Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மொழியின் இறப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

வசம்பு!

நான் தமிழனாக இருப்பதால், தமிழர்கள் கேவலப்படுத்தப்படுவது பற்றி கவலைப்படுகிறேன். இதே திருமண மந்திரங்களை ஒரு குஜராத்திக்காரனுக்கு சொன்னால் அவனும் கேவலப்படுகிறான்தான். அது உண்மைதன். நான் தமிழன் என்ற நிலையில் இருந்து பேசுகிறேன்.

அதைவிட யாகங்களின் போது ஓதப்படும் மந்திரங்களில் விசேடமாக தமிழர்களின் முன்னோர்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். இவைகள் பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.

ஆதாரம் கேட்டிருக்கிறீர்கள். நிச்சயம் நாளை தருகிறேன்.

அதை விட ஒரு சிறப்பான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதே மந்திரங்களை பார்ப்பனர்கள் வீட்டில் சொல்கின்ற போது, அங்குள்ள பெண்களும் கேவலப்படுகிறார்கள் அல்லவா என்ற கேள்வி எனக்குப் பிடித்திருக்கிறது.

இப்படி தர்க்கரீதியாக பேசுவதுதான் விவாதத்திற்கு அரோக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதிலையும் தனித் தலைப்பாக நாளை "எழுதுகிறேன்.

நாளை சந்திப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சார் நீங்கள் எழுதுவதை நீங்களே ஒரு தடவை திரும்பப் படியுங்கள்.

பார்பர்னர்களைச் சாட்டு வைத்து நீங்கள் சமஸ்கிரத மொழி மீது உமிழ்ந்து கொண்டிருக்கும் வெறுப்புணர்வுக்கு இந்த களம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

எனிமேல் நீங்கள் இங்கு சமஸ்கிரதத்தை குறை பிடிக்கிற.. மொழி பழிப்புச் செய்யுற.. மொழித் துவேசம் வளர்க்கிற கருமத்தைச் செய்யக் கூடாது.

நீங்கள் மொழி மீது வெறுப்பற்றவர் என்று சொல்லிக் கொள்வதால் சமஸ்கிரதத்தைப் பற்றி குறை சொல்ல உங்களுக்கு முடியாது.

தமிழிலும் தான் கெட்ட வார்த்தை இருக்குது. உலகில் எல்லா மொழியிலும் தான் கெட்ட வார்த்தை இருக்கிறது. அதற்காக மொழியை பழிக்க முடியாது. அதனைப் பாவிப்பவனைத்தான் திருத்த வேண்டும்.

தமிழைப் பழிப்பவனை நீங்கள் குறை சொல்லும் போது.. பிற மொழிகளைப் பழிக்க முற்படும் தாங்களும் குறைக்கு ஆளாவீர்கள். அந்த வகையில் தமிழை நீச பாசை என்று சொல்ல வைத்தவர்கள் உங்களைப் போன்றவர்கள் தாம்..! :lol:

சமஸ்கிரதம் மட்டுமல்ல.. எல்லா மொழி பேசுறவனும் தான் தமிழை மூடனா பார்கிறான். அதற்காக மொழியைக் கொண்டு தூசணம் சொல்லுறாங்க என்று மொழி மீது பழிபோடுவதை விடுத்து அப்பால் நகர்ந்து செல்லுங்கள்..! உங்களுக்கு பிராமண சமூகம் மீதுள்ள தனிப்பட்ட பகைமையை தமிழ், தமிழர் போன்ற வற்றோடு இணைப்பதை நிறுத்துங்கள். :lol::(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சமஸ்கிருதத்தில் உங்களை பழித்து எழுதியிருக்கும் சொற்களை மொழி பெயர்த்து அதை உங்களுக்கு சொல்வது, எந்த வகையில் சமஸ்கிருதத்திற்கு எதிரானது?

நீங்கள் சொன்னது போன்று அது சமஸ்கிருதத்திற்கு எதிரானது அல்ல.

அதை உருவாக்கியவர்களுக்கும், அதை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கும், அதற்காக வாதாடும் வெட்கம் கெட்டவர்களுக்கும்தான் என்னுடைய நடவடிக்கைகள் எதிரானவைகள். சமஸ்கிருதத்திற்கு அன்று.

இது உங்களுக்கு புரிந்திருக்கிறது அல்லவா? அது போதும். உங்களுடைய கருத்துத்தான் என்னுடைய கருத்தும்.

