Jump to content

இவரும் அகதி தான்


Recommended Posts

பதியப்பட்டது

அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது.மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது.

.இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும்.

வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க ; அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர ,,தொடர அங்கு ...அதனூடாக பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும்.

அதனூடாக தான் கொஞ்ச நாளாக ....

.....கொஞ்ச நாளாக என்ன...கொஞ்சக் காலமாக

அவர் தினமும் வந்து அந்த ஊர் மனைகள் தொடக்கத்தில் உள்ள மாமரங்கள் தென்னை மரங்கள் நிறைந்த தொடர்ச்சியாய் அச்சொட்டாக ஒரே மாதிரி தோற்றத்துடன் இருக்கும் மூன்று வீட்டு தொடருக்கு வந்து நோட்டம் விட்டு திரும்புகிறார். வேவு பார்க்க வருகிறார் என்றும் சிலர் நினைக்கலாம் அல்லது முந்தி வாழ்ந்த இடத்தை பார்த்து விட்டு போறார் என்றும் நினைக்கலாம் . அவற்றுக்காக தான் வந்து போறார் என்று நிச்சயம் சொல்ல இயலாத மாதிரியும் இருக்கும். ...

... இவருக்கு மனிதர் மாதிரி இப்படி சிந்திக்கும் பழக்கம் இருக்கோ என்று நிச்சயமாக தெரியாது. . ஒரு காலத்தில் அந்த வீட்டு தொகுதியுனுடைய முடிசூடா மன்னர் என்று சொல்ல இயலாது ..

வேணும் என்றால் இவரை இப்படி சொல்லலாம்,

அந்த வீட்டு முடிசூடா காவல் செல்ல பிராணி வீமன் என்று அழைக்க பட்ட நாய் என்று

அவரை அவர் என்று சொல்லக் கூடிய முறையில் தான் அந்த காலம் நடந்து கொண்டு இருக்கிறார் அந்த வீட்டுக்கு மட்டுமல்ல அந்த வீதியில் தொடக்கத்தில் தொடங்கி கொஞ்சம் தூர பகுதி வரை பிரதேசத்துக்கு நாட்டாமை போல் திகழ்ந்திருக்கிறார்.

அந்த காலம் அந்த தெருவின் தொடக்கத்தில் தொடங்கி அந்த தெருக்கோடி முடிவு வரை எந்த பிராணிகள் பறவைகள் ஊர்வன தொடக்கம் புதிய மனிதர்கள் வாகனங்களில் போவோர் வரை, எவரும் இவருடைய எச்சரிக்கை கனைப்புக்கு செருமலுக்கு குரைப்புக்கு அடங்கி ஒடுங்கி நடுங்காமால் போக முடியாது.அந்த வீட்டு தொகுதியில் வாழ்பவர்களின் மத மதப்பும், குணமும், திமிரும் இவரிடம் இருந்திருக்கிறதால் . இவருக்கு மனிதர் மாதிரி சிந்திக்கும் குணமும் சில வேளை இருக்கலாம் என்றும் நினைக்கலாம்

இப்பொழுது அவரை அது என்று கூட சொல்ல முடியாத தோற்றம். அரைவாசி உடம்பில் உண்ணிகள் உடம்பில், எங்கும் சொறி பட்ட புண்கள் அதனால் இவர் எங்கு சென்றாலும் இவரை பின் தொடர்ந்து இவரின் உடம்பை மொய்க்கும் இலையான் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாமால் ஏற்ப்பட்ட வேதனை படர்ந்த முகம், நாயின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதனால் விரைந்து வந்த முதுமை ஒரு புறம்

இந்த வீட்டு தொகுதியிலுள்ளவர்கள் எந்த நாட்டில் என்று தெரியாத மாதிரி இவரும் எங்கு படுத்து எழும்புகிறார் எங்கை தின்று கழிக்கிறார் என்ற இரகசிய குறிப்புகள் ஒன்றும் தெரியாது .ஆனால் இவரின் முன்னாள் எஜமானர்கள் அகதியாக தேசாந்திரம் போயிட்டினம் என்ற மாதிரி.

இவருக்கு உடனடியாக அந்த அந்தஸ்து கொடுக்கமால் முதலில் காணமால் போனோர் பட்டியலில் தான் போட்டார்கள் .இப்ப கொஞ்சக் காலம் இவரின் நடமாட்டம் கண்ட பின் தான் அகதி பட்டம் கிடைத்திருக்கிறது..இப்ப இவரும் ஒரு அகதி தான்.

