Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மொழிகள்

தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது.

பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும்தான் மாநில மொழிகள் என்ற தகைமையும், கிறிஸ்துவிற்கு முற்பட்ட இலக்கிய சரித்திரத்தையும்; கொண்டவை. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகள் சம்பந்தமாக முறையான தகவல் எம்மிடம் இல்லை. இப் 19 மொழிகளுள் 10 இலட்சம் மக்களுக்கு மேற்பட்டோராற் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களாற் பேசப்படும் பிராகுவி வரும். தமிழ்நாட்டில் நீலகிரிப் பிரதேசம் போவோமானால் அங்கு தமிழ் மொழிக்கு மிகவும் நெருங்கிய மொழியான இருளம் உட்பட வடுகம் துடவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும் மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6வது மொழி ஒன்றைப் பேசும் மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசம் மக்களையும் சந்திக்கலாம். பட்டியலில் இல்லாத குறும்பமும் பணிகமும் நீலகிரிப் பிரதேசத்தில்தான் பேசப்படுபவை என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

இப்போது 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்களாற் பேசப்படும் பிரதான நான்கு மொழிகளையும் பார்ப்போம். நான்கு மொழிகளுமே அவை பேசப்படும் மாநிலங்களில், மாநில மொழித் தகைமையுடன் திகழ்பவை. நான்கு மொழிகளிலும், கூடுதலான மக்களாற் பேசப்படும் மொழி, பாட்டிசைக்குகந்த மொழி என்ற புகழ் தெலுங்குக்கு இருந்தாலும், தமிழ் மொழியின் பல்வேறு தகைமைகள், தமிழே திராவிட மொழிகளில் தலைசிறந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. கன்னித் தமிழ், திராவிட மொழிகள் உருவாவத்தற்கு தளமாயிருந்த ஆதிமொழியிலிருந்து இலக்கண ரீதியாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் பெருமளவு மாற்றமில்லாதிருக்கின்றது.

இது மொழி வல்லுனர்கள் ஆய்வின் முடிவு. அதற்காக தமிழில் இருந்துதான் எல்லாத் திராவிட மொழிகளும் திரிவடைந்து உருவாகின என்று முடிவெடுப்பது மொழி அறிவு வளர்ச்சிக்கு எந்தவகையிலும் உதவமாட்டாது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இலக்கிய வளத்தைக் கவனத்திற் கொண்டு பார்த்தாலும் சமஸ்கிருதத்தைத் தவிர மற்றைய எந்த இந்திய மொழியும் தமிழுக்கு சமனாக வரமாட்டா. ப10கோள ரீதியாக அதிக நாடுகளிற் பேசப்படும் திராவிட மொழியும் தமிழ்தான். திராவிட என்ற சொற்கூட கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பிரகிருதி பாளி ஆகிய மொழிகளில் தமிழைக் குறிக்கும் தாமில, தாவிட ஆகிய சொற்களின் சமஸ்கிருத வடிவமே.

இந் நான்கு மொழிகளுமே துரதிஷ்டவசமாக, தமக்கென்று தனித்தனி எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டன. ஐரோப்பிய மொழிகளைப்போல் ஒரே எழுத்தையே இவையும் பயன்படுத்தியிருந்தால் ஒரு மொழியை மற்றவர் பயில்வதற்கு கூடுதல் வாய்ப்பு உண்டாகியிருக்கும். தமிழ் ,கிறிஸ்துவிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் பெற்றுவிட்டது. அதற்கு குறைந்தது ஐந்து நூற்றாண்டுகளின் பின்தான் தெலுங்கும் எட்டு நூற்றாண்டுகளின் பின் கன்னடமும் எழுத்துவடிவம் பெற்றன. கடைசியாக கிறிஸ்துவிற்கு பின் ஒன்பதாவது நூற்றாண்டில் மலையாளம் எழுத்துவடிவம் பெற்றது. தமிழைத் தவிர மற்றைய மூன்று மொழிகளுமே க, ச, ட, த, ப , ஆகிய ஐந்து வல்லின மெய் எழுத்துக்களை, சமஸ்கிருதத்தைப் போல் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரித்து 20 எழுத்துக்களாகக் கூட்டியுள்ளார்கள். உதாரணமாக, க ,வை எடுத்தால் அதை மயஇ, மாயஇ, பயஇ, பாய , என நான்காகப் பிரித்துள்ளார்கள்.

