Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மகாண சபைக்கான தில்லு முல்லு தேர்தலும்! வடக்கில் நடாத்தபடும் கொலைக்கான அரசின் அங்கிகாரமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மகாண சபைக்கான தில்லு முல்லு தேர்தலும்! வடக்கில் நடாத்தபடும் கொலைக்கான அரசின் அங்கிகாரமும்!

May 18,2008

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ, எல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, புலனாய்வு துறையினர் ஆகியோர் இணைந்து தீட்டிய சதித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளனர் பிள்ளையான், ஐயா கொசுரு ஞானம், கோவணம் இழந்த குமாரதுரை தாத்தா.

அதன்படி கள்ள வாக்குகளும் வன்முறைகளும் நிறைந்த தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண சபை தேர்தலில் அதிக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதை கட்டுப்படுத்தி அதன் ஊடாக தமிழர்களின் பெரும்பான்மையை குறைப்பதும் தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றுவது தொடர்பான திட்டம் அரசு தரப்பினரால் தீட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தமிழர் விடுதலை கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகள இணைந்த கூட்டான தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியை அம்பாறை மாவட்ட தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மூன்று கட்சிகளின் தலைவர்கள் அவசர கூட்டம் ஒன்றை கொழும்பில் கூட்டினர். அக் கூட்டத்தில் சித்தார்த்தர் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் அதனால் ஏற்படபோகும் ஆபத்தினை அரசின் அச்சுறுத்தலையும் எடுத்து விளக்கினார். அதனை ஏற்றுகொண்ட தலைவர்கள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது இல்லை எனவும் ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் போட்டியிடுவது என முடிவினை மேற்கொண்டனர்.

அதேவேளை மூன்று தமிழ் கட்சிகளின் கூட்டினை வரவேற்ற இடதுசாரிகள், தமது கட்சிகளும் தமிழ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் என அமைச்சர் டியூ குணசேகர தமிழகம், கோயம்புத்தூரில் வைத்து ஆங்கில பத்திரிகைக்கு செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார்.

இதனை கவனத்தில் கொண்ட சிங்கள அரசு இடதுசாரிகளுடன் தொடர்பு கொண்டு தமிழ் கட்சிகளுடன் கூட்டுசேர்வதை தவிர்க்குமாறு கேட்டுகொண்டதினை தொடர்ந்து இந்த நெருக்கடியான நிலையினை இடதுசாரி கட்சியின் தலைவர்கள் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ ஆனந்தசங்கரிக்கு அறிவித்தனர். இதனால் இடதுசாரிகளுடன் இணைந்து தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் கைவிடபட்டது.

ஆனால் ஏனைய தமிழ் கட்சிகளான அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, கலாநிதி சி.விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழ் ஜக்கிய முன்னணி, இராஜநாதன் பிரபாகரன் தலைமையிலான ஈழவர் ஜனநாயக முன்னணியுடன் கொழும்பில் சித்தார்த்தனும் மட்டகளப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளாரான இரா.துரைட்ணமும் அரசின் சதி திட்டங்கள் அறியாதது போல தமிழ் கட்சிகளுடன் தேர்தல் இணக்கபாடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்தி கொண்டிருந்தனர்.

இதேவேளை சிங்கள அரசு தனது அடுத்த நகர்வினை மேற்கொள்ளுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை, ஜனாதிபிதியின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ஸ அழைத்து உங்களுக்கு யாழ் மாவட்டத்திற்கான நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தி உங்களை அதன் தலைவராக்க ஜனாதிபதி எண்ணியுள்ளார். நீங்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எங்களுக்கு பூரணமாக ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எதற்கும் ஆமாம் போடும் அமைச்சர், தான் எல்லா வகையிலும் ஒத்துழைக்க தயார் எனக் கூறியதுடன் நான் என்ன செய்ய வேண்டும் என்று பசில் ராஜபக்ஸயிடம் கேட்க, "நீங்கள் மூன்று தமிழ் கட்சிகளுடன் இணையக் கூடாது அத்தோடு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனியாக போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு கடுமையான பிரச்சாரங்களை மேற் கொள்ளக்கூடாது" எனவும் உத்தரவிட்டார். அத்தோடு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டதாம். அத்தோடு தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியுடன் இணைய கூடாது என் அன்பான உத்தரவாம்.

இதை புரியாத மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம் என்ற நம்பிக்கையில் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்திக் கொண்டிருந்தார்கள். இதே போல் ஜரோப்பிய ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் குறிப்பிட்ட வானொலி ஒன்றில் நாம் பிள்ளையானின் காலை பிடித்து கூட்டு சேர்ந்து இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வோம் என்று கூறிக் கொண்டு இருக்க கொழும்பிலே இருந்த தமிழ் கட்சி தலைமைகள் டக்ளசுடன் தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டகொண்டிருந்தனர்.

