அமெரிக்கா ஒரு நாட்டுக்குள் நுழைய தீர்மானித்து விட்டால், அதற்கு காரணங்கள் தேவையில்லை, தானாகவே சுமத்தும். இரானுக்குள் அணு ஆயுதம் உற்பத்தி செய்கிறார்கள், மக்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டியது. இதுவரை அங்கு அணு உற்பத்தி ஆலை இருப்பதை நிரூபிக்கவுமில்லை, அதன் மீது தாக்கவுமில்லை. இத்தனை அழிவுகளை சந்தித்தும் இரான் அப்படியொரு ஆயுதத்தை பாவிக்கவுமில்லை. இதிலிருந்தே அமெரிக்காவின் குற்றச்சாட்டு, பயம் ஆதாரமற்றது எனத்தெரிகிறது. நெதன்யாகு சொல்கிறார் ஈரான் தமக்கு எப்போதும் அச்சுறுத்தலாம். ஏன் இவர்கள் அப்படி நினைக்கவேண்டும்? அவர்கள் மற்றைய நாடுகளை அச்சுறுத்தலில் வைத்திருக்க இரான் தடையென நினைக்கிறார்கள். ஈரானில் அணு ஆயுதம், ஆலை தாக்கமுடியாத அளவில் பாதுகாப்பாக, இரகசியமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அது அமெரிக்காவிற்கு எப்படி தெரிந்தது? தாக்கமுடியாது என்று தெரிந்தும் ஏன் தாக்குதலை தொடங்கியது? தாக்குதலின் தொடக்கமே ஈரானின் முக்கிய தளங்கள், சிறுவர் பாடசாலை. அந்த குழந்தைகளின் சுதந்திரத்தை அமெரிக்கா, இஸ்ரேல் காத்ததா, மதித்ததா, மிதித்ததா? ஈரானின் மனித வளம், இயற்கைவளங்கள்தான் அமெரிக்காவின் பாஷையில் அணு ஆயுத ஆலையா?
அமெரிக்கா அடிக்கப்போகுது, பிடிக்கப்போகுது என்று அலறிய சுரேன் ராகவன், சீலரத்ன பிக்கு, விமல் வீரவன்ச, இனவாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சிகாறர், பயந்தான்கொள்ளிகள், மனிதாபிமானமற்று தமிழரை அழித்தவர்களுக்கு தோல்வி. இனிமேல் வேறேதாவது காரணங்களை தேடுங்கள். நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அனுராவுக்கு சாதகமாகவே அமையும், ஆகவே அவர்மேல் குற்றச்சாட்டுக்களை தேடி சுமத்துவதை விட்டு உங்களை திருத்திக்கொள்ளுங்கள். உலக நாடுகளிடம் உதவி வேண்டி தமிழரை அழிக்கும்போது அந்த நாடுகள் ஒருநாள் இலங்கையை பிடிக்கும் என தோன்றவில்லை இவர்களுக்கு, இனவாத அரசை எச்சரிக்கவில்லை இவர்கள், இப்போ எதற்கு துடிக்கிறார்கள்? தாங்கள் அழிந்து விடுவோம் என்றா?
இலங்கையை சிண்டு முடிந்து அனுராவை அழிக்க நினைத்திருக்குமோ இந்தியா?இந்தியா, தன்னுடன் கண்காட்சியில் பங்குகொண்டு திரும்பிய அந்த வீரர்களை பாதுகாக்க, காப்பாற்ற, அடைக்கலம் கொடுக்க தவறியது அதன் மனிதாபிமானமற்ற செயல், அமெரிக்கா மீது அதற்கு உள்ள பயம், விசுவாசத்தை காட்டுகிறது. அவர்களை அழைத்து காட்டிகொடுத்திருக்கிறதா இந்தியா? அவர்களை அமெரிக்கா தாக்கியழிக்கும்போது மௌனம் காத்தது, ஈரானிய தலைவர் கொல்லப்பட்டபோது கூட இரங்கல் தெரிவிக்க மோடி விரும்பவில்லை. அதன் பின் அனுரா அந்த வீரர்களை காத்து அடைக்கலம் கொடுத்த விவகாரம் வெளியில் வந்து பாராட்டுக்கள் குவியும் போது, வேறொரு கதையை அவிழ்த்து விட்டது. முதலில் இந்திய ஊடகங்கள் சில மோடியின் செயலை பரிகசித்தன, சில, மோடிக்கு ட்ரம்ப் பணிந்தார், மோடி ட்ரம்ப் தலையில் குட்டி விட்டார் என்றெல்லாம் வெட்கமேயில்லாமல் புகழ்ந்தன. இப்போ இன்னொரு இரானிய கப்பலையும் அதிலிருந்த வீரர்களையும் இந்தியா காப்பாற்றியதாகவும் அதற்கு ஈரான் மிகுந்த நன்றியை தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளிவருகிறது, அது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை, அப்படி நடந்திருந்தாலும் அதற்கு முன்னோடி அனுராவின் துணிச்சலே. அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை, துணிச்சலை பார்த்து மோடி வெட்கமடைதிருப்பாரோ என்னவோ?
உங்களது சொந்த குடிமக்கள் அவர்களின் நாட்டுத்தலைவர்களால் ஈவு இரக்கமின்றி தாக்கப்படும்போது உந்த மனிதாபிமானம் எங்கே போயிருந்தது? அதற்கு பிறகு வருகிறேன், அது சம்பந்தமான திரியில். வாசகர்களுக்கும் கருத்தாளருக்கும் ஒரு அன்பான கோரிக்கை! எனது கருத்துக்கள் உங்களுக்கு வாசிப்பதற்கு சலிப்பை கொடுத்தால் கடந்து செல்லுங்கள், மினைக்கெட வேண்டாம். "நான் அனுராவுக்கு தூக்கு காவடி எடுக்கப்போகிறேன்."
By
satan ·