Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமேஸ்வரம் இசையமைப்பாளர் நிரூ

Featured Replies

pg24.jpg

எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர்.

இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் செஞ்சாரு. இசையில் எனக்கு ஆர்வம் வந்ததுக்கு அப்பாதான் முதல் காரணம்!’’ _ தாய் மண்ணில் கழிந்த பால்ய காலத்தோடு நிருவின் பேச்சு தொடங்குகிறது. ‘‘1983_ல் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் ஆரம்பிச்சது. அப்போ எனக்கு மூணு வயசு. திடீர் திடீர்னு தெருவில் ஆட்கள் ஏன் பதட்டமா ஓடுறாங்க, அடிக்கடி ஏன் கரெண்ட் கட் ஆகுது, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வெளியே ஏன் யாரும் நடமாடுறதில்லைனு எதுவும் புரியல. ‘‘முந்தின நாள் சாயங்காலம் வரைக்கும் எங்கூட விளையாடிட்டிருந்த பையன் மறுநாள் காலையில் வெடிகுண்டுத் தாக்குதலில் காலை இழந்திருப்பான். நாள் தவறாமல் அப்பாவைப் பார்க்க வரும் நண்பரை திடீர்னு மாசக்கணக்கில் பார்க்க முடியாது. காரணம் கேட்டா, அவரை ராணுவம் கூட்டிட்டுப் போய்க் கொன்னுட்டதாக வீட்டில் சொல்வாங்க.’’ என்று கூறும் நிருவால் சில அதிகாலை நேரங்களை இன்னும் மறக்கவில்லை.

‘‘இருட்டு விலகாத காலை நேரத்துல ராணுவம் ஊருக்குள்ள வந்து, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, வெளியே வரச்சொல்வாங்க. துடிப்பாக தெரியுற ஆண்களைத் தேர்ந்தெடுத்து, வரிசையாக நிக்க வைப்பாங்க. அடுத்த நிமிஷம் தெருவையே அதிர வைக்கிற மாதிரி துப்பாக்கிச் சத்தம் கேட்கும். வரிசையில் நின்ன எங்காளுங்க செத்துக் கிடப்பாங்க. ராணுவத்தின் கண்ணில் பட்டவங்க பெண்களாயிருந்தா, அவங்களோடவே கூட்டிட்டுப் போயிடுவாங்க. முகாமுக்குப் போய், பல நாட்களுக்குப் பிறகு, புத்தி பேதலிச்சு திரும்பி வந்தவங்களை எனக்குத் தெரியும்!’’ _ உணர்வுகள் மரத்துப்போன குரலில் நிருவின் ஞாபகம் தொடர்கிறது.

‘‘போர்ச்சூழல் மேலும் கடுமை யானதால், நாங்க பிரான்சுக்குப் போக முடிவு செஞ்சோம். தமிழர்கள் நெனைச்சவுடன் வெளிநாட்டுக்குப் போக முடியாது. போலீசுக்கும் ராணுவத்துக்கும் தெரியாம, சில காட்டுப் பாதைகள் வழியாக கொழும்பு விமான நிலையத்துக்குப் போய், அங்கிருந்துதான் கிளம்ப முடியும். குடும்பத்தின் பெரியவர்கள் எங்களை ஒவ்வொருவராக பைக்கில் கூட்டிட்டுப் போனாங்க. இரவில் காட்டில் தங்குறதும், பைக் பஞ்சர் ஆகும் போதெல்லாம் தூரத்துக் கிராமங்களில் வண்டியைச் சரி செய்ய ஆள் தேடி அலைவதுமாக அந்தப் பயணம் மூணு நாள் நீடிச்சது. எங்க நிலைமையாவது பரவாயில்லை, சிலர் லாரி டிரைவர்களின் உதவியோடு டீசல் டேங்கில் ஒளிஞ்சுகிட்டு வர முயற்சி செய்வாங்க. சில சமயங்கள்ல அவங்க மூச்சுத்திணறி இறந்த சம்பவங்களும் நடந்துருக்கு’’ என்று சொல்லும் நிருவுக்குப் பாரீசில் பல சவால்கள் காத்திருந்தன.

