Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அலி அல் சலேம் அமெரிக்கத் தளத்திலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில், குறித்த விமானத்தின் இயந்திரம் தீப்பற்றி எரிந்தவாறு கீழே விழும் காட்சி காணொளிகளில் பதிவாகியுள்ளது.

அதில் இருந்த விமானி விமானத்திலிருந்து குதித்துப் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதுடன், பின்னர் பிரதேசவாசிகள் அவருக்கு உதவியுள்ளனர். எனினும், விமானத்திலிருந்த ஆயுதக் கட்டமைப்பு இயக்குநரின் நிலைமை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலா அல்லது இயந்திரக் கோளாறா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தவறான தகவல்.

அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான மூன்று எப் 15 ரக தாக்குதல் விமானங்களை குவைத்தின் விமான எதிர்ப்புப் படையனி சுட்டு வீழ்த்தியிருக்கிறது என்பதே சரியான தகவல்.

ஈரானின் விமானங்கள் குவைத்தின் வான்பரப்பிற்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது தாக்குதலை நிறைவுசெய்து தளம் திரும்பிக்கொண்டிருந்த மூன்று அமெரிக்க விமானங்களை குவைத் விமான எதிர்ப்புப் படையணி ஈரானின் விமானங்கள் என்று தவறுதலாகக் கணித்து சுட்டு வீழ்த்தியிருக்கிறது. தாக்கப்பட்ட விமானங்களில் இருந்த ஆறு விமானமோட்டிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் நலமுடன் இருப்பதாக குவைத் அரசு தெரிவித்திருக்கிறது. தனது தவற்றிற்காக அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள குவைத் அரசு, இத்தாக்குதல் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொள்வதாகவும் கூறியிருக்கிறது.

  • Replies 59
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இதில பகிடி என்னவென்றால் ஈரானிய மக்கள் கமெனி கொல்லப்பட்டதை கொலுவிருத்துறாங்கள் (celebrate)..ஆனால் எங்கட நாட்டு முஸ்லீம்கள் அத நினைச்சு வருந்துறாங்கள் .. போதாக்குறைக்கு புலிகளையும் இழுக்கிறாங்கள்... மதம

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    வெற்றி வெற்றி .... இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ... 🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ... உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இங்கு அந்த நாட்டவர்கள் போரட்டத்தில் இறங்கி உள்ளதாக காலையில் அறிந்தேன்.நான் அடிக்கடி டவுண்ரவுன் பக்கம் போவதால் யாராவது ஏதாச்சும் எடுத்து சொல்வார்கள். பொருட்களின் விலைகளும் கூடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

645473563_1501148371576959_6667225845178

645480551_1501148374910292_1098989917531

645398996_1501148404910289_8475156223343

645276150_1501148438243619_4634085643582

2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகப் பெரியது.

2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்து வைத்தார்கள்.

ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, வழங்கிய ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது.

எம் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், எங்களை அழிக்க அனைத்து வகையிலும் உதவியவர்கள், எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இப்போ தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.

அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். நாங்களும் இப்படித்தான் கதறினோம்.

மறந்து போவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல.

சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது.

பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள்.

எங்கள் மாவீரச் செல்வங்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது.

நம்ம யாழ்ப்பாணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்!

Mar 2, 2026 - 05:39 PM

குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்!

ஈரானுக்கு எதிரான 'Operation Epic Fury' இராணுவ நடவடிக்கையின் போது, அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்கள் நட்புமுறைத் தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது. 

ஈரானிய விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்கள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், குவைத் வான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

விமானங்களில் இருந்த 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது சீரான உடல்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தை குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போதைய இராணுவ நடவடிக்கையில் குவைத் பாதுகாப்புப் படைகள் வழங்கி வரும் ஆதரவிற்கும் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. 

குறித்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

642868502_1531357308359841_2714727701377

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நன்னிச் சோழன் said:

@நியாயம்

ஐயனே ... மதத் தலீவர் மண்டையை போட்டிட்டாராம்...😔😭🥺

இண்டைக்கு எங்க போயிற்றியள்? .... ஒப்பாரி முடியேலையோ?🤭

.... சரி என்ன நினைக்கிறியள் என்டாவது சொல்லுங்கோவன்😁

எனக்கு அறிமுகம் இல்லாத 86 வயது தாத்தா ஒருவர் ஈரானில் கொல்லப்பட்டு உள்ளார். தாத்தாவின் இறப்பை கொண்டாடுவது உங்கள் பிரச்சனை. இதற்கு ஒப்பாரி வைக்கும் அளவிற்கு நான் வெட்டியாக இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்?

பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவாக தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை அன்று இரான் மீது தாக்குதல் நடத்தின.

2 மார்ச் 2026, 08:20 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருப்பது போல் தோன்றுகிறது.

பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து நடுநிலையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை இரான் மீது தாக்குதல் நடத்தின.

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இரான் குறிவைக்கத் தொடங்கியது.

இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி எழுதிய பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தியதாகவும், குடிமக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மோதலை விரைவில் நிறுத்துவது முக்கியம் என்பதையும் பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார்.

முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார்.

ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களைப் பிரதமர் மோதி கண்டித்ததுடன், அங்கு வசிக்கும் இந்தியச் சமூகத்தினரைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்வதற்காக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 28, சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

"இரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்"என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது .

"பதற்றத்தைக் குறைக்கவும், சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய வழிகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்ற பிரிட்டன்

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

பட மூலாதாரம்,X / Keir Starmer

படக்குறிப்பு,பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்டார்.

இரானிய ஏவுகணைத் தளங்கள் மீதான "தற்காப்பு" தாக்குதல்களுக்குப் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் வழங்கினார்.

இருப்பினும், பிரிட்டன் "இராக் தவறுகளில்" இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், இரான் மீதான ஆரம்பக்கட்டத் தாக்குதலில் அது ஈடுபடவில்லை என்றும், "இனி வரும் எந்தத் தாக்குதல்களிலும் ஈடுபடாது" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கும் முடிவு, கூட்டாளிகளின் "கூட்டுத் தற்காப்புக்காகவும்", பிரிட்டிஷ் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் எடுக்கப்பட்டது என்று ஸ்டார்மர் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகள் மீது இரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை விமர்சித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃபிரடெரிக் மெர்ஸ் ஆகியோர் மத்திய கிழக்கில் தங்களது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் யாருக்கு சார்பாக உள்ளன?

உர்சுலா வான் டெர்  லேயன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (கோப்புப் படம்)

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் இரானின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்களின் எதிர்வினைகள் வெளிவந்துள்ளன.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரானின் "கொலைவெறி ஆட்சிக்கு" எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விரிவான தடைகளை விதித்துள்ளதை நினைவுபடுத்தினார்.

"அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அலுவலகம், இரான் மக்களுடன் இணைந்து நிற்பதாக கூறியுள்ளது.

அவரது அறிக்கையில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மதிப்பதற்கான கோரிக்கை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாக மெலோனி தனது கூட்டாளிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்களுடன் பேசுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், தனது நாடு "இரானிய மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் போது அவர்களுடன் நிற்கிறது" என்றும், இரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

இரானுக்கு வளைகுடா நாடுகள் எச்சரிக்கை

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்து விவாதிக்க, அதன் உறுப்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை கூடின.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரானை எச்சரிக்கும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதிக்க, அதன் உறுப்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை கூடின.

மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக ஜி.சி.சி கூறுகிறது.

ஜி.சி.சி அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் அனைத்தும் இரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இரான் தங்களது இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் மீறுவதாகக் குற்றம் சாட்டின.

ஒரு செய்திக் குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையும் ஜி.சி.சி வலியுறுத்தியது.

இருப்பினும், தங்களை தற்காத்துக் கொள்ள "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுப்போம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், அண்டை நாடுகளை இலக்கு வைத்ததாக கூறப்படுவதை இரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி மறுத்துள்ளார்.

"நாங்கள் பாரசீக வளைகுடா நாடுகளில் உள்ள எங்களது அண்டை நாடுகளைத் தாக்கவில்லை, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ இருப்பையே நாங்கள் இலக்கு வைக்கிறோம். அண்டை நாடுகள் தங்கள் குறைகளை இந்தப் போரைத் தீர்மானித்தவர்களிடம் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான்

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மறைவுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரமான நேரத்தில் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் இரான் மக்களுடன் நிற்பதாக அவர் கூறினார்.

