Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார்

Published By: Digital Desk 3

03 Apr, 2026 | 09:39 AM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம் பொண்டியின் பதவிக்காலம் முழுவதும் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் எதுவும் இல்லை என நீதித்துறை அறிவித்தது.

எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம், இறுதியில் பொண்டிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது.

கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரை "தோற்றுப்போனவர்" என பொண்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தான் ஒரு தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்தபடியே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் பொண்டி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரி பாம் பொண்டி ஆவார். வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242618

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுயநலவாதிகள் இப்படி மாற்றி மாற்றி பேசுவதும் புகழ்வதும் இயல்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் ஐயும் பதவி நீக்கம் செய்து விட்டால் உலகம் நிம்மதியடையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம்

பாம் பாண்டி

பட மூலாதாரம்,Reuters

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நீண்டகால கூட்டாளியும், தனது நிர்வாகத்தின் தீவிர ஆதரவாளருமான அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியைப் ( Pam Bondi) பணிநீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் என்பவர் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமலாக்க அதிகாரியாகக் கருதப்படுகிறார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், டிரம்ப் பாம் பாண்டியைப் பாராட்டியதுடன், அவர் இனி தனியார் துறையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதித்துறையில் பாம் பாண்டி வகித்த பதவிக்காலம், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுதல் மற்றும் அந்தத் தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீதான விசாரணை ஆகியவற்றைச் சூழ்ந்த சர்ச்சைகளாலேயே பெரும்பாலும் சூழ்ந்திருந்தது.

சமீபத்திய வாரங்களில், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் இரண்டாவது உயர் அதிகாரி இவராவார். கடந்த மார்ச் மாதம், கிறிஸ்டி நோம் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். டாட் பிளான்ச், பாம் பாண்டிக்கு பதிலாக அப்பதவியை ஏற்கவுள்ளார்.

தனது பொறுப்புகளை பிளான்ச்சிடம் ஒப்படைக்கும் பணியில் "சோர்வின்றி உழைப்பேன்" என்று பாண்டி கூறினார்; மேலும், இப்பதவியை வகித்தது தனது வாழ்வின் "பெருமைக்குரிய விஷயம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் துறையில் தான் ஏற்கவுள்ள புதிய பொறுப்பிலும், "அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்காகத் தொடர்ந்து போராடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார். எனினும், தனது புதிய பொறுப்பு என்னவாக இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.