Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா  வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் 

Published By: Digital Desk 3

23 Nov, 2025 | 11:47 AM

image

(நெவில் அன்தனி)

பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது.

மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக்.) அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.

2211_travis_head.png

2211_mitchell_starc.png

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தால் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு, செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இங்கிலாந்துடான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஒதுக்கியிருந்தது. ஆனால், குறுகிய டெஸ்ட் போட்டிகள் கருப்பொருளாக மாறினால் அது மிகவும் கடினமான சூழலை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டி 2 நாட்களில் முடிவடைந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு 3ஆம், 4ஆம் நாட்களில் கிடைக்கவிருந்த 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் இல்லாமல் போய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாளன்று 19 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2211_ben_stokes.png

பென் ஸ்டோக்ஸ் திறமையாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார்.

இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலதிகமாக 9 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டை இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 164 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களுக்குள் வெற்றி அடையச் செய்தார்.

ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம்  இழந்து  172 (ஹெரி ப்றூக் 52, ஒலி போப் 46, ஜமி ஸ்மித் 33, மிச்செல் ஸ்டார்க் 58 - 7 விக்., ப்றெண்டன் டொகெட் 27 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (அலெக்ஸ் கேரி 26, கெமரன் க்றீன் 24, ட்ரவிஸ் ஹெட் 21, பென் ஸ்டோக்ஸ் 23 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 45 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 11 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (கஸ் அட்கின்சன் 37, ஒலி போப் 33, பென் டக்கட் 28, ப்றைடன் கெயார் 20, ஸ்கொட் போலண்ட் 33 - 4 விக்., ப்றெண்ட்ன் டொகெட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 55 - 3 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 205 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 205 - 2 விக். (ட்ரவிஸ் 123, மானுஸ் லபுஷேன் 51 ஆ.இ., ஜேக் வெதரோல்ட் 23, ப்றைடன் கெயார் 44 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/231189

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு அவுஸ்திரேலியா துணிச்சலான பதில்

05 Dec, 2025 | 11:21 PM

image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 334 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 376 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அவுஸ்திரேலியா சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவருமே திறமையை வெளிப்படுத்தியதுடன் அவர்களில் மூவர் அரைச் சதங்கள் குவித்தனர்.

அத்துடன் முதல் நான்கு விக்கெட்களில் பதிவான 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை பலப்படுத்தின.

ட்ரவிஸ் ஹெட் (33), ஜேக் வெதரோல்ட் ஆகிய இருவரும் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜேக் வெதரோல்ட் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் மானுஸ் லபுஷேன் (65), ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இதனை அடுத்து ஸ்டீவன் ஸ்மித் (61), கெமரன் க்றீன் (45) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ஜொஷ் இங்லிஸ் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆட்ட நேர முடிவில் அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மைக்கல் நேசர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 113 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

ஜோ ரூட்டும் இழந்த ஜொவ்ரா ஆச்சரும் கடைசி விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜொவ்ரா ஆச்சர் 38 ஓட்டங்ளைப் பெற்றதுடன் ஜோ ரூட் 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

0512_jake_wetherald.png

0512_steven_smith.png

https://www.virakesari.lk/article/232574

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுடனான 2ஆவது ஆஷஸ் டெஸ்டில் மோசமான நிலையில் இங்கிலாந்து

07 Dec, 2025 | 06:31 AM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியாவை விட 177 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இங்கிலாந்து, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு இங்கிலாந்து மேலும் 43 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸக் க்ரோவ்லி 44 ஓட்டங்களையும் ஒல்லி போப் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. முதல் இன்னிங்ஸ் ஹீரோ ஜோ ரூட் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

0612_michael_neser.png

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக், மைக்கல் நேசர், ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (06) தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 378 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா மொத்த எண்ணிக்கை 511 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

அலெக்ஸ் கேரி தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களைப் பெற்றதுடன் மைக்கல் நேசருடன் 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

0612_mitchel_starc.png

0612_alex_carey.png

மிச்செல் ஸ்டாக் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 141 பந்துகளை எதிர்கொண்டு  13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார்.

