Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்ஜெட்டை தோற்கடிக்கும் பிரபா - ரணில் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துவோம் - அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

பட்ஜெட்டை தோற்கடிக்கும் பிரபா - ரணில் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துவோம் - அரசாங்கம் அறிவிப்பு

வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை நாளைய தினம் நாட்டுக்கு நாம் பகிரங்கப்படுத்துவோம் என்று மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அரசு தரப்பிலுள்ளவர்களை பேரம் பேசலின் மூலம் எதிர்த்தரப்பில் அமரச்செய்வதற்கு கனடாவிலிருந்து தமிழர் ஒருவர் கொழும்புக்கு வந்திருந்தார். ஹில்டன் ஹோட்டலில் பல அறைகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அந்நபர், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி.யுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவர்களின் ஊடாக பேரம் பேசலிலும் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறியதாவது:

புலிகள் ஐ.தே.க. சதி

வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியினர் பெரும் சதியில் ஈடுபட்டனர். முப்படையினரின் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாது கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ள புலிகளுக்கு, வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டிருந்தது.

மூச்சு எடுக்க இயலாது

சேலைன் மருந்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது, மூச்சு எடுக்கவும் இயலாது, குறிப்பிட்டதொரு பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வனை எமது படையினர் கொன்றொழித்தனர். இதனைக்கூட ஐக்கிய தேசியக் கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

புலிகள் முயற்சி

அரசாங்கம் முன்னெடுத்துவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை முடக்குவதற்கு விடுதலைப்புலிகள் முயற்சிக்கின்றனர். அதற்கான சகல நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.

கனடா தமிழர் வருகை

இதனடிப்படையில், கனடாவிலிருந்து தமிழர் ஒருவர் அண்மையில் கொழும்பில் வந்திருந்தார். ஹில்டன் ஹோட்டலில் பல அறைகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அவர், ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி.யுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அரசு தரப்பிலுள்ளவர்களை எதிர்த்தரப்பிற்கு மாற்றுவதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்க தான் தயாராக இருப்பதாகவும் அந்த தமிழர் கூறியிருக்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபா வரை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

http://www.tamilwin.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.