Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் டிச.31 இல் கண்டன ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம்

Featured Replies

சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் டிசம்பர் 31 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர்

பங்கேற்பதை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகம் அறிவிப்பு

இலங்கை, சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் நாளை மறுதினம் 31ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெள்ளிக்கிழமை இதனை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அவர்மேலும் கூறியவை வருமாறு:

2008 பெப்ரவரி 4ஆம் திகதி யன்று வரவிருக்கும் இலங்கைத் தீவின் சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய நாட்டின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனித உரிமை, மனித நேயம் இவற்றின் மீது மதிப்பு வைத்துள்ள அனைவருக்கும் அதிர்ச்சி தந்துள்ளது.

1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்ற நிலையில், அத் தீவில் வாழும் தமிழர்கள் இரண்டாம் தரக்குடிகளாக ஆக்கப்பட்டனர். எடுத்த எடுப்பிலேயே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தமிழ் மொழியின் உரிமைப் பறிப்பு, கல்வி உரிமைப் பறிப்பு, வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு என்று அடுக்கடுக்காகத் தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அறப்போராட்டத்தையே தொடக்கத்தில் நடத்தி வந்தனர். இலங்கை சுதந்திரதினத்தை துக்க நாளாகத் தமிழர்கள் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதுதான் உண்மை.

தற்போது இலங்கை ஜனாதிபதியாக இருக்கும் ராஜபக்ஷவும் சரி, அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜே.வி.பி. (ஜனதா விமுக்தி பெரமுன), ஜே.எச்.யு. (ஜாதிக ஹெல உறுமய) ஆகிய கட்சிகளும் சரி கூட்டாட்சி கூடாது; ஒற்றை ஆட்சி முறை தேவை என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவுக்கு விரோதமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஹிட்லருடன் கூட்டு வைப்பதற்கு நிகரானது ராஜபக்ஷ கூட்டு வைத்துள்ள கட்சிகள் என்றும் சந்திரிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

நவம்பர் 2005இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகியும் அதுவரை அமுலில் இருந்து வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தார். நடுநிலை நாடாக இருந்து சமாதானப் பணிகளை மேற்கொண்டு வந்த நோர்வே நாட்டை அவமானப்படுத்தி வெளியேற்றினார். சொந்த நாட்டு மக்கள் மீதே விமானத் தாக்குதல் நடத்தினார். இது இலங்கையைத் தவிர வேறு எங்கும் கேள்விப்பட்டிருக்க முடியாத ஒன்று!

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாகியிருக்கின்றார்கள். அதில் ஒன்றரை லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகள். 4, 000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கிருந்த விடுதியைத் தாக்கி 61 பச்சிளம் மலர்களை சுட்டுப் பொசுக்கினர்.

முக்கிய பாதையை அடைத்து உயிர் காக்கும் மருந்துகளும், உணவுப் பொருள்களும் கிடைக்க முடியாத நெருக்குதல்களை தமிழர்களுக்கு ஏற்படுத்தினர். ஒரு கிலோ அரிசி ரூ. 150க் கும், ஒரு மூடை சீனி ரூபா 10 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டன என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம்.

இலங்கைத் தலைநகரில், தங்கும் விடுதியில் தங்கியிருந்த 379 தமிழர்கள், ஓர் இரவில் வலுக்கட்டாயமாக தமிழர்கள் வாழும் பகுதிக்குத் துரத்தப்பட்டனர். இந்தியா உள்பட, ஐ.நா. முதற்கொண்டு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இலங்கை உச்ச நீதிமன்றமும் அரசின் நடவடிக்கைக்குத் தடை விதித்தது. சொந்த நாட்டில் அந்த நாட்டுமக்கள் நடமாடுவதற்குக்கூடத் தடையென்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது.

1983 முதல் 2007வரை 300 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை படுகொலை செய்துள்ளது. இத்தனை நடவடிக்கைகளும் இந்திய அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். இதில் நியாயமாக இந்தியா நடந்து கொள்ளவில்லை என்ற அதிருப்தி உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல நடுநிலையாளர்கள் மத்தியிலும் நிலவுகிறது.

இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு இந்திய அரசுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தும் ஏனிந்த வஞ்சனை என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்து நிற்கிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக கடந்த காலத்தில் நடந்தது உண்டா?

இந்திய சீனப்போரின் போதும் சரி (1964), இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போதும் சரி (1971) இந்தியாவுக்கு எதிராகத்தானே இலங்கை நடந்து வந்திருக்கிறது? ஏன்? அண்மையில் ஐ.நாவின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இந்தியா சார்பாகப் போட்டி போட முன்வந்தபோது , அதன் வெற்றியைக் குலைக்கும் வகையில் இலங்கை நடந்து கொள்ளவில்லையா? ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கூட ராஜீவ் ஜெயவர்தன ஒப்பந்தத்தை நேர்மையாக நிறைவேற்றித் தந்ததா? வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு என்னவாயிற்று? இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் நிலை சிறப்பாக இல்லை.

