சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 3
விமானத்தின் சாப்பாடு இடைவேளையின் பின், அவள் இன்னுமொரு சிவப்பு ஒயின் எடுத்துக்கொண்டு, மீண்டும் அவரை நோக்கித் திரும்பினாள். " நீங்கள் ஒயின் ஒன்றும் குடிப்பதில்லையா ?" மெதுவாக அவரிடம் கேட்டாள். அவர், " இப்போது இல்லை " சுருக்கமாக பதில் அளித்தார்.
அவள் தொடர்ந்தாள்: “அப்போதும் ஒரே பாலின காதல் இருந்தது,” என்று அவள் சொன்னாள். “எல்லா இடங்களிலும். ஆனால் அது கவிதையில் வாழ்ந்தது, சட்டத்தில் அல்ல. கோயில்களில், நீதிமன்ற அறைகளில் அல்ல. அமைதியில், கொண்டாட்டத்தில் அல்ல.” பழைய உலகம் அதை மறுக்கவில்லை. ஆனால், அது வெறுமனே அதை பெயரிட மறுத்துவிட்டது.” என்று அவள் சொன்னாள்.
“உன் காதலிக்கு என்ன ஆனது?” என்று அவர் அமைதியாகக் கேட்டார். அவள் சிரித்தாள் - "அது சோகமானது அல்ல, என்றாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதும் அல்ல. அவள் இறக்கவில்லை, அவள் இன்னும் இருக்கிறாள், ஆனால் .... " என்று அவள் இடைநிறுத்தி, பெருமூச்சு விட்டாள்.
அவர் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தர். "அவள் திருமணம் செய்து கொண்டாள்," என்று அவள் தொடர்ந்தாள். not to me, not even to the one she loved most. She married someone who could give her a sense of stability in life." [" என்னை அல்ல. அவள் காதலித்த ஆளையும் அல்ல. அவள் தன் வாழ்வுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒருவனை மணந்தாள்."]
அப்பொழுது விமானம் சீராக ரீங்காரமிட்டபடி, சீரான வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது. அவர், "ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. ஏனென்றால், திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு", அதைத்தான் அவள் செய்தாள் என்று அவளுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வடிந்துகொண்டு இருந்தது.
அவர் தொடர்ந்தார்: கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக அவளுக்கு பாடிக் காட்டினார்.
“Let your belly be full,
your clothes clean,
your body and head washed;
enjoy yourself day and night,
dance, sing and have fun;
look upon the child who holds your hand,
and let your wife delight in your lap!
This is the destiny of mortals.”
[“உங்கள் வயிறு நிரம்பட்டும் ,
உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் ,
உங்கள் உடல், தலை கழுவட்டும்;
இரவும் பகலும் மகிழுங்கள்,
ஆடி பாடி மகிழுங்கள்;
உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள்,
உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் !
இதுதான் மனிதர்களின் விதி”]
அவள் முகம்சுளித்தாள். “இன்று உலகம் நவீனமென்று சொல்கிறது, சட்டங்கள் உண்டு. கொடிகள் உண்டு. அறிவிப்புகள் உண்டு. ஆனால் ஏற்றுக்கொள்ளுதல் எப்போதும் இன்னும் தாமதமாகத்தான் வருகிறது — சேதத்துக்குப் பிறகே.” என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் சாளரத்தின் ஊடாக வெளியே மேகங்களைப் பார்த்தாள். விமானம் மேகங்களுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தது.
அவள் தொடர்ந்தாள்: சில நாடுகளில் ஒருபாலினத் திருமணம் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் பொறுத்துக் கொள்ளப்படுகிறது. பல இடங்களில் இன்னும் தண்டிக்கப்படுகிறது— சட்டத்தால், குடும்பத்தால், மௌனத்தால். நவீன உலகம் சுதந்திரத்தைப் பற்றி சத்தமாகப் பேசுகிறது, ஆனால் பொதுவான காதல் அடையாளங்களை மறுக்கும்போது கிசுகிசுக்கிறது" என்றாள்.
பின் "நான் இப்ப தனிமையில் இல்லை, காலத்தின் ஓட்டத்தை உணர்ந்தவளாக, வரலாற்று விழிப்புணர்வுடன் இருக்கிறேன்," என்று அவள் இறுதியாகச் சொன்னாள்.
அவர் தலையசைத்தார். "சில காதல்கள், காலத்தினால் (காலத்தின் நீளத்தினால்) தோற்கடிக்கப்படுவதில்லை. அவை ஒவ்வொரு சகாப்தத்தாலும் (காலகட்டத்தின் சூழ்நிலைகளால்) தோற்கடிக்கப்படுகின்றன," என்று அவர் பழைய உண்மையை எதிரொலிப்பாரைப் போலக் கூறினார்.
அவள் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே விமானம் தரையிறங்குவதைப் பார்த்தாள்.
அங்கே அவள் மேகங்களுக்கு ஒரு எல்லையையும் காணவில்லை.
ஒட்டாவா விமான நிலையத்தில், அவர்கள் ஒன்றாக விமானத்தில் இருந்து கீழே இறங்கினர். “நாம் நண்பர்களாக இருப்போமா?” என்று அவள் கேட்டாள்.
அவர் சிரித்தார். "நட்பு என்பது, உலகத்தோடு போராடி, தப்பிப்பிழைக்க கற்றுக்கொண்ட அன்பு" என்று அவர் கூறினார். அவர்கள் தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை.
பண்டைய கவிதைகள் போன்ற சில தொடர்புகள் நினைவில் கொள்ளப்பட வேண்டுமே ஒழிய தொடரக்கூடாது.
என்றாலும் எதிர் எதிர்திசைகளில் நடந்து அவர்கள் இருவரும் பிரியும் தருணத்தில், அவர்களுக்கு இடையே ஒரு நிசப்தமான (quiet) அல்லது உணர்ச்சிப்பூர்வமான தருணம் இருந்தது. ஆனால், அவர்கள் பிரிந்து சென்றவுடன், அந்தத் தனிப்பட்ட உணர்வை உலகம் பொருட்படுத்தாமல், வழக்கம் போலத் தன் பரபரப்பையும் சத்தத்தையும் தொடங்கியது.
ஆனால் ஹீத்ரோவிற்கும் ஒட்டாவாவிற்கும் இடையில் எங்கோ, ஒரு உண்மை பாதுகாப்பாகப் பயணித்தது: ஒருபால் காதல் புதிதல்ல; அதை வெளிச்சத்தில் நிறுத்தி பெயரிடும் தைரியம்தான் ஒவ்வொரு காலத்திலும் புதிதாகப் பிறக்கிறது.
நன்றி
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
முற்றிற்று
துளி/DROP: 2103 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 3
https://www.facebook.com/groups/978753388866632/posts/34406040362377838/?
By
kandiah Thillaivinayagalingam ·