Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்து போன வன்னி மாநகரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்து போன வன்னி மாநகரங்கள் 01 - வாவெட்டி மலை

-மயூரன்-

“ வன்னி நாடு வளர் சோலை நாடு வரியம் மூண்று விளைவுள்ள நாடு கன்னி நாடு கதிர் சோலை நாடு காரளர் வாழும் கன்னியர் நாடு” என்ற நாட்டார் பாடல் ஒன்றின் கூற்றுக்கிணங்க வான்தொடும் வலிய வண்மைக் காடுகளிடையே அமைந்திருக்கும் அடங்காப்பற்று வன்னியின் பகுதிகளில் ஒன்றான மேல்ப்பற்று வடக்கிலே அமைந்திருக்கும் வாவெட்டி மலை பல ஆய்வாளர்களின் கண்களை மறைத்திருப்பது வியப்புக்குரியது. இவ்வாவெட்டி மலையானது வெறும் புவியியல் அமைவிடமாக மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

பாலை. முதிரை. வீரை. ஆகிய வன்மரங்களும் கொண்டல் இலந்தை போன்ற மென்மரங்களும் காற்றலைகளில் அசைந்து மங்களம் ஒலிக்க வண்டுகள் ரீங்காரம் செய்ய பறவைகள் ஒலி எழுப்ப பல வன்னி மன்னர்கள் இராசதானி அமைத்து அரசாட்சி புரிந்த இறுமாப்புடன் பணியாத மலையாக நிற்கின்றது வாவெட்டி மலை. இந்த வாவெட்டி மலையின் அமைவிடத்தை நோக்கும் போது மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன் பட்ட முறிப்பு என்ற ஒரு இடம் உண்டு. அந்த மணவாளன் பட்ட முறிப்புக்கும் ஒட்டுசுட்டானுக்குமிடையில் மாங்குளத்திலிருந்து ஒன்பதாம் கட்டையில் சரித்திரப் புகழ் பெற்ற வெடுக்கு நாறி மலையிலிருந்து ஊற்றெடுத்து முத்தையன் கட்டு நீரேந்துப் பகுதிக்குச் செல்லும் போராறானது ஊடறுத்துச் செல்லுகின்றது. இந்த 9ஆம் கட்டைக்கு அண்மையில் இருந்து தெற்கு நோக்கி சிறு நடைபாதை செல்லுகின்றது. அவ்வழியே ஐந்து அல்லது ஆறு மைல்கள் சென்றால் கிட்டத்தட்ட 200 அடிகளிற்கும் மேற்பட்ட உயரம் கொண்ட வாவெட்டி என்னும் கருங்கல் மலையை அடையலாம்.

இந்த வாவெட்டி மலையில் கோயில் கட்டடச் சிதைபாடுகளும் ஒரு பெரிய இராசதானியின் சிதைபாடுகளும் பெரிய குகையும் காணப்படுகின்றது. இதில் அம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு “வாவெட்டி மாமரம் தானரசு – மாணிக்கப்பண்டாரம் பூசை செய்து” என்னும் பாடலடியும் சான்றாகின்றது. அத்துடன் இவ் வாவெட்டி மலையின் சுற்றுப்புறச் சூழலை நோக்கும் போது இம்மலையிலிருந்து பண்டாரவன்னியன் கதையுடன் தொடர்புடைய குருவிச்சியாறானது ஊற்றெடுத்துப் பாய்கின்றது. மேலும் இதற்கண்மையில் வாவெட்டைக்குளம் அழிவடைந்த நிலையில் இன்றும் காணப்படுவதோடு மேலும் சிலகுளங்களையும் காணலாம். இவை கிட்டத்தட்ட ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். என்பது ஆய்வாளர்களது கருத்து.

