Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்?

பெர்ப்ளெக்சிட்டி, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்னை தமிழர், கூகுளுக்கு சவால் விட்ட தமிழர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்ளெக்சிட்டி இணை நிறுவனர்

கட்டுரை தகவல்

  • சங்கரநாராயணன் சுடலை

  • பிபிசி தமிழ்

  • 4 அக்டோபர் 2025, 08:07 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.)

நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு குறித்த தகவலை கூகுளில் எப்பொழுதாவது தேடியிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட ஒரு தேடலில்தான், நாம் எளிதானது என நினைக்கும் இணையத் தேடல் மிகவும் சிக்கலானது என்பதை புரிந்து கொண்டுள்ளார் ஒரு இளைஞர். இவர்தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கே சவால் விடும் துணிச்சலுடன் வளர்ந்துள்ள, சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.

பொதுவாகவே கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பர வருவாயை பெரிதும் சார்ந்துள்ளன. ஆனால் தான் தொடங்கியிருக்கும் பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) சரியான இணையதளங்களிலிருந்து தரவுகளை தொகுத்து தருவதோடு, இவற்றுக்கான உண்மையான இணைப்புகளையும் தருவதாக நம்புகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இவர் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர்.

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மற்ற ஏஐ தொழில்நுட்பங்களிலிருந்து தனது பெர்ப்ளெக்சிட்டி எவ்வாறு தனித்துவமானது என்பதை விளக்கியுள்ளார்.

"லார்ஜ் லேங்வேஜ் மாடல் என்று அழைக்கப்படும் மற்ற ஏஐ தொழில்நுட்பங்கள், தாங்களாக சிந்தித்து வாடிக்கையாளருக்கு திருப்தி அளிக்கும் முடிவை வழங்க முயற்சிக்கின்றன. இந்த முடிவுகளுக்கான ஆதாரத்தை வழங்குவதில்லை. மாறாக பெர்ப்ளெக்சிட்டி ஆதார இணையதளங்களையும் சேர்த்து வழங்கும்" என்று அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் இளம் பில்லியனர்

பெர்ப்ளெக்சிட்டி, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்னை தமிழர், கூகுளுக்கு சவால் விட்ட தமிழர்

பட மூலாதாரம், Getty Images

2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், இணையத்தை வசப்படுத்தத் தொடங்கிய நேரத்தில் சென்னையில் கணினி குறித்த கனவுகளோடு வளர்ந்த சிறுவன்தான் அரவிந்த். இன்று 31 வயதேயாகும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியாவின் புதிய இளம் பில்லியனராக வளர்ந்துள்ளார்.

M3M Hurun India Rich List 2025 தரவுகளின் படி, இவரது சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய். இது மட்டுமல்ல, கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான குரோம் பிரவுசரை விலைக்கு கேட்கும் துணிச்சலும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்-க்கு இருக்கிறது. குரோம் பிரவுசரை விலைக்கு விற்கும் நிலையில் கூகுள் நிறுவனம் இல்லை என்றாலும் தமது ஏஐ அடிப்படையிலான கோமட் (Comet) பிரவுசர், குரோமுக்கு கடுமையான சவாலை அளிக்கும் என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நம்புகிறார்.

இது பற்றி குறிப்பிடும் அரவிந்த், "நீங்கள் யார், எங்கிருந்து தேடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, மாறாக உங்களின் கேள்வி என்ன என்பது தான் எங்களுக்கு முக்கியம்" என கூறுகிறார். கூகுள் டீப் மைண்ட் மற்றும் ஓபன் ஏஐ ஆகியவற்றில் பணிபுரிந்த பின்னர், இவற்றில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, இதற்கான தீர்வாக பெர்ப்ளெக்சிட்டி மற்றும் கோமட்-ஐ முன்வைக்கிறார் அரவிந்த்.

முனைவர் பட்டம் பெற்ற சாதனையாளர்

பெர்ப்ளெக்சிட்டி, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்னை தமிழர், கூகுளுக்கு சவால் விட்ட தமிழர்

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரீனிவாஸின் பயணம் சென்னையில் மற்ற சராசரி மாணவர்களைப் போலவே தொடங்கியது. இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸில் படிக்க வேண்டும் என்ற தாயின் கனவால் ஊக்குவிக்கப்பட்ட அவர், மின் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்கிய பலரும் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என நகைச்சுவையாக குறிப்பிடும் ஸ்ரீனிவாஸ் பிரபலமான TED Talk நிகழ்வில் பங்கேற்ற போது, "நான் ஒரு கல்வியாளர் என்று நீங்கள் சொல்லலாம்" என்று கூறினார். தனது கல்விப் பின்னணி, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றியும், நிஜ உலகப் பிரச்னைகளைத் தீர்க்க அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியுயும் ஆழமாகப் புரிந்துகொள்ள தமக்கு உதவுவதாக ஸ்ரீனிவாஸ் நம்புகிறார்.

