Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/3/2026 at 11:48, island said:

அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!

பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை.
கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை. அப்படியான செய்திகளும் இல்லை.மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே.

2 hours ago, goshan_che said:

திருமணத்துக்கு அப்பாலன உறவு வைத்துள்ள எந்த பெரியாரிஸ்ட் தமிழ் நாட்டு தலைவரினதும் மனைவி, துணைவி எவரும் கோர்ட் படி ஏறவில்லை.

பெரியாரை மூலதனமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் அந்த இரண்டு மாபெரும் கட்சிகள் மிக மிக பலம் வாய்ந்தவை. ஆட்பலம்,கட்சிபலம்,கட்சி மேலிடத்தின் மீது உள்ள தீவிர விசுவாச பலம்,பணபலம்,கட்சி என்ன சொல்கின்றதோ அதுவே தாரகமந்திரம் என நினைக்கும் மக்களின் பலம் என இப்படியே பற்பல பலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கட்சி முக்கியஸ்தர்கள் விரல் அசைத்தாலே.....எள் என்றால் எண்ணையாக நிற்கக்கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் உள்ள நாடு அது.

ஆட்சி அதிகாரத்தில்,கட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை மீறி எவரும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிர்க்குரல் கொடுத்தால்......எதிர்க்குரல் கொடுப்பவர்களை கட்சியின் தொண்டர்களே கவனித்து கொள்வார்கள். இது நடந்த விடயங்கள்/நடந்து கொண்டிருக்கும் விடயங்கள்

உலகில் அதிகாரத்தில் இருப்பவர்களையும்,பண பலத்தில் இருப்பவர்களையும்,கட்சி,மக்கள் பலத்துடன் இருப்பவர்களையும் எதிர்ப்பது தற்கொலைக்கு சமம். இது உலகில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

நீங்கள் மேற்கூறிய சிறு பிள்ளைத்தனமான கருத்தை இன்னும் எத்தனை திரிகளுக்குள் சுமந்து சென்று உருட்டப் போகின்றீர்களோ யாமறியோம் பராபரமே.😂

  • Replies 102
  • Views 6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை.
கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை.

மீண்டும், மீண்டும் உன்னிப்பாக கவனிக்க - இந்தியாவில் கோவிலில் நெருப்பை சுற்றி வந்து, மாலை மாத்துவது சட்டபூர்வ திருமணம். இலங்கையில் தாலி கட்டுவதும் அப்படியே. விரும்பினால் ரிஜிஸ்தர் பண்ணி கொள்ளலாம். இல்லாமலும் விடலாம்.

1 hour ago, குமாரசாமி said:

மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே.

கள்ள காதல்களை பற்றி கதைக்கும் போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பெரியாரை மூலதனமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் அந்த இரண்டு மாபெரும் கட்சிகள் மிக மிக பலம் வாய்ந்தவை. ஆட்பலம்,கட்சிபலம்,கட்சி மேலிடத்தின் மீது உள்ள தீவிர விசுவாச பலம்,பணபலம்,கட்சி என்ன சொல்கின்றதோ அதுவே தாரகமந்திரம் என நினைக்கும் மக்களின் பலம் என இப்படியே பற்பல பலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கட்சி முக்கியஸ்தர்கள் விரல் அசைத்தாலே.....எள் என்றால் எண்ணையாக நிற்கக்கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் உள்ள நாடு அது.

முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர்.

ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே.

இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார்.

1 hour ago, குமாரசாமி said:

ஆட்சி அதிகாரத்தில்,கட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை மீறி எவரும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிர்க்குரல் கொடுத்தால்......எதிர்க்குரல் கொடுப்பவர்களை கட்சியின் தொண்டர்களே கவனித்து கொள்வார்கள். இது நடந்த விடயங்கள்/நடந்து கொண்டிருக்கும் விடயங்கள்

உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் மேற்கூறிய சிறு பிள்ளைத்தனமான கருத்தை இன்னும் எத்தனை திரிகளுக்குள் சுமந்து சென்று உருட்டப் போகின்றீர்களோ யாமறியோம் பராபரமே.😂

நாமே அறியோம் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.