Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊருக்குப் போனேன் - 3 - வாசுதேவன்.

Featured Replies

ஊருக்குப் போனேன்- பாகம் 3.

வாளியில் முகர்ந்திருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும் , இருளில் நின்ற பசுவில் எல்லை கெட்ட நேரத்தில் கறந்து காய்ச்சிய பால் கைக்கெட்டியது. அம்மாவின் கையால் சமைத்ததினால் அறுசுவைபெற்ற உணவை உண்டதும் ஆறுதல் உண்டாகியது.

தூய இருளில் நட்சத்திரங்கள் கவிந்த வானம் முன்னைய நாட்களை முன் நிறுத்தி மாய வித்தை காட்டியது. மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பார்த்தவாறே நட்சத்திரங்களை விசாரம் செய்யும் இளமைக்காலப் பொழுதுகள் ஐரோப்பிய வெளிச்சம் நிறைந்த நகர இரவுகளில் காணக்கிடைப்பதில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்த பயணமல்ல இது, ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு நடத்திய பாய்ச்சல் என உள்மனம் கூறியது.

ஒரு லாம்பின் உருண்ட கண்ணாடிச் சுவரின் மத்தியில் மண்ணெண்ணை உயிரூட்ட மயங்கி மிளிர்ந்த சுவாலையொன்று முகங்களை ஒளியூட்டும் முயற்சியில் வெற்றிபெற, சுற்றிவர இருந்த உறவுகள் கேள்விக் கணைதொடுக்க, நான் ஒரு சாய்மனையில் சரிந்தவாறே கதை சொல்லியானேன். பதினெட்டு வருடமாகப் பார்த்த படக் கதை. கனவுகளில் வாழ்ந்த கதைகளைப் புனைவுகளாய் எண்ணிப் புகன்றவாறே பொழுது போவதை மறந்தபோது தூக்கம் அழைத்தது.

நிசப்த வெண்மையில் வீழும் துல்லியமான கருங்கோடுகளாக கதை சொல்லியானது என் குரல். இப்போது மீண்டும் நான் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தேன். என் கதையை எனக்கே கூறி அங்கும் இங்கும் என ஆடும் கலை. அற்புதமான ஊஞ்சற் கலை. பிரபஞ்சம் முழுவதிலுமே என் குரல் மட்டும்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறதோ எனப் பிரமைகொள்வதைத் தடுக்கு முகமாய் அவ்வப்போ நாய்கள் குரைத்தன. 'நான்' எனும் புiனைவை நான் கதைப்பொருளாக்கிப் புளகாங்கிதம் கொண்டேன். கதை சொல்வதில் கதை சொல்லியைத் தவிர அதிகம் இன்புறுபவர்கள் வேறு யாருமிலை.

நிசப்தமான காரிருளிற் புதைந்து கிடந்த கிராமத்தின் இரவுக்காவலர்களான நாய்களின் இடையிடையேயான குரைப்புகள் ஐரோப்பாவின் மிகச் சிறந்த இசைவாணனின் மிகச் சிறந்த இரவிசைத் தொகுப்பிலும் இனியதாயிருந்தது.

துருதுருவென இருந்த உள்ளத்தையும் மீறி உடல் அமைதி வேண்டியது. தூக்கம் இமைகளைச் சாத்தியது. இதமான கட்டிலுக்குப் பழக்கப்பட்டுவிட்ட உடல் கடின நிலத்தில் விரிக்கப்பட்ட பாயுடன் சற்று முரண்பட்ட போதும் களைப்பு மிகுதி தூக்கத்தை இலகுவில் அழைத்து வந்தது.

நுளம்பின் ரீங்காரத்தையும், இரவாயினும் உயர்ந்த வெப்பநிலையையும் மீறி உறக்கம் கொண்ட போதும், அதிகாலை நான்கு மணியளவில் வெடிச்சத்தங்கள் விழிப்பைக் கொண்டு வந்தன. வடக்கு வெளியில் இடையிடையே இராணுவதினர் அதிகாலைப் பயிற்சி எடுக்கிறார்கள் என அம்மா விடயம் கூறினார். போர்க்கால வாழ்வின் சுமை, போர்ச் சூழலின், யுத்த பிரதேசத்தின் அனுபவம் முதன்முதலாக அண்மித்துக் கிடந்தது.