‘‘பிரான்சுக்குப் புலம் பெயர்பவர்கள் சந்திக்கும் முதல் பிரச்னை மொழி. பிரெஞ்சுக்காரர்கள் இங்கிலீஷ் தெரிஞ்சாலும், பிரெஞ்சில்தான் பேசுவாங்க. ‘எங்க நாட்டுக்கு நீ வந்தால், எங்க மொழியில்தான் பேசணும்’ங்கிறதுல அவங்க பிடிவாதமா இருப்பாங்க. வீட்டுல தமிழ், வெளியே பிரெஞ்சுங்கிற முரண்பாட்டைச் சமாளிக்குறது கஷ்டமா இருந்தது. முதல் ஆறு மாசம் வெளியே போகவே விரும்பாம, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். அடுத்தது, பிரான்சின் கடுங்குளிர். இன்னொரு பிரச்னை, பிரெஞ்சு சாப்பாடு. உப்பும் காரமும் ரொம்பக் குறைவான உணவுக்குப் பழகுறதுக்கு ஆரம்பத்துல மிகவும் சிரமப்பட்டேன் பள்ளிக்கூடத்துலகூட எனக்கும் பிரெஞ்சு மாணவர்களுக்கும் இடையே வித்தியாசம் பளிச்னு தெரியும். டீச்சர்கிட்டே அந்த மாணவர்கள் உட்கார்ந்துகிட்டே பேசுவாங்க. நான் மட்டும் நம்ம ஊர் வழக்கப்படி சட்டுனு எழுந்து நின்னுடுவேன். இதைப் பார்த்து வகுப்பே சிரிக்கும்! பிரெஞ்சு வாழ்க்கைக்கு ஏற்றபடி நான் மாற மூணு வருஷம் ஆனது!’’ என்று கூறும் நிரு வீட்டின் எதிர்ப்பையும் மீறி இசை படித்தவர்.

‘‘ப்ளஸ் டூவுக்கு நிகரான படிப்பை முடிச்சிட்டு, இசையைக் கற்றுக்கொள்ள முழு மூச்சாக இறங்குனேன். காலையில் சவுண்ட் இன்ஜினியரிங் காலேஜுக்கும் மதியம் இசைப்பள்ளிக்கும் போவேன். தமிழகத்துலேர்ந்து பாரீசுக்கு வர்ற இசையமைப்பாளர்களை யெல்லாம் தேடித் தேடிப் போய்ச் சந்திப்பேன். மெல்ல மெல்ல இசையின் நுட்பங்கள் புரிபட ஆரம்பிச்சது. நிரு எந்த இசையமைப்பாளரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. ‘நீலம்’, ‘மூங்கில் நிலா’ உட்பட இவர் இசையமைத்த ஆல்பங்கள் ‘கலாபக் காதலன்’ படத்தில் பணிபுரியும் வாய்ப்பைத் தேடித்தந்தன. ‘‘கலாபக் காதலனுக்கு நான் இசையமைத்த பாடல்கள் அவ்வளவு பிரபலமாகலை. தமிழ் சினிமாவின் இசையை நான் இன்னும் புரிஞ்சிக்கணும்னு உணர்ந் தேன். பிரெஞ்சு மொழியைக் கத்துக்கிட்டது போல இதுவும் முடியும்னுÊ நம்பினேன். தொடர்ந்த பயிற்சிகளுக்கு நான் எதிர்பார்க்காத ஒரு கதவு திறந்தது. டைரக்டர் செல்வம் தனது முதல் படமான ‘‘ராமேஸ்வர’த்துக்கு இசையமைக்க என் மேல் நம்பிக்கை வச்சு வாய்ப்பு தந்தார். எங்களின் இழப்பையும் துக்கத்தையும் சொல்லும் படத்துக்கு இசையமைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்!’’ நிறைவாகச் சொல்கிறார் நிரு.

_ஆனந்த் செல்லையா

படங்கள் : ஆர். கோபால்

  • தொடங்கியவர்

Rameswaram_m.jpg

ராமேஸ்வரம் நல்லா வந்திருக்கு........

நிரூவின் இசை பல இடங்களில் படத்துக்கு வலுச் சேர்த்திருக்கிறது.

இன்னும் வளர வாழ்த்துகள் நிரூ

இலங்கை தமிழர்களின் குணங்களையும் அபிலாசைகளையும்

ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வர முடியாது.

அப்படி எதிர்பார்த்து படத்தை ரசிக்கவோ அல்லது பார்க்கவோ நினைத்தால்

நம்மை அது ஏமாற்றமடையவே வைக்கும்.

இது ஒன்றுதானே?

இன்னும் ஏகப்பட்ட படைப்புகள் உருவாக வேண்டும்.

படைப்பாளிகள்

அதிக எதிர்பார்ப்புகளை ரசிகர் மனங்களில் உருவாக்காமல்

படத்தை வெளியிட்டு இருந்தால்

படம் இதை விட வெற்றி பெற்றிருக்கும்?

படத்தில் வரும் காதல்தான்

ஈழத்து இளைஞர்களையும்

அங்கு வாழும் மனித மனங்களையும் பற்றி சொல்ல வைத்திருக்கிறது.

தனக்கென்று இருக்கும் ஒரு உறவையாவது

பாதுகாக்க வேண்டும் எனும் மணிவண்ணனின் எண்ணங்களும்

நடைமுறையும் ஒவ்வொரு பெற்றோருக்குள்ளும் வருவதுதான்.

அது இயற்கை

அதை மணிவண்ணன் அருமையாக செய்திருக்கிறார்.

அவரது இலங்கை தமிழ் பேச்சு முயற்சி பராட்டுதலுக்குரியது.

அடுத்து

நண்பர்களின் நடிப்பில்

அவர்களது தாயக ஏக்கங்கள்

உடல் பாதிப்புகள் இருந்தாலும்

மனதளவில் பாதிப்படையாமல்

மற்றொருவரை பலிக்கடாவாக்க நினையா மனமும்

மனித நேயமும்

மனதை அதிரவைக்கும் நிஜங்கள்.

