Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மீன்.... சிக்காத திமிங்கிலங்கள்!

Featured Replies

எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருக்கும் ஏவுகணையால் கோலிவுட், டாலிவுட் என்று தென்னிந்திய சினிமா உலகம் விக்கித்து நிற்கிறது. தென்னிந்திய நடிக, நடிகைகள் 200 பேருக்கு அமெரிக்காவுக்கு வர நிரந்தரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க அரசு.

இதற்குக் காரணம் கவர்ச்சி நடிகை ஃப்ளோரா..!

மும்பைப் பெண்ணான ஃப்ளோரா மாடல் அழகியாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 'கஜேந்திரா', 'குஸ்தி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'நரசிம்ம நாயுடு' படத்தில் சுப்ரீம் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் ஜோடி. நாயகி வாய்ப்புகள் குறைந்து சிங்கிள் பாட்டுக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக் காட்டி ஆட ஆரம்பித்தார். வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.

இந்நிலையில், அமெரிக்கா செல் வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார் ஃப்ளோரா. கூடவே தன் மேக்-அப் உதவியாளர் என்று சொல்லி ஸ்ரீலதா என்பவருக்கும் விசா கேட்டிருந்தார். இதற்காக இவர்கள் தாக்கல் செய்திருந்த

ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரியவரவே, தூதரக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ஃப்ளோராவையும் ஸ்ரீலதாவையும் இவர்களது டிராவல் சப் ஏஜென்ட் வெங்கட ரெட்டியையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

சிறிய மீனாக சிக்கிய ஃப்ளோரா விவகாரத்தைத் தொடர்ந்துதான், விழித்துக்கொண்ட சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகம், தங்கள் பழைய ஃபைல்களைத் தூசிதட்டி... கடந்த காலங்களில் கலைக்குழுக்கள், சினிமா ஷ¨ட்டிங், இசை நிகழ்ச்சிகள் என்ற போர்வையில் போலி விசாவில் அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே செட்டிலாகி விட்ட திமிங்கிலங்களைப் பற்றி பெரிய பட்டியலையே தயாரித்திருக்கிறது. அதன்பிறகுதான் மேலே சொன்ன தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மோசடி வரலாற்றைக் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து விசா கொடுப்பதில் அதிக கெடுபிடிகளைக் காட்டி வருகிறது அமெரிக்கா. டூரிஸ்டாக செல்பவர்கள் அங்கு வேலை செய்யக்கூடாது என்ற சட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா செல்ல விரும்புகிறவர்களுக்கு டூரிஸ்ட் விசா, பிசினஸ் விசா, படிப்பு விசா, வேலை விசா என்று வழங்கப்படுகிறது. இதில் வேலை விசா உள்ளவர்கள் மட்டுமே வேலை பார்க்க முடியும். ஆனால், டூரிஸ்டாக வந்து, பிறகு அரசுக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டு அங்கேயே தங்கி வேலை பார்ப்பவர்கள் அதிகம்.

சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இப்படிப் பட்டவர்களை உடனே மறுபடி நாடுகடத்தி விடுவார்கள். ஆனால், அமெரிக்காவில் இந்தக் காரியத்தைச் செய்யவேண்டிய USCISஎன்கிற துறையில் இருக்கும் ஆள் பற்றாக்குறையால், துறை அதிகாரிகள், சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் வம்புவழக்குகளில் சிக்கிக் கொள்ளா தவரையில் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.

