Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்துமா?

Featured Replies

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு,ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை வழமைக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது.

காங்கிரஸ் தலைவர்களையும் மத்திய அரசின் உளவுப் பிரிவையும் ஒரே நேரத்தில் உ~;ணமாக்கும் விதத்தில் பிரபாகரன் பேசியதுதான் என்ன? மத்திய அரசின் உளவுப் பிரிவான 'ரோ' அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அவர்.

'தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து முதல்வர் வெளியிட்ட இரங்கற் பா, அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேசமடைந்து புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தினார். மேலும், காங்கிரஸ் காரியக் குழுக் கூட்டத்திலும் புலிகளின் ஆதரவு நிலையைக் கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.

அதன் பிறகும் தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிப்பது தொடர்ந்ததே தவிர, முற்றிலுமாக நின்றபாடில்லை. அதனால்தான், மத்திய இணையமைச்சர் இளங்கோவன், புலிகளுக்கு ஆதரவான பாதாகைகளை அப்புறப்படுத்த வேண்டுமென எச்சரித்தார். ஆனால், அவரது உருவப் பொம்மையே தூக்கிலிடும் அளவிற்கு புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டியதைப் பற்றிய விவரம் மத்திய அரசுக்குச் சென்றவுடன் கவலையடைந்த மத்திய அரசு தனது அதிருப்தியை மாநில அரசுக்கு தெரிவித்தது.

அதன் எதிரொலியாகத்தான் கடந்த 26ம் திகதி அவசர அவசரமாக தமிழக பொலிஸ் இயக்குநர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். 'இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.' என்று அவர் கடுமையாக எச்சரித்ததன் விளைவாக தமிழகத்தில் புலிகள் ஆதரவுக் குரல்கள் அமைதியாகின.

ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்பு தமிழ்நாட்டில் அடங்கியிருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலை இப்போது வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்தது தான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நேரத்தில் தான் புலிகள் அமைப்பு கடைப்பிடிக்கும் மாவீரர் தினமான நவம்பர் 27 ல் பிரபாகரன் என்ன பேசுகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தோம். கடந்தாண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு தனது பேச்சில் பிரபாகரன் தமிழ் நாட்டில் புரட்சியை உருவாக்கும் விதத்தில் இந்திய அரசைக் குறைகூறும் விதமாகவும் பேசியதுதான் மத்திய அரசைக் கவலையடைய வைத்தது.

பிரபாகரன் தனது பேச்சில் 'எமது மக்களின் இந்த நீதியான, நியாயாமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடாந்தம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. மாறாக, எம் மண் மீதும் மக்கள் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது. அறுபது ஆண்டு காலமாக அநீதி இழைக்கபட்டு அடக்கு முறைக்கு ஆட்பட்டு சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக எம் மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவொரு அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு பாராமுகமாகச் செயற்படுகின்றது' என்று பேசியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பிரபாகரன் பேசியதுதான், தனிநாடு என்ற கோரிக்கையை தமிழ்நாட்டுத் தலைவர்கள் மறந்தே போய்விட்ட இந்த நேரத்தில் தமிழர்களுக்கென்று தனிநாடு உருவாக வேண்டுமென்ற பிரிவினை வாதத்திற்கு விதை தூவும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது என்பதுதான் மத்தி அரசை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

'பூமிப்பந்தெங்கும எண்பது மிலியன் (எட்டுக் கோடி) தமிழர் பரந்து வாழ்ந்த போதும் எமக்கென ஒரு நாடு இல்லாமமையால்தான் இந்தப் பரிதாப நிலைக்கு, இந்த மோசமான நிலைகமைக்கு காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய எழுச்சி நாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளாந்தெழுமாறு வேண்டிக் கொள்கிறேன்' என்று பேசியுள்ளார் பிரபாகரன்.

'எட்டுக்கோடி தமிழர்கள் என்று அவர் கூறுவது இந்தியாவிலுள்ள தமிழர்களையும் சேர்த்துத் தான் என்கிறபோதுதான் இந்தப் பேச்சின் மூலம் இந்தியா இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்று மத்திய அரசு கவலையுடன் பிரபாகரனின் பேச்சை ஆராய்ந்து வருகிறது' என்றார்.

பிரபாகரனின் இந்தப் பேச்சுக் குறித்தும் மத்திய ஜவுளித்துறை இணயமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். நடாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்படடிருந்த போதும் பேசினார்.

'இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ற எங்களுக்கு பிரபாகரன் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இங்கே நிம்மதியாக நாட்டுணர்வோடு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பற்றுகின்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் இந்திய நாடு என்பது ஒரே நாடு. இதில், பல்வேறு கலாசாரங்கள், பலவேறு இனங்கள், பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் கூட நாங்கள் எல்லோரும் இந்தியர்கள் தான்.

இந்தியா இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சி பெற்று உலகத்திலேயே மிகச் சிறந்த நாடாக வருவதற்கான இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் அவருக்குத் தேவையில்லை.

இந்த நேரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவித்ததாக வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி பல இடங்களில் காங்கிரஸ்காரர்கள் போராட்டங்களும் வீதி மறியல்களும் நடத்தியதன் பயனாக தமிழக அரசு இன்றைக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களைக் கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று சொல்லியும் விளம்பரங்கள் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக என் நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழக அரசுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நன்றி : குமுதம் ரிப்போட்டர்.

ஒரு மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கக் கூட மத்திய அரசின் உத்தரவைப் பெறவேண்டிய அவலத்தில் தமிழரின் சுதந்திரம் அங்கு கொடிகட்டிப் பறக்கிறது. ஜெய் ஹிந்த்.

கன்னடத்து பின்னணி கொண்ட திரு.ஈ .வெ.ராமசாமியின் பேரனான திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் எல்லாம் நாங்கள் தமிழ் பற்றையோ, தமிழர் நலனில் அக்கறையையோ எதிர்பார்க்கவில்லை. அன்று இவர் பாட்டானார் தமிழரை காட்டுமிராண்டி என்றார், இன்று பேரன் அரசியல் வியாபாரியாய் மாறி தமிழர்களை டெல்லிக்கு மொத்தமாக விற்கப் பார்க்கிறார். அவ்வளவு தான்.

உண்மையான தமிழர்கள் சப்பாத்திக்கும் ரொட்டிக்கும் கோவணத்தை அடகு வைத்து வயிறு வளர்ப்பதில்லை என்று திரு.இளங்கோவன் போன்றோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

என்னும் சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளின் வரிகள் திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றவர்களுக்கும் நிச்சயம் ஒருநாள் நிஜமாகும்.

திரு.இளங்கோவன் அவர்களே! எட்டுக்கோடி தமிழர்களுக்கு வக்காலத்து வாங்க பிரபாகரன் யார் என்று உங்களை போன்றவர்கள் கேட்பதால்...,

கன்னடத்தில் இருந்து தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த பரம்பரையை சேர்ந்த நீங்கள், எப்போது எட்டு கோடி தமிழர்களில் ஒருவர் ஆனீர்கள் என்று நாகரீகம் இன்றி நாங்கள் உங்களை கேட்கமாட்டோம்.

அப்படி உங்களை போல பஞ்சம் பிழைக்க வந்தவர்களை அவமதிப்பது தமிழர் பண்பாடும் அல்ல

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

:) பெரியார் மட்டுமல்ல, தமிழினத் தலைவன் என்று தன்னை கூறிகொள்ளும் கருனானிதிகூட தெலுங்கர் தான். நடிகர் விஜயகாந் தமிழர்பால் அக்கறை உள்ளவர் என்று காட்டிக் கொண்டாலும் அவரும் தெலுங்கைச் சேர்ந்தவர்தான்.

உண்மையான தமிழர் ஆழாத தமிழ்நாட்டில் நாம் எப்படி எமக்குச் சார்பான நிலையை எதிர்பார்ப்பது ?

இவர்கள் தமிழரின் பெயரால் தமிழன் மேல் மிளகாய் அரைத்துவரும் பிழைக்க வந்த வந்தேறு குடிகள். யாராரோ தங்களை ஆழுவதற்குச் சண்டை போடும்போதும் தமிழன் மட்டும் தூங்கி கொண்டு இருக்கிறான். ரஜனிகாந்துக்கும், குஷ்புவுக்கும் கோயில் கட்ட வேண்டிய முக்கியமான வேலை இருக்கும்போது இந்த அரசியல் எல்லாம் யாருக்கு வேண்டும் ?!!!

அடிமை வாழ்வுக்கு ஆசைப்படும் இளங்கோவன் போன்ற சோனியா விசுவாசிகளுக்கு பாராளுமன்ற பதவி எல்லாம் தேவயில்லை. வெறும் சோனியா வீட்டு வாசலில்....வேலை போதும், அவர் தனது பிறவியின் புண்ணியம் என்று வாழ்நாள்முழுதும் வாலாட்டிக் கொண்டு இருப்பார்.

