Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-4-1.jpeg?resize=750%2C375&ssl=

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன.

இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2026/1464095

  • கருத்துக்கள உறவுகள்

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்!

Feb 10, 2026 - 03:23 PM

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்!

'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. 

இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlgf9akv0002356njssbopgi

  • கருத்துக்கள உறவுகள்

விசேடதேவையுடையவர்களுக்கு மட்டுமல்ல முதியவர்கள், சிறுவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுப்போக்குவரத்து முழுவதுமே (பேருந்து, தொடரூந்து) விசேடதேவையுடையவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் எல்லோரும் இலகுவில் ஏறி இறங்கக்கூடிய வகையில் தாழ்தள/சமதள அணுகலை உடையதாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போன்ற நாடுகளில் அரசு மிகவும் கவனமெடுக்க வேண்டிய ஒரு விடயம் இந்த விசேட உடல் தேவையுடையோர் இயன்றளவு சுதந்திரமாக நடமாடும், பயணம் செய்யும் வசதியை உருவாக்குவது. சில அரச கட்டிடங்களில், சக்கர நாற்காலி செல்வதற்கான சாய்தளப் பாதை (ramp) கூட இல்லாமல் இருப்பதை 2016 இல் வந்த போது கவனித்தேன். இப்போது எப்படியோ தெரியாது.

பஸ்களில் kneeling bus என்றொரு வகை இருக்கிறது. வயதானோர், கைத்தடியோடு வருவோர், இலகுவாக ஏறும் வகையில், ஒரு hydraulic gear மூலம் பஸ்ஸின் முன்பகுதி நிலத்தோடு பதியும் படி செய்வார்கள். ஏறும் படிகளின் கீழேயே மடிக்கப் பட்ட சக்கர நாற்காலிக்குரிய சாய்தளம் இருக்கும். இந்தப் புதிய பஸ்களில் இவை இருக்கும் என நம்புகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.