இப்படி சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை வெளியேற்ற வழக்குப் போட்டாலும், அது ஐந்து ஆண்டுகள்வரை நடக்கும். தும்பை விட்டு வால் பிடிக்க வேண்டாமே என்று தன் நாட்டுக்கு வரும் அயலார்களுக்கான பரிசோதனைகளை நாளுக்கு நாள் நவீனப்படுத்தி வருகிறது அமெரிக்கா. பயணிகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் என்கிற முறையில் இப்போதெல்லாம் பரிசோதனைகள் நடக்கின்றன. பாஸ்போர்ட், விசா சோதனையோடு கைரேகைகள், கணினியில் புகைப்படப் பரிசோதனை ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களில் கணினியில் பதியப்படும் ரேகைகளையும் புகைப்படங்களையும் அமெரிக்க விமான நிலையத்தில் ஒப்பிட்டுப்பார்த்தே அனுமதிக்கிறார்கள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட ஒரே பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி, நாலு வெவ்வேறு நபர்கள் அமெரிக்கா போய் இறங்குகிற கதையெல்லாம் நடந்திருப்பது தெரிந்தது. ஒரே ஜாடை உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு அனுப்புவார்கள் ஏஜென்ட்கள். ரன்வீர் சிங்குக்கும் தன்வீர் சிங்குக்கும் உள்ள வித்தியாசத்தை தாடி மீசை - டர்பனுக்குள் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் அமெரிக்கர்கள்..?

குறிப்பாக, தென்னிந்திய மாநகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றில் வேலை பார்த்த சில கறுப்பு ஆடுகளின் உதவியுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் இப்படி போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்கா சென்றார்கள். இது வெளிநாட்டு தூதரக சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், சி.பி.ஐ.கூட எதுவும் செய்ய முடியவில்லை.

பயோமெட்ரிக் முறை வந்த பிறகு மேலே சொன்ன மாதிரியான மோசடிகளைச் செய்ய முடியவில்லை.

ஆனால் புரோக்கர்கள் சும்மா இருப்பார்களா...

அமெரிக்கா சென்ற அவர்கள், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களைப் பணத்தாசை காட்டி மயக்கினார்கள். அமெரிக்க சட்டப்படி, அதன் குடிமக்கள் திருமணம் மற்றும் தத்து எடுப்பதன் மூலம் யாரை வேண்டுமானாலும் அமெரிக்காவுக்கு அழைத்துவர முடியும். திருமணம் ஆன நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் மனைவியை சும்மாவாவது விவாகரத்து செய்துவிட்டு, இந்தியாவுக்கு வந்து, புரோக்கர்கள் கைகாட்டும் பெண்ணுக்குத் தாலிகட்டி மனைவி என்ற பெயரில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். அங்கே போய் இறங்கியதும் அவரவர் வழியை அவரவர் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்! இதற்குக் கூலி பத்து லட்ச ரூபாய்! இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, திருமணம் ஆனாலும் தற்காலிக விசாதான்... இரண்டு வருடம் சேர்ந்து வாழ்ந்தால்தான் நிரந்தர கிரீன் கார்டு என்று புதுச் சட்டம் போட்டது.

இதையடுத்து, தத்தெடுப்பை கையில் எடுத்தனர் புரோக்கர்கள். அப்போதுதான் நாற்பது வயதுக்காரர், ஐம்பது வயது மகளை(!) தத்தெடுக்கும் கூத்தெல்லாம் நடந்தது. இதில் பலே கைகாரர்களாகச் செயல்பட்டவர்கள் குஜராத்திகள்தான்! இதையும் தடுக்க, தத்தெடுப்பு விஷயத்தில் இந்திய நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று அமெரிக்கா ஒரு சட்டம் கொண்டுவந்தது.

