Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கட்டுரை தகவல்

  • சுதாகர்

  • பிபிசி தமிழுக்காக

  • 7 மார்ச் 2026

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்

இவ்வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கியது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பிப்ரவரி 23ம் தேதி விசாரணை நிறைவு பெற்றது.

இந்நிலையில் மார்ச் 7 அன்று நீதிபதி சுந்தரராஜன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

தண்டனை பெற்று தந்த ஆதாரங்கள்

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்காக வாதாடிய அரசு வழக்கறிஞர் ஜிஷா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த வழக்கில் குற்றம் நடந்த நேரம் இரவாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த தகவல்கள் மட்டுமல்லாமல் குற்றத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்தோம்.'' என்றார்.

''அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு ஆதாரங்கள் பெறப்பட்டது. டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது முதல் குற்றம் செய்து விட்டு தப்பி சென்றது வரையிலான 22 சிசிடிவி காட்சி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு பழைய வழக்குகள் உள்ளன. அவர்கள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட முதல் வழக்கு இதுதான். பாதிக்கப்பட்ட பெண் குறித்து பரப்பபட்ட தவறான பிம்பங்களை சட்டரீதியாகவும் உடைத்துள்ளோம்" என்று கூறினார்.

"எதிர்தரப்பில் அந்த நேரத்தில் ஏன் பாதிக்கப்பட்ட பெண் அங்கு வந்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இரவு 10:45 மணிக்கு மட்டுமல்ல, நள்ளிரவு 2 மணிக்கு கூட பெண் அங்கு செல்லலாம். அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அங்கு வரவில்லை என்ற வாதத்தையும் முன்வைத்தனர். அதற்கும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டது." என்றார்.

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 126 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

படக்குறிப்பு,ஜிஷா

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் டிஎன்ஏ மாதிரி முடிவுகள் துல்லியமாகத் திரட்டப்பட்டது. நீதித்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

சிறைக்கு அழைத்து சென்ற போது குற்றவாளிகளில் ஒருவர் மீசையை முறுக்கிக் கொண்டு சைகை காண்பித்து சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாதிக்கப்பட்ட பெண் பயப்பட தேவை இல்லை. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கோவை பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. குற்றச் செயல்கள் என்பது ஓர் அசாதாரண மனநிலை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் வெளியே வர முடியாது. பாதிக்கப்பட்ட பெண் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 126 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

விசாரணை அதிகாரி கூறுவது என்ன?

இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுள் ஒருவரான காவல் ஆய்வாளர் அர்ஜுன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "மொத்தம் 60 காவல்துறையினர் இந்த வழக்கில் பணியாற்றினர். இந்த வழக்கில் பல்வேறு சவால்களை சந்தித்தோம். குற்றம் நிகழ்த்தப்பட்டு எங்களுக்கு தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணை காலை வரை தேடும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அந்த பெண்ணின் உடையை முதலில் கைப்பற்றிய போது அவரை உயிருடன் மீட்டுவிடுவோமா என்ற கவலை இருந்தது.

பின்னர் குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில்அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து அவர் உடல் அளவிலும் மனதளவிலும் மீண்டு வந்த பின்னர் அவரிடம் புகார் பெறப்பட்டது. அதேபோல் குற்றவாளிகளை உறுதி செய்து பிடிக்க செல்லும் போது பதுங்கியிருந்த அவர்கள் தாக்கியதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்தாலும், குற்றவாளிகள் தப்ப முடியாதவாறு வலுவான ஆதாரங்களை திரட்டி ஒரு மாதத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ததும் கடும் சவாலாக இருந்தது. இதுபோன்ற குற்றங்கள் புகார்களாக அளிக்கப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் துணிச்சலாக இதை செய்கின்றனர். இந்த தீர்ப்பு அதுபோன்ற குற்றவாளிகளுக்கு பாடமாக இருக்கும். பொதுமக்களும் விழிப்புணர்வோடு இதை அணுக வேண்டும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.