Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க தூதரின் கருத்துக்கு அமெரிக்காவிலிருந்து எழும் சவால்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

95% தமிழர்கள் ஐக்கிய சிறீலங்காவுக்குள் வாழ விரும்புகின்றனர் என்ற அமெரிக்கத் தூதரின் கூற்றை இலங்கையில் தமிழ் மக்களிடம் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் தேர்தல் மூலமான கருத்துக் கணிப்பின் மூலம்.. நிரூபித்துக் காட்ட முடியுமா..??! என்று சவால் விட்டுள்ளார் அமெரிக்காவில் தமிழர்களின் உரிமைக்காக நீதிக்காக குரல் கொடுக்கும்... Bruce Fein அவர்கள்..! :lol:

Fein: Hold referendum to test support for Tamil Statehood

[TamilNet, Monday, 26 May 2008, 18:15 GMT]

Bruce Fein, Attorney for a US-based Tamil Activist Group, in responding to a statement by Ambassador Robert Blake to Sunday Observer that from his discussions with Tamils that he knows that "over 95 percent of them [Tamils] support a solution within a framework of a united Sri Lanka," challenged the Ambassador to hold a referendum to prove his figure, and added that "f statehood prevails, the Ambassador should be the first to concede Prabhakaran’s superiority in discerning the political aspirations of the Tamil people."

Ambassador Blake's interview with Sunday Observer

In the same interview Ambassador Blake added that, "[t]hey [Tamils] are not seeking an independent Tamil Eelam which Prabhakaran is seeking. I think it would be very useful for Prabhakaran to give up this idea of seeking an independent Tamil State and agreeing to negotiate with a united Sri Lanka."

Full text of Fein's note to Ambassador Blake follows:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25785

---------------

பாருங்கள் மக்கள் தங்கள் கருத்தை உலகுக்கும் சிறீலங்காவுக்கும் சொல்ல தெரிவு செய்த...நம்ம எம் பி மாருக்கு முதல் அமெரிக்காவில் இருந்து அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு சவால் விட்டு குரல் எழுப்பட்டிருக்கிறது. ஆனால் உள்நாட்டில் அமெரிக்கத் தூதரின் பேச்சைக் கண்டிப்பதோடு.. அவருக்கு சரியான விளக்கமளிக்க வேண்டிய தரப்புக்கள்.. நித்திரை கொள்வதும் ஏனோ..???! ஒரு அறிக்கைக்கு கூட இவ்வளவு சுணக்கம் ஏன். அவர்களும் அமெரிக்க தூதரின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டனரோ..??! அல்லது யாழ்ப்பாணத்து இராணுவ இயந்திரத்தின் கானிவேலில் மூழ்கிவிட்டனரோ..!ஒருவேளை அவைதான் தூதருடன் சந்திப்பு என்று ரகசியமா உதுகளையும் சொல்லி வைக்கினமோ..??! பதவி.. டொலர் .. பாதுகாப்பு கிடைக்கும் என்று..! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே Bruce Fein புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் என்பதனையும் மறந்துவிடக்கூடாது.

தனித்தமிழ் இராச்சியம் என்ற கோரிக்கை தொடர்பாக வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - புருஸ் பீன்

ஒரே இலங்கைக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்வுத் திட்டத்திற்கு 95 வீதமான தமிழர்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் கருத்து வெகுசன வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இயங்கும் தமிழர் அமைப்பின் சட்டத்தரணியான புருஸ் பீன் இந்த சவாலை விடுத்துள்ளார்.

இதன்படி, 5 வீதமான மக்களே பிரபாகரனுக்கு ஆதரவு வழங்குவதாகவும், இதனால் தனித்தமிழ் இராச்சியம் என்ற கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளக், சண்டே ஒப்சர்வர் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுளு;ளார்.

வடகிழக்கில் உள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் கொழும்பிற்கு வந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை என பிளக் குறிப்பிட்டுள்ளார்.

விமானக் குண்டுத் தாக்குதல், மனிதாபிமான உதவித் தடை, கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு தமிழர்கள் உள்ளாக்கப்படவில்லை என்றே பிளக் தெரிவித்துள்ளார்.

பிரஜாவுரிமை சட்டம், 1956ம் ஆண்டு அரசகரும மொழிச்சட்டம், 1972ம் ஆண்டு அரசியல் சாசனம் போன்ற சட்டங்களின் மூலம் தமிழர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1974ம் ஆண்டு செல்வநாயகத்தினால் தனித்தமிழ் இராச்சியக் கோட்பாடு முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்குத் திமோர், எரித்திரியா, மொன்டன்ரிக்கோ, கொசோவோ, கியூபெக், பியட்டரிக்கோ போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வெகுசன வாக்கெடுப்பைப் போன்றதொரு வாக்கெடுப்பு இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனித் தமிழ் இராச்சியம் தொடர்பான வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு வாக்கெடுப்பின் மூலம் பிரபாகரனுக்கு 5 வீத மக்களே வாக்களித்தால் அமெரிக்கத் தூதுவரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமரிக்க தூதுவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ..

எங்கட தமிழ் அரசியல் வாதிகளுக்கு சொல்லி உசுப்பேத்தவேணும் போலகிடக்கு.. இனி ஒரு கூட்டம் கூடி முடிவெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னம் காட்டமான கேள்விகல் மருப்பறிக்கைகள் விடப்பட்டிருக்கவேணும்.

அமெரிக்க தூதுவர் தமிழ்மக்களின் அடிமடியில் கைவைக்கப்பார்க்கிறார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.