"இந்தத் துயரமான நேரத்தில் (பாகிஸ்தான்) அரசாங்கமும் மக்களும் இரானிய மக்களுடன் நிற்கிறோம். காமனெயியின் 'தியாகத்திற்கு' எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"சர்வதேசச் சட்டத்தை மீறுவது குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவிக்கிறது. எந்தவொரு நாட்டின் தலைவரையும் இலக்கு வைக்கக் கூடாது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் இரான் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்ததுடன், அவை "மிகவும் வருந்தத்தக்கவை" என்றும் கூறியுள்ளார்.

"பாகிஸ்தான் இரானுக்கு அனைத்து வகையிலும் ராஜ்ஜீய மற்றும் தார்மீக ஆதரவை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரான் மீதான தாக்குதலைப் பாகிஸ்தான் தெளிவாகக் கண்டித்துள்ளது" என்று கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

சீனா

இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உச்ச தலைவர் காமனெயி மறைவு குறித்து சீனா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது" என்று சீனா அதில் குறிப்பிட்டுள்ளது.

"இரானின் உச்ச தலைவர் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை என்பது இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும். இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கிறது" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

"ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றும் என்று சீனா தெரிவித்துள்ளது.

ரஷ்யா

இரான் உச்ச தலைவர் காமனெயி மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

பிபிசி பெர்சியன் செய்தியின்படி, "அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் 'மனித விழுமியங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான கொலை'" என்று புதின் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனிடம் கூறினார்.

"அரசியல் மற்றும் ராஜ்ஜீய தீர்வை நோக்கிய பாதைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியத்தை "மானுடவியல், பொருளாதார மற்றும் கதிரியக்கப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக" ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

முதலில் கையெழுத்திட்ட நான்கு நாடுகளும் உதவாமல் எப்படி பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்திசெய்தன!

வணக்கம் எப்போதும் தமிழன்,

நீங்கள் கேட்டுக்கொண்டதால் இதனை எழுதுகிறேன்.

இந்தியா தனது அணுவாயுதத்தினை தானாகவே உள்நாட்டில் உருவாக்கிக்கொண்டது. இதற்கு ரஸ்ஸியாவோ அல்லது வேறு எவருமோ உதவவில்லை. 1940 களின் இறுதிப்பகுதிகளிலேயே தனக்கான அணுவாயுத உருவாக்கத்தை இந்தியா ஆரம்பித்துவிட்டது. போரிற்கல்லாமல், சக்தித் தேவைகளுக்காக அணுச்சக்தியைப் பாவிப்பது பற்றிய அறிவை இந்தியா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பெற்றிருக்கலாம், ஆனால் எந்தவொரு அணுஆயுத வல்லரசும் இந்தியாவுக்கு உதவவில்லை. 1974 ஆம் ஆண்டு இந்திய அணுவாயுதத்தை முற்றாக்கிவிட்டது என்று வெளித்தெரிய ஆரம்பித்தவுடன் அதுவரை இந்தியாவிற்கு சக்தித் தேவைக்கான அணுவாலைகளில் உதவிய நாடுகள் தமது பங்களிப்பை நிறுத்தி விட்டன.

ஆனால் பாக்கிஸ்த்தான் அப்படியல்ல. வெளிநாட்டு அணுமின் நிலைகள், ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றிய பாக்கிஸ்த்தான் விஞ்ஞானிகள் தாம் நாடு திரும்பும்போது தம்மோடு திருடிக்கொண்டு வந்த தகவல்க் கொத்துக்களை அடிப்படையாக வைத்தே தமது அணுவாயுதத்தை உருவாக்கிக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்ட கோப்புக்களுக்கு மேலதிகமாக, இந்தியாவின் பரம வைரியான சீனா அணுவாயுத உலைகளின் கட்டுமானத்தில் பாக்கிஸ்த்தானுக்கு உதவியது. சீனா அணுவாயுத பரவல்த் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் கூட பாக்கிஸ்த்தானின் அணுவாயுத உற்பத்திக்கு உதவியது என்பது உண்மையே.

