Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பால்ராஜ் அமரனுக்கு (Corrected) - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜ் அமரனுக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன்

அமரா

நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட

செங்கால் நாரைகள் போல்

வன்னியெங்கும்

தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.

என் கவிதையிலே நீ இருக்க

ஈழம் கதறியழும் நியாய மென்ன.

நீயோ முடங்கிய காலில்

மூண்டெரிந்த விடுதலைத் தீ.

தீவெட்டியாய் உன்னைச்

சுமந்து சென்ற தோழருக்கு

'இத்தாவில்' பகையிருட்டில்

வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.

உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.

களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்

காலங்கள் ஊடே

என் கவிதை இனிச் சுமக்கட்டும்

அவனை ஆழப் புதைக்காதீர்

ஆலயங்கள் கட்டாதீர்.

நாளை மணலாற்றை மீட்டு

வாழ திரும்புகையில் நம் சனங்கள்

மசிரை விட்டுதுகள் தம்

மனம் நிறைந்த நாயகனை.

மணலாற்று அகதிகளின் புதையல்

ஆழப் புதைக்காதீர்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞ

வன்னிப்போராளியின் உயிர்த்துடிப்பை ஒரு வன்னிக்கவிஞனாய் உணர்ந்திருக்கிறாய்

அனஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நீயோ முடங்கிய காலில்

மூண்டெரிந்த விடுதலைத் தீ.

தீவெட்டியாய் உன்னைச்

சுமந்து சென்ற தோழருக்கு

'இத்தாவில்' பகையிருட்டில்

வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.

உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.

களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்

காலங்கள் ஊடே

என் கவிதை இனிச் சுமக்கட்டும்

அருமையான வரிகள் கவிஞரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்நூற்றாண்டு விடுதலைப் போராட்ட வெற்றிகளின் நடுநாயகமாகச் சிறந்தான். இன்று அவன் காவல் தெய்வமானான். அவனை வாழ்த்தி இன்னும் பாடவேண்டும். பாடுவேன்

‘ வ.ஐ.ச.ஜெ.யபாலன்

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயோ முடங்கிய காலில்

மூண்டெரிந்த விடுதலைத் தீ.

அருமையான வரிகள் கவிஞரே.

என் துயரிலும் அஞ்சலியில்லும் பங்குகொண்ட தோழன் அனசுக்கும் தமிழ் சிறிக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீ மீட்ட ஆனையிறவு கண்ட

செங்கால் நாரைகள் போல்

வன்னியெங்கும்

தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.

என் கவிதையிலே நீ இருக்க

ஈழம் கதறியழும் நியாய மென்ன.

அழகான வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்
:D கவிதை அருமை, நன்றி பொயெட் அவர்களே !
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு,

உங்கள் ஊடக தேடல்களுக்கிடையிலும் கவிதை வாசித்துக் கருத்தெழுத வாய்க்கிறது மகிழ்ச்சிதருகிறது. நான் தற்போது லண்டனில். 9ம் திகதி தென் ஆசியா.

நீங்கள் லண்டனா.

அஞ்சலி வன்னியில் பிரசுரமானதால் மணலாறு அகதிகலைச் சேர்ந்திருக்கும். அது பால்ராஜுக்குச் சேர்ந்தது மாதிரித்தானே.

ரகுநந்தன் உங்கள் கருத்துக்களுக்கும் ம்நன்றி. நான் இஎத அஞ்சலியை ஒரு நெடுங் கவிதை அல்லது குறுங்காவியமாக வளர்க்க இருக்கிறேன். மகிழ்ச்சிதானே.

அன்புடன்

ஜெபி

Edited by poet

பால்ராஜ் அமரனுக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன்

அமரா

நீ மீட்ட ஆனையிறவு கண்ட

செங்கால் நாரைகள் போல்

வன்னியெங்கும்

தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.

என் கவிதையிலே நீ இருக்க

ஈழம் கதறியழும் நியாய மென்ன.

