Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா நான் கோதை அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நான் கோதை அல்ல

அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின.

இரவு உணவிற்கான தயாரிப்பில் திலகம்மா அடுக்களையில் ஆரவாரப்படுவது பாத்திரங்களின் ஓசையில் தெளிவாகக் கேட்டது. கூடவே சமையலுக்கு ஒத்தாசை செய்யாத மகளை கடிந்து கொள்வதும் கோதைக்கு நன்றாகக் கேட்டது. அம்மா திலகம்மாவின் கடிந்து கொள்ளலை காதில் போட்டுக் கொள்ளாமல் இன்னும் அணில் விளையாட்டில் தனைப்பதித்தாள் கோதை.

கோதை அந்த வீட்டின் தேவதை. அப்பா, அம்மா, அண்ணா எல்லோருக்குமே அவள்தான் அரசி. வீட்டில் அவள் இட்டதே சட்டம். அப்பா செல்லம் அதிகமானாதால் அம்மாவுடன் வாயாடிச் செல்லசண்டைகள் போடும் சுட்டிப்பெண். வீட்டில் மட்டுமல்ல அந்த வட்டாரத்திலேயே அவளுக்கென்று தனிச் செல்லம் இருந்தது.

தூரத்தில் நாய்களின் குரைப்பொலி வித்தியாசமாக ஒலிக்கக் கேட்டு திலகம்மா துணுக்குற்றாள். அவசரமாக முற்றத்திற்கு வந்து ஒழுங்கையை அவதானித்தாள். தூரத்தில் ஆடுகளைக் கலைத்துக் கொண்டு சென்ற மணியம் கைகள் இரண்டையும் உயர்த்தி நிற்பதை கண்ட திலகம்மா கோதையை உலுப்பி, 'அவங்கள் வாறாங்கள் எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் போகாதே அவங்கள் கூப்பிட்டாலும் முற்றத்தை விட்டு அசையாதே" என்றவள் அடையாள அட்டைகளையும் வதிவிட ஆவணங்களையும் எடுக்க வீட்டுக்குள் ஓடினாள். தாயின் ஓட்டத்தையும் பதற்றத்தையும் பார்த்த கோதைக்கு உதட்டில் நையாண்டிச் சிரிப்பு வெடித்தது. ஏன்தான் இப்பிடி அனாவசியமா பயப்பிடுறீங்க? என்று வெளிப்படையாகக் கேட்டு அம்மாவிடம் பேச்சு வாங்க விரும்பாது மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்.

காற்றை விட வேகமாக அவர்கள் வந்து விட்டார்கள். ஒழுங்கை முழுக்க அந்த வாடை கோதைக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. ஒவ்வொரு வீடாக நால்வர் , ஐவராக தலைக்குக் கறுப்புச் சீலையைக் கட்டிய அவர்கள் அடாவடித்தனமாக நுழைந்து வீட்டிலுள்ளவர்களை அடித்து அலற வைக்கும் சத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. இதோ கோதை வீட்டு வாசலுக்குள்ளும் நால்வர் திபுதிபென்று புகுந்தனர். அவர்களின் வருகைக்கும் திலகம்மாவின் வீட்டின் வெளிப்பாகத்தை நோக்கிய வருகைக்கும் சரியாக இருக்கவே வந்தவர்களில் இருவர் திலகம்மாவை வீட்டைக் காண்பி என்று வீட்டைச் சோதனையிட மறுபடியும் திலகம்மாவை வீட்டிற்குள் தங்களுக்கு முன்பாக நகருமாறு கூறி அவளின் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களின தோற்றத்தையும் முகத்தில் இருந்த வெறியையும் பார்த்த திலகம்மாவிற்கு அடிவயிறு பகீரென்றது. திலகம்மா கோதையைக் கண்களால் எச்சரித்துவிட்டு அந்த பராகுரூப் ஜவான்களுக்கு முன்னால் நகர்ந்தாள்.

அக்கம் பக்கமெல்லாம் அயலவரின் அவலக்குரல்கள் கோதையின் செவிப்பறையில் மோத, தன்னையே வைத்தகண் வாங்காது வெறித்துக் கொண்டு நின்ற மற்றைய இரு பரா ராணுவர்களாலும் இதுவரை நேரமும் துடுக்குத்தனத்துடன் நின்ற கோதையின் மனதில் அச்சம் படர்ந்தது

அவளையே மேய்ந்து கொண்டு நின்ற இருவரும் ஒருவருக்கு ஒருவர் கண்ஜாடை காட்டிவிட்டு மெல்லக் கோதையை நோக்கி, வீட்டுக்குள் வரும்படி சைகையால் பணித்தனர். தாயின் வார்த்தைகள் கோதையின் காதிற்குள் ஒலித்துக் கொண்டது. கோதை அந்த ஜவான்களைப் பார்க்காதது போல் பாசாங்கு செய்தாள். மறுபடியும் அருகில் நின்றவன் கொஞ்சம் அதட்டலாகவே வீட்டுக்குள் வரும்படி அழைத்தான். இம்முறை கோதை புரியாதவள்போல் பார்த்தாள். அவளின் இச்செய்கைகள் அப்பரா இராணுவனுக்கு போதையைத் தலைக்கு ஏற்றிவிட, அடுத்து நடந்தவை........

