Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெர்லின் பட விழாவில் 'பருத்தி வீரன்'

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெர்லின் நகரில் நடைபெறும் 58வது சர்வதேச பட விழாவில் இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் திரையிடப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படம் திரையிடப்படுகிறது.

பெர்லின் பட விழாவில் மொத்தம் 135-க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொள்கின்றன. இந்தியாவிலிருந்து பருத்தி வீரன் கலந்து கொள்கிறது. இப்படம் நேரடிப் போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அதேசமயம், ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் சிறப்புத் திரையிடுதல் பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐந்து நாட்களுக்கு பருத்தி வீரன் திரையிடப்படவுள்ளது. இதில் 2 நாட்கள் ஜெர்மனி மொழி சப் டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த 9-வது ஓஸியான் பட விழாவில் பருத்தி வீரன் கலந்து கொண்டு சிறந்த இந்திய படமாகவும், பிரியாமணி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

பெர்லின் பட விழாவில் பங்கேற்பதற்காக இயக்குநர் அமீர் பெர்லின் சென்றுள்ளார்.

thanks: http://thatstamil.oneindia.in/movies/speci...-film-fest.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெர்லினுக்கு சென்ற பருத்திவீரன்

தமிழ் திரைப்படத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக வெளிவந்த 'பருத்திவீரன்' குவித்த வெற்றி இமாலய சாதனை. புதுமுகம் ஒருவர் நடித்து சர்வதேச அளவில் வெற்றி பெற்ற ஒரு படம் என்ற பெருமை பருத்திவீரனை தவிர வேறு எந்த படத்திற்கும் கிடைக்காத ஒன்று.

இப்படி தேசமெங்கும் இப்படம் புகழ்கொடியை ஒருபக்கம் நாட்டிக்கொண்டிருந்தபோதே தயாரி்ப்பு நிறுவனத்திற்கும் அமீருக்கும் இடையே கணக்குவழக்கு தொடர்பாக பல பிணக்குகள் ஏற்பட்டது. இது படத்தின் வெற்றிக்கான திருஷ்டி என்றே சொல்லவேண்டும்.

இதோ மறுபடியும் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்கப்போகிறது 'பருத்திவீரன்'. பெர்லினில் நடக்கும் அவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்வுள்ளது. அதில் பருத்திவீரனுக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது.

வரும் 12-ந் தேதிமுதல் 15 -ந் தேதிவரை நடைபெறவுள்ள விழாவில் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியிலான சப்-டைட்டிலுடன் 'பருத்திவீரன்' திரையிடப்படவுள்ளது.

தற்போது 'யோகி' பட வேலைகளில் பரபரப்பாக இருக்கும் அமீர் படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு பெர்லின் செல்வதற்காக தயாராகிவருகிறார். அமீருடன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் செல்கிறார்

thanks: http://www.viduppu.com/

*பெர்லினில் வசிக்கும் நம்மவர்கள் யாரேனும் இத்திரைப்படத்தைப் பார்த்து உலகப் பார்வையாளர்களின் கருத்துகளை பதிவிடலாமே..... அமீரையும் சந்திக்க முயற்சீக்கலாமே?

சிவாஜி என்றாால் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளும் நம்மவர்களுக்கு பருத்திவீரன் பெர்லின் வந்த கதை விடுபட்டுப் போனத்தில் வியப்பென்ன இருக்கு?

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது வீட்டில் வெற்றிவிழா கொண்டாடிய படம். நீண்ட நாட்களுக்குப் பின் அதிகம் விரும்பி பார்த்த திரைப்படம்.

இத் திரைப்படம் மற்றவர் கண்களுக்கு எப்படி தெரிகிறதோ எனக்கு தெரியாது.

என்னைப்பொறுத்தவரைக்கும் பொழுதுபோக்குடன் கூடிய விவரணப்படம் .

கிராமிய உருவாக்கங்களுக்கு பிரபல்யமானவர் பாரதிராஜா இருப்பினும் அமீர் ஒருபடி மேல் சென்று விட்டார்.

பெர்லினில் இருக்கும் தமிழர்கள் அநேகமாக ஓம் சாந்தி ஓம் பார்க்க போயிருப்பார்கள்.

பருத்திவீரன் பட்டிக்காட்டுப்படமெல்லோ பாத்துட்டு வர ஜேர்மன்காரன் கண்டால் எங்களையுமெல்லே அப்புடி நினக்கப்போறான் :lol:

நன்றி சுழியன் நீங்கள் இணைத்த தகவலுக்கு.