மாறாக இலங்கை இராணுவத்துக்குப் போர்க் கப்பல் வழங்குவது, ராடார் சாதனங்களைக் கொடுத்து உதவுவது, இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பது போன்ற முறைகளில் இந்தியா, தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டபோதெல்லாம் தமிழ் நாட்டில் மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் கலைஞர் இந்தியப் பிரதமருடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்பொழுது நிலை என்றவென்றால், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற முறையில், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை மனிதநேயச் சிந்தனையாளர்களின் எண்ணங்களுக்கு விரோதமாக இந்திய நாட்டுப் பிரதமர் இலங்கையில் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளச் செல்கிறார் என்றால், இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்தி விடமுடியாது. ஏற்றுக்கொள்ளவும் இயலாது. பிரதமர் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இந்தியப் பிரதமர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். தமிழ் நாட்டு மக்களின் உணர்வை மதிக்கவேண்டும். இலங்கையில் நடப்பது மனிதப்படுகொலைதான் என்று பிரதமர் இந்திரா காந்தி கூறியதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையையும், விடுதலைப் புலிகளையும் இணைத்துவிட்டு, அத்தமிழர்களை அநாதையாக்கக் கூடாது என்பதை நன்கு உணர்ந்துள்ள நமது தமிழக முதலமைச்சர், பிரதமரிடம் தமிழர் தம் உணர்வைத் தெரியப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மனிதப் படுகொலை நடக்கும் இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்திரனாகப் பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தும் வகையில் வரும் 31.12. 2007 திங்கள் காலை 11 மணிக்கு சென்னை நினைவரங்கம் அருகில் (மெமோரியல் ஹோல்) வேண்டுகோள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். இதில் ஒத்தகருத்துள்ள அனைவரும் கட்சிகளைக் கடந்து பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்றார். (க 09)

http://www.sudaroli.com/pages/news/today/10.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சிங்கு,

சிங்களத்தின் மீது அவ்வளவு கரிசனையோ?

யோசியுங்கள். சிறிது காலம் கிடக்கிறது.

யாருக்குத் தெரியும்? நீங்கள் காலடி எடுத்துவைக்கும் கணத்தில் கூட உங்கள் அபிமான சிங்களம் தீப்பற்றி எரியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் கழகத்திற்கு நன்றிகள். ஆனாலும் இந்தப் போராட்டமெல்லாம் இந்திய அரசின் காதில் ஏறப்போவதில்லை. அவர்கள் சிறிலங்கா அரசை ஆதரிப்பது என்ற முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

இலங்கை ஒருநாடாக இருப்பதுதான் இந்திய நலன்களுக்கு உகந்தது. அது இரு துண்டுகளாக உடைந்தால் ஈழம் என்ற புதிய நாட்டுக்கு இந்தியாவின் எதிரி நாடு ஒன்று உதவும் என்ற பயம் காரணமாக அது( இந்தியா ) ஈழம் உருவாவதை இறுதிவரை எதிர்த்தே தீரும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தென்மாநிலங்களில் பார்ப்பணிய ஆதிக்கத்திற்கெதிராக திராவிடர் இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இன்று இந்திய வெளியுறவுத் துறையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பிராமணர் சிலர் இந்திய அரசை தவறாக வழிநடத்துவதும் மற்றொரு காரணம்.

அதுபோல ஈழம் உருவாகும் பட்சத்தில் இந்தியா தொடர்ந்தும் நமக்கு தன்னாலான முழு இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இது தமிழீழம் தன்னிடம்( இந்தியாவிடம் ) மண்டியிடும் வரை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இதுக்கெல்லாம் போராட்டம் தேவை இல்லை கருணாநிதி நிலைமை விளக்கி தமிழகமக்களின் உணர்வுகளை மதிக்க சொல்லி நேரடியாக பிரதமரிடம் சொல்லலாம்.

பிரதம‌ர் இல‌ங்கை செ‌ல்ல‌ ‌திருமாவளவ‌ன் எதிர்ப்பு

சென்னை (ஏஜென்சி), 29 டிசம்பர் 2007 ( 14:39)

இலங்கை‌யி‌ல் ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌த்து‌கிற சுத‌ந்‌திர ‌தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

ஈழத் தமிழர்களை கடந்த கால் நூற்றாண்டுக்கு‌ம் மேலாக ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருவதுடன், அந்த ராணுவம் நடத்துகிற விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

அவ்வாறு அவர் விழாவில் கலந்து கொண்டால் இத்தனை காலமும் சிங்கள ராணுவம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது சரிதான் என்று நியாயப்படுத்துவதாகவும், மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அமையும். அத்துடன் தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு பொருட்படுத்தாமல் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும்.

