Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று ; தமிழரசுக்கட்சி பங்கேற்காது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று; தமிழரசுக்கட்சி பங்கேற்காது

15 Feb, 2026 | 02:33 PM

image

(நா.தனுஜா)

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி கஜேந்திரகுமாரினால் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்துக்கும் அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பதில் அனுப்பிய நாகலிங்கம், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் அனுப்பிய கஜேந்திரகுமார், அச்சந்திப்பை 15 ஆம் திகதிக்கு முன்பதாக ஒருங்கிணைக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும் 15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவியபோது, தாம் இறுதியாக அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238712

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏக்கிய ராஜ்ய சட்ட வரைபை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்து, வக்காலத்து வாங்கியவர் தமிழரசுக்கட்சியின் உத்தியோகப்பற்றற்ற பதில் பொதுச்செயலாளர். அது நடைமுறைப்படுத்தாவிடில் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என சவால் விட்டவர், அதை அனுரா நடைமுறைப்படுத்துவார், தனக்கு அழைப்பெடுப்பார் எனக்காத்திருந்தவர், இன்றுவரை தனக்கும் அழைப்பு வருமென்றே எல்லோரையும் பதவி நீக்கி கட்சியை அபகரித்து காத்திருக்கிறார். பதில் தலைவர் இப்படிச்சொல்கிறார். இந்தக்கட்சியில் ஆளுக்கொரு கொள்கை, நடைமுறை, பேச்சு, முடிவு. இதில பாரம்பரியக்கட்சி என்று கூவல் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாதையும் எப்போதும் ரோம் நகரை நோக்கியே டிசைன் செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாறாமல் , காலத்துக்கு காலம் எவ்வாறு வேறு வடிவங்கள் எடுக்குமோ , அது போலவே இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வும் சாகாவரம் பெற்ற எப்போதுமே இருக்கக்கூடிய ஒரு விடயம் .

தீபாவளி , தைப்பொங்கல், எல்லாம் பட் ஈழம் , பம்மூண்டு , பம்மூண்டு பிளஸ் , பிளஸ் பிளஸ், ஏக்க , ஐக்கிய, சமஸ்டி , கூடு , கூட்டு , தனி , சுயம் , ஐம்பத்து ஐமபத்து , என்று காலத்துக்கு காலம் வடிவங்களும் அவதாரமும் எடுக்கும்.

இப்ப இருக்கிற ஆட்களுக்கும் செய்யிரத்துக்கு சொல்லி வேண்ண்டாமோ ?? :) 😄🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.