சிறிது நேரத்தில் சேவல்கள் கூவி ஆதவனை அழைத்தன. அதிகாலை இளங்கதிர்கள் தென்னைகளையும், பனைகளையும், பூவரசுகளையும் மற்றும் அனைத்துப் பசுமைகளையும் மிளிரவைத்தன. வாயிற்படியில் குந்தியிருந்து ரம்மியமான இக்காட்சியைக் கண்ணுற்றபோது பல்லாண்டுகால ஏக்கங்கள் என்னில் தணிந்து போவது தெரிந்தது. மரவெள்ளி மரங்களுக்கிடையே கிடந்த குப்பைகளைக் கிளறிக் கோழிகள் அதிகாலையிலே புழுப்பூச்சி வேட்டையை ஆரம்பித்திருந்தன.

கிணற்றின் தண்ணீர் மட்டம் இன்னமும் மேலேதான் நின்றது. வாளியைத் தூக்கியெறிந்து லாவகமாகத் தண்ணீரை மொண்டு தலையில் கொட்டியபோது உடல் ஒரு கணம் உலுப்பப்பட்டது. ஆடையுடன் குளிப்பது அந்நியமாகவும், விசித்திரமாகவும், கடினமாகவும் பட்டது.

உறவுகளும், அயலவர்களும் ஒன்றுகூடிக் குசலம் விசாரித்தார்கள். "வயது போனது பெரிதாகத் தெரியவில்லை.", "பெடி இருந்தது போலதான் இருக்குது." "எவ்வளவுகாலம் நிப்பியள் ?", "ஏன் குடும்பத்துடன் வரவில்லை ?" , "ப்ரான்ஸில இனவாதமிருக்காமே!", "எங்கட ஆக்களெல்லாம் அங்க நல்லாயிருக்கினமோ ?" , எனவெல்லாம் பல கேள்விகள் தொடர்ந்து வந்தவண்ணமாகவேயிருந்தன. முடிந்தளவு பதில்களைக் கூறிவிட்டுத் துறையூருக்கு மீன் வாங்கப் புறப்பட்டு விட்டேன்.

இன்னமும் ஒடக்கூடிய நிலையிலிருந்த, இரவலாகப் பெற்ற ஒரு துவிச்சக்கர வண்டி என் துணைவனானதும் என் பயணம் ஆரம்பமாகியது. வங்களாவடிச் சந்தி, பஸ்கொம்பனியடி எல்லாவற்றையும தாண்டி துவிச்சக்கரம் என்னை தூக்கிச் சென்று தவறணையைத் தாண்டி மீன் வாங்கும் இடத்திற்குக் கொண்டு வந்து விட்டது. ரூபாவில் மீன் மிக மிக மலிவாக இருந்தது.

மதிய உணவை அருந்திவிட்டு, சுட்டெரிக்கும் வெய்யிலில் என் துவிச்சக்கரத்துடன் புறப்பட்டேன். முன்னரிருந்திராத புதிய பாதைக@டாகப் பயணம் செய்து இடங்களை அடையாளப்படுத்தி நுண்விபரங்களுக்குப் பரிச்சயப்படுவது இலகுவாக இருக்கவில்லை. பண்படுத்தப்பட்ட முன்னைநாட் தெருக்கள் பல சுவடிழந்து வெறும் பாதைகளாக இருந்தன. மத்திய பாடசாலையிலிருந்து மயிலப்புலம் வரையும் செல்லும் தெரு கோலமிழந்து கிடந்தது.

சீருடையின்றித் திரியும் இராணுவத்தினரின் தோள்களிலும் துப்பாக்கி தொங்கியது. தேசம் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறதென்பதை இடையறாது உணர்த்தியது இராணுவப் போக்கு வரத்துகள். சிங்களச் சிப்பாய்கள் எம் நிலத்தைத் தம் நிலமெனக் கருதி அங்கு வாழ்வதுபோல் பட்டது. கிராமத்தின் ஒரேயொரு பேக்கரியும் அவர்கள் வசமேயிருந்தது. நட்டநடுத் தெருவில் கூட சிலவேளைகளில் அவர்கள் பயிற்சி பெற்றவண்ணமிருந்தார்கள். கோவில் வீதிகளில் பெருத்த கோசத்துடன் உடலை முறித்துக்கொண்டிருந்தார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

;இடைவிடாது தொடர்ந்து எழுதினால் தொடர்ச்சியாக வாசிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்...

  • தொடங்கியவர்

இன்னமும் ஒரு இறுதிப் பகுதி மாத்திரமேயுள்ளது. விரைவில் பதிவு செய்வேன். கருத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

;இடைவிடாது தொடர்ந்து எழுதினால் தொடர்ச்சியாக வாசிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்...

அது ஒண்டுமில்லை தமிழ் தொடர் நாடகங்கள் பார்த்த பழக்க தோசமாய் இருக்கும். :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழக்கப்பட்ட விசயங்கள்ளயிருந்து விடுபடுற எண்ணடா என்ன இலகுவான காரியமே சாத்திரி ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.