மிச்செல் ஸ்டாக், ஸ்கொட் போலண்ட் (21 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
https://www.virakesari.lk/article/232635

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் முடிவுகட்டினார் நேசர்; ஆஷஸ் தொடரில் 2 - 0 என ஆஸி. முன்னிலை

Published By: Vishnu 07 Dec, 2025 | 08:36 PM

image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இங்கிலாந்தின் கடும் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் மைக்கல் நேசர் முடிவுகட்ட, 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா அந்த இரண்டு டெஸ்ட்களையும் மொத்தமாக ஆறு நாட்களுக்குள் நிறைவுசெய்து வெற்றியீட்டியது.

முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களுக்குள் நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்ததுடன் அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு அற்புதமாக இருந்தது.

அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டிருந்தது. இதுவும் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 37 ஓவர்கள் தாக்குப் பிடித்து 7ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர்.

0712_ben_stokes.png

ஆனால், அவர்கள் இருவரையும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மைக்கல் நேசர் ஆட்டம் இழக்கச் செய்ய இங்கிலாந்தின் தோல்வி நெருங்கியது.

பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மைக்கல் நெசர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கோட் போலண்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வெற்றிக்கு 65 ஓட்டங்கள் தேவைப்பட இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ட்ரவிஸ் ஹெட் 22 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 23 ஓட்டங்களுடனும், ஜேக் வெதரோல்ட் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 334 (ஜோ ரூட் 138, ஸக் குரோவ்லி 76, ஜொவ் ஆச்சர் 38, ஹெரி ப்றூக் 31, மிச்செல் ஸ்டாக் 75 - 6 விக்.)

அவுஸ்திரேலியா 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 511 (மிச்செல் ஸ்டாக் 77, ஜேக் வெதரோல்ட் 72, மானுஸ் லபுஸ்ஷேன் 65, அலெக்ஸ் கேரி 63, ஸ்டீவ் ஸ்மித் 61, கெமரன் க்றீன் 45, ப்றைடன் கார்ஸ் 152 - 4 விக்., பென் ஸ்டோக்ஸ் 113 - 3 விக்.)

இங்கிலாந்து 2வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 241 (பென் ஸ்டோக்ஸ் 50, ஸக் க்ரோவ்லி 44, வில் ஜெக்ஸ் 41, ஒல்லி போப் 26, மைக்கல் நேசர் 42 - 5 விக்., ஸ்கொட் போலண்ட் 47 - விக்., மிச்செல் ஸ்டாக் 64 - 2 விக்.)

அவுஸ்திரேலியா - வெற்றி இலக்கு 65 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 69 - 2 விக். (ஸ்டீவன் ஸ்மித் 23 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 22, ஜேக் வெதரோல்ட் 17 ஆ.இ., கஸ் அட்கின்சன் 37 - 2 விக்.)

ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக்

https://www.virakesari.lk/article/232717

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட 3 ஆவது ஆஷஸ் போட்டியில் அலெக்ஸ் கேரி அபார சதம்

17 Dec, 2025 | 05:19 PM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கிழக்காக அமைந்துள்ள பொண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 15 பேருக்கு கௌரவஞ்சலி செலுத்தும் முகமாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

1712_aus_paid_respect_to_the_victims_of_

அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  புதன்கிழமை (17) காலை ஆரம்பமாவதற்கு முன்னர் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வீரர்கள், மத்தியஸ்தர்கள், பார்வையாளர்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இரண்டு அணிகளினதும் வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.

இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்டீவன் ஸ்மித் விலகிக்கொண்டார்.