சமூகத்தில் அக்கறை கொண்ட சில ஜரோப்பிய ஜனநாயக சக்திகள் டக்ளசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் கட்சிகளுடன் ஜக்கியப்படுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் டக்ளசின் கண்களுக்கு தெரிந்தது யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகமும் அதனால் தான் அடையக் கூடிய நன்மையுமே இறுதியாக டக்ளஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்தனித்து போட்டியிடுவது எனவும் ஏனைய இரு மாவட்டங்களான அம்பாறையிலும் திருகோணமலையிலும் போட்டியிடுவதில்லை எனவும் ஈ.பி.டி.யியால் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஈ.பி.டி.பி மற்றும் ஈரோஸ் சி.விக்னேஸ்வரன் கட்சிகளுடான பேச்சுவார்த்தையில் தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி தோல்வியை தழுவியதை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் அரசின் அச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவது இல்லை எனவும் ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுவது என முடிவினை மேற்கொண்டனர்.

இதேவேளை மட்டகளப்பு மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். பின் அமைப்பாளர் இரா.துரைரட்ணத்தை அரசில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு புலிகளால் கொல்லபட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே ஊடாக பசில் ராஜபக்ஸ தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டார். அதனை நிராகரித்த இரா.துரைரட்ணம் தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி மேற்கொண்ட முடிவின் அடிப்படையில் மட்டகளப்பு மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

ஆனால் இக் கட்சியினால் திருகோணமலை மாவட்டத்தில் தாக்கல் செய்யபட்ட வேட்பு மனுக்கள் அரசின் முன் கூட்டியே திட்டமிட்ட சதியினால் தாக்கல் செய்யபட்ட வேட்பு மனுக்களில் ஒரு போட்டோ பிரதி குறைந்தை சுட்டி காட்டிய முஸ்லிம் அமைச்சர் அதை நிராகரிக்குபடி விடுத்த வேண்டுகோளை அடுத்து வேட்பு மனு நிராகரிக்கபட்டது. ஆனால் போட்டோ பிரதி செய்யும் யந்திரம் அருகில் இருந்த போதும் போட்டோ பிரதி செய்ய அனுமதி வழங்கபடவில்லை என்பதை இங்கு சுட்டிகாட்டியாக வேண்டும்.

இச் சம்பவத்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் ரி.பி.சி வானோலியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளருமான ஜெகநாதன் பிரான்ஸ்யில் 04-05-08 தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி நடாத்திய கூட்டத்தில் உரையாற்றியதை ரி.பி.சி வானோலி நேரடியாக ஒலிபரப்பியதை கேட்க கூடியாதாக இருந்தது.

ஏப்பிரல் மாதம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் மே மாதம் பத்தாம் திகதிவரை ஈ.பி.டி.பி ஊடகங்களான தினமுரசு பத்திரிகை, இதயவீணை வானோலி, ஈ.பி.டி.பி.யின் இணையத்தளம் ஆகியவற்றில் எந்தவித பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் ஊடாக டக்ளஸ் ஜனாதிபதிக்கு தனது விசுவாசத்தை காட்டினார்.

ஜனாதிபதி உத்தரவின்படி ஏப்ரல் 30ம் திகதி இரவு 8 மணிக்கு விசேட அமைச்சரைவைக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் விசேட செயல் குழு ஒன்றை அமைப்பதாகவும் அதன் தலைவராக அமைச்சர் டக்ளசும், அதன் உறுப்பினர்களாக அமைச்சர் றிசாட்பதியுதீன், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ் ஆகியோர் கொண்ட குழுவுக்கான அனுமதியை அமைச்சரவையில் பெறப்பட்டது.

அதனை வெளிப்படுத்த அரசு காலம் தாழ்த்திய வேளை புலிகளின் தமிழ் இணையதளம் ஒன்றில் இச் செய்தி தமிழில் வெளியானதைத் தொடர்ந்து பி.பி.சி தமிழ்ச் சேவை டக்ளசை பேட்டி கண்டு இச்செய்தியை உறுதிப்படுத்தியது. ஆனால் ஆங்கில சிங்கள ஊடகங்களில் பெரிதாக வராமல் அரசு கவனமாக கையாண்டது.