நீயோ முடங்கிய காலில்

மூண்டெரிந்த விடுதலைத் தீ.

தீவெட்டியாய் உன்னைச்

சுமந்து சென்ற தோழருக்கு

'இத்தாவில்' பகையிருட்டில்

வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.

உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.

களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்

காலங்கள் ஊடே

என் கவிதை இனிச் சுமக்கட்டும்

அவனை ஆழப் புதைக்காதீர்

ஆலயங்கள் கட்டாதீர்.

நாளை மணலாற்றை மீட்டு

வாழ திரும்புகையில் நம் சனங்கள்

மசிரை விட்டுதுகள் தம்

மனம் நிறைந்த நாயகனை.

மணலாற்று அகதிகளின் புதையல்

ஆழப் புதைக்காதீர்.

பாட்டுடைத்தலைவன் பால்ராஜ் பற்றி அழகான கவிதை.... வ.ஜெ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுடைத்தலைவன் பால்ராஜ் பற்றி அழகான கவிதை.... வ.ஜெ

நன்றி எல்லாளன்.

நம்காலத்து நாயகனைப் பாடாத தமிழ் எதற்க்கு. வன்னியில் போராளிகலையும் மணலாறு அகதிகளையும் கவிதை சேர்ந்திருக்கு. அது பால்ராஜைச் சேர்ந்த மமாதிரித்தானே. ஒரு குறுங்காவியமாய் விரிக்க பால்ராஜ் பற்றி அறிந்தவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்பம். தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

visjayapalan@gmail.com

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு,

உங்கள் ஊடக தேடல்களுக்கிடையிலும் கவிதை வாசித்துக் கருத்தெழுத வாய்க்கிறது மகிழ்ச்சிதருகிறது. நான் தற்போது லண்டனில். 9ம் திகதி தென் ஆசியா.

நீங்கள் லண்டனா.

அஞ்சலி வன்னியில் பிரசுரமானதால் மணலாறு அகதிகலைச் சேர்ந்திருக்கும். அது பால்ராஜுக்குச் சேர்ந்தது மாதிரித்தானே.

ரகுநந்தன் உங்கள் கருத்துக்களுக்கும் ம்நன்றி. நான் இஎத அஞ்சலியை ஒரு நெடுங் கவிதை அல்லது குறுங்காவியமாக வளர்க்க இருக்கிறேன். மகிழ்ச்சிதானே.

அன்புடன்

ஜெபி

உங்க கவிதைகளை ஒன்றுக்கு இரண்டு தரம் வாசித்து தான் விளங்கிக் கொள்வேன். சிலசமயங்களில் கவித்துளிகளின் பொருள் என்னையே சதிராட(விளங்கிக் கொள்ள சிரமம்) வைத்துவிடும்.

லண்டனில் அழகான பூந்தோட்டங்கள், இயற்கையை ரசிக்கக்கூடிய இடங்கள் நிறையவே இருக்கின்றது. அங்கே உங்கள் கவிகள் மேலும் உயிர்ப்பு பெற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதைகளை ஒன்றுக்கு இரண்டு தரம் வாசித்து தான் விளங்கிக் கொள்வேன். சிலசமயங்களில் கவித்துளிகளின் பொருள் என்னையே சதிராட(விளங்கிக் கொள்ள சிரமம்) வைத்துவிடும்.

லண்டனில் அழகான பூந்தோட்டங்கள், இயற்கையை ரசிக்கக்கூடிய இடங்கள் நிறையவே இருக்கின்றது. அங்கே உங்கள் கவிகள் மேலும் உயிர்ப்பு பெற வாழ்த்துகள்.

