Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கருவைச் சுமப்பவள் பெண்;கருத்துகளைச் சுமந்து திரிபவன்,கலைஞன்!" என்ற தலையங்கத்தில் தனது 43 வது ஆண்டு மலர் சஞ்சிகையில் இவ்வாறு எழுதி உள்ளார்.

நான் சகலரினதும் கருத்துகளை,அபிப்பிராயங்களை மனம் திறந்து வைத்த வண்ணம் உள்வாங்கி கொண்டேன் தனிபட்ட முறையில் என் மீதும் எனது இலக்கியாச் செயலாக்கத்தின் மீதும் இயல்பாகவே துவேசம் பாராட்டிய பலர்,எனது காதுபடவே என்னையும் எனது இலக்கிய நேர்மையும் கொச்சைபடுத்தி,என் மனசை நோக செய்தனர்.

என்னுடைய மிக பெரிய என்னவென்றால் நான் இவர்களனது பொச்சரிப்பு வார்த்தைகளை கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை தொடர்ந்து செயற்பட்டு வந்தேன் மல்லிகை மெல்ல மெல்ல தன் மணத்தை விரிவு படுத்த தொடங்கியது நாடெங்கும் பரவி படந்தது.அதற்காக நான் கொடுத்த விலை வரும்கால இலக்கிய தலைமுறை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியதொரு தகவல் ஆகும்.அவசியம் இளையதலைமுறையினர் படித்தறிந்திருக்க வேண்டும்.

மல்லிகை முதன் முதலில் தோன்றிய முகவரியில் இருந்து அதற்கான சொந்தக் கட்டடதிற்குக் குடிபெயர்ந்த வேளையில் எனை விமர்சித்த பலரே என்னை நிமிர்ந்து பார்க்க தலைபட்டனர் அத்துடன் சொந்த அச்சகத்தையும் நிறுவி கொண்டேன்.

இந்தத் தொடர் மன ஓர்மத்தையும்,விடாமுயற்சியைய??ம்,அசாராத துணிச்சலையும் எனக்குக் கற்றுத் தந்ததே,இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தான்!அந்த மாபெரும் இலக்கிய இயக்கம் தான்!

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கை பூராகவும்,தனது வேலை திட்டங்களை பரவல்படுத்தி,கொழும்பைத் தலைமைபீடமாகவும் கொண்டு செயல்பட்டு வந்த போதிலும் கூட அதன் மூல வேர்,அடி அத்தி வாரமே யாழ்பாணத்தில் தான் ஆழம் கொண்டிருந்தது.பல பல துறைகளிள் சதா இயங்கி கொண்டிருந்தது.

அடிகடி பல்வேறு இலக்கியப் பிரச்சினைகள் சம்பந்தமாக சிறு சிறு கூட்டங்களை,கலந்துரையாடல்களை யாழ் கிளை நடத்தி வந்தது.

உயர் சாதி வெறித் திமிர் தலைகேறிய பண்டிதப் பண்டாரங்கள் இழிசினர் வழக்கு என எமது இலக்கியபடைப்புகளை இழித்து பழித்தும் பேசிய சம்பவம் வட பிரதேச மண்ணிலிருந்து தான் முதன் முதலில் முகிழ்ந்தெழும்பி வந்தது.அதற்கு மூல காரணமாக இருந்து இலக்கியம் படைத்தவர்கள் இருவர்.ஒருவர் நான் அடுத்தவர் தோழர் டானியல்.இருவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முகிழ்தெழும்பி வந்தவர்கள்.

பண்டிதப் பண்டாரங்களின் மூல நோக்கம் தமிழ் இலக்கியத்தை வளர்த்துச் செம்மை படுத்துவதல்ல.அவர்கள் பாசையில் கண்ட சாதி - நிண்ட சாதிக்காரன்களை - பஞ்ச்மர்களை இலக்கிய உலகிலிருந்து ஓரங்கட்டுவதேயாகும்.அதற்கு முட்டுக் கட்டையாகநானிருந்து முற்போக்குக் எழுத்தாளர் சங்க வட பிராந்தியச் செயலாளராக செயல்படுவதை அறவே வெறுத்தனர் அவர்கள்.அவதூறு பொழிந்தனர்.

