Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடு செல்லும் நோக்கில் பிராடு செய்த துணை போன பெண்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jayasree-us-250_17032008.jpg

சென்னை: போலி விசா பெறுவதற்காக மணப்பெண் அலங்காரத்துடன், யாரோ ஒரு நபருடன் கணவன், மனைவி போல போஸ் கொடுத்து பெரும் துயரத்தை சந்தித்துள்ளார், கைதாகி சிறையில் தவிக்கும் விதவைப் பெண்ணான குஜராத்தின் ஜெயஸ்ரீ படேல்.

போலியான ஆவணங்களைக் கொடுத்து விசா பெற்று ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலகம் அதிர்ந்தது.

புளோராவைத் தொடர்ந்து, அடுத்த நாளே போலீஸில் சிக்கினார் ஜெயஸ்ரீ படேல். பி.காம் படித்துள்ள ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது தாய்க்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். பின்னர் ஜெயஸ்ரீயின் தந்தையும் ஒரு பெண்ணுடன் போய் விட்டார்.

தனித்து விடப்பட்ட ஜெயஸ்ரீ பாட்டி வீட்டில் தஞ்சம் புகுந்தார். வளர்ந்து பெரிய பெண் ஆனதும், வீட்டில் பார்த்து வைத்தவரை மணந்தார். ஆனால் துரதிர்ஷ்டம் துரத்தியது. ஜெயஸ்ரீயின் கணவர் விபத்தில் இறந்து போனார்.

நிர்க்கதியான நிலையில் தள்ளப்பட்ட ஜெயஸ்ரீ ஹைதராபாத் வந்தார். அங்கு தங்கி சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் வருமானம் போதவில்லை. இந்த நிலையில்தான் ஏஜென்டுகள் சிலர் அவரை அணுகி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.

அவர்கள் பேச்சை நம்பினார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த அவர்கள், ஜெயஸ்ரீக்கு மணப்பெண் போன்ற வேடம் போடச் சொன்னார்கள். இதைக் கேட்டு அவர் அதிர்ந்தார்.

ஆனால் இப்படியெல்லாம் செய்துதான் போலி விசாவைப் பெற முடியும் என்று அவர்கள் கூறவே சம்மதித்தார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஒரு நபர் மணமகன் கோலத்தில் அடுத்த அறையிலிருந்து வந்தார். அதைப் பார்த்து மேலும் அதிர்ந்தார் ஜெயஸ்ரீ.

கல்யாணம் செய்து கொள்வது போல நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். இருப்பினும் அவரை சம்மதிக்க வைத்து திருமணச் சடங்கு நடப்பது போல பல கோணங்களில் படம் பிடித்தனர். ஆனால் தாலி கட்டுவது போல மட்டும் நடிக்க ஜெயஸ்ரீ சம்மதிக்கவில்லை.

இப்படியெல்லாம் செட்டப் செய்து எடுத்த புகைப்படங்கள்தான் ஜெயஸ்ரீயை மாட்டி விட்டு விட்டன. காரணம், தாலி கட்டுவது போல ஒரு படம் கூட இல்லாதது தூதரக அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

அதுதொடர்பாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் குழம்பிய ஜெயஸ்ரீ தான் குஜராத்தைச் சேர்ந்த பெண் என்பதையும், விதவைப் பெண் என்பதையும் சொல்லி மாட்டிக் கொண்டார்.

அம்பலப்படுத்தும் ஆந்திரா:

இந்த நிலையில் ஆந்திரத் திரையுலகைச் சேர்ந்த மோசடி திரைத்துறையினர் குறித்த விவரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப் போவதாக அம்மாநில செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்குத் திரையுலகில் பீதி கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் யார் யாரெல்லாம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படும். தவறு செய்த யாரும் தப்ப முடியாது.

சென்னையிலிருந்து ஒரு போலீஸ் குழு விரைவில் ஹைதராபாத் வரவுள்ளது. இங்குள்ள விசா மையத்தின் செயல்பாடுகளை அது ஆய்வு செய்யவுள்ளது. அந்தக் குழுவுக்கு ஹைதராபாத் போலீஸார் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் மானம் அடங்கியுள்ளது என்பதால் விசாரணையில் எந்தவித சுணக்கமும், மெத்தனமும் கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் தவறு செய்த 200 பேரின் பெயர், விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம் என்றார் அவர்.

விஐபி தொடர்பு அம்பலம்:

இதற்கிடையே அமெரிக்க விசா மோசடி சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய தமிழக விஐபி குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அந்த நபர்தான் பெருமளவில் நடிகர், நடிகைகளை அடிக்கடி அமெரிக்கா அழைத்துச் செல்வபர் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் ஒருவரும், முன்பு ஹீரோவாக இருந்து, பின்னர் வில்லனாகி, சமீப காலமாக தந்தை, தாத்தா வேடங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் முக்கியப் பிரமுகர் ஒருவர் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார். இவர் அடிக்கடி நடிகர், நடிகைகளை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்குக் கூட்டிச் செல்பவர். இவருக்கும், பல ஏஜென்டுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. இவர் மூலமாகவும் பலர் அமெரிக்காவுக்கு முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த பிரமுகர் குறித்த அனைத்துத் தகவல்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர். இவர் எங்கும் தப்பி விடாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2008/03...eveals-her.html

-------------

உங்க லண்டனிலும் நம்மட ஆக்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நடிகைகளை அழைத்து வந்து ஆட்களுக்கு சப்பிளை செய்வதும் நடக்கிறது..! அதற்கு நடிகைப் பெண்கள் பெரும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சம்மதிக்கின்றனர்..! :D<_<

Edited by nedukkalapoovan

ஈழத்தவர்கள் மத்தியுலும் இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கிறது நெடுக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தவர்கள் மத்தியுலும் இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கிறது நெடுக்ஸ்

நிச்சயமாக இருக்கிறது. பலர் குடும்பமாக வரக் கூட பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து வந்துள்ளனர்..! <_<

தம்பி ஜமுனா,

ஓடி வாங்கோ?