தரதரவென்று கோதையின் கையைப்பிடித்து, வீட்டின் பின் பக்க வாசலை நோக்கி இழுத்துச் செல்லும் அவனிடம் இருந்து விடுபட பெரும் பிரயத்தனப்பட்டபடி 'அம்மா... அம்மா" என்று கோதை அலறினாள். அவளின் அலறலை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பரா இராணுவன் சினத்துடன் தான் வைத்திருந்த துப்பாக்கிக் கைப்பிடியால் கோதையின் வாயை நோக்கி ஓங்கிக் குத்தினான். அது, அவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற கோதையின் தோள்ப்பட்டையைத் தாக்கிட ,அவள் நிலை குலைத்துப் பக்கவாட்டுச் சுவரில் வீழ்ந்தாள். அடியின் வேதனையுடன் அலறி விழுந்தவள் எழ முடியாமல் ,சுவரோடு தள்ளி அவளின் கழுத்தை துப்பாக்கி முனைக் கத்தி அழுத்தியது. தொண்டைக்குழியில் கத்திமுனை அழுத்திய கணத்தில், எட்டத்தில் நின்றிருந்த மற்றவனும் நகைத்தபடி அருகேவந்து துப்பாக்கியைத் தள்ள எத்தனிக்கும் அவள் பட்டுக்கரங்களை முரட்டுத்தனமாக முறுக்கி முதுகுப்பக்கம் அழுத்தி நோகடித்தான். திமிரமுடியாமல் முடக்கப்பட்ட அவளின் அலறலை நிறுத்த துப்பாக்கியை நீட்டியவன் கத்தாதே என்று தன் வலிய கரங்களால் அவள் வாயை இறுகப் பொத்தினான். இரு பராஜவான்களும் முரட்டுத்தனமாக அவளை அழுத்தியபடி..... அவளின் அந்தரங்க அங்கங்களைக் கைகளால் துலாவிப் பற்களால் பதம்பார்க்க......

திடீரென்று ஒழுங்கையில் பல பூட்ஸ்கால்களின் துரித ஓட்டஒலி கேட்டது. துணுக்குற்ற இவ்விரு இராணுவர்களும் கோதையைவிட்டுவிட்டு முன்புறம் ஓடினர். அதற்குள் திலகம்மாவோடு வீட்டைச் சோதனைபோட்ட மற்றைய இருவரும் நமட்டுச் சிரிப்புடன் இவர்களை நோக்க, இவர்களும் போகலாம் என்று கையைக்காட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடந்து மறைந்தனர்.

மகளின் அலறல் கேட்ட திலகம்மா பாய்ந்து வெளியே ஓடிவருவதை இடைமறித்த மற்றைய ராணுவன் திலகம்மாவின் கழுத்கைக் கைகளால் நசுக்கிப் பயமுறுத்தினான். திலகம்மாவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்து உடல் தளரத்தொடங்கச் சட்டென்று விட்டான். திலகம்மா தொய்ந்து விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்து வருவதற்குள் நான்கு பரா இராணுவரும் வெளியேறிவிட்டனர். அச்சத்துடனும், பதட்டத்துடனும் கோதை அலறிய பின்வாசலை அடைந்த திலகம்மா அதிர்ச்சியில் உறைத்துப்போனாள்.

அங்கே எப்போதுமே துடுக்குத்தனத்துடன் துள்ளி விளையாடும் அவள்வீட்டுத் தேவதை மார்புச்சட்டையில் இரத்தம் கசியத்துடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வீட்டில் எல்லாமே ஊமையாய் போனது. எல்லா விழிகளும் அழுதழுது சிவப்பேறிப் போயின. கோதை வீட்டில் மட்டுமல்ல, அந்தப் பிரதேசத்தில் பலவீடுகளில் பலவிதக் கொடூரங்கள் அரங்கேறி முடிந்திருந்தன. எல்லா வீட்டிலும் ஊமைக்காயங்கள். விடுதலைப் புலிகளை எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்திய பரா இராணுவர்கள் விடுதலையின் வீச்சைச் சிதைக்க மக்களிடம் தம் கைவரிசையைக் காட்டிவிட்டுப் போயிருந்தர். இரவிரவாக ஒருவரும் உறங்கவில்லை. ஒருசில தினங்களாக நரக வேதனை தொடர்ந்தது... இன்றைய விடிவுதன்னும் ஆறுதல் தருமா? என்ற கேள்வியோடு படுக்கையைவிட்டு எழுந்துவந்த திலகம்மா மகளின் படுக்கையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவள் விக்கித்து நின்றாள். அங்கே ஒரு கடதாசித்துண்டு தலையணையின் ஓரத்தில் நான்காக மடிக்கப்பட்டுக் கிடந்தது. அதில் 'அம்மா நான் கோதை அல்ல கொற்றவை" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. ஒழுங்கைக்கு வெளியே கோதையின் சைக்கிள் புறப்படும் சத்தம் கேட்டது. திலகம்மா அழவில்லை மகளை அழைக்கவும் இல்லை. நிமிர்ந்து நின்றாள்

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

இது கதை அல்ல. இது போன்ற உண்மை சம்பவங்களை கண்டும் கேட்டும் உள்ளேன். இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் ஒன்றா இரண்டா எழுத்தில் அடக்க.? நன்றி, சகாரா, வாழ்க்கையை பின்னோக்கி பார்க்க வைத்தமைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் இது கதையல்ல உண்மைச்சம்பவந்தான். சின்னச்சின்ன மாற்றங்களுடன் வெளிக்கொணர்ந்துள்ளேன். எழுதுகோல்கள் மௌனிக்கக்கூடாது.

இதைவிடக் கொடூரமான சேதிகள் நிறைய உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.