இங்கு ஓங்கி வளர்ந்திருக்கும் காடுகளும் கிட்டத்தட்ட இவ்வயதை ஒத்ததே. பேராறும் இதற்கு அருகாகவே பாய்ந்து சென்று இம்மலைப் பிரதேசத்தை வளம் சேர்க்கின்றது. 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஜயசிக்குறூய் இராணுவ நடவெடிக்கையின் போது இராணுவத்தினர் இம்மலைப்பகுதியூடாகவே இரகசிய நகர்வை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இம்மலையில் காணப்படும் குகையானது கிட்டத்தட்ட மூண்றடி அகலமும் நான்கடி உயரமும் உடைய வாசலைக் கொண்டுள்ளதோடு முடிவிலியான நீளத்தையும் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும். இந்தக் குகையினுள் நீண்ட தடி ஒன்றினை தஉட்செலுத்தினால் மீண்டும் மீள இழுக்க முடியாது. ஆனால் மறுநாள் காலையில் அந்தத்தடி தானாகவே வெளியே வந்திருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கும்.

இதற்கு அக்குகையினுள் கரடி இருப்பதாகவும் நாம் தடியை உட்செலுத்தும் போது அதைப் பிடித்துவிட்டு மறுநாட்காலை அக்கரடி வெளியே வரும் போது அததடியை வெளியே வீசிவிடுவதாக அங்கு வேட்டைக்குச் செல்வோர் தெரிவித்தனர். இது சாத்தியமானது ஏனெனில் இது மக்கள் நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும் இம்மலைக்கு இரண்டு மைல் தொலைவில் தான் கரடிக்குழி என்னும் காரணப்பெயர் கொண்ட இடம் இருப்பதாலும் இது சாத்தியமானது. இதைச்சிலர் அங்கு பூதம் இருக்கின்றது அதனால்தான் அத்தடி மீள இழுக்க முடியாதுள்ளதாகக் கூறுகின்றனர். இது ஏற்கமுடியாததாகும். இந்தக்குகை இருள் சூழ்ந்திருப்பதனால் இப்பிரதேசத்தை ஆராய்வதற்கு போதிய சாதனங்கள் இல்லாமையே காரணமாகும். இருந்தாலும் இப்பிரதோசம் ஆய்வுகளுக்கு உட்படாமை வருந்தத்தக்கதாகும்.

மேலும் வாவெட்டி மலையானது புவியியல் காரணிகளால் மட்டுமல்ல வரலாற்றுக்காலங்களில் கூட சிறப்புற்றிருந்ததைக் காணலாம். முதற்சங்கிலியன் காலத்தில் (கி.பி.1519-61) அவனுடைய அவைக்களப் புலவனாக விளங்கிய வையாபுரி ஐயரால் பாடப்பட்டதெனக் கூறப்படும் வையாபாடலில் 17ஆம் 96 மற்றும் 97 ஆம் பாடல்கள் வாவெட்டி மலைபற்றிக் கூறுகின்றது.

அது “மாநகர் வாவெட்டி மலை” எனக்கூறுகின்றது. அத்துடன் யாழ்ப்பாண இராட்சியத்தின் முதல் மன்னனான உக்கிர சிங்கன் சேழ இளவரசியான மாருதபுரவீக வல்லியை மணந்து வாவெட்டி மலையில் இராசதானி அமைத்து ஆட்சிபுரிந்தான். என்பதனை வரலாறுகள் வாயிலாக அறிகின்றோம். உக்கிர சேனன் புதிய தலைநகர் ஒன்றை வன்னிப்பிரதேசத்தில் உருவாக்கும் நோக்கில் வன்னி வந்தபோது வன்னி மன்னர்கள் ஏழுபேரும் எதிர் கொண்டு வன்னி நாடுகளை திறை கொடுத்து ஆள வேண்டும் எனக் கேட்க உக்கிரசேனன் சம்மதித்து உருவாக்கிக் கொண்ட தலைநகரே பூநகரி சிங்கநகராகும். என்கிறது வரலாறு. இதை சேகராசசேகரமாலை. சேகராசசேகரம். தட்சிணகைலாய மாலை. என்பன சான்று பகர்கின்றது. ஆகவே அவன் இதன்போது வாவெட்டி மலையில் இராதானி அமைத்து ஆட்சிபுரிந்தான் என்பது ஏற்புடையதாகும். இதற்கு வையாபாடலானது தனது 17ஆவது பாடலில் பின்வருமாறு கூறுகின்றது.