பிராடு என்றால் என்ன என்று தெரியுமா?

quote name='oviyan' date='Mar 17 2008, 11:06 AM' post='392454']

தம்பி ஜமுனா,

ஓடி வாங்கோ?

பிராடு என்றால் என்ன என்று தெரியுமா?

நெடுக்ஸ் தாத்தா..(வட்ஸ் கப்பன்ட் டூ யூ ஆர் யூ ஓல் ரைட் :D )...நிசமா என்னால முடியல்ல...தாத்தா இது என்ன பெரிய விசயம் பாருங்கோ அக்சுவலா சிட்னியில தாத்தா வதிவிட உரிமை இல்லாத பெண்கள் வந்து ஆண்களிடம் குறிபிட்ட தொகை பணம் தந்து என்னை பதிவு திருமணம் செய்யும்படி கேட்கீனம்... :) (வதிவிட உரிமை கிடைத்தா பிறகு செப்பிரேட் ஆகிடுவீனமாம் என்றா பாருங்கோ <_< )..இப்படி ரொம்பவே பாட்டா போய் கொண்டிருக்கீனம் கேள்ஸ் தாத்தா...(இந்த நியூஸை கேட்டு நேக்கு ஒரே ஸோக் தாத்தா :( )..

நல்லா தான் முன்னேறிவிட்டீனம் பாருங்கோ...(ஒன்றுமே தெரியாதவர்கள் மாதிரி இருந்து கொண்டு செய்யிற வேலைகள் எல்லாமே அநியாயம் பாருங்கோ :( )...

இதற்காக எல்லா பெண்களையும் நான் சொல்லவில்லை... :D (பட் இப்படியா நடவடிக்கையை பார்த்தா பிறகு தாத்தா போடுறதிலையும் ஒரு நியாயம் இருக்கும் என்று தான் நினைக்கிறன் :D )...ஆனாலும் தாத்தா எல்லா பெண்களையும் நாங்கள் சொல்ல கூடாது என்ன..(எல்லாரும் அப்படி இல்லை நல்லவை மாதிரி வெளியே காட்டி கொள்வீனம் அவையோட தான் முக்கியமா கவனமா இருக்க வேண்டும் :D )..

நான் மேல சொன்ன மாட்டருடன் ஓப்பிடக்க தாத்தா கூறிய பெண் ரொம்ப பாவமாக்கும்..(என்னால முடியல்ல :( )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா யார் தப்பு செய்தாலும் தப்பு தப்பு தான் அது பெண்ணா இருந்தா என்ன ஆணா இருந்தா என்ன" :o

அப்ப நான் வரட்டா!!

இல்லை எனக்குத் தலையே வெடிக்கும் போலை இருக்குது.

எனக்கு பராட்டா தான் தெரியும். இதென்ன பிராடு

உங்களுக்காவது தெரியுமா?

சரி ஜம்மு எத்தினை மணிக்கு எழும்புவான்.?

தம்பி ஜமுனா,

ஓடி வாங்கோ?

பிராடு என்றால் என்ன என்று தெரியுமா?

ஓவியன் அண்ணா ஓடி வந்துட்டேன்...(கூப்பிட்டினியள

ஓ இது தானா?

இதுக்குத் தான் ஜமுனா ஜமுனா எண்டு சாகிறது. அது சரி உங்களுக்கு எப்படி இவ்வளவு மூளை?

ஓ இது தானா?

இதுக்குத் தான் ஜமுனா ஜமுனா எண்டு சாகிறது. அது சரி உங்களுக்கு எப்படி இவ்வளவு மூளை?

இதே தான் அண்ணா மாட்டர் பாருங்கோ... :D (எல்லாம் ஓவியன் அண்ணா ஏசி ஏசி வந்த மூளை தான் பாருங்கோ <_< )...அண்ணா நான் அரட்டை அடிக்க மாட்டன்...(நீங்கள் ஏசுவியள் :D )..

அப்ப நான் வரட்டா!!

இல்லை மூளை வளர்றதுக்கு என்ன சாப்பிடிறியள் எண்டு சொன்னா நாங்களும் சாப்பிடுவம் எல்லோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில தாத்தா வதிவிட உரிமை இல்லாத பெண்கள் வந்து ஆண்களிடம் குறிபிட்ட தொகை பணம் தந்து என்னை பதிவு திருமணம் செய்யும்படி கேட்கீனம்... (வதிவிட உரிமை கிடைத்தா பிறகு செப்பிரேட் ஆகிடுவீனமாம் என்றா பாருங்கோ...

இப்படி உங்கினையும் செய்து.. உள்ள இருக்கினம் பெண்கள்..! :D<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.