அண்மையில் 11-05-08 அன்று வெளியாகிய அரசின் வாராந்த ஆங்கில ஏடான சண்டே ஒப்சேவருக்கு அமைச்சர் டக்ளஸ் வழங்கியிருக்கும் செவ்வியில் வடமாகாணத்தில் புதிய அமைப்பின் நோக்கம் என்ன எனக் கேட்ட போது, வடபகுதிக்கு வானோலி சேவை ஒன்றை நடத்துவது முக்கிய திட்டங்களில் ஒன்று எனவும் இவ்வமைப்பு இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்படுத்தியிருந்தால் இப்போதைக்கு பிரச்சினை தீர்ந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அவர் கூறுவதை நாம் அப்படியே ஏற்றுக் கொண்டாலும், ஈ.பி.டிபி.யினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொலைகளை நிறுத்த முடியுமா? டக்ளஸ் பெயரில் இராணுவமும், இராணுவம் பெயரில் டக்ளசும் மேற்கொள்ளும் கொலைகளையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்த முடியுமா? என்பதோடு, கொழும்பில் தமிழ் மக்களிடம் கப்பம் பெறுவதை டக்ளஸ் மறுக்கமுடியுமா?

லண்டனில் புலிகளின் ஜங்கரன் ஸ்டோர்ஸ் உரிமையளாரான குமரராசா கணேசமூர்த்தியிடம் கொழும்பு விமான நிலையத்தில் உள்ளே வைத்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறிலங்கா கார்டியன் என்ற இணையதளத்தில் (13-05-08) சிவராசா என்பவரால் தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டிருந்தது இது எல்லாம் அரசு ஆசீர்வாதத்துடன்தான் நடந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருணா - பிள்ளையான் குழுவினர் கொழும்பில் பொது மக்களை கடத்தி கப்பங்களை பெற அரசு அனுமதியளித்ததையும், பின்னர் அரசு கிழக்கு அரசியலுக்காக அதை பயன்படுத்தியது போன்றே, இப்பொழுது டக்ளசு சகல அராஜ நடவடிக்கைகளையும் கொலை கொள்ளைகளையும் மேற்கொள்வதற்காகவும், அவற்றினை மூடிமறைப்பதற்க்காகவும் அரசினால் மேற்கொள்ளப்பட்டதே வடக்கு செயலணிக் குழு என்பதை அனைவரும் அறிவர். இந்த வகையில் தான் இன்று கிழக்குமாகாணம் துண்டாடப்பட்டடு உள்ளது.

கிழக்குஸ்தான் கேட்ட ஞானம் எனவும், சின்னமாஸ்டர் எனவும், எம்.ஆர் ஸ்டாலின் எனவும், சுந்தரமூர்த்தி என பல பெயர்களையும் முகங்களையும் கொண்ட மாசிலாமணி இராஜேந்திரன் மற்றும் கோவண குமாரதுரையின் கிழிந்த முகங்கள் இப்பொழுது அம்பலமாகியுள்ளதையும் காணலாம்.

மட்டக்களப்பில் 75 வீதம் தமிழ்ர் வாழும் பகுதியில் கிழக்கு மாகாண சபைக்கு 8 தமிழர்கள் குறைந்தபடசம் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் பிள்ளையான் - ஞானம் அவர்களின் சதி நடவடிக்கைகளாலும் அரசிடம் பெற்ற சலுகையினாலும் 6 தமிழ் உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டனர். இந்த வரலாற்று துரோகத்தினை பிள்ளையானும், ஞானமும் பொறுப்பேற்கவேண்டும்.

நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அரசு வாகனங்கள் பணம், பதவி உயர்வு, இடமாற்றம் என பலதரப்பட்ட சலுகை வழங்கியும் பிள்ளையானுக்கு கள்ள வாக்குகள் போடப்பட்டும் மூன்று இடங்களை மட்டுமே மட்டகளப்பில் பெற்றுக்கொள்ள முடிந்ததையும் நாம் காணலாம்.

ஆக மொத்தத்தில் கல்வியறிவோ அல்லது அரசியல் ஞானம் அற்ற பிள்ளையானாலும் ஞானத்தினாலும் வரலாற்றுத் துரோகம் புரிந்ததை மட்டக்களப்பு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

இந்த விடயத்தில் அரசு தனது பிரித்தாளும் தந்திரத்தை மிகவும் கவனமாக கையாண்டு உள்ளது. அதாவது பிள்ளையானை விருப்பவாக்குகளை அதிகம் எடுக்கும்படி கூறிய அரசு, முஸ்லிம்களை அதிக ஆசனத்தை பெறும்படியும் அறிவுரை வழங்கினார்கள். ஜந்து அறிவு பிள்ளையான் அரசின் பசப்பு வார்த்தைகளை நம்பி தனக்குதான் மண்ணைவாரி தன்தலையிலே போடடு கொண்டதையும் கிழக்கு மக்கள் அறிவர்.