நன்றி கறுப்பி,

உங்கள் பல்துறை ஈட்டுபாடு வியக்க வைக்கிறது. நான் நாலை சுவிஸ் சென்று பின்ன‌ர் மீண்டும் இங்கில‌ந்தி வ‌ரும்போது இயன்றால் வேல்ஸ்வ‌ரைக்கும் அல்லது வேறு நாட்டுப்புறச் சூழலுக்குப் போய்ப்பார்க்க விர்ப்பம். ஜுனெ 2ம் வாரம் இருந்து எழுத் கட்டுப்படியான ஒரு இடம்தேடி தென்னாசியா செல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜ் அமரனுக்கு அஞ்சலியை குறுங்காவியமாக வளர்த்தெடுக்க இருக்கிறேன். பால்ராஜ் பற்றி உங்களுக்குத் தெரிந்த சம்பவங்களை அறிய விருப்பம். புதுக்குடியிருப்பில் சந்தித்தபோது தோழன் பலகுமரன் சொன்ன சில விடயங்களை மையமாக வைத்தே கதை பின்ன உத்தேசம்.

அடிப்படை அஞ்சலியிலேயே ஒரு சொல் மாற்றியிருக்கிறேன்

அமரா

நீ மீட்ட ஆனையிறவு கண்ட

செங்கால் நாரைகள் போல்

வன்னியெங்கும்

தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.

என்பதை

நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட

என்று மாற்றியுள்ளேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட//

மிக அதிர்ச்சியளித்த மாற்றம்.

அவை வெளிநாட்டிலிருந்து வந்த கொக்குகள் என்று நினைக்கிறேன். சிலர் சைபீரியப் பறவைகளென்றும் சொன்னார்கள். அவை வந்தமர்ந்த காலத்தில், ஆனையிறவென்பது மனிதர் வாழத் தகுதியற்ற பொட்டல் வெளியென்ற எண்ணம் மறந்துபோகும். அதுவொரு சுற்றுலாத்தலம் போன்று காட்சியளிக்கும்.

அருச்சுனா தளத்தில் இந்தச் செங்கால் நாரைகள் கூட்டமாகக் குந்தியிருக்கும் படங்கள் வைத்திருந்தார்கள் (இப்போதும் இருக்குமென்று நினைக்கிறேன்). அவைற்றைக் காட்டி இது ஆனையிறவு என்று சொன்னபோது யாருமே நம்பவில்லை. எல்லோருமறிந்த ஆனையிறவையின் விம்பத்தை மாற்றின அக்கொக்குகள்.

ஆனால் விருந்தினராக வந்த கொக்குகள் இடையிடையே சுடப்பட்டன. பிறகு அவை வருவதேயில்லை. வன்னிக் கொக்குகள் மட்டுமே வந்துபோகும். அவற்றை எவரும் சுடுவதில்லை. பழையபடி ஆனையிறவு பொட்டல் வெளியாகவே இருந்தது, இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவனை ஆழப் புதைக்காதீர்

ஆலயங்கள் கட்டாதீர்.

நாளை மணலாற்றை மீட்டு

வாழ திரும்புகையில் நம் சனங்கள்

மசிரை விட்டுதுகள் தம்

மனம் நிறைந்த நாயகனை.

மணலாற்று அகதிகளின் புதையல்

ஆழப் புதைக்காதீர்.

கவிஞரே,

உங்கள் அஞ்சலிக் கவிதையை அன்றே வாசித்தாலும் இன்று தான் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தது.

உங்கள் கவிதை அருமை.

ஆனாலும் அக்கவிதையில் இவ் வரி தேவைதானா?

மசிரை விட்டுதுகள் தம்

மனம் நிறைந்த நாயகனை

பேச்சு வழக்கச் சொல்லை கவிதையில் சேர்த்தாலும் வாசிக்கும் போது ஒரு மாதிரியாகவுள்ளது

புலவர்கள் எல்லாம் முன்னரான காலங்களில் வீரர்களின் புகழைப்பாடி அவர்களின் புகழோடு தங்களின் புகழையும் சேர்த்து கொள்வார்கள்.

அப்படி POET அவர்களின் பெயரும் சேரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'மசிர்' தொடர்பாக ஒரு கருத்து.

இங்கு அச்சொல் மிகப்பொருத்தமாக வந்துள்ளது.

