Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:57 AM

image

இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானிய கடற்படை கப்பலான IRIS Bushehr-இல் பணியாற்றியிருந்த 208 கப்பற் பணியாளர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

WhatsApp_Image_2026-03-06_at_06.43.15.jp

இலங்கை கடற்படையினரின் தகவலின்படி, இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து குறித்த ஈரானிய கடற்படை கப்பலில் இருந்த அனைத்து 208 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

WhatsApp_Image_2026-03-06_at_06.43.13.jp

மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கப்பலில் இருந்த பணியாளர்கள் தற்போது கொழும்பு நோக்கி கரைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், IRIS Bushehr கப்பலை இலங்கை கடற்படை தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான காரணங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கப்பலில் ஏற்பட்ட அவசர நிலைமை குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

அதை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையே சாட்டாக வைத்து அமெரிக்கா திருகோணமலைக்குள் உள்நுழையலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

Mar 6, 2026 - 07:37 AM

IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் 'IRIS Bushehr' கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (5) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சம்பந்தப்பட்ட கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? சர்வதேச போர் களத்தில் இலங்கை - சுரேன் ராகவன் விடுத்த அவசர எச்சரிக்கை

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 04:12 PM

image

சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான சுரேன் ராகவன்  கவலை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி இலங்கையின் வர்த்தகத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆழமான மற்றும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.

அண்மையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மூன்று ஈரானிய போர்க்கப்பல்களில் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அவர், அந்தச் சம்பவம் நடப்பதற்கு 12 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே குறித்த கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி கோரியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார். எமது நீர்ப்பரப்பிற்குள் வருவதற்கு அனுமதி கோரப்பட்டபோது ஏன் அது வழங்கப்படவில்லை அல்லது தாமதிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், தாக்குதல் இடம்பெற்ற பின்னர் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முன்வந்த அரசாங்கத்தின் திடீர் மனமாற்றம் எதனை உணர்த்துகிறது என்றும் வினவினார்.

மேலும், 'ஐ.ஆர்.ஐ.எஸ் பாஷ்ரே' (IRIS Bashahr) கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 201 பேரை இலங்கையில் தடுத்து வைத்துள்ளமை மற்றும் அந்தப் போர்க்கப்பலை திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ள தீர்மானம் குறித்து அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார். திருகோணமலைத் துறைமுகத்தில் இக்கப்பல் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அத்துறைமுகத்தைச் சூழவுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெருமளவிலான தமிழர்களின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள சவால்களைப் பட்டியலிட்ட சுரேன் ராகவன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 60 சதவீதத் தேயிலை விநியோகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த வார தேயிலை ஏலத்தின் போது 25 சதவீதத்திற்கும் அதிகமான தேயிலை விற்பனையாகாமல் தேங்கியுள்ளமை தேசிய பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், இலங்கையின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெயை சுத்திகரிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் அல்லது தென் ஆப்பிரிக்காவிலிருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கினாலும் அதனைப் பயன்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியிலான காலதாமதமும் சிக்கல்களும் உள்ளதாக அவர் விளக்கினார்.

https://www.virakesari.lk/article/240323

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அருகே மற்றொரு இரான் போர்க்கப்பலில் பிரச்னை - என்ன நடக்கிறது?

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம்,Supplied

படக்குறிப்பு,இரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

கட்டுரை தகவல்

  • கெல்லி என்ஜி மற்றும் பிபிசி சிங்கள சேவை

  • 6 மார்ச் 2026, 08:32 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இலங்கை தனது கடற்கரைப் பகுதியில் இரானிய கடற்படைக் கப்பல் ஒன்றைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானிய போர்க்கப்பல் ஒன்று அதே கடல் பகுதியில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டு, குறைந்தது 87 பேர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் கழித்து, இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐஆர்ஐஎஸ் புஷெர் (IRIS Bushehr) என்ற அந்த இரானிய கப்பல், அதன் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்ததால் இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த புதன்கிழமை (மார்ச் 4) அனுமதி கோரியிருந்தது.

பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வடகிழக்கு துறைமுகம் ஒன்றில் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது, "மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார தெரிவித்தார்.

அந்தக் கப்பலில் இருந்த சுமார் 204 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.

'எந்தப் பக்கமும் சாயப் போவதில்லை'- இலங்கை

இரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் நிலையில், எந்தப் பக்கமும் சாயப்போவதில்லை என்று கூறி தங்களது நடுநிலைமையை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

"எங்களது நிலைப்பாடு என்பது எங்களது மனிதாபிமான விழுமியங்களை வெளிப்படுத்தும் அதேவேளையில் எங்களது நடுநிலைமையைப் பாதுகாப்பதாகும்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"சர்வதேச உடன்படிக்கைகளுக்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எங்களது நாட்டின் நற்பெயர் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், மனித உயிர்களைப் பாதுகாக்கும் வகையிலும் இதில் இலங்கை தலையிட்டது" என்று அவர் வியாழக்கிழமை கூறினார்.

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம்,@IN_HQENC

படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா

இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் (81 கி.மீ) தொலைவில் ஐஆர்ஐஎஸ் தேனா (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புதன்கிழமை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததைத் தொடர்ந்து இலங்கை அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சுமார் 180 பணியாளர்களைக் கொண்டிருந்த அந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-இல் பங்கேற்றது.