தலைச்சுற்று, குமுட்டல் காரணமாக நாணய சுழற்சிக்கு சற்று முன்னர் ஸ்டீவன் ஸ்மித் விலகிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாக விளையாடும் பதினொருவர் அணியில் உஸ்மான் கவாஜா இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இன்று ஆரம்பமான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ட்ரவிஸ் ஹெட் (10), ஜேக் வெதரோல்ட் (18), மானுஸ் லபுஸ்ஷேன் (19) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

ஐபிஎல் ஏல வரலாற்றில் சாதனைமிகு 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் வாங்கப்பட்ட கெமரன் கிறீன் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எனினும் அணிக்கு மீளழைக்கப்பட்ட உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார். உஸ்மான் கவாஜா 82 ஓட்டங்களைப் பெற்றார்.

1712_usman_kawaja.png

தொடர்ந்து ஜொஷ் இங்லிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 59 ஓட்டங்களை கேரி பகிர்ந்தார்.

ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அணியில் இணைந்த அணித் தலைவர் பெட் கமின்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். (271 - 7 விக்.)

1712_alex_carey.png

இந் நிலையில் அலெக்ஸ் கேரி 8ஆவது விக்கெட்டில் மிச்செல் ஸ்டார்க்குடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

அலெக்ஸ் கேரி   143 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார்.

மிச்செல் ஸ்டார்க் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/233663

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா

18 Dec, 2025 | 03:55 PM

image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் போராடி வருகின்ற போதிலும் இங்கிலாந்து மற்றொரு மோசமான முடிவை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது.

1812_mitchell_starc.png

தனது துடுப்பாட்டத்தை 33 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க்   தனது 13ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவர் 54 ஓட்டங்களைப் பெற்து 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸ்கோட் போலண்ட் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் முதலாம் நாளன்று அலெக்ஸ் கேரி 106 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 92 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜோவ்ரா ஆச்சர் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி தனது நான்காவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

1812_jofra_archer.png

அவரைவிட ப்றைடன் கார்ஸ் 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1812_ben_stokes_and_joffra_archer.png

அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 45 ஓட்டங்களுடனும் ஜொவ்ரா ஆச்சர் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

அவர்களை விட ஹெரி ப்றூக்ஸ் 45 ஓட்டங்களையும் பென் டக்கெட் 29 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் லயன் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/233722

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிட்னியிலும் வெய்யில் 40 பாகை செல்சியஸில் உள்லது இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக மோசமாக விளையாடுவதால் அனைத்து துறை ஆட்டக்காரர்களும் பந்து வீச்சாளர்களும் பெரும் நெருக்கடியினை இந்த அதிக வெய்யிலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3ஆவது ஆஷஸ் டெஸ்டில் பலம்வாய்ந்த நிலையில் அவுஸ்திரேலியா; மற்றொரு தோல்வியை நோக்கி இங்கிலாந்து?

Published By: Vishnu

19 Dec, 2025 | 06:14 PM

image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் அலெக்ஸ் கேரியும் பின்னர் ட்ரவிஸ் ஹெட்டும் குவித்த அபார சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா  356 ஓட்டங்களால் முன்னிலை பெற்று   பலமான நிலையில் இருக்கிறது.

1912_travis_head.png

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முறையே 2 நாட்களிலும் 4 நாட்களிலும் தோல்வி அடைந்த இங்கிலாந்து மற்றொரு தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 371 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 85 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலும் 73 ஓட்டங்களைப் பெற்று கடைசி இரண்டு விக்கெட்களை இழந்தது.

1812_ben_stokes_and_joffra_archer.png

தமது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்தனர்.

அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பென் ஸ்டோக்ஸ் தனது 118ஆவது டெஸ்டில் 37ஆவது அரைச் சதத்தைப் பெற்றதுடன் ஜொவ்ரா ஆர்ச்சர் தனது 18ஆவது டெஸ்டில் கன்னி அரைச் சதத்தைப் பெற்றார்.