பெர்ப்ளெக்சிட்டியை வேறுபடுத்துவது எது?

பெர்ப்ளெக்சிட்டி, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்னை தமிழர், கூகுளுக்கு சவால் விட்ட தமிழர்

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் பெர்ப்ளெக்சிட்டியில் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, அது இணையத்தில் நிகழ்நேரத்தில் தேடுகிறது, செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற நம்பகமான தளங்களிலிருந்து தகவல்களைக் கண்டறிந்து, பின்னர் அதை எளிமையான, படிக்க எளிதான பதிலாகக் குறைக்கிறது. கூடுதலாக, இது அசல் இணையதளங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியது, எனவே உண்மைகளை நீங்களே சரிபார்க்கலாம்.

பொதுவாக ஏஐ பொறிகள் தகவலை யூகிக்கின்றன அல்லது உருவாக்குகின்றன(Hallucination). இதற்கு பதிலாக, பெர்ப்ளெக்சிட்டி சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை கவனமாக சுருக்கமாகக் கூறுகிறது.

"பெர்ப்ளெக்சிட்டியில் உள்ள ஒவ்வொரு பதிலும் மேற்கோள்கள் வடிவில் இணையத்திலிருந்து ஆதாரங்களுடன் வருகின்றன. சிறப்பான அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க உங்களை பெர்ப்ளெக்சிட்டி அனுமதிக்கிறது." என்று ஸ்ரீனிவாஸ் தனது TED Talk இல் கூறினார். இதன் பொருள் நீங்கள் ஒரு பதிலைப் பெறும்போது, தகவல் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம், இது நம்பிக்கையை அதிகரிக்கிறது, மேலும் தகவல்களை அறிய உங்களை ஊக்குவிக்கிறது.

இது ஒரு பெரிய மாற்றமாகும், ஏனெனில் பல ஏஐ கருவிகள் தகவல்களை எங்கிருந்து பெற்றன என்பதை விளக்காமல் பதில்களை மட்டுமே தருகின்றன.

கூகுளுக்கு சவால் விட காரணம் இதுதான்!

2022 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) வேகமாக வளர்ந்துள்ளது. இந்த சேவை இப்போது ஒவ்வொரு மாதமும் 780 மில்லியனுக்கும் அதிகமான தேடல்களைக் கையாளுகிறது. (https://www.perplexity.ai/help-center/en/articles/10352155-what-is-perplexity) இந்தியாவைப் பொறுத்தவரையிலும், பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மக்களை சென்றடைய முயற்சிக்கிறது.

கூகுளுடன் போட்டியிடுவதில் உள்ள சவால்கள் குறித்து ஸ்ரீனிவாஸ் வெளிப்படையாகப் பேசினார், குறிப்பாக விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் கூகுள் பல பில்லியன்களை சம்பாதிக்கிறது. "அவர்கள் ஏன் Google.com ஐ பெர்ப்ளெக்சிட்டி போல மாற்றக்கூடாது? ஏனென்றால், அப்படி செய்தால் அவர்கள் விளம்பரங்களிலிருந்து வரும் அனைத்து பணத்தையும் இழப்பார்கள்," என்று அவர் ப்ளூம்பெர்க் (Bloomberg) நேர்காணலில் கூறினார். இது தான் கூகுள் குரோமை விலைக்கு கேட்கும் துணிச்சலையும் ஸ்ரீனிவாஸ்க்கு கொடுக்கிறது.

பெர்ப்ளெக்சிட்டி போன்ற ஏஐ-க்கள் மனித ஆர்வத்தை ஊக்குவிக்கும், கற்றலை விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் என்று அவர் நம்புகிறார்.

"ஒவ்வொரு பதிலும் புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கிறது, ஏஐ அவற்றை முன்பை விட சிறப்பாகவும் வேகமாகவும் கேட்க உதவுகிறது."

(TED Talk மற்றும் ப்ளூம்பெர்க் டி.வி.யில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பகிர்ந்த தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y8zvpyedro

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் புயல் கிளப்பும் Perplexity-ன் 'Comet AI முகவர் உலவி'

Perplexity நிறுவனத்தின் AI முகவர் உலவி (Agentic browser) ஆன Comet தற்போது இணைய உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இத்தனை நாட்களாக Perplexity Pro பயனர்களுக்கு, அதுவும் அழைப்பின் (invitation) அடிப்படையில் மட்டுமே கிடைத்துவந்த இந்த உலவி (browser), இப்போது அனைத்து இணையப் பயனர்களுக்கும் பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது.

