Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்குப் பின் அவரின் மனைவி தலைவியாகும் சாத்தியம். "லங்காதீப" வின் புதிய ஆராட்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி அண்மைக் காலங்களில் பொதுநிகழ்ச்சிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அண்மையில் புலிகள் இயக்கத்தால் அமைக்கப்பட்ட முதியோர் இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மதிவதனி தலைமை தாங்கி அதனைத் திறந்து வைத்துள்ளார். இந்த முதியோர் இல்லம் கிளிநொச்சில் அன்புச்சோலை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் எனக் கூறப்பட்டாலும் அந்த நிலையம் உண்மையில் அரச படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் மனைவிமார், பெற்றோர் உறவினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டதாகும். உயிரிழந்த புலிகள் இயக்கத்தவரின் `மாவீரர் குடும்ப'ங்களின் நலன்களை கவனிப்பதற்காக புலிகள் இயக்கத்தால் அமைக்கப்பட்ட நலன்புரி குழுவின் தலைவராகிய திருக்குமரன் எனப்படும் இயக்கத் தலைவரும் மேற்படி முதியோர் இல்லம் மாவீரர் குடும்பங்கள் வசிப்பதற்கே அமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த முதியோர்இல்லத்தில் 28 பெண்கள் உட்பட 53 பேருக்கு அனைத்துப் பராமரிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முதியோர் இல்லத்திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, தமிழ்ச்செல்வனின் மனைவி, புலிகளின் விமானப்படைப் பிரிவை உருவாக்கிய சங்கரின் மனைவி ஆகிய உயர்மட்ட புலிகள் இயக்கத் தலைவர்களின் மனைவிமார்கள் கலந்து கொண்டுள்ளனர். அரச பாதுகாப்புத்துறையின் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் கணிப்பீடுகளில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப பிரபாகரனின் மனைவி இப்படியாகத் திடீரென்று பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மக்களிடையேயும் ஊடகங்களிலும் தோன்றியிருப்பது தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதற்குப் பின்னணியில் புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் உள்நோக்கங்கள் இருப்பதாகவும் இதற்கேற்ப புலிகள் இயக்கத்தில் `புதிய அரசியல்' செயற்பாட்டுத் திட்டம் ஒன்று இடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அரச படையினரின் தீவிரமான தொடர் தாக்குதல்களால் மன்னார், வவுனியா, முகமாலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தினமும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையிலும் அவர்கள் பயத்திலும் திகிலிலும் மனத்தைரியமும் நம்பிக்கையும் இழந்துவரும் நிலையிலும் அவர்களுக்கு மனோரீதியில் உற்சாகம் அளிப்பதற்காகவே இவ்வாறு பிரபாகரனின் மனைவி பொது நிகழ்ச்சிகளில் மக்களுடனும் இயக்க உறுப்பினருடனும் தோன்ற ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புலிகள் இயக்கத்தில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் சேருவதற்குப் பயந்து ஓடி ஒளித்துவரும் நிலையில் இயக்கத்துக்காக உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரு பிரசார நடவடிக்கையாகவும் பிரபாகரனின் மனைவி இவ்வாறு பொது நிகழ்ச்சிகளில் மக்களிடையே வர ஆரம்பித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக புலிகள் இயக்கத்தில் பெண் உறுப்பினர்களைப் பெருந்தொகையில் சேர்ப்பதற்கும் பிரபாகரன் தன் மனைவி மதிவதனியை பொது இடங்களுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அண்மைக் காலங்களில் அரச படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகள் இயக்கத்தினரில் பெரும் பகுதியானோர் பெண்களே எனவும் இவ்வாறு கடந்த சில மாதங்களில் மன்னார் வலிமடை எல்லைப் பிரதேசங்களில் அரச படையினருடனான மோதல்களில் பெருந்தொகையான புலிகள் இயக்கப் பெண் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயக்கத்தில் பெண்களை அவசரமாகச் சேர்க்க வேண்டிய கட்டாய நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டுள்ளதாலேயே இவ்வாறு அவருடைய மனைவி வெளியில் மக்களுடன் நடமாடத் தொடங்கியுள்ளார் எனவும் தெரிகிறது. இந்தப் பொது நிகழ்ச்சிகளில் பிரபாகரனின் மனைவி மட்டுமன்றி மேற்படி தமிழ்ச்செல்வன், சங்கர் ஆகியோரின் மனைவிமாரும் சேர்ந்தே தற்போது பொதுநிகழ்ச்சிகளில் தோன்றி புலிகள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அடுத்து அண்மைக் காலங்களில் அரச விமானப் படையினர் புலிகள் இயக்கத் தலைவர்கள் நடமாடும் பகுதிகளையும் தங்கியிருக்கும் நிலையங்களையும் புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறிந்து குறிதவறாமல் தீவிர விமானக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் இயக்கத் தலைவர்கள் வெளியில் நடமாட அஞ்சி தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திவிட்டதாகவும் இதனாலேயே இப்போது புலிகள் இயக்கத் தலைவர்களுக்குப் பதிலாக அவர்களின் மனைவிமார்கள் வெளியே வந்து நடமாடி இயக்க செயற்பாடுகளுக்கு உதவி வருவதாகவும் புலனாய்வுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வகையில் அண்மையில் விமானப் படையினரின் தாக்குதல்களால் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் காயங்களுக்கோ, விபத்துக்கோ உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளிவந்திருப்பதால் மேற்படி முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரபாகரன் தலைமை தாங்கித் திறந்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கக்கூடும்.