இந்த எழுத்து அமைப்பு ஒற்றுமையை அவதானித்த என் மலையாள நண்பரொருவர் தமிழும் மலையாளமும் சமஸ்கிருதத்திலிருந்துதான் உருவாகியவை என்று வாதிட்டார். என்ன செய்வது மேலதிக சொற்களை இரவல் வாங்கினால் எழுத்துக்களையும் இரவல் வாங்கித்தானே ஆகவேண்டும். கணிசமானளவு சொற்கள் இம்மூன்று மொழிகளாலும் வடமொழியிலிருந்து இரவல் வாங்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டின் ஆரிய மொழியான சிங்களமும் இந்த முறையிற்றான் வல்லினத்தை 20 எழுத்துக்களாக ஆக்கியுள்ளது. எழுத்து உருவத்திலும் தெலுங்கு கன்னட எழுத்துக்களைப்போலவே சிங்கள எழுத்துக்களும் உள்ளன. இது சிலவேளை சிங்கள எழுத்துக்கள் உருவாகும்போது தெலுங்கு நாயக்கர்மாருடன் சிங்;கள மன்னர்களுக்கிருந்த உறவை எடுத்துக்ககாட்டுவதாக அமையலாம்.

திராவிட மொழிகளின் ஆரம்பம் சம்பந்தமாய் தெளிவான முடிவு ஏதும் தற்போது இல்லை. இந்தியா முழவதும் திராவிடர் வாழ்ந்தார் என்பதற்கு, இந்து நதிப் பள்ளத்தாக்கிலிருந்து அழிந்த நாகரிகத்தின் தடயங்கள், ஆதி நூலான 'இருக்கு" வேதத்திற் காணப்படும் திராவிடச் சொற்கள் ஆகியவை சான்றாக உள்ளன. வேறு எந்தக் குடும்பத்துடனும் தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பமாகவே இது உள்ளது. கங்கேரிய, துருக்கிய , மங்கோலிய ,மொழிக் குடும்பங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவினாலும் அதுகூட முறையாக ஆராய்ந்த முடிவாக இன்னும் வரவில்லை.

6000 வருடங்களுக்கு முன்பே பிராகுவி, ஓராவுண் இராஜமகால் ஆகிய மொழிகள் ஆதிமொழியிலிருந்து பிரிந்து தனிப் பிரிவாகிவிட்டன வெனக் கணிக்கிறார்கள். படிப்படியாக ஏற்பட்ட பிரிவுகள் வட திராவிட, மத்திய திராவிட, தென் திராவிட என்ற முப்பெரும் பிரிவுகளை ஏற்படுத்திவிட்டது. மூன்று பிரிவுகளையும் இனி தனித்தனியே பார்ப்போம்.