1812_jofra_archer.jpg

பென் ஸ்டாக்ஸ் 198 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களையும் ஜொவ்ரா ஆச்சர் 105 பந்துகளை எதிர்கொண்டு  51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத சதம், அலெக்ஸ் கேரி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் பலமான நிலையில் இருக்கிறது.

அலெக்ஸ் கேரி மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ஆஷஸ் தொடரில் இரண்டாவது சதத்தைக் குவித்தார்.

1912_travis_head_coming_drives.png

196 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 142 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த அலெக்ஸ் கேரி இரண்டாவது இன்னிங்ஸில் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

வெள்ள நிவாரண பொருட்கள்

ட்ரவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

அவர்களை விட உஸ்மான் கவாஜா 40 ஓட்டங்களைப் பெற்றார்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிச்செல் ஸ்டாக் 54, ஜொவ்ரா ஆச்சர் 53 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 89 - 2 விக்., வில் ஜெக்ஸ் 105 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 286 (பென் ஸ்டோக்ஸ் 83, ஜொவ்ரா ஆச்சர் 51, ஹெரி ப்றூக் 45, ஸ்கொட் போலண்ட் 45 - 3 விக்., பெட் கமின்ஸ் 69 - 3 விக்., நேதன் லயன் 70 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 271 - 4 விக். (ட்ரவிஸ் ஹெட் 142 ஆ.இ., அலெக்ஸ் கேரி 52 ஆ.இ., உஸ்மான் கவாஜா 40, ஜொஷ் டங் 59 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/233870

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரை இப்போதைக்கு 3 - 0 என சுவீகரித்தது அவுஸ்திரேலியா

21 Dec, 2025 | 12:43 PM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் மீதம் இருக்க இப்போதைக்கு தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா சுவீகரித்துக் கொண்டது.

2112_aus_celebrate.png

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கடும் முயற்சிக்கு பின்னர் போட்டியின் கடைசி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரை 11 நாட்களுக்குள் அவுஸ்திரெலியா வென்றமை விசேட அம்சமாகும்.

பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களிலும் பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி 4 நாட்களிலும் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றவாது டெஸ்ட் போட்டி 5 நாட்களிலும் நிறைவடைந்தன.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 435 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 352 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

2112_jamie_smith_half_century.png

மத்திய வரிசை விரர்களான ஜெமி ஸ்மித், வில் ஜெக்ஸ். ப்றைடன் கார்ஸ் ஆகியோர் இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்க எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் கைகூடாமல் போயின.

அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சுகளும் சிறப்பான  களத்தடுப்புளும் இங்கிலாந்தை தோல்வி அடையச் செய்தன.

ஜெமி ஸ்மித், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் கிட்டத்தட்ட 30 ஓவர்கள் தாக்குப் பிடித்து 91 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

தொடர்ந்து வில் ஜெக்ஸ் ப்றைடன் கார்ஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெல் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதப்படுத்தினர். இந்த மூவரும் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

2112_asexcarey_man_of_the_match.png

இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ஓட்டங்களையும் பெற்றதுடன் முழுப் போட்டியிலும் 6 பிடிகளை எடுத்த அலெக் கேரி ஆட்ட நாயகனானார்.

இந்த டெஸ்ட் போட்டி முடிவுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷப்பில் அவுஸ்திரேலியா இதுவரை விளையாடிய  தனது ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டி 72 புள்ளிகளைப் பெற்று 100 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