இந்தக் கள்ளக் குடியேற்றத்தின் ஒரு பகுதியாக நடந்த பலே மோசடிதான் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலிருந்து சென்ற சில நாடகக் குழுக்கள், கலை நிகழ்ச்சி நடத்துபவர்களை புரோக்கர்கள் அணுகி பணத்தாசை காட்டி, அவர்கள் குரூப்பில் கள்ள ஆட்களை நுழைத்துவிடுகிறார்கள். இதைக் கண்டுபிடித்த தூதரக அதிகாரிகள், குறிப்பிட்ட சில நாடகக் குழுக்களைத் தவிர மற்றவர்களுக்கு விசா கொடுக்கத் தயங்கினார்கள். அமெரிக்காவில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சங்கீதம் மற்றும் நாட்டிய சீஸன் கொடிகட்டிப் பறக்கும். பல்வேறு தமிழ்ச்சங்கங்கள், சபாக்கள், கோயில்கள் கலைஞர்களைத் தமிழகத்திலிருந்து அழைத்து வருவார்கள். அதற்கு P விசா என்னும் 'பெர்ஃபாமர்ஸ் விசா' எடுக்கவேண்டும். இதற்கு பணச் செலவு அதிகம். தவிர, ஒரு முறைதான் வரமுடியும். இதைத் தவிர்க்க பல முன்னணிப் பாடகர்கள், பாடகிகள், கலைஞர்கள் 10 வருட டூரிஸ்ட் விசா எடுத்துவைத்து இருக்கிறார்கள். இதனால், கச்சேரி புக் ஆனதும் விமானம் ஏறிவிடுகிறார்கள். டூரிஸ்ட் விசாவில் கச்சேரி செய்யக்கூடாது, சன்மானம் வாங்கக்கூடாது என்பது விதி. ஆகவே அடுத்ததாக இவர்களும் சிக்கலில் மாட்டலாம். ஏனென்றால், இவர்கள் கச்சேரி விவரங்கள் வலைதளத்தில் வந்துவிடுகிறதே!

கேரளாவிலிருந்து தன் குடும்பத்தினருடன் டூரிஸ்டாக 2001-ம் ஆண்டு போன மலையாள நடிகை ஒருவர், நியூயார்க்கிலுள்ள இந்திய துணைத் தூதரகம் சென்று தங்கள் குடும்பத்தினர் அனைவரது பாஸ்போர்ட்களும் திருடுபோய்விட்டது என்று அழுது டெம்ப்ரவரி பாஸ்போர்ட் எடுத்து இந்தியா திரும்பினார். சில மாதங்களில் அந்தக் குடும்பத்தினர் தொலைத்ததாகச் சொன்ன பாஸ்போர்ட்டில் பலர் வருவதும், பாஸ்போர்ட்கள் மட்டும் இந்தியா செல்வதாகவும் அமெரிக்க போலீஸ் கண்டுபிடித்து, இந்திய துணைத் தூதரகத்துக்குத் தகவல் தந்தது. நான்கு பாஸ்போர்ட்கள் நியூயார்க்கில் நாற்பதாயிரம் டாலர்களுக்கு கைமாறின என்று கண்டுபிடிக்கப்பட்டது. இனி அந்த நடிகை தனது நாட்டுக்கு வரமுடியாதபடி அமெரிக்க அரசு தடுத்துவிட்டது.

இந்த ஆண்டு முதல் அமெரிக்க விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளின் பத்து விரல்களையும் கைரேகை எடுக்கும் முறை செயல்படத் தொடங்கியுள்ளது. இது இனிமேல் கிரீன்கார்டு வைத்திருப்பவர்களுக்கும் அவசியம். அடுத்து, கண்ணின் விழிகளை புகைப்படம் எடுக்கும் முறையும் வரவிருக்கிறது.

அமெரிக்காவில் சின்னதும் பெரிசுமாக சுமார் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அதில் வேலை செய்ய அர்ச்சகர்கள் மற்றும் கோயில் மடப்பள்ளியின் சமையல்காரர்களுக்கு ஸ்பெஷலாக R விசா என்னும் 'ரிலீஜியஸ் விசா'வை தாராளமாக வழங்கி வந்தது அமெரிக்க அரசு.பலர் இந்த விசாவைத் தவறாகப் பயன்படுத்தி மடப்பள்ளி சமையல்காரர்களை வைத்து இந்திய உணவகம் திறந்து டாலர்களைக் குவிப்பதை லேட்டாக உணர்ந்த அமெரிக்க அரசு, இந்த விசாக்களை அடியோடு நிறுத்தியது. இதனால் பல கோயில்களில் கும்பாபிஷேகம், பூஜைகள் செய்ய முடியாத நிலை. அர்ச்சகர் என்ற பெயரில் பலர் அமெரிக்கா வந்துள்ளார்கள். இப்போது சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் இவர்கள் உண்மையான பண்டிதர்களா என்று சோதிக்க சில பார்ட் டைம் சமஸ்கிருத அறிஞர்களை நியமித்து ருத்ரம், சமகம் கூறவைத்து பூஜா விதிகள் பற்றி இன்டர்வியூ செய்தே R விசா தருகிறார்கள்.

