Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு

14 Feb, 2026 | 01:04 PM

557a13a0-0930-11f1-b7e1-afb6d0884c18.jpg

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அந்நாட்டுக்கு அருகே அமெரிக்காவின் சக்திவாய்ந்த கடற்படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இதுவரை எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு போர்க்கப்பல்

பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்கா மேலும் ஒரு முன்னணி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் கப்பலை ஈரானை நோக்கி அனுப்ப ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ முன்னிலையை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.

டிரம்பின் எச்சரிக்கை

இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் ஆட்சியை மாற்றும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் சூழலில், அந்நாட்டில் ஆட்சி, அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.

“அவர்கள் 47 ஆண்டுகளாக பேசி கொண்டே இருக்கிறார்கள். எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அமெரிக்காவுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிக விரைவில் அமெரிக்காவின் இரண்டாவது போர்க்கப்பலும் ஈரானை நோக்கி புறப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச கவலை

இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா–ஈரான் உறவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம், உலக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது

https://www.virakesari.lk/article/238640

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப உத்தரவிட்ட டிரம்ப்

யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) டிரம்ப் இதை உறுதிப்படுத்தினார். “விமானம் தாங்கி கப்பல் மிக விரைவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும். இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு தேவைப்படும்” என்று அவர் கூறினார்.

பிபிசி பாரசீக சேவையின்படி, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இரானில் அதிகார மாற்றம் குறித்தும் டிரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகார மாற்றம் 'இரானில் நடக்கக்கூடிய சிறந்த விஷயம்' என்று கூறினார்.

டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கிற்கு வந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் பணிக்குழுவுடன் இணையும்.

ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் அணு உலை மூலம் இயங்குகிறது மற்றும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் மற்றும் A-2 ஹாக் ஐ விமானங்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அக்கப்பலால் சுமந்து செல்ல முடியும்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வழிசெலுத்தலுக்கான மேம்பட்ட ரேடார்களையும் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/live/cgrzjlepkpgt?post=asset%3A1f3b2ce7-6b48-4f60-976f-55f9fcd4619f#asset:1f3b2ce7-6b48-4f60-976f-55f9fcd4619f

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.