Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

19 Mar, 2026 | 04:10 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழுவில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர், ஈரான் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடுகள், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானின் இராணுவ கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் “பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன” என உளவுத்துறை மதிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் தற்போது அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும், முன்னைய சேதத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலா (Imminent Threat) என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க துளசி கப்பார்ட் மறுத்தார். “எது அச்சுறுத்தல் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து உளவுத்துறை முன்னதாகவே கணித்திருந்ததாகவும், அதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஈரான் அந்த நீரிணையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடும் என்ற அபாயமும் முன்கூட்டியே மதிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது.

காங்கிரஸ் விசாரணையின் போது, சிஐஏ பணிப்பாளர் ஜோன்ன் ரொட்க்ளிஃப் (John Ratcliffe) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் ஈரான் “உடனடி அச்சுறுத்தல் இல்லை” எனக் கூறி பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், ரொட்க்ளிஃப் அதற்கு மாறாக, ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக வாதிட்டுள்ளார்.

விசாரணையின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம் “முற்றிலும் அழிக்கப்பட்டது” என்ற எழுத்துபூர்வ அறிக்கையின் சில பகுதிகளை துளசி கப்பார்ட் வாசிக்கவில்லை எனக் கூறப்பட்டதால் அரசியல் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய செனட்டர் ஒருவர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலைப்பாட்டுக்கு முரணான பகுதிகள் தவிர்க்கப்பட்டதா என சந்தேகம் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த கப்பார்ட், அறிக்கை நீளமாக இருந்ததால் சில பகுதிகள் சுருக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2025 ஜூனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி திறனை குறிவைத்து நடத்திய 12 நாள் இராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த தற்போதைய அரசியல் மற்றும் உளவுத்துறை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

https://www.virakesari.lk/article/241381

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா "தனக்குத் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறது" என்று இரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்

மேலும் அவர், "எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் சமரசத்திற்கு வரமாட்டார்கள்" என்றும் கூறினார்.

இரான் ஓர் ஒப்பந்தத்திற்காக "மிகவும் மோசமாக" ஏங்குகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய பிறகு இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

பட மூலாதாரம்,Getty Images

15 அம்ச திட்டங்கள் என்ன?

இந்தநிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் 15 அம்சங்கள் கொண்ட திட்டத்தை இரான் பெற்றுள்ளதாக இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இரான் மீதான தடைகள் நீக்கம், இரான் தனது அணுசக்தி நிலையங்களை அகற்ற வேண்டும், அமைதியான பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டங்களில் ஒத்துழைப்பு, ஏவுகணை கட்டுப்பாடு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இதே திட்டம் பற்றி இஸ்ரேலின் சேனல் 12 கூட செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்க ராணுவம் சில படைகளை இரானுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. ஆனால் அவை எங்கு அல்லது எப்போது என்பது துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் வெள்ளை மாளிகை இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆயத்துல்லா அலி காமெனெயியின் பேனர்

பட மூலாதாரம்,Reuters

இரான் நிர்வாகம் ஏன் இன்னும் வீழ்ச்சியடையவில்லை?

ஜிஹான்சேஹ் ஹபீபியசத், பிபிசி பாரசீக சேவை

போர் தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது, மேலும் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.

இரான் நாட்டிற்குள் இருக்கும் சில மக்கள், போர் அதே நாளில் முடிவடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இரான் நாட்டின் ஆட்சி இப்போதும் நீடிக்கிறது.

நாட்டை நிர்வகிப்பதில் இரான் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது.

அதி உயர் தலைவர் மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், அங்கு ஓர் இணை அரசு உள்ளது. அதுதான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி). இது முறையான ராணுவ அதிகாரத்தையும் தாண்டி அதிகாரம் கொண்ட ஒரு நிறுவனமாகும்.

இந்தப் போரிலும், கடந்த ஆண்டு நடந்த மோதலிலும் பல உயர்நிலை ஐஆர்ஜிசி தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் பதிலாக, அந்த இடத்தைப் பிடிக்க மற்றொருவர் தயாராக இருப்பதாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

ஐஆர்ஜிசி அமைப்பு 'பாசிஜ்' என்ற அமைப்பையும் கட்டுப்படுத்துகிறது. இது சுமார் ஒரு மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னார்வப் படை ஆகும். இவர்கள் பெரும்பாலும் எதிர்ப்புகளை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்த வீதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.

சில 'பாசிஜ்' சோதனைச் சாவடிகளை தான் இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் இந்த வாரம் தெஹ்ரானில் இந்தப் படைகள் இப்போதும் நகரில் அதிகளவில் உள்ளன. கார்களை நிறுத்திச் சோதனைகளை நடத்தி வருகின்றன.

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

பட மூலாதாரம்,Getty Images

போராட்டங்களைப் பொறுத்தவரை, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டாம் என்று இரானிய அதிகாரிகள் அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ அச்சுறுத்தி வருகின்றனர்.

இணையதளமும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களிடையே ஒருங்கிணைப்பை மிகவும் கடினமாக்குகிறது.

இதுவரை, போர் தொடங்கியதிலிருந்து நாட்டில் பெரிய அளவிலான நிர்வாக எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிப்பதை காண முடிவதில்லை.

இருப்பினும், பல்வேறு நகரங்களில் நிர்வாகத்தின் ஆதரவாளர்கள் நடத்தும் இரவு நேரப் பேரணிகளை அரசு ஊடகங்கள் காட்டுகின்றன.

ஆனால், மார்ச் தொடக்கத்தில் பதவியேற்றது முதல் மக்கள் பொது வெளியில் இன்னும் பார்க்காத நபர் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி ஆவார். இதுவரை, இரானிய ஊடகங்களில் அவரிடமிருந்து வந்த சில கடிதச் செய்திகளை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். அவரை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

புதன்கிழமையன்று தெஹ்ரானில் எடுக்கப்பட்ட படம்

பட மூலாதாரம்,Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS

படக்குறிப்பு,புதன்கிழமையன்று தெஹ்ரானில் எடுக்கப்பட்ட படம்

'இரானின் அதிகாரம் சிதறியுள்ளது'

அமெரிக்க இரானிய கவுன்சிலின் தலைவர் ஹூஷாங் அமிரஹ்மதி, அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டது, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளிடையே அதிகாரக் கட்டமைப்பைச் சிதறடித்துள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

'முன்பு அதிகாரம் காமனெயி எனும் ஒரே மனிதரிடம் இருந்தது. அதனால் அவர் இறந்ததும் அந்த அமைப்பு உடைந்து விட்டது. இப்போது அதிகாரம் பல கீழ்நிலை அதிகாரிகளுக்கு பரவி இருக்கிறது. குறிப்பாக இந்த அதிகாரம் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அதிகமாக உள்ளது.'' என பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

யார் மீது ஏவுகணைகளை வீச வேண்டும் என்பதை ஒருங்கிணைக்க ஒரு "மைய நபர் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

அரசு நிர்வாகத்திற்குத் களத்தில் அதிகாரம் இல்லை என்றும், அதனால் இப்போது புதிய அளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகளைக் கண்டு அது பயப்படுவதாகவும் அமிரஹ்மதி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/ce9m0dkxjxro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.