Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

Jan 30, 2026 - 05:40 PM

இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றோம்.

சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம் அமைந்திருக்கின்றது. அது தனியாரின் காணி. அந்தக் காணியையும் பொதுமக்களிடம் கையளிக்குமாறு நாங்கள் இராணுவத்திடம் கோரி இருந்தோம். அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்கள்.

மேலும் இன்றைய கூட்டம் சமூகமாக நடைபெற்றது. சென்ற கூட்டமானது நடைபெற்றபோது கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. மேலும் இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். நாங்கள் அவற்றை சாதகமாக பரிசீலிக்கின்றோம்.

இங்கே தீர்வு காணப்படக்கூடிய விடயங்களுக்கு இங்கே தீர்வை கண்டு, மேலதிகமாக ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என தெரிவித்தார்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cml0udcrw04mho29n6c8je0tg

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களே விலகி போகும் முன் நாங்கள் கேட்டால்தானே நாங்களும் மக்களுக்கு ஏதோ செய்தோம் என காட்டி கொள்ள முடியும்.

இவர் யாழ்பாணத்தின் அரச கட்சி எம்பிதானே?

தையிட்டி, கைதடி விடயம் அலசபடும் போது வாயுக்க கொழுக்கட்டை வச்சிருந்தவரோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அவர்களே விலகி போகும் முன் நாங்கள் கேட்டால்தானே நாங்களும் மக்களுக்கு ஏதோ செய்தோம் என காட்டி கொள்ள முடியும்.

இவர் யாழ்பாணத்தின் அரச கட்சி எம்பிதானே?

தையிட்டி, கைதடி விடயம் அலசபடும் போது வாயுக்க கொழுக்கட்டை வச்சிருந்தவரோ?

இவர் பாராளுமன்ற உறுப்பினராகி, இரண்டு ஆண்டுகளின் பின்...

காகம் இருக்க, பனம் பழம் விழட்டும் என்ற ரீதியில்...

இப்போதான், முதன் முதலாக வாயை திறந்திருக்கின்றார். 😂

அதை... "ஆஃப்" பண்ணிப் போடாதீங்க,

பிறகு அவர்.. மீண்டும் கோமாவிற்கு போய் விடுவார். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கானையில் இராணுவ முகாமை அகற்றி காணியை கையளிக்க இணக்கம்: எம்.பி எஸ். பவானந்தராஜா தகவல்!

Published By: Digital Desk 1

31 Jan, 2026 | 01:39 PM

image

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில், தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பதிலளித்ததாகவும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுழிபுரத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர், அண்மையில் அங்கிருந்து வெளியேறியதையடுத்து, அக்காணியை சங்கத்தினருக்கு மீள கையளித்துள்ளோம். 

அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அதனையும் பிரதேச சபையிடம் மீள கையளித்துள்ளோம். 

இதேவேளை, சங்கானை கிழக்கு பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேறி, அந்த காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியுள்ளேன்.

அது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனர். மிக விரைவில் அந்த காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/237473

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில், தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பதிலளித்ததாகவும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இந்த முகாம் விடுவிக்கப்பட போவதாக சொல்லியிருப்பார்கள்.

தான் கேட்டுத் தான் முகாம் மூடப்படுகிறதாக அடித்து விட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே இந்த முகாம் விடுவிக்கப்பட போவதாக சொல்லியிருப்பார்கள்.

தான் கேட்டுத் தான் முகாம் மூடப்படுகிறதாக அடித்து விட்டுள்ளார்.

images?q=tbn:ANd9GcQeNVB9xvbJFZT0EaLFWg7

483577939_1170112987812905_2609614062503

IMG-2822.jpg

2024´ம் ஆண்டு, 31´ம் திகதி ஒக்ரோபர் மாதம்... அச்சுவேலி – வசாவிளான் வீதியை, திறக்கப் போகின்றார்கள் என்று உள்ளூர் கிராமசேவகர் மூலம் அறிந்த சுமந்திரன், முதல் நாள் மாலை மூடியிருந்த பாதை முன் நின்று இராணுவத்தினருடன் படம் எடுத்து, தான் சொல்லித்தான் திறந்தது என்று அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு படத்துடன் "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற காட்சியை இன்னும் நாம் மறக்கவில்லை. 😂

இவர் 15 வருடமாக பாராளுமன்றத்தில்... மைத்திரி, ரணிலுடன் தேன்நிலவில் இருந்த போது.... கேட்காமல், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத நிலையில்... அனுராவிடம் வீதியை விடுவிக்கக் சொல்லி கேட்கிறாராம். விடுவித்தவுடன்.... தான் சொல்லித்தான் விடுவித்ததாக... சுத்துமாத்து ஈன அரசியல் செய்கிறார். animiertes-gefuehl-smilies-bild-0424.gif

பவானந்த ராஜாவுக்கு முதலே... சுத்துமாத்து சுமந்திரன், இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து காட்டி விட்டார். 🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.