2112_icc_wtc_aus_100___win.jpg

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிச்செல் ஸ்டாக் 54, ஜொவ்ரா ஆச்சர் 53 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 89 - 2 விக்., வில் ஜெக்ஸ் 105 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 286 (பென் ஸ்டோக்ஸ் 83, ஜொவ்ரா ஆச்சர் 51, ஹெரி ப்றூக் 45, ஸ்கொட் போலண்ட் 45 - 3 விக்., பெட் கமின்ஸ் 69 - 3 விக்., நேதன் லயன் 70 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 349 (ட்ரவிஸ் ஹெட் 170, அலெக்ஸ் கேரி 72, உஸ்மான் கவாஜா 40, ஜொஷ் டங் 70 - 4 விக்., ப்றைடன் கார்ஸ் 80 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 435 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 352 (ஸக் க்ரோவ்லி 85, ஜெமி ஸ்மித் 60, வில் ஜெக்ஸ் 47, ஜோ ரூட் 39, ப்றைடன் கார்ஸ் 39, ஹெரி ப்றூக் 30, பெட் கமின்ஸ் 48 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 62 - 3 விக்., நேதன் லயன் 77 - 3 விக்.)

https://www.virakesari.lk/article/234001

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ்

ஆர்.முத்துக்குமார்

ஆஷஸ் தொடரை இழந்தது, வீரர்களின் மோசமான ஆட்டம் அதற்கும் மேலாக குடிபோதை பிரச்சினை என்று பென் ஸ்டோக்ஸிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்நிலையில் நாளை மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் தொடங்குகிறது. அணி வீரர்களைப் பாதுகாப்பதா, அல்லது இங்கிலாந்து அணியின் மானத்தை மீட்டெடுப்பதா என்கிற குழப்பத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

களத்தில் இங்கிலாந்து அணியின் ஆட்டம் ஒரு பெருங்கவலை என்றால் களத்திற்கு வெளியே நடத்தை ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வீரர்களின் நூசா கடற்கரை குடிவெறியாட்டமும் இப்போது மக்கள் மத்தியில் இங்கிலாந்து அணியின் மரியாதையை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. மெல்போர்னின் ஒரு லட்சம் ரசிகர்களும் நூஸா குடிபோதை குறித்து இங்கிலாந்து வீரர்களை நிச்சயம் வறுத்தெடுக்கப் போகிறார்கள்.

இந்தக் கவலைகளிடையே 5-0 ஒயிட்வாஷ் வாங்காமல் குறைந்தது 4-1 என்றாவது தொடரை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ் இவையெல்லாம் பற்றி என்ன கூறுகிறார் என்று கேட்போம்: “இப்போது இந்தச் சூழ்நிலையை நான் எப்படிக் கையாளப்போகிறேன் என்பதுதான் என் வாழ்க்கையில் முக்கியமானது. அனைவரது நலமும் முக்கியம் குறிப்பாக கெட்ட பெயர் எடுத்த சில தனிநபர்களையும் காக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்து கேப்டனாக எனக்கு இப்போது பெரிய கடமை காத்திருக்கிறது.

இப்போதுதான் முதல் முறையாக இவ்வாறான பிரச்சனைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை உணர்கிறேன். இங்கிலாந்து கேப்டனாக என் வீரர்களைக் காக்க வேண்டும் என்பது முதற்கடமையாக உள்ளது. இந்த பயணத்தில் இன்னும் சாதிக்க வேண்டிய இலக்கு உள்ளது. திட்டமிட்டபடி எதுவும் செல்லவில்லை.

இன்னும் 2 போட்டிகள் உள்ளன, எங்களிடம் இன்னும் நிறைய முயற்சிகள் ஆற்றல்கள் உள்ளன. என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் மீதமுள்ள இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது செய்ய முடியும். இந்த 2 போட்டிகளை வென்றாக வேண்டும். என் வீரர்களை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்னால் இயன்ற வரையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இப்போது என்னவெனில் வீரர்கள் நான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உணரவைத்தால்தான் இந்த நாட்டுக்காக இந்த 2 போட்டிகளில் செயல்திறனைக் காட்ட முடியும்.” என்றார்.