அதனாலேயே அவருடைய மனைவி மதிவதனி பிரபாகரனுக்குப் பதிலாகத் தலைமை தாங்கி முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார் எனக்கருத முடியும். மேலும் இதிலிருந்து பார்க்கும் போது பிரபாகரன் காயப்பட்டாலோ உயிரிழந்தாலோ அந்த சந்தர்ப்பத்தில் அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி மதிவதனியே தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடும் எனக் கருதவும் இடமுண்டு.

லங்காதீப விமர்சனம் : 23.12.2007

தினக்குரல்

Edited by piththan

உதை லங்காதீப ஆராய இல்லை... DBS ஜெயராசா எண்ட அண்ட புளுகன் ஆராஞ்சவர்...

Succession Stakes in LTTE: After Praba Who?

http://transcurrents.com/tamiliana/archives/467

தலைவருக்கு ஏற்ற துணைவியார்...! தொடரட்டும் அவர் பணி.!

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு பெரிய சோடிப்புக்கு முன்னால் வரும் சிறிய சோடிப்புக்கள்.

புலிகள் இயக்கம் குடும்பச் சொத்தாகிறது. பிரபாகரனின் மேலாதிக்கம் அதிகரிக்கிறது..! இப்படி ஆராய்வுகள் தொடரும்...! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

டி.பி.எஸ் முதலில் அவுட்டு விட்ட புலுடாவுக்கு கிறிஸ்மஸுக்கு செலவளிக்கத் தேவையாக பணம் கிடைக்கவில்லைப் போலிருக்கிறது. அதுதான் போனஸ் வாங்க இன்னுமொன்றை அவிட்டுவிட்டிருக்கிறார்.. சர்வதேசத் தரம் வாய்ந்த ஊடகவியலாளர் பஞ்சத்தில் வாடுவது நல்லதில்லைத்தான்.

தமிழரின் போராட்டம் பிரபாவின் குடும்பச் சொத்தாகிறது என்று காட்ட சோடிக்கப்பட்டதொரு கட்டுக் கதையாக இது இருக்காலாம். சிங்களவனின் காதில் பூச் சுற்றி முடிந்தது. இனி எமது காதிலுமா?

ஜானா

ஒன்று மட்டும் மட்டும் இலங்கை பலவழிகளிகளிலும் எமதுபோரட்டத்தை நசிக்கி இல்லாமல் செய்வதற்கு கடும் முயற்சி செய்கிறது...இதில் ஒன்று தகவல் புலனாய்வு......இதில் தமிழ்மக்கள் மக்கள் தெரிந்தும்,தெரியாமலும் பலகாரணங்களினினால் இலங்கையின் வலைப்பின்னலில் மாட்டி எமது தாயக

விடுதலைக்கு பெரும் இழப்புகளுக்கு உதவுகிறார்கள்...இலங்கையரசின் திட்டமும் அதுவே ....

எனவே எமது மக்கள் இலங்கையின் தந்திரங்களில் எடுபடாது விழிப்பாக இருந்து இவ்வளவுகால போரட்ட

இழப்புகளுக்கும் மாவீரர்களின்(20 000) மக்களின் (80 000) இழப்புகளையும் அர்த்தமில்லாமல் செய்யாமல் தாயக விடுதலையை ஊக்கி உலகமுள்ள தமிழர்களின் ஒற்றுமை மூலம் செயல்படுத்த உதவியாக இருப்போம்..

இஸ்ரேல் உருவாகும் போது எப்படி உலகமுழுவதும் அம்மக்கள் செயல்பட்டு தன்னப்பிக்கையுடன் நாட்டை

உருவாக்கி இன்றும் உறுதியாக கட்டிக்காப்பாற்றுகிறார்கள்..

.அது போன்று தமிழ் மக்களும் செயல்படவேண்டிய நேரம் இது...

