Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது

12 Nov, 2025 | 01:04 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1111_wanindu_hasaranga.png

ஆறு வீரர்கள் 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் வனிந்து   ஹசரங்கவைத் தவிர மற்றையவர்களால் பெரிய எண்ணிக்கைகளைப் பெற முடியாமல் போனது. அது இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மத்திய வரிசையில் தனித்து போராடிய வனிந்து ஹசரங்க அரைச் சதம் குவித்த போதிலும் அவரால் இலங்கையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.

பெத்தும் நிஸ்ஸன்க, அறிமுக வீரர் ஆகிய இருவரும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

1111_kamil_mishara.png

ஆனால்,காமில் மிஷார (38), பெத்தும் நிஸ்ஸன்க (29), குசல் மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஆட்டம் கண்டது. (90 - 3 விக்.)

அந்த மூவரையும் ஹரிஸ் ரவூப் ஆட்டம் இழக்கச் செய்தார்.

அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர்.

சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சரித் அசலன்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் வெளியேறினார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த துஷ்மன்த சமீர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து போராடிய வனிந்து ஹசரங்க 49ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 279 ஓட்டங்களாக இருந்தபோது 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1111_haris_rauf_3_quick_wkts.png

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது.

சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1111_salman_agah.png

ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது.

அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம்  பெற்றிருந்த பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

1111_hussain_talat.png

அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: சல்மான் அகா

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/230131

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ‌மான‌ தோல்வி கிடையாது முத‌லாவ‌து ஒரு நாள் போட்டி

வெற்றிக்கு அருகில் வ‌ந்து கோட்டை விட்ட‌வை..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான் அரைச் சதங்கள் குவிப்பு, இலங்கையுடனான தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் 

Published By: Vishnu 15 Nov, 2025 | 02:31 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஸமான் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

பக்கார் ஸமான், மொஹம்மத் ரிஸ்வான் ஆகியோரும் அரைச் சதங்கள் குவித்து இந்த வெற்றியில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க  இப்போதைக்கு 2 - 0 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் முன்வரிசை வீரர்கள் அனைவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.

பக்கார் ஸமான், சய்ம் அயூப் ஆகிய இருவரும் 58 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அயூப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து களம் புகுந்த முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 2ஆவது விக்கெட்டில் பக்கார் ஸமானுடன் 100 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் மற்றொரு முன்னாள் தலைவர் மொஹம்மத் ரிஸ்வானுடன் 122 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தார்.

1411_fakar_zaman___pak_vs_sl_2nd_odi.png

பக்கார் ஸமான் 78 ஓட்டங்;களையும் பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் போன்றே முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத நிலையில் மத்திய வரிசை வீரர்கள் நால்வர் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதன் பலனாக இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

1411_janith_liyanage_sl_vs_pak_2nd_odi.p

ஜனித் லியனகே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி இருந்தார்.

பவர் ப்ளேயில் பெத்தும் நிஸ்ஸன்கவும் காமில் மிஷாரவும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்துகொடுத்தனர்.

ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க (24), காமில் மிஷார (27), குசல் மெண்டிஸ் (20),  அணித் தலைவர்  சரித் அசலன்க ஆகியோர் (7) சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (98 - 4 விக்.)

1411_sadeera_samarawickrama_sl_vs_pak_2n

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் ஜனித் லியனகேவும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உயிர்கொடுத்தனர்.

சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

ஆனால், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும்   பெற்று  9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். 

வனிந்து ஹசரங்க  37 ஓட்டங்களுடனும் ப்ரமோத் மதுஷான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 9 ஆவது விக்கெட்டில் 44 ஒட்டங்களைப் பகிர்ந்;தனர்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பாபர் அஸாம்

https://www.virakesari.lk/article/230390

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசலங்க, வனிந்து வெளியேற்றம்; குசல் மெந்திஸ் இன்று தலைவர்!

Nov 16, 2025 - 12:59 PM

அசலங்க, வனிந்து வெளியேற்றம்; குசல் மெந்திஸ் இன்று தலைவர்!

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

காய்ச்சல் காரணமாக அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார். 

மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmi1eajl801nlo29no5yibreb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வெற்றிகொண்ட பாகிஸ்தான் தொடரை முழுமையாக (3 - 0) கைப்பற்றியது

Published By: Vishnu

17 Nov, 2025 | 12:23 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாக கைப்பற்றியது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் ஈட்டிய மூன்றாவது முழுமையான வெற்றி இதுவாகும்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 44.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஹசீபுல்லா கான் 4ஆவது ஓவரில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (8 - 1 விக்.)

1611_fakar_zaman_pak_vs_sl_3rd_odi.png

எனினும், பக்கார் ஸமான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர்.

பக்கார் ஸமான் 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் மேலும் இரண்டு விக்கெட்கள் சிரான இடைவெளியில் சரிந்தன.

பாபர் அஸாம் 34 ஒட்டங்களையும் சல்மான் அகா 6 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் மொஹம்மத் ரிஸ்வான், ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை இலகுவாக வெற்றியீட்ட உதவினர்.

1611_mhd_rizwan_pak_vs_sl_3rd_odi.png

மொஹமத் ரிஸ்வான் 61 ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்தவீச்சில் ஜெவ்றி வெண்டசே 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார ஆகிய இருவரும் இந்தப் போட்டியிலும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும், அதன் பின்னர் இலங்கை அணியினால் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்த முடியாமல் போனது.

sadeera.jpg

துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் அறிமுக வீரர் பவன் ரத்நாயக்க 32 ஓட்டங்களையும் காமில் மிஷார 29 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் வசிம் (கனிஷ்ட) 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பைசால் அக்ரம் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்:  மொஹம்மத் வசிம் (கனிஷ்ட)

தொடர்நாயகன்: ஹரிஸ் ரவூப்

https://www.virakesari.lk/article/230524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

Nov 18, 2025 - 01:56 PM

இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வனிந்து ஹசரங்கவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த முத்தரப்பு தொடரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmi4b80oa01qqo29n1uakqsyu

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.