கவிதையில் அச்சொல்லின் பங்கு மிக முக்கியமாகவே படுகிறது.

இக்கவிதையில் மசிர் வந்தவிடத்தை நான் இரசித்ததுபோலவே ஜெயபாலனின் இன்னொரு கவிதையிலும் இச்சொல்லை நான் இரசித்திருக்கிறேன்.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின் சில நாட்களில் தினக்குரல் ஏட்டில் ஜெயபாலனின் கவிதையொன்று வந்தது. ஜெயசிக்குறுவை எதிர்த்த தென் தமிழீழத்து மாவீரரைக் குறித்தது அக்கவிதை. (வன்னிக்கான அவரது பிரவேசமும் அக்கவிதையின் வெளியீடும் ஒரேநேரத்தில் நிகழ்ந்திருந்தன).

அக்கவிதையில் ஒரு வரி இப்படி வரும்.

"வன்னியில்

மசிர் பிடுங்க வந்தோர்

தலைபிடுங்கி"

அந்தக் கவிதைக்கான காத்திரமான தொனி இவ்வரிகளில் தெறித்திருந்தது. (ஜெயபாலனுக்கு அக்கவிதை ஞாபகம் இருக்கிறதா?)

இக்கவிதையின் இறுதி முடிவும் அச்சொல்லைக்கொண்டு காத்திரமான உணர்வைத் தருக்கிறது.

சொற்களை எங்கே, எப்பிடிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் விடயமுள்ளதே தவிர, தனித்துச் சொற்களிலில்லை என்பது என்கணிப்பு. இதே சொற்களைச் சிலர் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவும், கணநேரக் கவனயீர்ப்புக்காகவும் வலிந்து திணிப்பார்கள்.

Edited by nallavan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

["வன்னியில்

மசிர் பிடுங்க வந்தோர்

தலைபிடுங்கி"

அந்தக் கவிதைக்கான காத்திரமான தொனி இவ்வரிகளில் தெறித்திருந்தது. (ஜெயபாலனுக்கு அக்கவிதை ஞாபகம் இருக்கிறதா?]

நன்றி நல்லவன்.

எப்படி இதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறீங்க? யாரதோ கவிதை என்று நினைக்கிற அளவுக்கு மறந்துபோனேன். இதுதான் என் பிரச்சினை. சேரன் எல்லாக் கவிதைகளையும் ஞாபகம் வைத்ததிருப்பான். தொலைந்துபோன என் பல்கலைக் களகக் கவிதைகள் சிலவற்றை அவனிடம் விசாரித்திருக்கிறேன்.

எனது கவிதையை இவ்வளவு ஆர்வமாய் நினைவு வைதிருக்கிறவர்கள் எப்பவும் என்னை ஆச்சரியப் படுத்துகிறார்கள். ஒருமுறை இயக்குனர் பாலாவைச் சந்தித்தபோது 'என் இனிய லோதி' என்ற கவிதையை தொடக்கத்தில் இருந்து முடிவுவரை சொன்னது ஆச்சரியமாக இருந்தது. தாய் மண்ணில் தோழன் ராதேயனும் கருணாகரனும் என்கவிதைகளை ஆழ்ந்து வாசிக்கிறவர்கள். பாலுமகேந்திராவுக்கு என் குறுங்காவியம் ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும் மனப்பாடம் மாதிரி. அவர் தமிழகம் முழுவதும் அதனைப் பிரபலப் படுத்தினார். நேசிக்கப் படுகிறது ஒன்றுதான் என் செல்வமாக இருக்கீறது. அது பெருஞ்செல்வமல்லவா.

உங்கலை யாரென்று அறிந்துகொள்ள சை. தனிமடல் அனுப்புங்களேன்.(visjayapalan@gmail.com)

திரு பிரபா68 மசிர் என்ற சொள் பற்றி எழுதியிருந்தார். பால்ராஜின் சமாதி விடுதலையான மணலாற்றில் அமையவேணும். மணலாற்று அகதிகளின் பாசையில் அதனைச் சொல்ல விரும்பினேன்.