ஆனால் மந்திரங்களை மொழிபெயர்க்கக் கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள்.? ஒரு சூத்திரன் மந்திரங்களை எழுதுவது குற்றம் என்று உங்களுடைய மனுதர்மம் சொல்வதாலா? அதை ஒரு சூத்திரன் எழுத மற்றைய சூத்திரர்கள் படிப்பதை குற்றம் என்று உங்களுடைய மனுதர்மம் சொல்வதாலா?

உங்களுடைய திட்டம் எனக்குப் புரிகிறது

தமிழர்கள் உண்மைகளை அறிந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறீர்கள்!

தமிழர்களை காலகாலத்திற்கும் இப்படி முட்டாள்களாக வைத்திருப்பதற்கு நாம் விட மாட்டோம்.

நான் உங்களுக்கு சாருநிவேதிதாவின் கட்டுரையின் இணைப்பு ஒன்றை தந்திருந்தேன். படித்துப் பார்த்தீர்களா?

படித்தால்தான் உண்மைகள் விளங்கும்! இப்படியே வெறும் குருட்டு நம்பிக்கைகளோடு இருந்தால், உண்மைகள் ஒரு போதும் தெரியாது.

மனிதர்களை இழிவுபடுத்தும் மந்திரங்களை மதத்தின் பெயரில் மக்கள் மீது திணிக்கும் வரை அதை தோலுரிப்பதை நான் செய்வேன்.

வசம்பு கேட்ட ஆதாரங்களுக்கான பதிலை இங்கே தருகிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry377235

எனக்கு இந்த விவாதம் குறித்த கவலை ஒன்று உண்டு. குமாரசாமி என்னிடம் வேறு விடயங்கள் குறித்து எழுதுங்கள், பரந்து சிந்தியுங்கள் என்று சொன்னார். நான் பரந்து சிந்தித்து பல விடயங்களை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய எழுத்து என்பது யாழ் களத்தோடு மட்டுப்படுத்தப்பட்டது அல்ல.

இங்கே மொழிகள் அழிவது குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால் இக் கட்டுரையை எழுதியது நான் என்ற ஒரே காரணத்திற்காக, இங்கும் விவாதத்தை மதம் சார்ந்து இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மற்றவர்களுக்குத்தான் பரந்து சிந்திக்க முடியவில்லை என்று தெரிகிறது.

நான் இக் கட்டுரையை இணைத்த மற்ற தளங்களில் இப்படி நிகழவில்லை. பறவாயில்லை. இத்தோடு இப் பகுதியில் சமஸ்கிருதம் பற்றி வாதாடாது, "மெய்யெப்படுவது" பகுதிக்கு மிகுதியை கொண்டு போகிறேன்.

கட்டுரையோடு சம்பந்தப்படுத்திய கேள்விகளுக்கு மட்டுமே இனி இப் பகுதியில் பதில் தருகிறேன்

மற்றை விடயங்களுக்கு இங்கே வாருங்கள்!

http://www.yarl.com/forum3/index.php?showforum=32

ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் வசம்பு கேட்ட மற்ற ஒரு கேள்விக்கு இப் பகுதியில் என்னுடைய பதிலை தருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய திட்டம் எனக்குப் புரிகிறது

தமிழர்கள் உண்மைகளை அறிந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறீர்கள்!

தமிழர்களை காலகாலத்திற்கும் இப்படி முட்டாள்களாக வைத்திருப்பதற்கு நாம் விட மாட்டோம்.

ஐயையோ.. எப்படி என்ர ரகசியத் திட்டத்தைக் கண்டுபிடிச்சீங்க. ஓஓஓ.. இதுதான் பகுத்தறிவின் பயனோ..!

அப்ப தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள்.. நீங்கள் மட்டும் பகுத்தறிவாளன். எனித்தான் எல்லாத் தமிழரையும் பகுத்தறிவாளர்கள் ஆக்கப் போறீங்களோ. அதுவும் சமஸ்கிரதத்தைத் திட்டித் திட்டி.... ம்ம்... சாதனைதான் செய்ய வாழ்த்துக்கள்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக அருமையான பதிவு

நெடுக்கு!

விவாதத்தை நிங்கள்தான் திசை திருப்பியிருக்கின்றீர்கள்.

இந்து மதத்தின் அத்தனை நூல்களிலும் தமிழின வெறுப்பு கக்கப் பட்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு எந்த உணர்ச்சியும் வரவில்லை.