இப்படியாக தொடர்கிறார் ஆதங்கத்தை மல்லிகை சஞ்சிகையில்.இப்படியான பிரபல் எழுத்தாளர்களை பற்றி எமகேன் கவலை அடியேன் புத்தன் இன்று யாழில் சில படைப்பாளிகள் வருகிறார்கள் பிறகு கோபபட்டு வெளியே செல்கிறார்கள் கேட்டால் சக உறவு புண்படுத்தி போட்டு என் குறை சொல்கிறார்கள் ஆனால் இந்த எழுத்தாளர் சக உறவு புண்படுத்தினாலும் அதையே சமூகத்தில் இருந்து தனது கருத்தை 43 ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டுள்ளார் அத்துடன் 50 ஆண்டு மலரையும் தனது கரத்தாலே வெளியிடவேண்டும் என்று ஆசைபட்டுள்ளார் அவரின் ஆதங்கதிற்கு எனது பாராட்டுக்கள்.யார் புண்படுத்தினாலும் கண்டு கொள்ளாமல் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் ஆனால் யாழில் ஒரு வருடத்தில் பிரபலயம் ஆகிறார்கள் அடுத்த வருடம் வெளியேறுகிறார்கள் என்னைய்யா கொடுமை.

தொடர்ந்து 43 அண்டுகள் பரபுரை செய்துள்ள இந்த முற்போக்கு எழுத்தாளர் பிரபல் எழுத்தாளர் லங்காதீப என்ற சிங்கள் நாளிதழ் ஆசிரியரின் கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார்.

கேள்வி - உங்களது இளைனர் பிராயத்திற்கும்,இலக்கியத்தி??்குமிடையே தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?

ஜிவா - எனது பாடசாலை வாழ்க்கை மிகவும் குறுகியதாகும்,எட்டாம் வகுப்பு வரையில் தான் படித்துள்ளேன்.நான் இளைஞர் பிராந்தியத்திலே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளேன்.யாழ்பாணத்தில் தாழ்த்தபட்ட சனக்களுக்கு எதிராகப் பெரும் அநீதிகள் நிகழ்ந்தமையும் இவ்வாறு சேரக் காரணமாகும்.தேநீர்கடைகளுக்கு??் சென்றால் எங்களை வித்தியாசமாகக் கவனித்தார்கள்.கோயில்களிள் கூட இதே நிலைமை தொடர்ந்தது,இதற்கு எதிராகத் தாழ்த்தபட்ட ஜந்து சமூகங்கள் ஒன்றிணைந்து "இலங்கை சிறுபான்மை மகாசபை" என்ற அமைபினை ஏற்படுத்தினோம்.கம்யூனிஸ்ட் கட்சிதான் எமது பிரதான கட்சி,அதன் மூலம் சமுகத்திற்கு நன்மையளிக்கும் விதத்தில் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.நான் எமக்கிழைக்கபடும் அநீதிகளை பற்றி சிந்தித்தேன்.இவற்றுக்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்க எனக்குத் தேவைபட்டது.அக்கால கட்டத்தில் வெளிவந்த "சுகந்திரன்" என்ற முற்போக்குப் பத்திரிகையில் எழுத தொடங்கினேன்.எனது எழுத்தின் ஆரம்பம் இவ்வாறு தான் தொடங்கியது பிற்காலத்தில் இப்பத்திரிகை இனவாதப் பத்திரிகையாக மாறியதனால்,அதில் எழுதுவதை கைவிட்டேன்.

கேள்வி - நீங்கள் இந்த யுத்தத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

ஜிவா - உலகத்தில் உள்ள எந்தவொரு கலைஞனும் யுத்தத்தை விருப்பமாட்டான்.நான் எல்.ரி.ரி.ஈ செயற்பாடுகளை புறக்கணித்துவிட்டுக் கொழும்புக்கு வந்தவன்.இந்த யுத்தத்தினால் சிங்கள்,தமிழ்,முஸ்லீம் மக்களுக்குக் கிடைக்க போவது ஒன்றுமில்லை.இந்த யுத்தம் மேலும் பல பரம்பரைகளை பாதிக்கும்.யுத்தத்தினால் முதலில் கிடைப்பது பீதியும் குழப்ப நிலையும் தான்.அப்புறம் பட்டினியும் மரணமுந்தான்.அதனால் யுத்தம் நிறுத்தபடவேண்டும்.இலக்கியத்??ினால் மனித வாழ்வுக்கான அதீத திருப்தி ஏற்படுகின்றது.எங்களுக்குத் தேவையானது அது தான்.நாம் நடைமுறைபடுத்த வேண்டியது அதுதான்.

