ரேல் அரசும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெதன்யாகு, ஸ்பெயின் "வெளிப்படையாக இனப்படுகொலை அச்சுறுத்தல் விடுக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பெல்ஜியம் தடை அறிவித்ததையடுத்து, " ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்த்து இஸ்ரேல் போராடும் வேளையில், சில யூத விரோதவாதிகள் இன்னும் தங்கள் வெறித்தனத்தை கைவிட முடியாதது துயரம்" என இஸ்ரேல் அமைச்சர் கிடியோன் சார் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

2017 முதல் 2021 வரை ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதராக இருந்த ஜெர்மி இஸ்ஸகாரோஃப், “இஸ்ரேலின் சர்வதேச நிலைமை இவ்வளவு பலவீனமாக இருந்தது எனக்கு நினைவில்லை” என்று கூறினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முக்கிய வருடாந்திர போட்டிகளில் ஒன்றான வுல்டா டி எஸ்பானா சைக்கிள் பந்தயம், பாலத்தீன ஆதரவு போராட்டங்களால் பலமுறை தடைபட்டது.

ஆனால், வெளிநாடுகளில் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தூதர்களிடையே ஆழ்ந்த கவலை நிலவுகிறது.

2017 முதல் 2021 வரை ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதராக இருந்த ஜெர்மி இஸ்ஸகாரோஃப், "இஸ்ரேலின் சர்வதேச நிலைமை இவ்வளவு பலவீனமாக இருந்து எனக்கு நினைவில்லை" என்று கூறினார்.

பல தடைகள் மற்றும் நடவடிக்கைகள் "வருந்தத்தக்கவை" என அவர் தெரிவித்தார், ஏனெனில் அவை அடிப்படையில் அனைத்து இஸ்ரேலியர்களையும் குறிவைப்பதாகப் பார்க்கப்படுகின்றன.

"அரசின் கொள்கைகளை மட்டும் குறிவைப்பதற்கு பதிலாக, இது பல இஸ்ரேலியர்களை ஒதுக்குகிறது " என்றும் அவர் கூறினார்.

பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நடவடிக்கைகள் கூட "ஸ்மோட்ரிச், பென் க்விர் போன்றோருக்கு அதிகாரம் கொடுத்து, மேற்குக் கரையை இணைப்பதற்கான அவர்களின் வாதங்களை வலுப்படுத்தும்" என்பதால், எதிர்மறையாகப் போகக்கூடும் என அவர் எச்சரித்தார்.

இருப்பினும், இஸ்ஸகாரோஃப், இஸ்ரேலின் ராஜீய தனிமைப்படுத்தலை மாற்ற முடியாத ஒன்று என்று நம்பவில்லை.

"நாம் இன்னும் தென்னாப்ரிக்கா காலகட்டத்தில் இல்லை. ஆனால் ஒருவேளை அதன் பிரதிபலிப்பு காலத்தில் இருக்கலாம்," என்றார்.

மற்ற முன்னாள் தூதர்கள், இஸ்ரேல் உலகில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாறுவதைத் தடுக்க ஆழமான மாற்றங்கள் அவசியம் என நம்புகின்றனர்.

முன்னாள் தூதர் இலன் பருச், நிறவெறி பிரச்னை முடிந்த பின் தென்னாப்ரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

2011ல் தூதரக சேவையிலிருந்து விலகிய பிறகு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை இனியும் காக்க முடியாது எனக் கூறி, இரு நாடுகள் தீர்வுக்கு வலுவான ஆதரவாளராக மாறினார்.

சமீபத்திய தடைகள் அவசியம் என்று நம்பும் அவர், "தென்னாப்ரிக்காவை மண்டியிட வைத்த ஒரே வழி இதுதான்," என்றார்.

இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வழங்கும் அமெரிக்கா

வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார்.

"இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். அத்தகைய முறைகள் வரவேற்கப்படவேண்டும்," என்று பருச் கூறினார்.

"தேவைப்பட்டால், விசா விதிகளில் மாற்றங்கள் மற்றும் கலாசார புறக்கணிப்பும் இதில் அடங்க வேண்டும். அந்த வலியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

சில அனுபவமிக்க விமர்சகர்கள், இஸ்ரேல் பெரிய அளவிலான ராஜீய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்ற கருத்து தொடர்பான சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

"ஸ்பெயின் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ள நாடுகள் இன்னும் விதிவிலக்குகளாகவே உள்ளன" என்று இஸ்ரேலிய அமைதிப் முன்னாள் பேச்சுவார்த்தையாளர் டேனியல் லெவி கூறினார்.

இஸ்ரேலுக்கு இன்னும் வலுவான அமெரிக்க ஆதரவு கிடைக்கிறது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, அதிகாரப்பூர்வ பயணத்திற்காக புறப்படும் முன், "இஸ்ரேலுடன் அமெரிக்காவின் உறவு வலுவாகவே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என லெவி நம்புகிறார்.

டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு தொடர்ந்தாலும், காஸாவில் நிகழ்வுகளின் போக்கை மாற்றும் நிலைமை இன்னும் உருவாகவில்லை என்றார்.

"நெதன்யாகுவுக்கு முன்னேற இடம் குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் நாம் இறுதிக்கட்டத்தை அடையவில்லை," என்று லெவி குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dr1x1kv1do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.