இப்போது புரிகிறதா, அமெரிக்காவின் தடை உத்தரவு ஏன் என்று!

சிங்கப்பூர், துபாய், சுவிட்சர்லாந்து என்று பறந்துகொண்டு இருந்த 'ட்ரம்மர்' சுரேசுக்கு நேர்ந்த சோகம் ரொம்ப பரிதாபகரமானது.

''இங்கே ஒரு இசைக்குழு நடத்திவரும் மனிதர் எனக்குப் பழக்கமானார். 'கனடாவில் கச்சேரி நடத்தப் போறேன். நீயும் என்கூட வர்றே. உன் பாஸ்போர்ட்டைக் கொடு' என்று உரிமையோடு கேட்க, நானும் கொடுத்துவிட்டேன். அவர் அதைத் தனக்குத் தெரிந்த இலங்கைத் தமிழரான மீடியேட்டரிடம் கொடுத்துவிட்டார். அது எனக்குத் தெரிருந்திருந்தால், பாஸ்போர்ட்டைத் தந்திருக்க மாட்டேன். பலமுறை பாஸ்போர்ட் கேட்டும் சரியான பதில் இல்லை. நான் போலீஸ§க்குப் போனதும் 'பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. புது பாஸ்போர்ட் வாங்கித் தந்துவிடுகிறேன்' என்று என்னிடம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

புது பாஸ்போர்ட் வாங்கப்போனபோது என்னுடைய பயோடேட்டாவை கம்ப்யூட்டரில் செக் பண்ணிப் பார்த்த பாஸ்போர்ட் அதிகாரி, அதிர்ச்சியோடு என் ஒரிஜினல் பாஸ்போர்ட்டைக் கம்ப்யூட்டரில் காட்டினார். அதில் யாரோ குஜாராத்தியின் போட்டோ ஒட்டியிருந்தது. 'உன் பாஸ்போர்ட்ல போய் கனடாவுல இறங்கின ஆளை கைது பண்ணி இங்கே அனுப்பிட்டாங்க. இப்போ குஜராத் ஜெயிலில் இருக்கான்' என்றார். இலங்கைத் தமிழரான அந்த மீடியேட்டர் இப்போதும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு வெளிநாடு போகும் கலைஞர்களோடு எக்ஸ்ட்ராவாக சிலரை அழைத்துச் செல்லும் வேலையைத்தான் செய்துவருவதாகக் கேள்விப்படுகிறேன்'' என்றார்.

இசைக் கச்சேரிகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகும் லஷ்மண் ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ராவைச் சேர்ந்த லஷ் மணிடம் பேசினோம்.

''கச்சேரிக்குக் கூப்பிடுறப்ப சிலர் 'எங்க ரிலேடிவ்ஸ் நாலு பேர் ஃபாரினை சுத்திப்பார்க்க விரும்புறாங்க. அவங்களையும் உங்க ட்ரூப்ல ஒருத்தரா அழைச்சுட்டு வந்துருங்களேன்' என்று கேட்பார்கள். ஆனால், நாங்கள் மறுத்துவிடுவோம். இதனாலேயே எங்களுக்குப் பல வாய்ப்புகள் பறிபோயிருக்கிறது. என் கச்சேரியில் பங்கேற்பவர்கள் வெளிநாட்டிலுள்ள உறவினர் வீட்டுக்குப் போகக்கூட அனுமதிப்பதில்லை. ஒரு முறை ஜெர்மனியில் நிகழ்ச்சி நடத்தப் போனோம். ஹாலந்தில் ஃபிளைட் மாறவேண்டும். ஹாலந்து ஏர்போர்ட்டில் எங்கள் இசைக்குழுவை இமிகிரேஷன் அதிகாரிகள் வளைத்துக்கொண்டார்கள். எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. கைவசமிருந்த இசைக்கருவிகளை வாசித்துக் காட்டியபிறகே விட்டார்கள்'' என்றார் லஷ்மண்.