புத்தனின் கருத்து

பிரபல எழுத்தாளர்கள் பிரபல குறும்பட தயாரிப்பாளர்கள் பிரபல ஊடகவியாளர்கள் எல்லொருக்கும் தாங்கள் சார்ந்த தேசியத்தின் விடுதலை பற்றி கதைத்தால் கசக்கும் காரணம் அவர்களை பொறுத்தமட்டில் பல்தேசியங்களில் தங்களது படைப்புளை பிரபலயபடுத்த வேண்டும் மற்றும் பல்தேசிய இனங்களிற்குள் பிரபலயம் ஆக வேண்டும் என்பது தான் அவர்களின் குறிகோள்.

என்ன நான் சொல்லுறதில்ல தப்பு இருக்கோ?

Edited by putthan

ஜிவா - உலகத்தில் உள்ள எந்தவொரு கலைஞனும் யுத்தத்தை விருப்பமாட்டான்.நான் எல்.ரி.ரி.ஈ செயற்பாடுகளை புறக்கணித்துவிட்டுக் கொழும்புக்கு வந்தவன்.இந்த யுத்தத்தினால் சிங்கள்,தமிழ்,முஸ்லீம் மக்களுக்குக் கிடைக்க போவது ஒன்றுமில்லை.இந்த யுத்தம் மேலும் பல பரம்பரைகளை பாதிக்கும்.யுத்தத்தினால் முதலில் கிடைப்பது பீதியும் குழப்ப நிலையும் தான்.அப்புறம் பட்டினியும் மரணமுந்தான்.அதனால் யுத்தம் நிறுத்தபடவேண்டும்.இலக்கியத்??ினால் மனித வாழ்வுக்கான அதீத திருப்தி ஏற்படுகின்றது.எங்களுக்குத் தேவையானது அது தான்.நாம் நடைமுறைபடுத்த வேண்டியது அதுதான்.

இவருடைய இலக்கியம் மக்களுக்காகவா? பிரசுரத்துக்காகவா?

சாதி அடக்குமுறை சாதி அடக்குமுறை என்று வார்த்தைக்கு வார்த்தை கூறுபவர்.. இன அடக்குமுறையை எவ்வாறு நோக்கினார்? அதைப்பற்றி எங்காவது மூச்சுவிட்டாரா? தெரிந்தவர்கள் கூறினால் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஒரு படைப்பாளிக்குள் தேடல் என்பது மிகுந்திருக்கும். அதனால் தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டும் அடைத்து வைக்க அவர் விரும்புவதில்லை. சாதி அடக்கு முறைகளை அச்சமூகம் சார்ந்தவர்கள் உடைத்தெறியத்தான் தலித்திலக்கியம் படைக்கின்றார்கள். சாதி அடக்குமுறை எதிர்ப்பென்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீதான சாடல் மட்டும் என்பதால் படைப்பாளிக்கு அதனால் பெரிதாக பாதகங்கள் தோன்றுவதில்லை. ஆனால் ஒரு இனப்போராட்டமென்பது மொழி, சமயங்கள் சார்ந்து அமைவதால் படைப்பாளியின் ஆதரவென்பது அவரை ஒரு குறுகிய வட்டத்தினுள் முடக்கிவிடுகின்றது. அதனால் பல மொழிகள், தேசங்கள் கடந்து தேடலை அவரால் செய்ய முடியாது போய்விடுகின்றது. அதனால்த்தான் பெரும்பான்மையான படைப்பாளிகள் யுத்தங்களை வெறுக்கின்றார்கள்.

அதற்காக அவர்களை கொச்சைப்படுத்துவது போல் பெயருக்காகவும் புகழிற்காகவும் தான் இப்படி நடந்து கொள்கின்றார்களென்பது அர்த்தமற்ற வாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.