Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச, 1980ஆம் ஆண்டு வாங்கியதாக உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள்.

செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை.

கொழும்பில் வாங்கிய முதல் வீடு

ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன். 1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மஹிந்த அண்ணன் நினைவு கூர்ந்தார்.

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல் | Mahinda Has A House In Mirihana

அங்கிருந்து தான் நான் நாளந்தா கல்லூரிக்குச் சென்றேன். பின்னர், ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன். அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டமான வீடு என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். அந்த வீட்டிற்கு வந்த பிறகு மஹிந்த அண்ணன் திருமணம் செய்து கொண்டார்.

அதேபோல், டட்லி அண்ணன், பிரீத்தி அக்கா, கந்தானி அக்கா, கோட்டா அண்ணன் ஆகியோர் அந்த வீட்டிற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஜெயந்தி அக்கா மற்றும் பசில் அண்ணனும் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தங்கள் முதல் வீட்டை கட்ட முடிவு செய்தனர்.

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல் | Mahinda Has A House In Mirihana

அதனால்தான் எனது முதல் வீடும் 1991இல் மிரிஹான பொலிஸ் பிரிவில் கட்டப்பட்டது. அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய எங்கள் அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு கொழும்பில் மட்டுமா வீடு உண்டு? பொறுத்திருங்கள். விசாரணை என்றவுடன் பதறியடித்துக்கொண்டு குழப்பங்களை உருவாக்கி, ஆட்சியை பிடித்து, தனது உண்மை கோர முகம் வெளியில் வராதபடி செய்து, தான் செய்த கொலைகளையும் அராஜகங்களையும் சாதனையாக காட்டி, இராணுவத்தினரை முன்னிறுத்தி நாட்டின் தியாகியாக மக்களுக்கு உரையாற்றி, தன்னை காத்துக்கொள்வார். அவருக்கு தெரியும், நாட்டின் சட்டம் நீதியை எவ்வாறு வளைத்து, தன்னை மறைத்தேன், தன் சகாக்களை காத்தேன், வேண்டாதவர்களை பழிவாங்கினேன் என்பது. அது எங்கே தனக்கு எதிராக திரும்பி தன்னை தண்டித்து விடுமென அஞ்சுகிறார். அதற்காகவே திருடர்களை வளர்த்து தன்கூடவே வைத்திருக்கிறார். தமிழரை எதிரிகளாக சிங்கள மக்களிடம் திணிக்கிறார். இவற்றையெல்லாம் கடந்து அனுரா சாதிப்பாரானால், மகிந்த பழைய நிலைமைக்கு திரும்புவார். திருடர் கூட்டம் என இவர்களை சந்திரிகா விழித்தது நூறு வீதம் உண்மை. திருடர் கூட்டம் மட்டுமல்ல பொறுக்கிகள் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில் தென்னிலங்கையில் ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள்

Dr Rajitha SenaratneNamal RajapaksaRanil WickremesingheVijitha HerathWedding

2 hours ago

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், பிரபல அரசியல்வாதிகள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

பொதுவான நிகழ்வு ஒன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசும்பொருளாக மாறியுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நேற்றிரவு பெரடைஸ் இன் பொல்கொட ஹோட்டலில் நடைபெற்றது.

ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள்

இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத், பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில் தென்னிலங்கையில் ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள் | Politicians Gathered In On Table

அவர்களுடன் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, கரு ஜெயசூரியா, அஜித் நிவார்ட் கப்ரால், ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர, அகில விராஜ் காரியவசம், எரான் விக்ரமசிங்க, கவிந்த ஜெயவர்தன, இம்தியாஸ் பாகிர் மகர், சரித ஹேரத், சுசில் பிரேமஜயந்த, ஆஷு மாரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஒன்றுகூடலின் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அரசியல் நிலைமை

அவர்கள் வட்ட மேசைகளில் அமர்ந்து தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியதாகவும் அறியப்படுகிறது.

அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில் தென்னிலங்கையில் ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள் | Politicians Gathered In On Table

சமகால அநுர அரசாங்கம் முன்னாள் அரசாங்கத்தின் போது பல்வேறு ஊழல் மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறானவர்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும், அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சருடன் மிகவும் சுமூகமான நட்புறவை வெளிப்படுத்தியிருந்தமை குறித்து பலரின் அவதானமும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்ப பார்க்கப் போனால்....உந்த கைது பிணையெல்லாம் ....கல்லுக்குத்தி விளையாட்டுப் போலதான்..கிடக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.