வீண் அரட்டைகள், விவாதங்களை விட்டு தாயகவிடுதலையுடன் உங்கள் வாழ்க்கையையும் எப்படி மேம்படுத்தலாம் என சிந்தியுங்கள்....கூடும் இடம் எல்லாம் எப்படி விடுதலைக்கு உதவலாம் என்பதை சிந்தியுங்கள்....எதிரி உலக நாடுகளின் பலத்துடன் அசுரன்போன்று தமிழ் மக்களை பூண்டோடு அழிப்பதற்கு

நிற்கும்போது நமது தமிழ் மக்களின் ஒற்றுமையே எமது பலம்.....மூளைக்கு வேலை கொடுங்கள்......தன்னம்பிக்கையை வளருங்கள்....வெற்றி நிச்சயம் எமது பக்கம்.......காலத்தின் தேவை 14 ஐ

பாருங்கள் புரியும்....எதிரி எம்மக்களின் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானித்து காதுகளை கூர்மையாக

வைத்துள்ளான்.... நீங்கள் என்ன நிலைமையில் இருக்கிறீகள்? உங்களையே நீங்கள் கேளுங்கள்?......

இதில் என்ன இருகின்றது மதிவதனி அக்காவுக்கு அனைத்து தகுதியும் உண்டு ஒரு கணவனின் வெற்றிக்கு பின்னால் அவரின் மனைவி இருப்பார் எந்த மனைவியும் தன் கணவன் உயிர் ஆபத்துள்ளவனாக இருக்க விரும்பமாட்டாள் ஆனால் தலைவரின் துணைவியார் காடுகளிலும் தலைவருடன் போராட்ட வாழ்கையில் இணைந்தவர் தலைவருடன் கஸ்டப்பட்டவர் அவரின் அண்மையான படங்களே அதற்கு சாட்சி அவர் சொகுசாக இருக்கவில்லை என்பதனை அண்மையில் வெளிவந்த அவரின் படங்களே சாட்சி தேசியத்தலைவரின் துணைவியார் ஒரு போராளியே அவருக்கு அந்த தகுதி நிச்சயம் உண்டு.அது மட்டுமல்ல குடும்ப சொத்து சொத்து என எந்த கேனயன் புலம்பினாலும் நமக்கு என்ன நமக்கு தெரியும்தானே எமது இயக்கம் மக்கள் இயக்கம் என தலைவரின் குடும்ப அங்கத்துவர் ஒவ்வொருவரும் தம்மை கவனிக்காது நாட்டுகாக உழைகின்றனர் எமது தலைவரின் குடும்பமும் அவர்களின் நலனும் நமக்கு முக்கியம் வரலாற்று திருமகனை நமக்கு முழுவதுமாக தந்த தியாக குடும்பம் தேசியத்தலைவரின் குடும்பம் ஆகவே அந்த குடும்பத்தினை குடும்ப சொத்து அது இது என சொல்லி அசிங்கப்படுத்தாதீர்கள்.அசிங

  • கருத்துக்கள உறவுகள்

ஆக புலிகளின் எதிர்காலம் பிரபாகரனின் குடும்பத்திற்குள் வந்துவிட்டதாகப் புலம்புபவர்களொன்றை மட்டும் மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள். அதாவது புலிகள் தமது இலட்சியத்தினை எப்படியும் அடைந்தே தீருவார்கள் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

காலத்தினது தேவை அதுதான் என்றால் திருமதி மதிவதனி தலமை தாங்குவதில் தவறில்லை. எமது தளபதிகளும் போராளிகளும் அவருக்குத் துணையிருப்பார்கள் என்பது நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை எப்படி எழுதுவது என்ற கற்பனைக்கே அளவில்லை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய தலைவர் விமானத்தாக்குதலில் காயமடைந்தார் என்று ஏற்கனவே அவிழ்த்துவிடப்பட்ட பொய்யை மெய்யாக்க அதன் தொடர்சியாக எதிரியால் கட்டவிழ்த்து விடப்படும் அடுத்தகட்ட பொய் பிரச்சாரமாகத்தான் இதை பார்க்க வேண்டும். தலைவர் திடமாக இருந்து செயல்படும் போது, அடுத்து யார் என்ற கேள்விக்கே இடமி்ல்லை. புலிகளின் இயக்கத்தை பொறுத்தவரை அடுத்த யார் தலைமை தாங்குவது என்று கவலைப்பட அங்கு பொறுப்பு வாய்ந்த, தகுதிபடைத்த நபர்கள் யாரும் இல்லாமலுமி்ல்லை. தற்போதைய தேவை, எல்லோரும் எதிரியின் உளவியல் ரீதியான போருக்கு இடங்கொடாமல் இருப்பதே.

பிறக்க இருக்கும் 2008 ஆம் ஆண்டு, நம் அனைவரின் எதிர்பார்பையும் பூர்த்தி செய்யும் என்று நம்புவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் காலத்தில் தமிழீழம் காணுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.