எனவே பிரதமர் அந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 31 ‌ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் கலந்து கொள்கிறோம். இது தொடர்பாக முத‌ல்வர் கருணாநிதி ம‌த்‌திய அரசை வற்புறுத்தி பிரதமர் இலங்கை செல்வதை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

யாகூ தமிழ்(மூலம் - வெப்துனியா)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் துக்கநாளில் பங்கேற்க

கொழும்பு செல்கிறார் மன்மோகன்சிங்

தமிழர்களே எதிர்க்குரல் எழுப்புக!

1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கைக்கு ஆங்கிலேயர் விடுதலை வழங்கினர். அந்த நாளை சுதந்திர நாளாக இலங்கை கொண்டாடி வருகிறது.

ஆனால் 1948ஆம் ஆண்டில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் எனக் கூறப்படும் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தினை சிங்கள அரசு நிறைவேற்றி அவர்களை நாடற்றவர்களாக்கியது. சிங்கள அரசு அளித்த பதவிகளில் அமர்ந்திருந்த தமிழர்களைத் தவிர மற்ற பெரும் பான்மையான தமிழர்கள் தங்களின் சகோதரத்தமிழர்களான மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கொதிப்படைந்தனர். இலங்கைத் தமிழர் காங்கிரசின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்து வெளியேறினார். அவர் தலை மையில் ஈழத்தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய அனைத்துத் தமிழர்களும் ஒன்றுதிரண்டு 1949ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சுதந்திர நாளை தமிழர் துக்கநாளாகக் கடைப்பிடித்து புறக்கணித்து வருகின்றனர்.

கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்கள இனவெறி ஆட்சியில் மலையகத் தமிழர்கள் குடியுரிமைகளை இழந்தனர். ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலஉரிமைகள் பறிக்கப்பட்டன. தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. தமிழ் மொழியின் உரிமை பறிக்கப்பட்டது. தமிழ் மாணவர் களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டது. தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு தமிழர் களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. சொந்த மண்ணில் வாழ முடியாத சூழ்நிலையில் 15,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் அடைக்கலம் புகுந்தனர். இன்னும் அவர்கள் தங்கள் சொந்த மண்ணிற்குத் திரும்ப முடியாமல் வாடுகின்றனர்.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள விமானக் குண்டுவீச்சுகளினாலும், ராணுவ பீரங்கித் தாக்குதல்களினாலும் துரோகப் படைகளின் அட்டுழியங்களின் விளை வாகவும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் சிங்கள வெறியர்களின் பாலியல் வன் முறைக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக் கணக்கான தமிழர்கள் சிங்களரின் கொடுமையைக் கண்டு மனம் பேதலித்த நிலையில் உள்ளனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காரணம் ஏதும் கூறப்படாமல் சிறைபிடிக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கை அரசு மனித உரிமை களை மதிக்கவேயில்லை என இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச அறிஞர் சுதந்திரக்குழு பகிரங்கமாக கடந்த 20-12-07 அன்று குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகாலமாகத் தமிழர்களை திட்டமிட்டு இனப்படு கொலை செய்யும் சிங்கள அரசின் கொள்கை மாறவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதனுடைய வெறித்தனம் அதிகரித்தே வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழர் களின் துயரத்தைத் துடைக்க முன்வராத இந்தியப் பிரதமர் வெந்த புண்ணில் வேலைச் செருகும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள பிப்ரவரி 4ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்ல இருக்கிறார் என்ற செய்தி ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் 6 கோடி தமிழர்களின் உள்ளங்களிலும் வேதனைத் தீயை மூட்டியிருக்கிறது.

ஜெர்மனியில் யூதர்களைத் திட்டமிட்டு நாஜி வெறியர்கள் கொன்றுகுவித்துக்கொண்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

நேசன்,

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் தனது ஆதரவு முழுமையாக இருக்குமெனவும், அம்முடிவுகளுக்கு எதிராக தான் ஒருபோதும் நிற்கப்போவதில்லை என்றும் இரு வாரங்களுக்கு முன்னர் கருநாநிதி டில்லிக் கூட்டத்தின் பின் அறிவித்திருந்ததை நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறது.

அவரிடம் போய் " உண்மை நிலயை டில்லிக்கு விளக்குங்கள் " என்று நீங்கள் கேட்பது ...!!!!! பாவம் அவரது நாற்காலி போய்விடும் என்ற பயம் அவருக்கு !!!!!!!

இலங்கையின் 50 வது சுதந்திர தினத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பலருக்கு மறந்திருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.