Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?

ஹோர்மூஸ் தலைவலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல்

கட்டுரை தகவல்

  • ஃபிராங்க் கார்ட்னர் & லோர்னா கார்டன்

  • பிபிசி

  • 22 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், இரான் மற்றும் ஓமனுக்கு இடைப்பட்ட அந்த குறுகிய கடல் பகுதியைத் கடப்பதற்காகக் காத்திருக்கும் 2000 கப்பல்களில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகளின் நிலை குறித்து மிகக் குறைவாகவே அறியப்படுகிறது.

இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது 21 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் கடல் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உள்ளனர். மாலுமிகள் குறைந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள், அதீத சோர்வு மற்றும் கடுமையான மன அழுத்தத்துடன் போராடி வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்செனியோ டோமிங்குவேஸ், "இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையற்ற நடவடிக்கைகள் இனிப் போதாது" என்று தெரிவித்தார்.

மேலும் இதற்கு ராஜீய ரீதியிலான உதவிகள் தேவை என அவர் கூறினார்.

ஹோர்மூஸ் நீரிணை

'ஹோர்மூஸ் தலைவலி'

இந்தப் போர் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகளைச் சரிசெய்வது என்பது, அவசியமான அதே வேளையில் மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான பணியாகும்.

ஹோர்மூஸ் நீரிணைக்கு எதிரே உள்ள கடற்கரையின் பெரும்பகுதியை இரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதாவது, கப்பல்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்துவதற்காக எத்தனை குறைவான தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களையும் அந்த நாடு நினைத்தால் அங்கு மறைத்து வைக்க முடியும்.

கடற்படைகள் தங்கள் போர்க்கப்பல்களை அந்தக் கடற்கரைக்கு மிக அருகில் அனுப்ப விரும்புவதில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் தாக்கப்படுவோம் என்று பயப்படுகிறார்கள்.

எனவே, நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ராணுவ பலம் மட்டுமே வேலை செய்யாது என்பதில் பெரும்பாலான ராணுவ ஆய்வாளர்கள் உடன்படுகிறார்கள்.

இது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சாத்தியமாகும், ஒருவேளை பாகிஸ்தான் போன்ற மூன்றாம் தரப்பு நாடு வழியாக இது நடக்கலாம். இறுதியில் இதற்கு இரானிடமிருந்து பச்சைக்கொடி காட்டப்படவேண்டும்.

இது இரானின் எதிரிகளுக்கு விழுங்க முடியாத ஒரு கசப்பான மாத்திரையாக இருக்கும்.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 34 நாட்கள் பேரழிவுகரமான வான்வழித் தாக்குதல்களால் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த முடியவில்லை. அந்த நாடு ஒவ்வொரு நாள் தப்பிப்பிழைப்பதும் அதன் உறுதியை இன்னும் ஆழப்படுத்துகிறது.

எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இரான் தயாராக இல்லாத நிலையில், அனைத்துக் கப்பல்களும் மீண்டும் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பதற்கு முன்னதாக நிதி ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ அதிக விலையை அது கோரக்கூடும்.

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

இரானுக்கு சாதகமான நிலவியல்

உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளது.

நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது.

இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c33l5yxer20o

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நீரினையும் அதன் மருங்கே உள்ள நிலப்படுத்தியில் இருந்த்து தாக்குபவர்களுக்கு வசகியானது

நீரினை திறப்பு தாக்குதல் (தோல்வியில்) uk (மேட்ற்கு) முயன்று தோற (இராணுவ) பலப்பாடம் இருகிறதது

Gallipoli நீரிணை திறப்பு (1915 ஓட்டோமான் அரசு, இன்றைய துருக்கி ) மிகவும் தோல்வியில் முடிந்தது (இதில் பிரான்சும் பங்குபற்றியது என்றே நினைவு)

அத்துடன் சமீப வரலாற்றில் uk க்கு பாக்லண்ட்ஸ் தீவு தரையிறக்க அனுபவம் - ஆர்ஜெந்தினா இடம் ஏவுகணைகள் இல்லது இருந்த்தும் அழிவு நடந்தே uk தரையிறக்கம் நடந்தது.

(அனால் ஆர்ஜெந்தினா பாக்லாண்ட்ஸ் தீவு கடல் இடைவெளி கிட்தட்ட 300 - 500 மைல்கள்)

uk இராணுவம் பின் ஆய்வில், ஆர்ஜெந்தினா இடம் ஏவுகணை இருந்த்து இருந்தால் அநேகமாக தோல்வியில் முடிந்த்து இருக்கும் என்ற முடிவுக்கு வந்தது.

(ஆர்ஜெந்தினா பிரான்சிடம் ஏவுகணை வாங்குவதை UK தடுத்ததை இங்கு வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்)

இரானில் - நிலம் நீளம், நீரினை ஒடுங்குவது, ஆழம் குறைவது, ஈரான் பக்கம் மலை பகுதி, அத்துடன் இரான் இடம் உள்ள ஏவுகணை, சிறிய நீர்மூழ்கி, அசையும் / தானியங்கி நீரடி கண்ணிவெடிகள் .. வேறு சில பல வசதி களும்.

(Gallipoli இல் முக்கியமாக இராணுவ போக்குவரத்துக்கு திறப்பு முயற்சி)

ஆனால் , இதில் உள்ள மிகப் பெரும் பிரச்னை, இரான் ஒரு சிறிய தாக்குதலே செய்த்து 1-2 கப்பல்களை சேதம் / தீக்கிரை ஆக்கினாலே போதும் இந்த (மேட்ற்கு / us) திறப்பை முறியடிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

659391909_26474313328901144_893319348690

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.