Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்!

27 Nov, 2025 | 05:28 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நிலவும்  மழையுடனான  காலநிலை எதிர்வரும்  இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலையாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட  மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்ககளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராயும் வகையில் வியாழக்கிழமை (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு  ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால்,  நேற்று  பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.

பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.மேலும்,உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு, நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும்  அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும்  புதிய தரவுகளின் அடிப்படையில்  அனர்த்த சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறும் கடும் மழை ஏற்பட்டால் நீர்ப்பாசன கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அது தொடர்பில் மிக நெருக்கமாக ஆய்வு செய்யுமாறும்  ஜனாதிபதி  மகாவலி மற்றும் நீர்ப்பாசன  பணிப்பாளர் நாயகங்களுக்கு  அறிவுறுத்தினார்.

தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த  நிலைமைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கருத்துக்களை முன்வைத்ததோடு அவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.

https://www.virakesari.lk/article/231685

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

புதிய இணைப்பு 

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களுடன் இன்று (28) காலை ஜூம் (Zoom) மூலம் சிறப்பு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. 

இதன்போது, பேரிடர் நிவாரணத்திற்காக ஏற்கனவே ரூபா 1.2 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால நடவடிக்கைகளுக்காக 2025 வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் மேலும் ரூபா 30 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, தேவையான இடங்களில் கூடுதல் நிதியைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதுள்ள சுற்றறிக்கை கட்டுப்பாடுகளால் ஏற்படும் நிர்வாக தாமதங்களைத் தவிர்க்க, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அவசர நிவாரண முயற்சிகளுக்கு கிடைக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்தவும், படகுகள், ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கூடுதல் தேவைகளை உடனடியாகப் புகாரளிக்கவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவசரகால தகவல்தொடர்புகளை வலுப்படுத்த பத்து சிறப்பு ஹாட்லைன் எண்களை அறிமுகப்படுத்துவதோடு, பாதுகாப்புத் தலைமையகத்தில் ஒரு பிரத்யேக ஒருங்கிணைப்பு அலகு நிறுவப்படுவதையும் ஜனாதிபதி அறிவித்தார். 

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு | Sri Lanka Weather Cyclone Ditwah Heavy Rain Update

இரண்டாம் இணைப்பு

அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்பு முயற்சிகள் குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இராஜதந்திர விளக்கமளிப்பு நடைபெற்றது.

வெளிநாட்டில் உள்ள இலங்கையின் இராஜதந்திர தூதரகங்களின் அனைத்து தூதரகத் தலைவர்களும், பதவிகளும் இந்தக் கூட்டத்தில் மெய்நிகர் முறையில் கலந்துகொள்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த விளக்கக் கூட்டம் கவனம் செலுத்தியதுடன், உடனடி மற்றும் அதன் பின்விளைவு மீட்பு நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டியது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் இராஜதந்திர பணிகள் மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர பணிகள் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிற்காக வெளியுறவு அமைச்சகம் ஒரு அவசரகால பதிலளிப்பு பிரிவை நிறுவியுள்ளது.

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு | Sri Lanka Weather Cyclone Ditwah Heavy Rain Update

முதலாம் இணைப்பு 

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலிடமிருந்து மீட்பு பணிகளுக்கு அவசர உதவி கோரப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

டிட்வா சூறாவளி புயல் காரணமாக ஏற்படும் கடுமையான வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு குறித்த கப்பலின் விமானங்களைப் பயன்படுத்துவதற்கும் உதவி கோரப்பட்டுள்ளது. 

உதவ முடியாத நிலை 

இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் ஒரு சிறப்பு ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு | Sri Lanka Weather Cyclone Ditwah Heavy Rain Update

இருப்பினும், பாதகமான வானிலை இந்திய விமானங்களையும் பாதிக்கிறது என்றும் தற்போதைய நிலைமைகள் காரணமாக விமான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நிலவும் பாதகமான வானிலை காரணமாக, இந்திய விமானிகள் கூட தற்போது இயக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பு இன்று மாலை திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதன் போது தற்போதைய நிலைமை மற்றும் தொடர்ச்சியான பேரிடர் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு குறித்து அவர்களுக்கு விளக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

https://tamilwin.com/article/sri-lanka-weather-cyclone-ditwah-heavy-rain-update-1764314767

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு

28 Nov, 2025 | 03:37 PM

image

"இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும்  செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை  (28) முற்பகல் முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்  பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக தேவைப்பட்டால் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துமாறு  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது பரிந்துரைத்ததுடன்,  அதற்காக முழு ஆதரவையும் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பணம் தடையல்ல என்று குறிப்பிட்ட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் குழுக்களைக் கூட்டியுள்ளதாகத் தெரிவித்ததுடன்,தேவைக்கேற்ப செலவழிக்க மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த சுற்றறிக்கையும் அந்த நிதியை செலவிடுவதை தடுக்காது என்றும், அவ்வாறு ஏதேனும் தடைகள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலுடன் நிதியைச் செலவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், நிவாரணக் குழுக்களுக்கு பிரவேசிக்க முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்குத் தேவையான ஹெலிகொப்டர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  ஜனாதிபதி, மக்களை மீட்பதற்கு தேவைப்பட்டால் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிவாரண முகாம்களுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும், வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கும், வீடுகளுக்கு வெளியே வேறு இடங்களில் உள்ளவர்களுக்கும் சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி,  தமது மாவட்டங்களில் நிவாரண சேவைகள் கிடைக்காத பகுதிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகளிடம்  கோரினார்.

மேலும், மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் அபாயகர நிலைமைக்கு முகங்கொடுக்கத் தேவையான  முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.  

WhatsApp_Image_2025-11-28_at_15.19.55.jp

WhatsApp_Image_2025-11-28_at_15.19.56.jp

WhatsApp_Image_2025-11-28_at_15.19.56__1

WhatsApp_Image_2025-11-28_at_15.19.57.jp

WhatsApp_Image_2025-11-28_at_15.19.57__2

WhatsApp_Image_2025-11-28_at_15.19.58.jp

WhatsApp_Image_2025-11-28_at_15.19.58__1

WhatsApp_Image_2025-11-28_at_15.19.59.jp

WhatsApp_Image_2025-11-28_at_15.19.59__2

WhatsApp_Image_2025-11-28_at_15.20.00.jp

WhatsApp_Image_2025-11-28_at_15.20.01.jp

https://www.virakesari.lk/article/231823

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.