நான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த Comet AI முகவர் உலவி-ஐ எனது முன்மைக் உலவி (default browser) ஆகப் பயன்படுத்தி வருகிறேன். இந்த முற்றிலும் புதிய அனுபவத்தை நான் வெகுவாக ரசித்து வருகிறேன்.

செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் தானியக்கம் (AI-driven automation), சூழலுக்கேற்ற தேடல் (contextual search), மற்றும் அறிவார்ந்த பணிப்பாய்வுக் கருவிகள் (intelligent workflow tools) ஆகியவற்றின் உதவியுடன், வெவ்வேறு வகையான பயனர்களின் தேவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட பல்துறைத் திறன்களை (versatile capabilities) இந்த Comet AI முகவர் உலவி வழங்குகிறது.

ஒவ்வொரு பிரிவினரும் இந்த Comet AI உலவி-ஐப் பயன்படுத்தக்கூடிய எளிமையான ஐந்து வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1. Common User:

• முகவர் பணிப்பாய்வுகள் (agentic workflows)-ஐப் பயன்படுத்தி, கட்டணம் செலுத்துதல் (bill payments), பொருட்களை வாங்குதல் (shopping), அல்லது பதிவுகள் (bookings) போன்ற அன்றாட ஆன்லைன் வேலைகளை தானியங்குதல் (automating) செய்தல்.

• AI சக்தியூட்டப்பட்ட சுருக்கங்கள் மூலம், செய்திகள், பொழுதுபோக்கு, சமையல் குறிப்புகள், மற்றும் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது போன்ற இணையத் தேடல்களை எளிமைப்படுத்துதல்.

• தனிப்பட்ட திட்ட அட்டவணைகள் (schedules), நினைவூட்டல்கள் (reminders), மற்றும் செய்ய வேண்டிய பட்டியல்களை (to-do lists) உலவிக்குள்ளேயே நிர்வகித்தல்.

• அறிவார்ந்த வகைப்படுத்தல் (smart categorization) மூலம் புக்மார்க்குகள், கட்டுரைகள் (articles), மற்றும் குறிப்புகள் (notes) ஆகியவற்றைத் தடையின்றி ஒழுங்கமைத்தல்.

• AI பரிந்துரைகள் வாயிலாக, திரைப்படங்கள், இசை, மற்றும் உள்ளூர் நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெறுதல்.

2. தொழில் வல்லுநர்கள் (Professionals)

• ஆராய்ச்சியைத் தானியங்குதல்:

அலுவலக திட்டங்களுக்காகத் (projects) தேவையான பொருத்தமான அறிக்கைகள் (reports), கட்டுரைகள், தரவுகள் (data) அல்லது ஆவணங்கள் (documentation) போன்றவற்றைத் திறம்படச் சேகரித்தல்.

• உருவாக்கும் AI எழுத்து உதவியாளர்களின் (generative AI writing assistants) உதவியுடன் மின்னஞ்சல்கள், திட்ட முன்மொழிவுகள் (proposals), மற்றும் விளக்கவுரைகள் (presentations) ஆகியவற்றைத் தயாரித்தல்.

• உலவிப் பணிகளை அட்டவணைகள் (calendars), பணி மேலாண்மை மென்பொருட்கள் (task managers), மற்றும் திட்ட மேலாண்மைத் தளங்கள் (project management platforms) போன்ற கருவிகளுடன் ஒருங்கிணைத்தல் (integrating).

• பல்வேறு மூலங்களில் இருந்து தொழில்சார் கற்றல் வளங்களையும், தொழில் துறைப் புதுப்பிப்புகளையும் ஒரே முகப்புப் பலகையில் (dashboard) தொகுத்து வைத்தல்.

• மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிர்வாகப் பணிகளை (admin duties) (எ.கா: தரவு உள்ளீடு, சந்திப்புத் திட்டமிடல்) நெறிப்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை (productivity) மேம்படுத்துதல்.

3. வணிகர்கள் (Business People)

• சந்தைப் புதுப்பிப்புகள் மற்றும் போட்டியாளர்களின் நகர்வுகளுக்காக இணையதளங்களைத் தானாகவே கண்காணிப்பதன் மூலம் போட்டி பகுப்பாய்வை (competitive analysis) நடத்துதல்.