இன்றும் அந்த பாதையூடாக குளத்து கட்டை சுற்றி வீச்சு நடை போட்டு வந்தவர், தூரத்தில் சொகுசு பஸ் தோசை கடை பொன்னம்மாக்கா வீட்டுக்கு முன்னால் நிற்க கண்டு . இவ்வளவு நாளும் காணதா அந்த ஆள் அரவம் கண்டு கேட்டு நிதானமாக நின்று யாரையோ தேடும் பாவனையில் கவனிக்கிறார்.

கொஞ்ச காலங்களாக இந்த ஊரில் வெடிச்சத்தங்கள் கேட்கமால் விட்டவுடன் வெளிநாட்டிற்க்கு சொல்லி கொள்ளமால் ஓடி போனவர்கள் சொகுசு பஸ் இல் தீடிரென சொல்லிக்கு கொள்ளாமால் வந்து இறங்கி ஊரை வந்து பார்க்கிறதோடை கலர் காட்டி சென்று கொண்டு இருக்கிறார்கள் .

இந்த நாய் பெருமானாரும் ஏதோ விதத்தில் மோப்பம் பிடித்து மணந்து கொண்டு எப்படியோ தெரிந்து கொண்டரா என்னவோ.. அதனால் தான் இப்ப கொஞ்ச காலமாக எங்கையோ படுத்து எழும்பி விட்டு இந்த வீட்டடிக்கு விஜய செய்யிறதும் திரும்புறதுமாக இருக்கிறார் என்பது மனித புத்தியூடாக விளங்கிறது கஸ்டம் .தான்..அதுக்காக நாயை மாதிரி சிந்திக்க புரிய மனிதர்களும் இருக்க வேண்டுமா என்ன

இது சண்டைக்காலம் இது சமாதான காலம் என்று அவராலும் மனிதர் மாதிரி பிரித்து கணிக்கமுடியுமா என்ன ,, அவருக்கு தெரிந்தது எல்லாம் வெடிசத்தம் நல்லாய் கேட்கும் காலம் சத்தம் கேட்காத காலம் . அந்த காலங்களில் கொண்டாட்ட நாட்களில் தான் வெடிசத்தம் கேட்கும் அந்த நாட்களில் தான் வெளியிலிருந்து ஆட்கள் வருவார்கள். இப்ப வெடிசத்தம் கேட்காத நேரத்தில் கேட்காத காலங்களில் வருகிறார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபாடாமால் அந்த சொகுசு பஸ் அருகில் இருந்த கூட்டத்தில் தான் தேடும் யாரும் நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாக்கை தொங்க போட்டு கொண்டு வைச்சு கொண்டு உற்று பார்த்து கொண்டிருந்தது.

கால வெள்ளத்தில் மறைந்த நினைவுகளை மீட்டு பார்த்தது . இந்த வயலில் வெள்ளம் குளம் போல வழிய அதுக்குள் தன்னை போட அதுக்குள் நீந்தி மகிழ அவர்களும் மகிழ்ந்தது .அந்த மூலை வீட்டு சின்ன மகளோடு பந்து விளையாடியது,சிரித்து சந்தோசமடைந்தது . எல்லாம் திரும்ப திரும்பவும் வந்து நினைவுகள் சந்தோசமடைந்திருக்க வேண்டும் .நாய் சிரிக்க முனைந்தது. முடியவில்லை போலும்...நாய் சிரித்தது என்று சொன்னால் நம்புவது கஸ்டம் தான். வேணும் என்றால் அவர்களை கேட்டு பாருங்கள் அதுவும் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் தான் முடியும்.

அவர்கள் தான் வந்து விட்டார்கள் அந்த வீட்டுக்குள் ஆட்கள் , என அசுமாத்தம் பட்டு விட்டதோ என்னவோ..,துள்ளி குதித்து அந்த வீட்டு பின்புறத்தில் உள்ள வேலியில் உள்ள துளையூடாக நுழைந்தது, அந்த காலம் அது போட்ட துளை தான் அதானால் அதுக்கு அதனூடாக இப்ப நுழைவது இரட்டிப்பு சந்தோசம்.

இளைய மகள் சூட்டி தான் வந்திருந்தாள் தனது மகள்கள் இருவருடன் வந்திருந்தாள் , மகள்களை பார்த்த அந்த காலத்தில் சூட்டியை பார்த்த மாதிரி இருந்தார்கள், மனிதர்கள் பேசும் மொழி விளங்காவிட்டாலும் இவர்கள் மொழி வழக்கமாக இங்கை ஒலித்த சத்தம் இல்லை என்று மட்டும் விளங்கியது.சிரிக்க முடியாவிட்டாலும் அழுது கனைத்து காட்டி தன்னை அடையாளம் காட்ட முனைந்தது . கனைப்பு சத்தம் கேட்ட சூட்டி பிள்ளைகளை எச்சரிக்கை செய்தாள் விசர் நாய் ஓன்று வந்திருக்குது,என்று