ஐரிஸ் தேனா மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், மத்திய கிழக்கு மோதலின் ஒரு தீவிரப் போக்கைக் குறிக்கிறது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று விவரித்ததுடன், இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்கா 'நிச்சயம் வருந்தும்' என்றும் கூறினார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், இது அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு ஓர் உதாரணம் என்று பாராட்டியதுடன், "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டார்பிடோ மூலம் எதிரிக் கப்பல் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை" என்றும் கூறினார்.

1945-க்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எதிரிக் கப்பலை இந்த வழியில் மூழ்கடிப்பது இதுவே முதல் முறை என்றாலும், பிரிட்டனும் பாகிஸ்தானும் அதற்குப் பிறகு டார்பிடோக்களைப் பயன்படுத்தி கப்பல்களை மூழ்கடித்துள்ளன.

இலங்கையின் அணிசேரா கொள்கை

கடந்த வார இறுதியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து அழிக்கப்பட்ட சுமார் 20 இரானிய கடற்படைக் கப்பல்களில் ஐஆர்ஐஎஸ் தேனாவும் ஒன்றாகும்.

வியாழக்கிழமை, இரானின் ஐஆர்ஐஎஸ் புஷெர் போர்க்கப்பல் இயந்திரக் கோளாறு இருப்பதாகக் கூறி துறைமுகத்திற்குள் வர இலங்கையிடம் அனுமதி கோரியது.

அந்தக் கப்பல் நாட்டின் முக்கிய வணிகத் துறைமுகமான கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருந்தபோதிலும், இறுதியில் திரிகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட திஸாநாயக்க அனுமதி அளித்தார். அந்தக் கப்பல் கொழும்பில் நிறுத்தப்பட்டிருந்தால், நாட்டின் கடல்சார் தொழில் 'பாதிப்புக்குள்ளாகும்' அபாயம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம்,PMD SRI LANKA

இரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பிபிசி சிங்களத்திடம் தெரிவித்துள்ளது.

பிபிசி சிங்களத்திடம் பேசிய அதன் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத், "அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்களை வெலிசறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லும் பணி தொடங்கியுள்ளதாகத்" தெரிவித்தார்.

இந்தக் கப்பலில் 208 பேர் இருந்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

வியாழக்கிழமை நிலவரப்படி, இலங்கை கடற்படை காணாமல் போன ஐஆர்ஐஎஸ் தேனா கப்பலின் பணியாளர்களைத் தனது கடல் பகுதியில் தொடர்ந்து தேடி வருகிறது.

ஐஆர்ஐஎஸ் தேனாவிலிருந்து உயிர் தப்பிய 32 பேர் தற்போது இலங்கையின் காலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக அணிசேராக் கொள்கையைப் பேணி வருகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் இலங்கை வலுவான பொருளாதார மற்றும் ராஜிய உறவுகளைக் கொண்டுள்ளது.

இலங்கை இரானிடமிருந்து 250 மில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை வாங்கியிருந்ததுடன், அதற்கான தொகையை மாதந்தோறும் தேயிலை ஏற்றுமதி மூலம் திருப்பிச் செலுத்தி வருகிறது. மறுபுறம், அமெரிக்கா இலங்கையின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான முதன்மை ஏற்றுமதிச் சந்தையாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இலங்கை அருகே மற்றொரு இரான் போர்க்கப்பலில் பிரச்னை - என்ன நடக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

648752812_10241834652066413_128589391330

646839347_10241834660786631_660622910094

646771591_10241834662666678_877590469027

648096075_10241834648386321_467294059508

648394741_10241834649306344_570793480246

648677725_10241834629025837_626758503898

645220374_10241834631025887_443102850596

648286223_10241834647026287_747305088061

647353880_10241834647706304_593078176580

646167243_10241834631505899_607399817734

647261794_10241834639786106_429329027700

646872714_10241834641146140_397751061528

645473449_10241834642946185_536365719861

649082731_10241834626465773_496413378806

648316594_10241834630465873_443410994162

வல்லரசுகளின் போர் 'வெற்றி & தோல்வி' பற்றிய செய்திகள் வரலாற்றில் பதியப்படும் போது நான்கு பக்கமும் கடலாலும், கடனாலும் சூழப்பட்ட 'இலங்கை' என்ற ஒரு குட்டி தேசத்தின் மிகப்பெரிய இதயம் பற்றியும் எழுதப்படும். ❤️ முதலில் வந்த கப்பல்(தாக்கி அழிக்கப்பட்ட) பற்றி உளவுத் தகவல் கொடுத்ததில் இலங்கைக்குத் துளி கூட சம்பந்தம் இல்லை என்றால் "தோழரின்' ஆட்சியில் இலங்கை என்ற குட்டி நாடு இதயத்தில் ஈரத்துடன் நடந்து கொண்டது" என்று வரலாறு எழுதிச் செல்லும்.

Lingathasan Ramalingam Sornalingam

  • கருத்துக்கள உறவுகள்

648502874_122210922638553852_82747702751

ஈரானிய கப்பலை நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்.

டிரம்ப் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது?

சீலரத்ன தேரர் கேள்வி.

Ceylon Focus News

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.