வட திராவிட மொழிகள்

மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை

பிராகுவி பாகிஸ்தான் 8 இலட்சம்

ஒராவுண் மத். பிரதேசம் 14இலட்சம்

இராஜமகால் பிகார், மே. வங்கம் 1.5இலட்சம்

மத்திய திராவிட மொழிகள்

மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை

தெலுங்கு - 6.2 கோடி

சாவரம் - -

கோண்டி மத். பிரதேசம் 25 இலட்சம்

கொண்டா ஒரிசா 20,000

பெங்கு ஒரிசா 1,900

குயம், குவி ஒரிசா 9 இலட்சம்

கொலமி வட ஆந்திரா 1 இலட்சம்

நாகி வட ஆந்திரா 1,800

கப்பார் ஒரிசா 3,000

பரிஜி மத். பிரதேசம் 1.8 இலட்சம்

தென் திராவிட மொழிகள்

மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை

தமிழ் - 5.6 கோடி

மலையாளம் - 2.9 கோடி

கன்னடம் - 3.2 கோடி

துளு தென் கர்நாடகம் 15 இலட்சம்

இருளம் நீலகிரிப் பிரதேசம் 6,400

குடகம் நீலகிரிப் பிரதேசம் 1.2 இலட்சம்

துடவம் நீலகிரிப் பிரதேசம் 1,200

வடுகம் நீலகிரிப் பிரதேசம் 1.4 இலட்சம்

கோத்தம் நீலகிரிப் பிரதேசம் 1,500

சி. மாசிலாமணி

நன்றி:-வடலி சஞ்சிகை-UK

நன்றி - sooriyan.com

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்று சொல்லித் தமிழில் இருந்து தோன்றிய மொழிகளோடு தமிழைத் தரம் குறைப்பதை விடத் தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் எனத் தமிழை உயர்த்திக் கொள்வதே மதிப்பானது

Edited by தூயவன்

//எங்கள் நாட்டின் ஆரிய மொழியான சிங்களமும் இந்த முறையிற்றான் வல்லினத்தை 20 எழுத்துக்களாக ஆக்கியுள்ளது. //

இது தவறான கருத்து சிங்கள மொழி ஆரிய மொழியோ அல்லது சிங்களவர் என்போர் ஆரியரும் அல்ல.இது சிங்கள பவுத்த பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட பொய்மையான மகாவம்ச வரலாற்றின் அடிப்படையில் ஆனாது.

சிங்கள மொழி பிராகிருதம் பாளி ஆகிய மொழிகளில் இருந்து இலங்கையில் உருவான மொழி இந்த மொழியை இலங்கையில் பேசிய ஹெள என்னும் இனக் குழுவே பின்னர் பல்வேறு இனக்குழுக்களை உள் வாங்கி சிங்கள பேரினக் குழுவாக இலங்கையிலையே உருவாகியது.இவை பற்றிய அறிவியல் ரீதியானா ஆய்வுகள் தொண்ணூறாம் ஆண்டளவில் நாடத்தப்பட்டன.அதனால் தான் சிங்களவர் என்னும் இனக்குழு உலகில் வேறு எங்கும் இல்லை.சிங்களவர் ஆரியர் என்னும் கருதாக்கம் உருவாக்கப்பட்டது , இந்திய அரசியலில் தமக்கானா ஆதரவுத் தளத்தை உருவாக்கும் நோக்கிலேயே.இந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஆரிய தீராவிட முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்க சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கிய கருத்தியலே சிங்களவர் ஆரியர் என்னும் கருத்து.இதற்கு அறிவியல் ரீதியான எந்த அடிப்படையும் கிடையாது.இலங்கை இந்திய உபகண்டம் எல்லாம் ஒரே பண்பாட்டுப் பிரதேசமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு மொழிகளைப் பேசிய பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன.இவற்றில் இருந்தே இலங்கையில் தமிழர் சிங்களவர் என்னும் இரு பெரும் இனக் குளுக்கள் தோன்றின.

எவ்வாறு ஆதி திராவிட மொழி பேசியோர் இந்திய உபகண்டம் எங்கும் பரந்து வாழ்ந்தார்களோ அவ்வாறே பிராகிரத மொழி பேசியோரும் இந்திய உபகண்டம் எங்கும் பரந்து வாழ்ந்தார்கள்.பிராகிரதம் வணிகர்களின் மொழியாக இருந்தமையாலேயே அது இலங்கையிலும் பரவியது.

இலங்கையில் பல காலமாக தொல்பொருள் ஆய்வுகளைச் செய்த தொல்பொருளியல் பேராசிரியர் இந்திரபால எழுதிய 'இலங்கைத் தமிழர் ஒரு இனக் குழு ஆக்கம் பெற்ற வரலாற்றைப்' படித்தால் காய்த்தல் உவத்தல் இன்றிய உண்மையான வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.