ஆனால் இஸ்ரேலின் அணுவாயுத உற்பத்தியின் கதை வித்தியாசமானது. சுற்றிவரவும் தம்மை ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் அரபு நாடுகளில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள அணுவாயுதம் தன்னிடம் இருப்பது அவசியம் என்று இஸ்ரேல் கருதியது. இதனால் 1950 களிலேயே இதுதொடர்பான முயற்சிகளில் அது இறங்கிவிட்டது. ஆரம்பத்தில் இஸ்ரேலின் அணுவாயுத ஆராய்ச்சியில் பிரான்ஸ் உதவியிருந்தபோதும், இஸ்ரேலிய விஞ்ஞானிகளே தமக்கு உகந்தவகையில் அணுவாயுதத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

இறுதியாக, அணுவாயுதப் பரவலைத் தடுக்கும் ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டிலேயே அமுலுக்கு வந்தது. பாக்கிஸ்த்தானைத் தவிர ஏனைய நாடுகள் எல்லாமே அப்பொழுது அணுவாயுதத்தை வைத்திருந்தபோதிலும் எல்லா நாடுகளும் அதில் கைச்சாத்திடவில்லை, வெறும் நான்கு நாடுகளைத் தவிர‌.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்? நேரலை

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,Fatemeh BahramiAnadolu via Getty Images

2 மார்ச் 2026, 01:43 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரானின் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது "கட்டுப்பாட்டுக்குள்" கொண்டுவரப்பட்டுள்ளது.

இரானின் "பாகுபாடற்ற மற்றும் பொறுப்பற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை" வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் கண்டித்துள்ளன.

சனிக்கிழமையன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இரான் மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்துவதற்காக மக்கள் வீதிக்கு வர வேண்டாம் என்று இரான் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிபிசி பாரசீக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அதேசமயம், குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.

இது குறித்து அமெரிக்க ராணுவம் ஓர் அறிக்கையில், "அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று கூறியது.

சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,Majid SaeediGetty Images

குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின

"பல" அமெரிக்கப் போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், இச்சம்பவத்திற்கான சூழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குவைத் ராணுவம் தெரிவித்திருந்தது.

தற்போது அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரானுக்கு எதிரான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கைக்கு ஆதரவாகப் பறந்து கொண்டிருந்த மூன்று F-15 போர் விமானங்கள், "தவறுதலாக குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டது''

விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து நொறுங்கிய போர் விமானம் எப்படிப்பட்டது?

விழுந்து நொறுங்கிய போர் விமானம் எப்படிப்பட்டது?

கிறிஸ் பார்ட்ரிட்ஜ், பிபிசி

ஒரு F-15E ஸ்டிரைக் ஈகிள் அல்லது அதன் ஒரு வகை போர் விமானம் எனத் தோற்றமளிக்கும் ஒரு வீடியோ காட்சியில், அந்த விமானம் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, கட்டுப்பாட்டை இழந்து சுழன்று கொண்டு கீழே விழுவது தெரிகிறது. இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இப்பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (US Central Command) இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இரான் நடத்திய தீவிரத் தாக்குதலின் போது, குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகவும், அந்த விமானங்களில் இருந்த வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பியதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

F-15E ஸ்டிரைக் ஈகிள் ரக விமானங்கள், வான் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் பன்முகத்தன்மை கொண்ட போர் விமானங்களாகும். இந்த மோதலில் அவை தற்போது எந்த மாதிரியான பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், இரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வழிமறித்து அழிக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் இவை ஈடுபடுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இப்பணிக்காக இவை விமானத்தில் உள்ள வெப்பத்தை உணர்ந்து இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் (heat-seeking missiles), நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது இலக்கிற்கு மிக அருகில் இருந்தால் விமானத்திலுள்ள துப்பாக்கிகளைக் கூடப் பயன்படுத்தலாம். இவை தவிர லேசர் மூலம் வழிநடத்தப்படும் ராக்கெட்டுகள் போன்ற பிற ஆயுதங்களும் இவற்றில் உள்ளன.

முதல் 24 மணி நேரத்தில் 1,000 இலக்குகள் மீது தாக்குதல் - அமெரிக்கா

ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான இரானிய இலக்குகளையும் இது பட்டியலிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) கருத்துகளை இது எதிரொலிக்கிறது, நடவடிக்கையின் முதல் நாள் "மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை" செய்ததாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,ATTA KENARE AFP via Getty Images

'நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்'

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "போர் நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். எங்கள் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை தொடரும்." என்று கூறியுள்ளார்.

"துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிகமான அமெரிக்க உயிரிழப்புகள் இருக்கும். அதை தவிர்க்க இயலாது. அவர்களின் மரணத்திற்கு அமெரிக்கா பழிவாங்கும். நாகரிகத்திற்கு எதிராகப் போரை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மிகவும் தண்டனைக்குரிய அடியை வழங்கும்" என்று அவர் தெரிவித்தார்.

"இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், போலீசார் ஆயுதங்களை கீழே போட்டால் உயிர் தப்பலாம் அல்லது நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அது நிச்சய மரணம்" என்றார் அவர்.

"அணு ஆயுதங்களுடன் கூடிய இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை" ஒழிக்க இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் "சரியானவை" மற்றும் "அவசியமானவை" என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது" என்று டிரம்ப் தெரிவித்தார்.

"சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து இரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தைரியமாக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று டிரம்ப் கூறினார்.

"தைரியமாக இருங்கள், வீரத்துடன் இருங்கள், உங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,Donald Trump/Truth Social

'எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை'

ஏபிசி நியூஸிடம் பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரான் "சில தளபதிகளை இழந்திருந்தாலும்... எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை" என்று கூறியுள்ளார்.

"கடந்த முறை இதுதான் நடந்தது," என்று அவர் கூறுகிறார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களை அவர் குறிப்பிடுகிறார்.

"எங்கள் உயர் தளபதிகளில் சிலரை அவர்கள் கொன்றனர், ஆனால் அவர்கள் மிக விரைவில் மாற்றப்பட்டனர். அடுத்த 12 மணி நேரத்திற்குள், எங்களால் பதிலடி கொடுக்கத் தொடங்க முடிந்தது," என்றார் அவர்.

"இந்த முறை, அது இன்னும் வேகமாக இருந்தது."

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது இன்னும் சாத்தியமா என்று கேட்கப்பட்டது.

"நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்." என்று கூறிவிட்டு தொடர்ந்த அராக்சி, கடந்த வியாழக்கிழமை இரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் "ஜெனீவாவில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை" மேற்கொண்டனர், பின்னர் திங்களன்று வியன்னாவில் மீண்டும் ஒரு சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "சமாதானத்தை எதிர்ப்பவர்கள் அதைக் கெடுக்க முடிவு செய்தனர்" என்றார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,Getty Images

மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக இரான் தகவல்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் "ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன" என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியதாக இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தனது தினசரி அறிவிக்கையில், அந்தப் பகுதியில் "பல கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறது. இரண்டு கப்பல்கள் "எறிகணைகளால்" தாக்கப்பட்டதாக அது கூறுகிறது, இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பல்கள் எங்கிருந்து வந்தன அல்லது அவை எங்கு பதிவு செய்யப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வளைகுடா மற்றும் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றாகவும், எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,Getty Images

வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆசியாவில் திங்கள்கிழமை காலை எரிசக்தி சந்தைகள் திறந்தபோது பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் நைமெக்ஸ் லைட் ஸ்வீட் எண்ணெய் இரண்டும் 10% க்கும் அதிகமாக உயர்ந்தன.

ஒரு கட்டத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 9% உயர்ந்து $79.30 ஆக இருந்தது, அதே நேரத்தில் நைமெக்ஸ் சுமார் 8.5% அதிகரித்து $72.70 ஆக இருந்தது.

இரானுக்கு வளைகுடா கவுன்சில் எச்சரிக்கை

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம்,StringerAnadolu via Getty Images

படக்குறிப்பு,இரான் தாக்குதலுக்கு இலக்கான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது பிரிவு தலைமையகம்.

இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்து விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு இரானின் தாக்குதல்களைக் கண்டித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை இரான் மீறுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை கேட்டுக் கொண்டுள்ள அந்த அமைப்பு, பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "தேவையான அனைத்து நடவடிக்கைகளும்" எடுக்கப்படும் என்றும் இரானை வளைகுடா கவுன்சில் எச்சரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

644244065_1079598775226507_6321083585285

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.