பெர்லின் இன்னோர் தொங்கல் என்பதால், போய் வருவது செலவு. :lol:

பெர்லினில் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நன்றி மீண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படத்தை தமிழ் நன்றாகத் தெரியாத புலம்பெயர் இளையோர் பார்த்து தமது கருத்துகளை ஜெரமன் மொழியில் வெளிப்படுத்த இதனை யாராவது மொழிபெயர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை தமிழ் நன்றாகத் தெரியாத புலம்பெயர் இளையோர் பார்த்து தமது கருத்துகளை ஜெரமன் மொழியில் வெளிப்படுத்த இதனை யாராவது மொழிபெயர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்.

சபேசனை விடலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சுழியன். மிகவும் நல்ல படம் பருத்திவீரன். :):)

எனக்கு ஏனோ இந்தப்படம் பெரிதாகப் பிடிக்கவில்லை. காரணம், கதையின் நாயகன் ஒரு அயோக்கியன். வேலை வெட்டியில்லாமல் திரியும் ஒரு இளைஞன். அவன் கதையின் நாயகியை ஆரம்பத்தில் மதிக்கவேயில்லை. படம் முடிகிற நேரத்தில் திருந்துகிற மாதிரி தோன்றினாலும் மொத்தமாகப் பார்க்கையில் இது சரியானதாகத் தோன்றவில்லை.

கிராமத்து வாழ்க்கையை படம்பிடித்த விதம் பாராட்டுக்குரியது. ஆனால் கதையும் சேரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின்-அமீருக்கு சிறந்த இயக்குநர் விருது

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பருத்திவீரன் இயக்குநர் அமீருக்கு, சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான சிறப்பு விருது கிடைத்துள்ளது.

படவிழாவின் நிறைவு நாளான நேற்று இந்த விருதினை விழா கமிட்டி மற்றும் நீதிபதிகள் குழு அமீருக்கு வழங்கியது.

இதுவரை மூன்று சிறந்த படைப்புகளை தமிழில் தந்துள்ள அமீர், சர்வதேச அளவில் பெறும் இரண்டாவது விருது இது. தனது ராம் படத்துக்காக இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த சைப்ரஸ் சர்வதேச பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினை முதல்முறை பெற்றார் அமீர்.

தமிழின் வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத மிகப் பெரிய அங்கீகாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் 58வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள் பங்கேற்றன. ஜெர்மன் மொழி அல்லாத படங்களுக்கான விழா என்பதால் அந்நாட்டு படங்கள் மட்டும் இதில் அனுமதிக்கப்படவில்லை.

ஜப்பான் இயக்குனர் வகாமட்சு கோஜி இயக்கிய யுனைடெட் ஆர்மி விழாவின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ் படமான பருத்தி வீரன் மொத்தம் ஐந்து நாட்கள் ஜெர்மனி மற்றும் ஆங்கில சப் டைட்டில்களுடன் திரையிடப்பட்டது. சர்வதேச பத்திரிகையாளர்களுக்கான காட்சியும் தனியாக காட்டப்பட்டது.

அனைத்து திரையிடல்களின் போதும் படத்தின் இயக்குநர் அமீரும் உடனிருந்தார். இந்நிகழ்ச்சிகளில் படத்தின் ஹீரோ கார்த்தியும் கலந்து கொண்டார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று, பருத்தி வீரன் படம் ஆசிய பிராந்தியத்தின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று என விழாக் குழு பாராட்டி அமீருக்கு விருது வழங்கியது.

இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறுகையில், என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது. இந்தப் படத்தை எடுத்ததற்காக உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். படத்துக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை எடுத்த போதும், வெளியிட்ட போதும் ஏற்பட்ட வலிகளை ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கச் செய்துவிட்டது, சர்வதேச திரைப்பட படைப்பாளிகள் அதற்கு அளித்த கவுரவம். இன்னும் பல பருத்தி வீரன்களைத் தரும் தூண்டுதலை எனக்குள் விதைத்திருக்கிறது பருத்தி வீரனுக்கு கிடைத்து வரும் அங்கீகாரங்கள் என்றார் அமீர்.

http://thatstamil.oneindia.in/movies/speci...ecognition.html

தட்ஸ்ரமில் இணையத்தளத்தின் புழுகுக்கு ஒரு அளவே இல்லையா :rolleyes:

பெர்லின் திரைப்பட விழா 2008 (Berlin Filmfestivel) 07.02.2008 - 17.02.2008 வரை நடைபெற்றது.