நுணாவிலான் உங்கள் கடிதம் நினைவைக் கிளறியது. 1972ல் ஒரு காலைப் பொழுதில் விலங்கியல் விஞானியுடன் பயண‌ம் செய்தபோது பல நூறு செங்கால் நாரைகள் நாம் தங்கியிருந்த ஆனையிறவு றெஸ்ற் கவுசின் பின் புறதில் பார்த்து உறைந்துபோனேன். 2004 கோடையில் செங்கால் நாரைகளை ஆனையிறவில் கண்டேன். மகிழ்ச்சியாய் இருந்தது. மீண்டும் அமைதி கிலைந்ததால் அவற்றின் வரத்துப் பாதிக்கப் பட்டிருக்கலாம்.

நன்றி பொய்கை வீரர்களைப் பாடி நிலைத்த புலவர்களளைவிட நிலைத்த‌ புலவர்கள் பாடியதால் காலத்தில் அழியாது நிற்க்கும் மாவீரர்கள் அதிகம்.

.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலுக்கு நன்றிகள் கவிஞரே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு அக்கவிதை ஞாபகமில்லையா?

எங்களுக்கு ஞாபகமிருக்க முக்கியகாரணம் அந்தநேரத்தில்தான் உங்களின் வன்னிப் பிரவேசம் நடந்தது. உங்கள் வருகை ஆங்காங்கே சலனங்களை உருவாக்கியிருந்தது.

பாலகுமார் அண்ணையின் வீட்டில் உங்களைச் சந்தித்த ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலைப்பொழுதில் தினக்குரலில் உங்கள் கவிதை வந்திருந்ததைக் காட்டினார். அந்தக்கவிதை பத்தோடு பதினொன்றாக மூலையில் பிரசுரமானது தொடர்பாகவும் வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

அன்று நீங்கள் எமக்குச் சொன்னீர்கள் ஜெயசிக்குறு காவியம் எழுதப்போவதாக. (இது குறித்து யாழ் களத்தில் வேறோர் இடத்தில் உங்களைக் கேட்டிருந்தேன். இப்போது பால்ராஜ் காவியம் எழுதப்போவதாக வேறு சொல்கிறீர்கள். பார்ப்போம். ;-))

அடுத்த வெள்ளிக்கிழமை, வெள்ளிநாதம் பத்திரிகையில் ராதையன் உங்கள் வருகை பற்றி கிசுகிசு பாணியில் எழுதியிருந்தார், குறிப்பாக உங்கள் குடுமி பற்றியும் அதற்கு நீங்களளித்த பதில் பற்றியும்.

உங்கள் மறதி பற்றிய சுவாரசியமான கதைகள் உலாவின. அவற்றிற்பல புனைவென்றே நினைத்திருந்தேன், எனக்கு அந்த அனுபவம் வரும்வரை. பாலகுமார் அண்ணை வீட்டில் நானும் இன்னொருவனும் உங்களோடு இரண்டரை மணிநேரம் தனியாகக் கதைத்திருந்தோம். சில மாதங்களின்பின்னர் மற்றவன் உங்களை யாழ்ப்பாணத்தில் மானுடத்தின் தமிழ்க்கூடலில் சந்தித்திருந்தான். உங்களோடு அவன் கதைத்தபோது அவனை நீங்கள் மட்டுக்கட்டவில்லையாம்.

