Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை!

Published By: Digital Desk 3

26 Feb, 2026 | 02:27 PM

image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பிரபல்யமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

2014-இல் இந்தத் தளத்தில் இணைந்த இந்தியப் பிரதமர் மோடி, தற்போது ஏனைய உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு முன்னிலையில் உள்ளார்.

நரேந்திர மோடி: 10 கோடி பின்தொடர்பவர்கள்

டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4 கோடி பின்தொடர்பவர்கள்

பிரபோவோ சுபியாந்தோ (இந்தோனேசியா): 1 கோடி பின்தொடர்பவர்கள்

லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (பிரேசில்): 1 கோடி 44 இலட்சம் பின்தொடர்பவர்கள்

அர்ஜென்டினா, துருக்கி மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதிகளின் மொத்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட இந்தியப் பிரதமர் மோடியின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்குள்ளும் ஏனைய அரசியல் தலைவர்களை விட மோடி பெரும் இடைவெளியில் முன்னிலையில் உள்ளார்:

யோகி ஆதித்யநாத்: 1 கோடி 61 இலட்சம்

ராகுல் காந்தி: 1 கோடி 26 இலட்சம்

சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, உலகளாவிய தலைவர்களின் செல்வாக்கு தொடர்பிலும் ஆய்வுகளிலும் மோடி முதலிடம் பிடித்துள்ளார்:

மார்னிங் கன்சல்ட் (Morning Consult) - பெப்ரவரி 67 சதவீத ஆதரவுடன் மோடி உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செக் குடியரசின் ஆண்ட்ரேஜ் பாபிஸ் (59%) இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஸ்டேடிஸ்டா (Statista) - கடந்த வருடம் டிசம்பர் மாதம் 70% அங்கீகாரத்துடன் மோடி முதலிடம். ஜப்பானியப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி (63%) இரண்டாமிடம்.

இந்தத் தரவுகளின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 40% - 43% ஆதரவுடன் 11 ஆவது இடத்திலேயே உள்ளார். இதன் மூலம் டிஜிட்டல் உலகிலும், நேரடி அரசியலிலும் பிரதமர் மோடி ஒரு 'குளோபல் ஐகானாக' உருவெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

https://www.virakesari.lk/article/239631

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.