Jump to content

புரட்(டு)சீ


Recommended Posts

பதியப்பட்டது

கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திரள்களை புகையாக்கித் திரட்டி, மூச்சுக் குழல்கள் ஊடாக வலிந்து திணித்தது போன்றதொரு நெஞ்செரிவை, ஆற்ற முடியாமல், பீரிட்டுக் கிளம்பும் அரோகரா ஒலிகளும், சிறு கோபுரங்களாய் விழி வீச்சின் எல்லைவரை குவிக்கப்பட்டு, கார்ப்பெட் தாரிட்ட வீதியில் பட்டுச் சிதறிப்போவதற்குரிய வீச்சில் எறிபடும் தேங்காய்களும் இடைஞ்சல் செய்தன.

வெட்கத்தின் தொடக்கப்புள்ளி, சிதறடிக்கப்பட்ட தேங்காய்ச் சில்லுகள், தனித்தொன்றாய்ப் போய்விட்ட என் உறவுகளை நினைவுறுத்திய அடுத்த கணத்தில் ஆரம்பித்தது. ``இதெல்லாத்தையும் பார்க்கிற வெள்ளைக்காரன் எங்களைப் பற்றி என்ன நினைப்பான் ´´ ஆனால் இற்றை வரை விரவிக் கிடக்கும் வெட்கம் இக்கேள்வியின் மேற்பட்டதேயன்றி இக்கேள்வியல்ல. வெள்ளைக்காரத் துரை குறித்த உயர்ச்சி மதிப்பீடு என் மனதடியில் ஒளிந்து கொண்டிருந்தமை மீதான வெட்கம் அது. இன்னும் சில வெ - துரை குறித்த ஆண்டகை உருவகங்கள் எனக்குள் பதுங்கியிருக்குமோ என்ற அச்சம் வெட்கத்தை மேலும் அதிகமாக்கியது. வெள்ளைக் காரனின் மன நிலைச் சமன்பாட்டுத் தளத்தில் பொருத்தி அளவிடுவதற்கு அவனுக்கு கொம்பெதுவும் முளைத்துளதா? தேசங்களைக் களவாடச் சென்ற திருடர்கள் என்றும் தீவாந்திரத் தனிமைச் சிறைகளில் கைதிகளின் ஒவ்வொரு உயிர் அணுவையும் வலிப்படுத்திய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் அறிந்தவற்றை நினைவிருத்திக் கொண்டேன். இருந்தும் மனதின் ஆழ் மடிப்புக்களில் மறைபட்டுக் கிடந்து எப்போதேனும் வெளி நீட்டி, வெட்கத்தை நுரைக்கச் செய்து என் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை அரிக்கத் தொடங்குகின்றன இதுபோல மேலும் சில நிகழ்வுகள்.

நான் அமைதியுற விரும்பினேன். எதனையும் வெளிச்சொல்லவில்லையென்பதே குறைந்த பட்ச ஆறுதலைத் தந்தது. வயதான வெள்ளைத் தம்பதியர் வீடியோவில் சுற்றிச் சுற்றி படமாக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் இந்நிகழ்வை அனுபவிக்கிறார்கள் போல்ப்பட்டது. காவடியாட்டத்தை எடுக்கச் சொல்லி கணவனிடம் அந்தப் பெண் கை காட்டினாள். காவடியாட்டங்களை ஆவல் ததும்ப அருகில் சென்று பார்த்த பழைய காலங்கள் எனக்கும் உண்டு. இப்போதெல்லாம் என்னை நீங்கித் தூரம் சென்று விட்ட கடவுளர் அப்போது என் அருகிலிருந்தனர். காலையில் பூப்பறித்துச் சாத்தும் போதே ``மாதகலில் இருந்து ஆமி மூவ் பண்ணினால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில நிற்கலாம் பிள்ளையாரே ´´ என்ற முணுமுணுப்புக்களின் பின்னால் உப நோக்கம் ஒன்றிருந்தது. அது சுழிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து என் வீட்டுக்கு வரும் அவள். அது குறித்து பிள்ளையாருக்கு ஒரு போதும் அறியத்தந்ததில்லை. அவர் என்னைக் கவனமாக கிரகித்துக்கொள்வார் போலும். அதற்கடுத்த நாட்களில் ``மேலாலும் கீழாழும்´´ என் வேண்டுகை பலிக்கத்தொடங்கிய பொழுதுகளிலும் ``பிச்சை வேண்டாம் நாயைப்பிடி பிள்ளையாரே´´ என அவரிடத்தில்த்தான் தஞ்சம் புகுவேன். வல்லூறுகளை ஞாபகப்படுத்தும் இயந்திரங்களின் எச்சங்களை தலைக்கு மேல் கண்டவுடன் முணுமுணுப்புக்களைக் கதறல்களாக்கியிருக்கிறேன். காற்றில் சடசடக்கும் விசிறிகளோடு வீட்டைச் சுற்றிச் சன்னங்களைத் தூவும் வானூர்திகள் என்னைத் தென்னை மரங்களுக்குப் பின்னேயிருந்தும், சுவர் மறைப்புக்களில் பதுங்கியிருந்தும் பிள்ளையாரை அழைக்கச் செய்திருக்கின்றன.பின்னேரங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனைப்புக்கு நன்றிகள்..புரச்சிக்கும் விளம்பரங்கள் தேவைப்படுகிறது.

  • 4 weeks later...
Posted

வணக்கம் புத்தன். புரட்டூசிக்கு தான் அதிகம் விளம்பரம் தேவைப்படுகிறது. அது தான் ஊரிலும் நடக்கிறது. மேலே சொன்ன தேங்காய் உடைப்பவருக்கும் புரட்சி என்று பேசி புகைப்படங்களுக்கு முகம் காட்டி இணைய விளம்பரம் செய்யும் கூட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என்ன தேங்காய் உடைப்பவர் அப்படியும் இப்படியும் சொல்லதேவையில்லை. ஆனால் புரட்டூசி செய்பவர்கள் சந்தர்பத்துக்கு ஏற்றால் போல் அப்படியும் இப்படியும் முழு பூசணிகாயை சோற்றில் மறைக்கும் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.