பிறகு பளை ஆட்லறித் தகர்ப்பு வெற்றிவிழாவுக்கு உங்கள் குடும்பத்தோடு வந்திருந்தீர்கள். அங்கு உங்களைச் சந்தித்து உரையாடினேன். என்னைச் சுத்தமாக உங்களுக்கு ஞாபகமில்லை. முன்பு கதைத்ததை ஞாபகப்படுத்தியபோதும் எதுவுமே உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அத்தோடு முடிவெடுத்தேன், உங்கள் மறதி பற்றிய கதைகளெல்லாம் உண்மையே என்று. ;-))

ஆக, இப்போது நான் தனிமடலில் தொடர்பு கொண்டாலும் உங்களுக்கு ஏதும் விளங்கப்போவதில்லை. :lol:

======================

இருபத்தோராம் நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதிக்குரிய தமிழ்க் கவிதையுலகம் ஈழத்தமிழரின் கைகளிலேயே இருந்தது என்பது பொதுவான மதிப்பீடாக இருந்து வருகிறது. (நீங்களும் அதைச் சுட்டியிருக்கிறீர்கள்) தொடக்கத்தில் இது 'குருவி தலையில் பனங்காய்' என்றே எம்போன்றவர்கள் நினைத்திருந்தோம். பின்பு அக்கருத்து மாறியதோடு, கவிதையுலகில் எம்மவரின் ஆதிக்கம் தொடர்பில் இறுமாப்பு வந்தது. அதற்குக் காரணமான முக்கிய படைப்புக்களில் ஒன்று உங்களின் 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்'. நிலாந்தனின் மண்பட்டினங்களுக்குக் கூட உங்களின் படைப்பு ஓர் உந்தலாக அமைந்திருக்கக்கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அக்கவிதை ஞாபகமில்லையா?

எங்களுக்கு ஞாபகமிருக்க முக்கியகாரணம் அந்தநேரத்தில்தான் உங்களின் வன்னிப் பிரவேசம் நடந்தது. உங்கள் வருகை ஆங்காங்கே சலனங்களை உருவாக்கியிருந்தது.

பாலகுமார் அண்ணையின் வீட்டில் உங்களைச் சந்தித்த ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலைப்பொழுதில் தினக்குரலில் உங்கள் கவிதை வந்திருந்ததைக் காட்டினார். அந்தக்கவிதை பத்தோடு பதினொன்றாக மூலையில் பிரசுரமானது தொடர்பாகவும் வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

அன்று நீங்கள் எமக்குச் சொன்னீர்கள் ஜெயசிக்குறு காவியம் எழுதப்போவதாக. (இது குறித்து யாழ் களத்தில் வேறோர் இடத்தில் உங்களைக் கேட்டிருந்தேன். இப்போது பால்ராஜ் காவியம் எழுதப்போவதாக வேறு சொல்கிறீர்கள். பார்ப்போம். ;-))

. நிலாந்தனின் மண்பட்டினங்களுக்குக் கூட உங்களின் படைப்பு ஓர் உந்தலாக அமைந்திருக்கக்கூடும்.

நன்றி தோழா, உன்னை எனக்கு ஞாபகம் இருக்கு. என்னுடைய மறதி மிக தற்காலிகமானதுதான். ஆனால் விவாதங்களில் எழுத்தில் அவசியப் படும்போது மிக நுட்பமாக அரை நூற்றாண்டுகளாக கண்டது கேட்டது படித்ததெல்லாம் ஞாபகம் வந்துவிடுகிறது. மிக சின்னவயதிலேயே இடதுசாரிச் சிந்தனைகளின் தாக்கத்தால் கிளற்ச்சிக்காரனாய் சாதி ஒடுக்குதலுக்கு எதிராகன போராட்டங்களை ஆதரித்ததில் இருந்து ஒரு ஆய்வாளனாகவும் கவிஞனாகவும் பிழவுபட்ட துறைகளில் செயல் பட்டதால் ஏற்பட்ட சிக்கலாக இது இருக்கலாம். பதின்ம வயதுகளிலேயே அரசியல் கிளற்ச்சியை விட்டு ஒதுங்கி விட்டுக்கு நல்ல பிள்ளையாக படிக்கிறதா அல்லது வீட்டைவிட்டு வெளியேறுவதா என முடிவு எடுக்க நேர்ந்தது. அந்த நாட்களில் கம்யூனிசச புரட்ச்சிக்குத் தயாராகுவது என்று இலங்கையின் இராணுவ புவியியல் மற்றும் சமூகவியல் விடயங்களை ஆராய நேர்ந்தது. இப்படி விடுதலைக்கு சாதகமான பல்துறை ஆய்வும் கலைகளும் என கிழிந்துபோய் கிடப்பது என் ஆற்றலைப் பாதிக்கிறது. இவற்றைவிட என்னுடைய பணியாமையால் பணிகளிலும் நிலைக்க முடியாது என் ஆய்வுகளையும் கவிதை எழுத்துக்களையும் தொடர அதரவு இல்லாத வறுமை நிலை தொடர்வதும் பெரிய சிக்கலாகவே உள்ளது. சிங்கள கலைஞர்கள்போல எமக்கு புலமைப் பரிசில்கள் இல்லை.