தமிழன் கட்டிய கோவிலில் தமிழன் வணங்கும் கடவுளுக்கு தமிழில்தான் வழிபாடு செய்ய வேண்டும். இறை நம்பிக்கையற்ற நாத்திகர்களும் அதற்கு குரல் கொடுப்பதற்கு காரணம் தமிழ் மேல் கொண்ட பற்றுத்தான்.

நீங்கள் அதை ஏதிர்ப்பதில் இருந்து எல்லாம் நமக்கு புரிகிறது. பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது என்று பெரியார் இது போன்றவற்றைத்தாக் குறிப்பிட்டார்

ஒரு சந்தேகம்! எங்கயோ ஜெருசலேத்தில் பிறந்து ஹிப்று மொழி பேசிய ஏசு நாதருக்கே தமிழில் வழிபாடு நடக்கும் போது தென்னாடுடைய சிவனுக்கும்குமரக் கடவுளுக்கும் தமிழ் தடுக்கப் படுகிறது என்றால் இது அடவாடித்தனம் அல்லாமல் வேறு என்ன

இளங்கோ

நீங்களும் தவறான கருத்தைத் திணிக்க முயல்கின்றீர்கள். இந்துமதம் சம்பந்தமாக எழுதப்பட்ட நூல்களொன்றும் தமிழர்களுக்காக எழுதப்பட்டது அல்ல. அவை இந்து சமயத்தை வழிபடும் அனைவருக்குமாக எழுதப்பட்டது. அப்படியிருக்க எப்படி அவை தமிழின வெறுப்பைக் கக்கியுள்ளன என்று சொல்கின்றீர்கள்.

தமிழ்க் கோவில்களில் தமிழில் தான் வழிபாடுகள் நடக்க வேண்டுமென்று சொல்லுங்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்காக அர்த்தமில்லாமல் எழுதி நீங்களும் அடுத்தவரை முட்டாளாக்க நினைக்கலாமா????

  • தொடங்கியவர்

வசம்பு!

இந்து மத நூல்களில் திராவிட மக்களுக்கு எதிரான வெறுப்பு கக்கப்பட்டிருக்கிறது. என்பது உண்மைதான்.

ரிக் வேதம், அதர்வண வேதம் போன்றவைகளில் இந்த வெறுப்புக்களைப் பார்க்கலாம். மனு தர்மத்திலும் இருக்கிறது.

திராவிடம் சூத்திரர்களால் ஆளப்படும் நாடு என்று மனுதர்மம் (அத். 10 - சுலோகம் 44) சொல்கிறது. அத்துடன் நூல் முழுவதுமே சூத்திரர்கள் மிகவும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் இந்து மதம் தமிழின வெறுப்பை நன்றாகவே கக்கி உள்ளது.

சபேசன்

நீங்கள் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றீர்கள். உங்களுக்கு யார் சொன்னது திராவிடர் என்றால் தமிழர்கள் மட்டும் தான் என்று?? நீங்கள் முதலில் தமிழர்களைத்தான் இந்துமதம் தாக்குகின்றது என்று எழுதுவதை நிறுத்துங்கள். ஏதோ தமிழர்கள் எல்லாரும் முட்டாள்கள் நீங்கள் மட்டும் அறிவாளி போல் காட்ட முயல வேண்டாம். இப்படியான சுயதம்பட்டங்களினால்த்தான் எனக்கு உங்களில் வெறுப்பே வந்தது. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ஆனால் அவற்றை மற்றவர்கள் மீது திணிக்க முயலாதீர்கள். மனுதர்மத்திலும் சத்திரியன், பிராமணன், சூத்திரன் என்று சாதி ரீதியாகவே சொல்லியுள்ளார்கள். அவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவையெல்லாம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பிராமணர்களால் எழுதப்பட்டவை.

Edited by Vasampu

  • தொடங்கியவர்

திராவிடர்கள் என்பது தமிழர்களைக் குறிக்காது வேறு யாரைக் குறிக்கிறது?

திராவிடர்கள் என்பது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன.

1. தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், துளு போன்ற இனங்கள் அடங்கிய மக்கள் கூட்டம்.

2. தமிழர்கள் என்ற சொல்தான் வடமொழியில் திராவிடர் என்று திரிந்தது.

இதிலே எதை எடுத்தாலும் அதற்குள் தமிழர்கள் அடங்குகின்றார்கள் அல்லவா?

