Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

donald-trump-131221607-16x9_0.jpg?resize

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது.

இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது.

இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது.

இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுத்தினார்.

மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலை மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது.

அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதவேளை ஐக்கிய நாடுகள், பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1464329

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vvvvvvv.png?resize=649%2C375&ssl=1

கியூபாவில் எரிசக்தி முடக்கம்.

கியூபாவில் நிலவும் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு தமது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபாவின் சர்வதேச விமான நிலையங்களில் கடந்த 10 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை விமான எரிபொருள் கிடைக்காது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளது.இந்த நிலையில், ஏர் கனடா, ஏர் டிரான்சாட் மற்றும் வெஸ்ட்ஜெட் போன்ற முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

இதன் விளைவாக கியூபாவில் சிக்கியுள்ள சுமார் 3,000 பயணிகளை மீட்பதற்காக ஏர் கனடா நிறுவனம் வெற்று விமானங்களை அனுப்பி வருகின்றது.

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வர்த்தக வரி மிரட்டல்கள் காரணமாக, டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து கியூபாவிற்கான எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கியுள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க கியூபா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அரசு நிறுவனங்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை, வங்கி வேலை நேரக் குறைப்பு மற்றும் எரிபொருள் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அடிப்படைச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

https://athavannews.com/2026/1464388

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.