:) பெரியார் மட்டுமல்ல, தமிழினத் தலைவன் என்று தன்னை கூறிகொள்ளும் கருனானிதிகூட தெலுங்கர் தான். நடிகர் விஜயகாந் தமிழர்பால் அக்கறை உள்ளவர் என்று காட்டிக் கொண்டாலும் அவரும் தெலுங்கைச் சேர்ந்தவர்தான்.

உண்மையான தமிழர் ஆழாத தமிழ்நாட்டில் நாம் எப்படி எமக்குச் சார்பான நிலையை எதிர்பார்ப்பது ?

இவர்கள் தமிழரின் பெயரால் தமிழன் மேல் மிளகாய் அரைத்துவரும் பிழைக்க வந்த வந்தேறு குடிகள். யாராரோ தங்களை ஆழுவதற்குச் சண்டை போடும்போதும் தமிழன் மட்டும் தூங்கி கொண்டு இருக்கிறான். ரஜனிகாந்துக்கும், குஷ்புவுக்கும் கோயில் கட்ட வேண்டிய முக்கியமான வேலை இருக்கும்போது இந்த அரசியல் எல்லாம் யாருக்கு வேண்டும் ?!!!

நான் மேலே எழுதியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பிறப்பால் "தூய தமிழர்கள்" என்னும் அடிப்பைடைவாதம் எனக்கு சரியாக தோன்றவில்லை. அந்த அடிப்படையில் பார்த்தோம் என்றால் நாம் யாருமே தூய தமிழர்களாக இருக்க முடியாது. தமிழுணர்வு கொண்டவர்கள், தமிழரை உறவாக மதிப்பவர்கள், தமிழையே முதல் மொழியாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்றே கொள்ளப்படவேண்டும்.அப்படி செயல்படுவார்களானால் திரு.இளங்கோவன் போன்றவர்களும் தமிழர்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஈழத்திலேயே பிறந்து இனத்தையே விற்றுப்பிழைக்கும் செந்தமிழ் செல்வர்களான டக்ளஸ், கருணா, சங்கரி போன்றவர்களை விட பெயருக்காவது இருந்து விட்டு ஒரு தடவையேனும் குரல் கொடுக்கும் விஜயகாந்த் போன்றவர்கள் கொஞ்சமாவது மனசாட்சி உள்ள தமிழர்கள் என்று தான் நான் சொல்வேன். நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் விஜயகாந்த் தெலுங்கர் என்றால் அண்ணன் வைகோவும் அதற்குள்ளேயே வந்து விடுகிறார். வைகோ அவர்கள் என்னையும் விட சிறந்த தமிழன் என்றே நான் சொல்வேன். 19 மாதங்கள் நான் தமிழுக்காக சிறை சென்றதில்லை! தமிழர் என்ற அடையாளம் பிறப்பு சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, உணர்வு சம்பந்தப்பட்டதும் கூட

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: வெற்றி வேல்,

மன்னிக்க வேண்டும், தமிழ்நாட்டுத் தலைவர்களின் ஈழத் தமிழர் தொடர்பான கொள்கையென்பது இன்னும் எவராலும் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்செல்வன் இழப்பிற்காக இரங்கல் கவிதை எழுதிய முதல்வர், பின்னர் அதே தமிழ்செல்வனுக்காக ஆர்ப்பாட்டம் செய்த வைகோவையும், நெடுமாறனையும் சிறையில் அடைக்கிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரிக்கும் எவரும் கைது செய்யப்படுவர் என்று தனது போலீசுத் தலைவரை வைத்து எச்சரிக்கையும் செய்கிறார். இவ்வாறு தருணத்திற்கு தருணம் குட்டிக்கரணம் அடிக்கும் தமிழக அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது இவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கூட, தமிழ் ரத்தம் ஊறும் உண்மைத் தமிழர்களாக இல்லாதபடியினால்தான் இப்படியெல்லாம் நடக்கிறார்களோ என்ற எனது ஆதங்கத்தைத் தான் எழுதினேன்.

தவிரவும் வைக்கோவும் விஜயகாந்தும் தமிழர் பால் கொண்ட பற்று நான் அறியாதது அல்ல. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எல்லாருமே அடிப்படையில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்பதைச் சுட்டிக் காட்டவே இவர்களது பெயரையும் பாவிக்க வேண்டியதாயிற்று. நான் பாவித்த விதம் பிழைதான் , ஒப்புக் கொள்கிறேன்.

கருணா, தேவானதா, சங்கரி பற்றிக் கூறீனீர்கள். தமிழர்கள் என்று வரும்போது ஏனோ இவர்கள் தமிழர்களாக எனக்குத் தோன்றுவதில்லை. ஏதோ இன்னொரு நாட்டில் வாழும் இன்னொரு இனம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.