ஆகவே திராவிடர்களை இழிவுபடுத்துவதன் அர்த்தம் தமிழர்களை இழிவுபடுத்துவது அல்லவா?

இன்னும் ஒன்று

தமிழர்களைத்தான் இந்து மதம் இழிவு படுத்துகிறது என்று நான் சொல்லவில்லை. உழைக்கும் மக்கள், பெண்கள் என்று எல்லோரையும் இந்து மதம் இழிவு படுத்துகிறது.

அத்துடன் தமிழர்களையும் இழிவுபடுத்துகிறது.

தமிழர்கள் தனித்துவமானார்கள். திராவிடர் என்பது ஒரு மாயைப் பதம். அது மேற்குலக வரலாற்றாசிரியர்களால் சமஸ்கிரதத்தில் இருந்து எடுக்கப்பட்டு புகுத்தப்பட்ட ஒன்று..! இது தொடர்பாக இங்கு தெளிவான கருத்துக்கள் முன்னர் பல முறை வைக்கப்பட்ட பின்னும்.. சபேசன்.. தனது இஸ்டத்துக்கு தமிழர் வரலாற்றை திராவிட மயமாக்க நிற்கிறார். தன்னை நிலைநிறுத்த சபேசன் தவறான வழிவகையில் தமிழ் மற்றும் தமிழர் பற்றிய விவகாரங்களைப் பயன்படுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.

There is no definite philological and linguistic basis for asserting unilaterally that the name Dravida also forms the origin of the word Tamil (Dravida -> Dramila -> Tamizha or Tamil).

The term Dravidian is taken from the Sanskrit term Dravida, historically referring to Tamil[3]. It was adopted following the publication of Robert Caldwell's Comparative grammar of the Dravidian or South-Indian family of languages (1856); a publication that established the language grouping as one of the major language groups of the world. Robert Caldwell was a Catholic missionary and used the term Dravidian to refer to the people of South India.[4]

---------

The English word Dravidian was first employed by Robert Caldwell in his book of comparative Dravidian grammar based on the usage of the Sanskrit word dravida in the work Tantravarttika by Kumarila Bharra(Zvelebil 1990:xx). Caldwell coined the term "Dravidian" from the Sanskrit dravida, which was used in a 7th century text to refer to the Tamil language of the south of India. The publication of the Dravidian etymological dictionary by T. Burrow and M. B. Emeneau was a landmark event in Dravidian linguistics.

As for the origin of the Sanskrit word dravida itself there have been various theories proposed. Basically the theories are about the direction of derivation between tamil and dravida. That is to say, while linguists such as Zvelebil assert that the direction is tamil >dravida (ibid. page xxi), others state that the name Dravida also forms the root of the word Tamil (Dravida -> Dramila -> Tamizha or Tamil).

There is no definite philological and linguistic basis for asserting unilaterally that the name Dravida also forms the origin of the word Tamil (Dravida -> Dramila -> Tamizha or Tamil).

http://en.wikipedia.org/wiki/Dravidian_people

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழர்கள் தனித்துவமானவர்கள் என்பது உண்மை.

ஆரியம் என்பது மாயையானது. ஆரிய மாயையில் கட்டுண்டவர்கள் எம்மை திராவிடர்கள் என்றார்கள்.

திராவிடர் என்பது இனக் குழுமரீதியில் இன்றைக்கு வரையறுக்கப்பட்டால் அதுவும் ஒரு மாயைதான். திராவிடம் என்ற இனம் இன்றைக்கு இல்லை.

இந்த மாயைகள் பற்றி நானும் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளேன். ஆனால் நான் இங்கே சொல்வது வேறு விடயம்.

வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற திராவிடர்கள் யார் என்பதுதான் இங்கே கேள்வி. அதற்கான பதிலைத்தான் நான் சொல்கிறேனே தவிர, திராவிடர் என்ற பதம் சரிய என்ற விடயத்திற்குள் நான் போகவில்லை.

அதைப் பற்றி தனியான கருத்துக்கள் எனக்கு உண்டு.

மாயை என்று உணர்ந்தும் அதையேன் இங்கையும் எங்கையும் உச்சரிச்சிட்டு திரியுறீங்க. தெரிஞ்சு கொண்டே சனங்களை ஏமாத்திறதா எல்லா கிடக்குது உது. :huh::blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.