தனது நாடகக் குழுவோடு அயல்நாடுகளுக்குப் போகும் நடிகரும்

எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகர்,

''ஆரம்பத்தில டிராமா ட்ரிப் போகும் போது 'சேகர் உங்க குழுவோட நாலு பேரை அழைச்சிட்டு வந்துடுங்க. அதுக்காக உங்களுக்கு ஒரு ஆளுக்கு நாலு லட்சம் வீதம் தந்துடறேன். அமெரிக்கா வந்ததும் அவங்க எங்கயாவது போயிடுவாங்க'னு சொல்லுவாங்க. அவங்க சகவாசமே நான் வெச்சுக்கறதில்லை. அமெரிக்காவுல 52 மாநிலம் இருக்கு. ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விதமா சட்டம் மாறுபடும். 'சியாட்டல்' என்று ஒரு மாநிலம் இருக்கு. அங்கே டிரைவிங் லைசென்ஸ் இருந்தாலே விசாவுக்குரிய மரியாதை கிடைக்கும். அதனால நிறைய பேர் விசா இல்லாமலேயே அங்கே போய் செட்டிலாயிடுவாங்க. சில பேர் பாஸ்போர்ட்டைக் கிழிச்சுப் போட்டுட்டு, அமெரிக்க போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு 'சியாட்டல்' போன்ற மாநிலத்துல செட்டிலாயிடுறாங்க'' என்றார்.

பிரகாஷ் எம்.ஸ்வாமி

vikatan.com

Edited by vasisutha

ம்ம்ம்....வசி அண்ணா எப்பவுமே மீன்கள் தான் சிக்கும்..(திமிங்கிலங்கள் எஸ்கேப் ஆகிடும் வெறி சாட் :o )..என்னவோ ஜம்மு பேபிக்கு தடை விதிக்காத வரை சந்தோசம் பாருங்கோ.. :D (அது தான் அமேரிக்கா போக தான் <_< )..இதை தான் சொல்லுறது செய்யிற வேலையை சரியா செய்ய வேண்டும்...(இப்ப ஒருவா பிடிபட்டதால எல்லாமே போச்சு பாருங்கோ :) )..எனிவே இவை எல்லாம் எனி அமெரிக்காவிற்கு போக ஏலாட்டி அமெரிக்கா உருப்படியா இருக்கும் அதில நேக்கு சந்தோசம் பாருங்கோ.... :D

அப்ப நான் வரட்டா!!

வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யப்படும் தொழில். அமெரிக்காவை சும்மா விட்டுவிடச் சொல்லுங்கோ.

வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யப்படும் தொழில். அமெரிக்காவை சும்மா விட்டுவிடச் சொல்லுங்கோ.

ம்ம்ம்...இறைவன் மாமா இப்படி சொன்னவர் என்று கட்டாயம் அமெரிக்கன் பிரசிடனிட்ட சொல்லி விடுறன் என்ன... :huh: (நிசமா முடியல்ல என்னால :lol: )..

அப்ப நான் வரட்டா!!

மையில் சாமியும், தாமும் பாவம் இனி அமெரிக்க வியாபாரத்தை விட்டு விட வேண்டியது தான்

...ஆனால் இங்கு கனடாவில் இவர்க்ளை கொண்டுவந்து 'வியாபாரம்' நடத்தும் பெரும் தமிழ் கூட்டமே இருக்கும் போது கவலைபட வேண்டியது இல்லை

..அது சரி...எப்படி இவர்களை தொடர்பு கொள்வது...? :rolleyes:

Edited by NIZHALI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.