• அறிவார்ந்த முகவர் பணிப்பாய்வுகள் வழியாக முன்னணிகளை உருவாக்குதல் (lead generation) மற்றும் வாடிக்கையாளர் ஆய்வு (client research) ஆகியவற்றைத் தானியங்குதல்.

• விற்பனை முயற்சிகளை (sales outreach) நெறிப்படுத்துதல்—தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல்கள் அல்லது தொடர்புகளைத் தயாரித்தல் மற்றும் அனுப்புதல்.

• தொழில் செய்திகள், போக்குகள், மற்றும் அரசாங்க விதிமுறைகளை உண்மையான நேரத்தில் (real-time) கண்காணித்தல்.

• AI-யால் இயக்கப்படும் அமைப்பு மற்றும் மாதிரி அடிப்படையிலான பரிந்துரைகள் (model-based recommendations) உதவியுடன் நிதிச் சுருக்கங்கள், ரசீதுகள் (invoices), மற்றும் ஒப்பந்தங்கள் (contracts) ஆகியவற்றை நிர்வகித்தல்.

4. தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் (IT Industry Workers)

• மென்பொருள் உருவாக்குநர்களுக்கான ஆதாரங்கள் (developer resources) அனைத்திலும் குறியீடு தேடல்கள் (code searches), ஆவணத் தேடல் (documentation lookup), மற்றும் பிழை கண்காணிப்பு (bug tracking) ஆகியவற்றைத் தானியங்குதல்.

உலவியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முகவர் செயல்பாடுகளை (browser-integrated agentic actions)ப் பயன்படுத்தி சோதனை (testing) மற்றும் வெளியீட்டுப் படிகளை (deployment steps) நெறிப்படுத்துதல்.

• AI சக்தியூட்டப்பட்ட உரையாடிகள் (chatbots) மற்றும் பணிப்பாய்வுக் கருவிகளை மென்பொருள் உருவாக்கத் தளங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தொலைதூர ஒத்துழைப்பை (remote collaboration) நிர்வகித்தல்.

• அமைப்பின் இயக்க நேரம் (system uptime), பாதுகாப்பு எச்சரிக்கைகள், மற்றும் செயல்திறன் முகப்புப் பலகைகள் (performance dashboards) ஆகியவற்றை உலவிக்குள்ளேயே கண்காணித்தல்.

• தனிப்பட்ட அல்லது குழுவின் பொருத்தத்தின் அடிப்படையில் தொழில்நுட்பப் புதுப்பிப்புகள், திருத்தக் குறிப்புகள் (patch notes), மற்றும் பயிற்சிகளை (tutorials) தொகுத்தல்.

5. மூத்த குடிமக்கள் (Senior Citizens)

• தேடல்கள், கேள்விகள், அல்லது செய்திகள் ஆகியவற்றுக்கு, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முகவர் சுருக்கங்கள் மூலம் விளக்கங்களைப் பெறுதல்.

• ஆன்லைன் கட்டணங்கள் செலுத்துதல், பயன்பாட்டுச் சேவைகளைப் புதுப்பித்தல், அல்லது உடல்நலன், மருத்துவச் சந்திப்புகளைத் திட்டமிடுதல் ஆகியவற்றைத் தானியங்குதல்.

• மருந்து நினைவூட்டல்கள், பொருட்கள் வாங்க வேண்டிய பட்டியல்கள் (shopping lists), அல்லது நிகழ்வு அறிவிப்புகள் அமைப்பதன் மூலம் நினைவாற்றல் மற்றும் அமைப்புக்கு உதவுதல்.

• உடல்நலன் குறிப்புகள், பொழுதுபோக்கு, மற்றும் உள்ளூர் சமூக நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளைப் பெறுதல்.

• ஒருங்கிணைந்த செய்திப் பரிமாற்றம் (integrated messaging) மற்றும் காணொளி அழைப்புக் கருவிகள் (video-calling tools) மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்வதை எளிதாக்குதல்.

ஒவ்வொரு பிரிவினரும் Comet-ன் AI-யால் இயக்கப்படும் முகவர் பணிப்பாய்வுகள் மூலம் பலன் பெறுகிறார்கள். இது இந்த உலவியை பல்வேறு பயனர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு துடிப்பான உற்பத்தித்திறன் தளமாக (dynamic productivity platform) மாற்றுகிறது.

556853769_10162956913206698_359877256496

https://www.facebook.com/story.php?story_fbid=10162956954806698&id=565071697&post_id=565071697_10162956954806698&rdid=XWSp9Jjwb5Yb1SX7#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.