தன்னை அடையாளம் காணமால் அலட்சியம் செய்து தனது ஆவல்களை எல்லாம் ஒரு நிமிடத்தில் தவிடு பொடியாகிவிட்ட ஆத்திரத்தில் மீண்டும் வேறு விதமாக ஊளையிட்டு குரைத்தது

என்ன நன்றி கெட்ட மனிதர்கள் என்ற மாதிரி இருந்தது

இவரை தான் நன்றியுள்ள மிருகம் என்று சொல்லி இருக்கினம்

மனிசரை எப்பொழுதாவாது நன்றியுள்ளவர்கள் என்று யாரும் சொல்லி இருக்கினமா

இப்ப இதுக்கு

இவர் கோபிப்பதில் அர்த்தம் இல்லை தானே.

.அதோடை இவர் தன்னை அடையாளம் காணவில்லை என்று தங்களூடைய அடையாளத்தை தொலைத்த இந்த பாவப் பட்டவர்களை கோபித்து இவர் என்ன காணப்போறார்

பாவப்பட்டவர்கள் என்று தெரியவா போகுது இந்த நாய்க்கு ..

.இந்த ஊரில் உள்ளவர்களே இவர்களின் பவுஸுகளை கண்டு அவர்கள் அப்படி இல்லை என்று நினைக்கும் போது

திரும்பி பாராமாலே வந்த வேலி துளை வழியே திரும்பிவிட்டது

இப்ப இந்த பாதைக்கு வருவதில்லை

இப்ப போக்கிடம் இல்லாமால் திசை தெரியாமால் ஓடி கொண்டிருக்கிறது

அவர்களும் அப்படித்தான் என்று உதுக்கு விளங்கவா போகிறது...

http://sinnakuddy.blogspot.com/2008/05/blog-post_22.html

Posted

நல்லவிதமாக சொல்லி இருக்கிறீங்க.

ஆரம்பத்தில் அவர் இவர் என சொல்லிட்டு இடையில் நாய் நாய் என்று சொனது என்னமோ போல இருந்திச்சு. சூப்பர்ப் கதை.

Posted

வணக்கம் ..வெண்ணிலா ...பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்.

ஆரம்பத்தில் அவர் இவர் என சொல்லிட்டு இடையில் நாய் நாய் என்று சொனது என்னமோ போல இருந்திச்சு
.

எனக்கும் அவரை அப்படி சொல்றது,, ஒரு மாதிரி தான் இருக்கு :blink: ....ஆனால அவரை யாரும் என்று சொல்லாமால் கதை கொண்டு போக முடியவில்லை

Posted

அட...சின்ன குட்டி தாத்தா "பாரதி ராஜா அங்கிளின்ட" படம் மாதிரி முன்னுக்கு காச்சியை போட்டு விட்டு எப்ப கீரோ வருவார் என்டு பார்த்து கொண்டிருக்க வந்தாரே ஒரு கீரோ :D ...எப்படி தாத்தா இப்படி எல்லாம்..(நிசமா என்னால முடியல்ல பாருங்கோ :lol: )..

வித்தியாசமா இருந்துச்சு சின்னகுட்டி தாத்தா கதை...வாழ்த்துக்கள் :) ...ஒரு கேள்வி கேட்டியளே "மனிசரை எப்பொழுதாவது நன்றியுள்ளவர்கள் என்று யாரும் சொல்லி இருக்கீனமோ"..என்டு நன்ன கேள்வி ^_^ ...(இப்படி கேட்டு நிம்மதியா இருக்கிற நாய்களோடு சண்டையை வர பண்ணிடாதையுங்கோ சொல்லிட்டன் :D )...

அப்ப நான் வரட்டா!!

Posted

இப்படி கேட்டு நிம்மதியா இருக்கிற நாய்களோடு சண்டையை வர பண்ணிடாதையுங்கோ சொல்லிட்டன்

அது சரி :wub:

வணக்கம் ஜமுனா ....பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போக்கிடம் இல்லாமல் நாய்கள் மட்டுமல்ல சில பொருளாதார நிலமை அற்றோருக்கும் அதெ நிலமைதான்

Posted

போக்கிடம் இல்லாமல் நாய்கள் மட்டுமல்ல சில பொருளாதார நிலமை அற்றோருக்கும் அதெ நிலமைதான்

உண்மை தான் புத்தன் ...பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு நன்றிகள்

Posted

உங்கள் கதை அழகு... மிக்க நன்றி...

வணக்கம் உதயம் ,,,பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்.

நீங்களும் நன்றாக ஊர் கதைகள் சொல்லுகிறீர்கள் ...எதுக்கும் அங்கை வந்து சொல்லுறன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.