இந்தமுறை சிறந்த படத்துக்கான தங்கக் கரடி விருது கிடைத்தது The Elite Squad என்ற பிரேசிலியப் படத்துக்கு. சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக் கரடி விருது கிடைச்சது There Will Be Blood என்ற படத்துக்காக Paul Thomas Anderson என்பவருக்கு.

திரைப்படவிழாவின் முக்கிய முதன்மை விருதுகள் இவைதான்:

Golden Bear: Tropa de Elite / The Elite Squad, directed by Jos Padilha

Silver Bear - The Jury Grand Prix: Standard Operating Procedure, directed by Errol Morris

Silver Bear - Best Director: Paul Thomas Anderson, There Will Be Blood

Silver Bear - Best Actor: Reza Najie for Song of Sparrows

Silver Bear - Best Actress: Sally Hawkins in Happy-Go-Lucky

Silver Bear - Best Screenplay: Wang Xiaoshuai for Zuo You / In Love We Trust

Silver Bear - Artistic Contribution: Jonny Greenwood for the score from There Will Be Blood

Alfred Bauer Prize: Lake Tahoe, directed by Fernando Eimbcke

Honorary Golden Bear: Francesco Rosi

Berlinale Camera: Karlheinz Böhm (aka Karl Boehm) and Otto Sander

Best First Feature Award: Asyl — Park and Love Hotel, directed by Kumasaka Izuru

இவை தவிர இந்தத் திரைப்படவிழாவோடு சம்மந்தப்படாத அல்லது இந்தத் திரைப்படவிழாவில் தங்கியிராத வெளி அமைப்புகளின் பெயரால் வழங்கப்படும் விருதுகளும் உண்டு. இவை சுதந்திர நடுவர்களால் மற்றும் பார்வையாளர்களால் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அந்தவகை விருதுகளில் ஒன்றுதான் NETPAC விருது. இதன் விரிவாக்கம்: "Network for the Promotion of Asian Cinema". Berlinale விழா ஒழுங்கமைப்பாளர்களையும் திரப்பட விமர்சகர்களையும் உள்ளடக்கி ஆசிய திரைப்படங்களை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்படுகிறது. நடுவர்குழுவில் மூவர் இடம்பெறுவார்கள். பெரும்பாலும் ஆசியர்களும் நடுவர்குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். இந்தமுறை நடுவர் குழுவில் இடம்பெற்றவர்கள்: Aditya Assarat, Garin Nugroho und Meenakshi Shedde.

அந்தவகையில் 2008 க்கான NETPAC விருது யப்பானிய படமான United Red Army (Wakamatsu Koji) க்கு கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து Honorable Mention (குறிப்பிடும்படியான படம் ?) ஆக பருத்திவீரனை தெரிவு செய்திருக்கிறார்கள். இவ்வளவும்தான்.

தமிழ்த் திரைப்படத்துக்கு விருது கிடைத்தால் அது பெருமைப்படுதற்குரியது தான். ஆனாலும் ஒரு செய்தியை திரித்து மக்களுக்கு தவறான தகவலை வழங்குவது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பலதும் பத்தும்

''பருத்திவீரன்'' படத்திற்கு யேர்மனியில் விருது (சாதனன்)

யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச திரைப்படம் விருதில் தமிழில் வெளிவந்த '' பருத்திவீரன் '' திரைப்படம், சிறந்த கவனத்துக்குரிய இந்திய படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படத்தை இயக்கிய இயக்கநர் அமீருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அனைத்துலக ரீதியில் 163 படங்கள் இங்க தேர்ததொடுக்கப்பட்டன. திரைப்பட வரிசையில் ''பருத்தி வீரன்'' 21வது இடத்தில் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

யேர்மனி எழுத்து மொழியில் வடிவமைக்கப்பட்ட இப்படம் சிறந்த கவனத்திற்கு உரிய இந்திய படமாக தேர்வு செய்யபட்டு விருது வழங்கப்பட்டமை படைப்பாளிக்கு கிடைத்த வெற்றி என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=35&

உலகில் சிறந்த திரைப் படங்களுக்கு வழங்கப்படும் ''ஒஸ்கார்'' விருது போன்று யேர்மனியால் வழங்கப்படும் விருது ''தங்கக் கரடி'' என அழைக்கபடுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.