கிழக்குஸ்தான் கேட்டு வியாபாரம் தொடங்கிய குமாரதுரை பெறுந்தெகையான பணத்தை அரசிடம் பெற்று கொண்டு தேர்தலில் தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு எதிராகவும் வடகிழக்கு பிரிவினைக்கு ஆதரவாகவும் அரசிடம் பெற்ற பணத்திற்க்காக தனது விசுவாசத்தை காட்டி பிரச்சாரம் செய்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினர்களைக் கூட பெற முடியாமல் போனதை பார்க்கும் போது குமாரதுரை போன்றேர் ஒரு செல்லாகாசு என்பதையும் அத்தோடு வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதில் திருகோணமலை மட்டகளப்பு அம்பாறை மக்கள் மிகவும் உறுதியாக உள்ளதை அவர்களின் வாக்களப்பில் தெளிவு படுத்தியுள்ளனர்.

குமாரதுரை, ஞானம் போன்றவர்கள் எந்த காலகட்டத்திலும் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் அல்லர். தமிழ் சமூகத்தை விலை பேசியும் காட்டிக் கொடுத்தும் தமது சொகுசு வாழ்க்கையை நடத்தியுள்ளார்கள். 20 வருட காலம் டென்மாக்கில் உல்லாச வாழ்க்கையை நடாத்திவரும் மரவெட்டி குமாரதுரை தனது அண்ணன் தங்கதுரையை புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோதிலும் ஒரு அஞ்சலி கூட்டத்தை கூட நடாத்த முடியாமால் வாய்மூடி மௌனமானதை சுட்டி காட்டவேண்டும். அதேவேளை பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் இலங்கைக்கு விடுமுறையில் சென்று வர இலவச பயணசீட்டியினையும் தங்குமிட ஒழுங்களையும் இந்த மரவெட்டி குமாரதுறைக்கு செய்து கொடுத்தினையும் தமிழ் சமூகம் நன்றே அறியும்.

தேர்தல் பணிக்காக மட்டக்களப்பு சென்ற பிள்ளையானின் ஆலோசகரான ஞானம், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மட்டக்களப்பு சாராயம் வியாபாரிகளிடம் பலவந்தமாக வாங்கப்பட்ட வாகனத்தில் ஏறி கொழும்பு வந்து சேர்ந்தார்.

கிழக்குஸ்தான் கேட்ட குமாரதுரை, கட்டிய கோவணத்தை இழந்த நிலையில் ஞானத்தின் கோவணம் மக்களால் பறிக்கப்படாமல் பாதுகாத்து கொள்ளுவதற்க்காக, பிரான்ஸ் வந்து சேர்ந்த கையுடன் தலித் உறுப்பினர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இவரின் நடவடிக்கையால் சீர்குலைந்து போயுள்ள ஞானம் தலித் அமைப்பிலிருந்தும் வெளியேறவுள்ளதாக வாய்ச்சவாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆக மொத்தத்தில் இத் தேர்தலில் அரசு போட்ட திட்டமான தீகவாபி பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தை பிரித்து தனி தொகுதியாக்கியது போன்று அங்கு முழுமையாக சிங்கள மக்களை குடியேற்றுவது, திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுரத்தை உருவாக்கியது போன்று அங்கும் முழுமையாக சிங்கள மக்களை குடியேற்றுவது, மட்டகளப்பு மாவட்டத்தில் புல்லுமலை, கஜீவத்தை, வாகரை பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவது. இங்கு 20க்கும் மேற்பட்ட புத்தகோயில்கள் நிர்மானிக்கபட்டுவிட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

இதுபோன்ற திட்டங்கள் ஊடாக தமிழ் பிரதேசங்களை கூறு போடுவதற்கும் சிங்கள மயபடுத்துவதற்கும் பிள்ளையான், ஞானம், குமாரதுரை ஆகியோர் ஆதரவு வழங்கியுள்ளதுடன் குறுநில மன்னர்களையும் உருவாக்கியுள்ளனர்.

குறுநில மன்னர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு :

யாழ்ப்பாணம் டக்ளஸ்

மன்னார் கருணா

வவுனியா சித்தர்

மட்டக்களப்பு பிள்ளையான்

திருகோணமலை மக்கள் விடுதலை முன்னணி

அம்பாறை எல உறுமய ஆகிய குறுநில மன்னர்களை அரசு நியமித்து, தமிழர்களை அழிக்கவும் தமிழர்களின் பொருளாதாரங்களை சீர்குலைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுக்கேற்ற பொருளாதார ஆயுத உதவிகளை அரசு தொடர்ந்து இந்த துரோகிகளுக்கு செய்துகொண்டே இருக்கும். ஆனால் எமது மக்களின் உரிமைபோராட்டத்தில் குளிர்காயும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் வரிசையில் சித்தரும் தன்னை இணைத்து கொள்ள போகிறாரா? அல்லது எம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கபோகிறாரா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

ஜேர்மனி-டேவிட்

http://www.theepori.com/newsfull.php?newsid=3342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.