Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா

Published By: Digital Desk 1

22 Dec, 2025 | 07:29 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

2112_sl_vs_ind__captains_possing_with_th

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து  121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தபத்து  15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

2112_vishmi_gunaratne.png

விஷ்மி குணரட்ன உட்பட மூன்று வீராங்கனைகள் அநாவசியமாக இல்லாத ஓட்டங்களை எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார்கள்.

பந்துவீச்சில் க்ரான்தி கௌட், தீப்தி ஷர்மா, ஸ்ரீசரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஷபாலி வர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

2112_jemima_rodrigues.png

தொடர்ந்து ஜெமிமா ரொட்றிக்ஸ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிககப்படாத 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஜெமிமா ரொட்றிக்ஸ் 10 பவுண்டறிகள் உட்பட 69 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத்  கோர்  15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிக்ஸ்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/234053

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

Published By: Vishnu

24 Dec, 2025 | 03:34 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டிது.

2312_harshitha_samarawickrama.png

ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சம் ஷபாலி வர்மாவின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியா 22 - 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் அதன் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை 130 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதுடன் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

முதலாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன இன்றைய ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஓரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அளவுக்கு அதிகமாக பந்தை சுழற்றி அடிக்க முயன்று 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (38 - 2 விக்.)

இதனைத் தொடர்ந்து ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹசினி பெரேரா 22 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தபோது ஹர்ஷித்தா சமரவிக்ரம 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவர்களைவிட கவிஷா டில்ஹாரி 14 ஓட்டங்களையும் கௌஷினி நுதியங்கனா 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் ஸ்ரீ சரணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மந்தனா இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கத் தவறி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஜெமிமா ரொட்றிகஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஷபாலி வர்மாவும் ஹாமன்ப்ரீத் கோரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்திய நிலையில் ஹாமன்ப்ரீத்  கோர்    10 ஓட்டங்களுடன் வெளியேறினார். (128 -3  விக்.)

அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு ஓட்டத்தை ரிச்சா கோஷ் பெற்றுக்கொடுத்தார்.

ஷபாலி வர்மா 34 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மல்கி மதாரா 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் காவியா காவிந்தி 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஷபாலி வர்மா.

இரண்டு  அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/234255

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் இலங்கைக்கு மற்றொரு மோசமான தோல்வி; தொடரையும் பறிகொடுத்தது

Published By: Vishnu

27 Dec, 2025 | 12:20 AM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக திருவனந்தபுரம், கிறீன்ஃபீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) இரவு மின்னொளியில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

அத்துடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் மேலும் 2 போட்டிகள் மீதமிருக்க 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரையும் இலங்கை பறிகொடுத்தது.

ரேனுகா சிங், தீப்தி ஷர்மா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், ஷபாலி வர்மாவின் அதிரடி அரைச் சதம் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்களுடன் இலங்கை மகளிர் அணி களம் இறங்கிய போதிலும் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக மூவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

விஷ்மி குணரட்ன, காவியா காவிந்தி, ஷஷினி கிம்ஹானி ஆகியோருக்குப் பதிலாக நிமாஷா மீப்பகே, இமேஷா துலானி, மல்ஷா ஸ்னேஹானி ஆகியோர் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் மீண்டும் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணித் தலைவி சமரி அத்தபத்து (3), ஆரம்ப வீராங்கனையாக உயர்த்தப்பட்ட ஹசினி பேரேரா (25), ஹர்ஷித்தா சமரவிக்ரம (2), நிலக்ஷிக்கா சில்வா (4) ஆகிய நால்வரும் ஆட்டம் இழக்க 10ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் இமேஷா துலானி, கவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை பெரு வீழ்ச்சியிலிருந்து ஓரளவு மீட்டனர்.

2612_imesha_dulani.png

கவிஷா டில்ஹாரி 20 ஓட்டங்களுடனும் இமேஷா துலானி 27 ஓட்டங்களுடனும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

கௌஷினி நுதியங்கனா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரேணுகா சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அணியில் மீண்டும் இணைந்த தீப்தி ஷர்மா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2612_deepthi_sharma...png

113 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 13.2 ஓவர்களில் 2  விக்கெட்களை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.

ஸ்ம்ரித்தி மந்தனா மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். ஆனால், ஷபாலி வர்மாவுடன் 27 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தார்.

தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் ஜெமிமாவின் பங்களிப்பு வெறும் 9 ஓட்டங்களாகும்.

அதன் பின்னர் ஷபாலி வர்மாவும் ஹாமன்ப்ரீத் கோரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்த ஷபாலி வர்மா இந்தியாவின் வெற்றியை இலகு படுத்தினார்.

42 பந்துகளை எதிர்கொண்ட ஷபாலி வர்மா 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 79 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

2612_kavisha_dulani.png

பந்துவிச்சில் கவிஷா டில்ஹாரி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகி: ரேணுகா சிங்

https://www.virakesari.lk/article/234505

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10,000 சர்வதேச ஓட்டங்கள் குவித்த நான்காவது வீராங்கனை மந்தனா; 4ஆவது ரி20இலும்  இலங்கையை வீழ்த்தியது இந்தியா 

Published By: Vishnu

28 Dec, 2025 | 11:52 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற நான்காவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரித்தி மந்தனா மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்ட இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிககெட் தொடரை ஏற்கனவே தனதாக்கிக்கொண்டிருந்த இந்தியா, இந்த வெற்றியுடன் 4 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த தொடரில் ஷபாலி வர்மா தொடர்ச்சியான 3ஆவது அரைச் சதத்தைக் குவித்ததுடன் ஸ்மிரித்தி மந்தனா அரைச் சதம் விளாசினார்.

அவர்கள் இருவரும்  மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி  முதலாவது விக்கெட்டில் 92 பந்துகளில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற உதவினர்.

ஷபாலி வர்மா 46 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 79 ஓட்டங்களையும் ஸ்ம்ரித்தி மந்தனா 48 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனிடையே இந்தப் போட்டியில் ஸ்மிரித்தி மந்தனா 27ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ஓட்டங்கள்), நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ் (10,652 ஓட்டங்கள்), சார்லட் எட்வேர்ட்ஸ் (10,273 ஓட்டங்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 10,000 சர்வதேச ஓட்டங்களைக் குவித்த வீராங்கனைகள் வரிசையில் நான்காவது இடத்தை மந்தானா பெற்றுக்கொண்டுள்ளார்.

2812_shafali_verma.png

ஷபாலி வர்மாவும் ஸ்ம்ரித்தி மந்தனாவும் ஆட்டம் இழந்த பின்னர் ரிச்சா கோஷ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை மேலும் பலப்படுத்தினர்.

ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 40 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 10 பந்துகளில் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி சமரி அத்தபத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் முதலாவது விக்கெட்டில் ஹசினி பெரேராவுடன் 59 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் இமேஷா துலானியுடன் 57 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

ஆனால், இலங்கையின் ஓட்டவேகம் போதுமானதாக அமையவில்லை.

2812_chamari_aththapaththu.png

சமரி அத்தபத்து 37 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 33 ஓட்டங்களையும் இமேஷா துலானி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட ஹர்ஷித்தா சமரவிக்ரம 20 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களையும் நிலக்ஷிக்கா சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா.

https://www.virakesari.lk/article/234619

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.