தோழ தோழியர்கள் மலைமகள் தமிழ்க்கவி நிலாந்தன் ராதேயன் மற்றும் திருமாஸ்டர் கருணாகரன், தீபன்செல்வன் போன்றவர்களுக்கும் இதே சிக்கல் உள்ளது. ராதேயன்தான் தோழமைக் கவிஞன் புதுவைக்கு அடுத்து இன்று வாழுகிற எனது நெடுங்காலத்து இலக்கிய நண்பன். என்னைப் பற்றிக் கிசு கிசு எழுதக்கூடிய அளவுக்கு விசயம் தெரிந்தவனும் அவன்தான். பாலகுமார் எனது நீண்டகால அரசியல் நண்பன். அமரர் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின் பாலகுமாரும் அடேலும் முன்னிலைப் படவேண்டும் என விரும்பினேன் அது நடைபெறவில்லை. என் கவலைகளில் அதுவும் ஒன்று. வன்னியில் சந்தித்த N பற்றி எதாவது தெரியுமா. என் ஆருயிர்த் தோழன் யாழ்வேந்தன் பற்றியும் ஒரு நீண்ட கவிதை நிலுவையில் உள்ளதடா.

ஜெயசுக்குறு காவியத்தை பால்ராஜ் நெடுங்கவிதையை என்னோடு தொடர்பு கொள்வதற்க்கு பரிசாக உனக்குத் தருவேன். தொடர்பு கொள்.

விமர்சனக் கண்ணோட்டமில்லாமல் மேம்பட்ட கலை இலக்கியமில்லை. விமர்சன கண்ணோட்டத்துடன் எழுதுவது தொடர்பான தயக்கங்களும் என் எழுத்தைப் பாதிப்பது உண்மை. இவற்றையெல்லாம் கடந்து வந்துவிட்டேன். எங்கள் தலைமுறையின் மணல் கடிகைகள் வெறுமையாகி வருகிறதடா. நாம் எம் சந்ததிக்கான விடுதலையை பங்களிப்புகளை துரிதப் படுத்த வேண்டிய கடைசித் தருணமடா.

விடுதலைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாரான எல்லா வேள்விகலையும் கடந்து வருகிற நீங்களும் இதை உணரவேண்டும். விடுதலைக்காக எவருடனும் மோதுவோம் என்ற நிலையில் இருந்து விடுதலைக்காக எவருடனும் பேசுவோம் என்கிற நிலக்கு உயரவதும் துரிதப் படுத்தலின் கோரிக்கையாக உள்ளதடா.

நாங்கள் வெல்லுவோம்.

Edited by poet

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் பால்ராஜ் அமரனுக்கு என் அஞ்சலிகள்

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

My tribute to our dearest liberation fighter Palraj

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களது கவிதை அற்புதம்

இதயபூமியின் நாயகன்

ஈழ இதயனின்

இதயத்தில் வீரனாய் மலர்ந்தவன்

இவனை

தமீழீழவர் மறப்பரோ?

தாகம் தனிப்பரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லியோ, அமரன் பால்ராஜ் எப்பவும் வாழுவான் எங்கள் கலைகளிலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.