காதலை தவிர்க்கும் ஒரு பெண் கூட

இன்னொருவர் காதல் கருகிவிடக் கூடாதென

இன்னொருமுறை யோசி ஜீவன் என்பது

திணிப்புகள் இல்லாத அறிவுரையல்ல

உன்னையே நீ அறிவாய் என்பது போல இருக்கிறது.

சுப்பர்...........

தன் நண்பனுக்காக சிறைக் கம்பிகளுக்குள் வாடுவதை விட

தன் நண்பன் வாழ வேண்டும் என நினைக்கும்

நல்லெண்ணம் பல ஈழத்து இளைஞர்களிடம்

இன்றும் காணக் கூடிய ஒன்று.

தமது மக்கள்

தன்னால் பதிப்படையக் கூடாது என

ஈழத்துக்கு கப்பலேறப் போகும் ஜீவாவின் முடிவும்

திரும்பி வருவேன் எனும் நம்பிக்கையும்

சிலவேளைகளில் காதல் கனிவதில்லை

அடித்தே கனிய வைக்கப்படுகிறது

எனும் தன்மையுடன்

அக் காதல் மனதுக்குள் ஊடுருவும் விதம் யதார்த்தமானது.

பார்வையால் காதல் வரலாம்

பரவசத்தால் காதல் வரலாம்

அன்பால் காதல் வரலாம்

அனுதாபத்தால் காதல் வரலாம்

எதிர்ப்பால் காதல் வரலாம்

அத்தனையும் கொண்ட ஒரு மிக்ஸர்

இங்கே தெரியும் காதல்

அனைத்தையும் தாண்டி

பாவனாவின் மனதில் உருவாகும் பாசம்

வேசமில்லாதது.

பெற்றவர்கள்

தன் பிள்ளை

ஊர் பேர் தெரியாத ஒரு தேசத்தில்

அழிந்துவிடக்கூடாதே எனும் ஆதங்கம்

எந்த பெற்றோருக்கும் எழக் கூடியது.

அகதிகளையே

தன் உறவுகளாக பார்த்த - பார்க்கும்

தமிழக பெரியவர்கள் இன்றும் இருக்கவே இருக்கிறார்கள்.

இவர்கள் அரசியலுக்கு அப்பால்பட்டவர்கள்.

இத் திரைப்படம் அவர்களுக்கு ஆறுதல்

சமர்ப்பணமாக வேண்டும்.

தன் மகளுக்காகவே என்று

ஒரு உறவை உருவாக்கி

அவன் தன் குடு்ம்பத்தோடேயே வாழ வேண்டும் எனும்

அவாவுள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள

கிராமத்து உணர்வுகளின் தன்மை.

அப்படியான உதவ வேண்டும் என நினைக்கும்

இளகிய மனம் கொண்ட ஒரு மனிதர்

அவர் எண்ணங்கள் நிறைவேறாது என

தெரிந்து கொள்ளும் போது

சினம் கொள்வது ஒன்றும் வியப்பானதல்ல.

போலீஸாரோடு மோதுவதும்

அவர்கள்

ஜீவாவை விடுவிப்பதும்

படத்தின் லாஜிக்கை மறக்க வைத்து

அவ்வளவு நேரமும் கொண்டு வந்த

அழகான கண்ணாடி ஒன்றை

தூளாக சிதற வைத்து விட்டதற்கு சமனாக்கி விட்டது.

இருந்தாலும்

கல்லான இதயமானாலும்

கரைய வைக்கும் பாவனாவின் பேச்சை

ஏற்கும் தந்தை

அவளை அவனுக்கு கொடுக்காமல்

எடுத்துக்கோ எனும் போது

அகதிகளாக

யாரும் கையேந்திப் பழகக் கூடாது

நாங்களாக எடுத்துக் கொள்ளும்

உரிமை தன் நம்பிக்கை வர வேண்டும்

என ஜீ்வா கூறும் ஆரம்ப வார்த்தைகள்

மனதுக்குள் வந்து போகின்றன.

ஜீ்வா சிறப்பாக கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

புலம் பெயர்ந்து வாழும்

தமிழர் படும் வேதனை பேசும்

இப்படியான ஒரு திரைக் காவியத்தை தந்த

இயக்குனர் செல்வத்துக்கும்

தயாரிப்பாளர்களுக்கும் நன்றி!

- அஜீவன்

Edited by AJeevan

  • 2 months later...

நிரு அளவெட்டியோ? அப்ப பக்கத்து ஊர்தான். மியூசிக் ஸ்கூலுக்கு மாத்திரம்போய் தன்பாட்டில மியூசிக் செய்து பழகி இருக்கிறார் எண்டால் கெட்டிக்காரன்தான்.

இன்று தான் இவரைப்பற்றி அறிந்துகொண்டேன். நன்றி நுணாவிலான் இணைப்பிற்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.