“பொன்னகர் திகழும் கதிரையாம் பதியில்

போய் அரண் மகவினை வணங்கிப் பின்னர்

உக்கிர சேனன்றன் பெண்ணென

இருந்தனன் அதன் பின் மன்னவன்

ஆடங்காப்பற்றினிலேகி மாநகர்

வாவெட்டி மலையில் தன்னிகரற்ற மண்டபம்

இயற்றித் தன்னரசியற்றினன் இருந்தான்”

(வையாபாடல் 17)

உக்கிர சிங்கன் மட்டுமல்ல இன்னும் பல மன்னர்களின் ஆட்சிப்பீடமாக வாவெட்டி மலை திகழ்ந்திருக்கின்றது எனலாம். யாழ்ப்பாணத்தை இரண்டு சங்கிலிய மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களில் முதலாவது சங்கிலி மன்னன் முதலில் வாவெட்டி மலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் ஆட்சிபுரிந்தான் என அறிகின்றோம். சிங்கைப் பரராசசேகரனின் கடைசி மகனான சங்கிலி மன்னன் வாவெட்டியில் ஆட்சிசெய்து கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்தை ஆண்ட தன் அண்ணனான பரநிருபசிங்கன் தென்னிலங்கை அரசர்களின் கொடுங்கோலகற்ற கண்டி சென்றான் அந்த வேளையில் சடுதியாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றி கி.பி.1519 தொடக்கம் 1561 வரையான 42 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

பலர் வாவெட்டி மலையை ஆண்டது இரண்டாம் சங்கிலியன் எனத்தெரிவித்தனர். இரன்டாம் சங்கிலியனுக்கு சேகராசசேகரன் என்பதே இயற்பெயராகும். இவனே யாழ்பாணத்தின் கடைசி மன்னன். ஆகவே இவ் 2ஆம் சங்கிலிக்குமாரன் வாவெட்டியை ஆண்டிருக்கச் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. அத்துடன் 1542 களில் மன்னாரில் கிறிஸ்தவ மதம் மாறிய அறுநூறு போரை சங்கிலி மன்னன் கொலை செய்தான். என போத்துக்கோய சாசனங்கள் பட்டையம் கூறுகின்றன. அப்படியானால் சிங்கைப் பரராசசேகரனின் மகனான முதலாம் சங்கிலியே வாவெட்டியை ஆண்டிருக்க சந்தர்பம் உண்டு. இதை வையாபாடல் தனது 99வது செய்யுளில் மிகத்தெளிவாக விளக்கியிருக்கின்றது.

“ எந்நாளுமிம் முறையே யாவரையும் வாழ்விரென

விருத்தியங்கன் மன்னனான இளவலெனும்

சங்கிலியை வாவெட்டி சாரச்செய்து முன்னோர்க்கு

புரிபூசை நிதம் தெரிசித்தே முள்ளி வளையாமூரில் மன்னான இரவிகுலப் பரராசசேகரனும் வாழ்ந்தானன்றே ”

(வையாபாடல் 99)

எனத்தெளிவு படுத்தப்பட்டிருப்பதனூடாக உணரலாம். ஆகவே வரலாற்றுக் காலங்கள் முதற்கொண்டு இவ்வாவெட்டி மலையானது பெரும் செழிப்போடு விளங்கியிருக்கின்றது. என்பதனை புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று அம்மலை யாரும் செல்லாது கைவிடப்பட்டு அழிவடைந்து காணப்படுகின்றது. எனவே இப்பிரதேசமானது ஆராய்சியாளர்களின் மறைபொருளாக இன்றும் திகழ்வது வருந்தற்குரியது. இனியாவது பல்கலைக்கழகங்ளோ தழிழீழ தொல்பொருளாய்வகமோ கவனத்திலெடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகின்றேன்.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.