நிருபர்கள் ஸ்டோக்சிடம் திரும்பத் திரும்ப நூஸா குடிபோதை விவகாரத்தைக் கிளற, ஸ்டோக்ஸ் ஒரே பதிலைத் திரும்பத் திரும்ப அளித்தார், ‘நான் தான் ஏற்கெனவே சொன்னேனே, என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

“களத்தில் அணியை ஒன்று திரட்டி போட்டியை வெற்றி பெறும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதே வேளையில் இது போன்ற தருணங்களில் வீரர்களைக் காப்பதும் என் பொறுப்புதான். அவர்களை இதிலிருந்து விடுவித்து நல்ல மனவெளியை உருவாக்கினால்தான் களத்தில் அவர்களைச் செயல்பட வைக்க முடியும்.

இப்போதைக்கு 3-0 என்று பின் தங்கிய பிறகே நாம் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அது துருவி ஆராயப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பும்போது திரும்பிப் பார்க்கையில் பாசிட்டிவ் ஆக நினைத்துப் பார்க்க ஏதாவது செய்ய வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

https://www.hindutamil.in/news/sports/restoring-the-respect-of-the-england-team-ben-stokes-in-confusion

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்பர்ன் அரங்கில் 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் சரிவு ; இங்கிலாந்தை விட 46 ஓட்டங்களால் ஆஸி. முன்னிலை

26 Dec, 2025 | 03:27 PM

image

(நெவில் அன்தனி)

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 'பொக்சிங் டே' டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த  94,000 ரசிகர்கள் முன்னிலையில்  முதல் நாளன்று 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் 124 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆரம்ப நாளன்று ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் 20 விக்கெட்கள் சரிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இந்த விளையாட்டரங்கில் 1902இல் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப நாளன்று 25 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.

மேலும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 94,119 ரசிகர்கள் ஆரம்ப நாளன்று கண்டுகளித்தனர். 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் கண்டு களித்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

2612_josh_inglis.png

வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம்  பயன்படுத்தப்பட்ட இப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக ஜொஷ் டங் 5 விக்கெட் குவியலையும் அவுஸ்திரேலியா சார்பாக மைக்கல் நேசர் 4 விக்கெட் குவியலையும் பதிவு செய்தனர்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளாலும் 160 ஓட்டங்களை எட்டமுடியாமல் போனது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களும் மீதம் இருக்க அவுஸ்திரேலியா 46 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் மைக்கல் நேசர் அதிகப்பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரும் கெமரன் க்றீனும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 52 ஓட்டங்களே இன்றைய ஆட்டத்தில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

அவுஸ்திரேலியாவின் முதல் 6 விக்கெட்கள் 91 ஓட்டங்களுக்கும் கடைசி 4 விக்கெட்கள் 9 ஓட்டங்களுக்கும் சரிந்தன.

மைக்கல் நேசரைவிட உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட நால்வரும் குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஜொஷ் டங் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

அவரை விட கஸ் அட்கின்சன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 29.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மிச்செல் ஸ்டார்க், மைக்கல் நேசர் ஆகியோரின் பந்துவீச்சுக்களில் திணறிப்போன இங்கிலாந்து அதன் முதல் 4 விக்கெட்களை முதல் 8 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்குள் இழந்தது.

2612_harry_brook.png

ஹெரி ப்றூக், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இங்கிலாந்து சிறிய அளவில் மீட்சி பெற்றது.  

ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன.

ஹெரி ப்றூக் பெற்ற 41 ஓட்டங்களே இரண்டு அணிகளிலும் இன்றைய தினம் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவானது.

அவரை விட கஸ் அட்கின்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (17) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

2612_michael_nesar.png

பந்துவீச்சில் மைக்கல் நேசர் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெமரன் க்றீன் 5 பந்துகளில் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 42 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/234474

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

மெல்பர்ன் அரங்கில் 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் சரிவு ; இங்கிலாந்தை விட 46 ஓட்டங்களால் ஆஸி. முன்னிலை

நத்தாருக்கு அடித்தது முறிய முதலே விளையாட தொடங்கினால் இப்படித் தான் முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.