Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

காலி - பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmgonwccm00yjqplpn4ia8856

https://www.facebook.com/reel/1324971306092243

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலசலக்குழியில் வெடிப்பு சம்பவம் ஏன்??

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் October 14, 2025

இலங்கையில், கல்சியம் கார்பைட் என்ற இரசாயனப்பொருள் பெரும்பாலும் மலசல கூட மற்றும் சமையலறைக்  கழிவு குழாய்களில் ஏற்படும் அடைபாடுகளை நீக்க பயன்படுகிறது. துயர சம்பவம் நடந்த பகுதி, கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. ஆனால் கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட்ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். ஒரு சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.

img-20251013-wa00041.jpg?w=576

12/10/2025 இல் நடந்த சம்பவம்

image-7.png?w=899

2020 இல் நடந்த சம்பவம்

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும், இவ்வாயுவானது மிக எளிதாக தீப்பற்றி எரியும் தன்மையுடையது மற்றும் இவ் இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது. இங்கு மலசலக்கழிவுத்தொட்டியானது ஓர் இறுக்கமான மூடிய அறை ஆகும். இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு (Blast) சம்பவம் நிகழலாம்.

image-5.png?w=975

112.jpg?w=123

இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பலவீடுகளில் அடிக்கடி  நடைபெறுகின்றது. இந்த நிலையில் இவ்வாறு ஏற்படும் அடைப்புக்களை கார்பைட் பாவித்து எடுக்க முயற்சிக்க கூடாது. மாறாக வேறு பின்வரும் வழிமுறைகளில் ஒன்றினை கைக்கொள்வதன் மூலம் தேவையற்ற உயிரிழப்புக்களை தடுத்து கொள்ளலாம்

1. டிஷ் சோப்பும் வெந்நீரும்

கழிப்பறை காகிதம் அல்லது மலக் கழிவுகளால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க இது உதவும். செய்முறை,  அரைக்கட்டி  அளவு டிஷ் சோப்பை டாய்லெட் பேசினில் போடவும் பிற்பாடு ஒரு வாளி நீரில், சூடான, ஆனால் கொதிக்காத (போர்சிலின் உடையாமல் இருக்க) நீரை எடுத்துக் கொள்ளவும். அதை இடுப்பு உயரத்திலிருந்து டாய்லெட் பேசினில் ஊற்றவும். இந்த கலவையை 15–30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். சோப் அடைப்பை இளக்கிவிடும். பிறகு, தண்ணீர் ஊற்றி  ஃபிளஷ் செய்யவும்.

2. பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையின் இரசாயனத்தாக்கம் ஆபத்தில்லாத காபனீர்ஓட்ஸைட் வாயுவினை உருவாக்கும், இது அடைப்புகளை உடைக்க உதவும். செய்முறை,  ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட் பேசினில்  ஊற்றவும். பிறகு, இரண்டு கப் வெள்ளை வினிகரை மெதுவாக ஊற்றவும். நுரைக்க 30–60 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர், டாய்லெட்டை ஃபிளஷ் செய்யவும்.

3. பிளன்கர்  (Plunger) முறை

சாதாரண அடைப்புகளுக்கு, பிளன்கர் மிகவும் பயனுள்ள கருவியாகும். செய்முறை,  பிளன்கரின் ரப்பர் முனை முழுவதுமாக நீரில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், கூடுதல் நீரை ஊற்றலாம். பிளஞ்ச் செய்யுங்கள். பிளன்கரைக் கொண்டு, பம்ப் செய்வது போல, அழுத்தி மேலும் கீழும் வேகமாகக் குலுக்கவும். இதை 15 முதல் 20 வினாடிகள் செய்யுங்கள். அடைப்பு நீங்கிவிட்டதா என்பதைச் சோதிக்க, பிளன்கரை அகற்றிவிட்டு, தண்ணீர் வடியும் வேகத்தைப் பார்க்கவும்.

image-4.png?w=975

4. விசேடமாக வடிவமைக்கப்பட்ட கம்பிகளை கொண்டு சீர்செய்யும் முறை (Flexible grabber claw)

image-6.png?w=975

மேற்குறிய முறைகளில் அடைப்பு எடுபடவிட்டால் அடைப்பு மிகவும் கடுமையானதாக இருந்தால், நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க வேண்டியிருக்கலாம். அடைப்பை நீக்கும் முன், டாய்லெட் பேசினில்  தண்ணீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க, ஃபிளஷ் செய்ய வேண்டாம்

நன்றி

https://tamilforensic.wordpress.com/2025/10/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?fbclid=IwVERDUANgJHtleHRuA2FlbQIxMAABHmTVDgNJaTM4KzcFX9t5uWlkPBMD3zlpr5GSgr23YVekpxZ6qKchEvPfRvbY_aem_YQgQfifOdNkqslhk4k2L3w

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.